சனி, 2 ஜனவரி, 2010

வஸீலா



வஸீலா என்பது, தனித்துவமான பிரார்த்தனை முறையாகும். நபிமார்கள், மற்றும் நல்லடியார்கள் போன்ற இறைநேசர்களை அல்லாஹ்வின் முன்னிறுத்தி, அவர்களின் பொருட்டினால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது, அல்லது அல்லாஹ்வினால் சங்கைப்படுத்தப்பட்ட இத்தகைய இறைநேசர்களிடம் தேவைகளை வேண்டி நிற்பதே வஸீலா எனப்படுகின்றது.
வஸீலா தேடுவதன் உண்மை நிலை பற்றி புனித அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
ஷஷவிசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவன்பால் சென்றடையும் வழியைத் தேடிக் கொள்ளுங்கள். தவிர, அவனுடைய பாதையில் யுத்தம் செய்யுங்கள். அதனால், நீங்கள் வெற்றியடையலாம்||
(அல்மாயிதா : 35)
இவ் இறைவசனமானது, இறையச்சத்தையும் புனித ஜிஹாதையும் மனிதன் இறைவனின் பால் சென்றடையக் கூடிய பாதையில் ஊடகமாக அடையாளப்படுத்தியுள்ளது.
இறைவனை சென்றடைய மார்க்கத்தில் ஆகுமான வேறு வழிகளும் உண்டா? அல்லது மனிதன் தான் விரும்பியவாறு இறைவனை சென்றடையும் வழியைத் தேடிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
அல்லாஹ்வின் பால் அடியான் நெருக்கமாகும் வழியை, அவன் சுயமாகத் தேர்ந்தெடுக்க முடியாது. அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கும் அந்நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் பாதையை தேர்ந்தெடுக்கும் முறைக்கும் அல்லாஹ்வின் வழிகாட்டல் அவசியமாகும்.
இதுபற்றி மார்க்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆனும்-சுன்னாவும் இதனைத் தெளிவாக வரையறுத்துள்ளன. பொதுவாக, அல்லது குறிப்பாக, மார்க்கத்தில் அனுமதி வழங்கப்படாத எந்த வழிமுறையும் நூதனங்களாக அல்லது வழிகேடுகளாகவே இருக்கும்.
இமாம் அலி (அலை) அவர்கள், அல்லாஹ்வின் பால் அடியான் நெருக்கமாகக் கூடிய வழிமுறைகள் பற்றி இவ்வாறு விபரிக்கின்றார்கள்:
ஷஷஅல்லாஹ்விடம் உதவி தேடக்கூடியவர்கள், தாம் உதவி தேடும் அம்சங்களில் மிகச் சிறப்பாகக் கொள்ள வேண்டிய அம்சங்கள் பல உள்ளன. அவையாவன, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசம் கொள்வது. அல்லாஹ்வுடைய பாதையில் புனித யுத்தம் செய்வது. இது இஸ்லாத்தில் மிக உயர்ந்த ஸ்தானமாகும். உளத்தூய்மையான கலிமா. இது வாழ்வின் இயற்கையாகும். தொழுகையை நிலைநாட்டுவது. இது மார்க்கத்தைப் பூரணப்படுத்துவதாகும். ஸக்காத் வழங்குவது. இது கடமையான செயன்முறையாகும். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது. இது தண்டனைகளிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். அல்லாஹ்வின் கஃபாவை ஹஜ், உம்ரா செய்வது. இவை வறுமையை நீக்கி, பாவங்களையும் போக்கி விடும். உறவினர்களுடன் சேர்ந்து வாழ்தல். இது பொருளாதாரத்தில் விருத்தியையும், ஆயுளில் அதிகரிப்பையும் ஏற்படுத்தும். இரகசிய தானதர்மம். இது பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும். பரகசிய தானதர்மம். இது மோசமான மரணத்தைத் தடுக்கும். நற்செயல்கள் புரிதல். இது இழிவான யுத்தத்திலிருந்து பாதுகாக்கும்|| (நஹ்ஜுல் பலாகா)
மனிதர்களுக்குரிய சிறப்பான புகழ்மிகு வழிமுறை பற்றி வழிகாட்டும் புனித அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
ஷஷஅவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில் உம்மிடம் வந்து, அல்லாஹ்வின் பாவமன்னிப்பைக் கோரி, அவர்களுக்காகத் தூதராகிய நீரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், அன்புடையோனாகவும் மன்னிப்புடை யோனாகவுமே அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்|| (அந்நிஸா-64)
புகழ்மிகு இச்செயன்முறையானது, முஸ்லிம்களிடையே நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையோடு மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதுபற்றி அல்லாஹ் கூறுவதாவது:
ஷஷ(விசுவாசிகளே!) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். இறைவனின் புறத்திலிருந்து அவர்களுக்கு ஆகாரமும் அளிக்கப்படுகின்றது|| (ஆலஇம்ரான்-169)
இதன்படி, நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பின்னும் நடைமுறையிலுள்ள வணக்கமாக இது அமைகின்றது. இதுபற்றி விளங்கிக் கொண்ட முஸ்லிம்கள், நபிகளாருடைய மறைவுக்குப் பின்னாலும் இதனை நடைமுறைப்படுத்தினார்கள். சில தப்ஸீர் கலை வல்லுனர்கள் இதே கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
எனவே, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடன் கொண்டுள்ள நெருக்கத்தையும், அல்லாஹ்விடம் அவர்கள் அத்தாட்சியாக இருப்பதையும் கொண்டு, நபியவர்கள் மூலம் உதவி தேடுவதனூடாக அல்லாஹ்வுடன் மனிதர்கள் தொடர்புறுவதற்கும் அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோருவதற்கும் தமது ஆன்மீக இலௌகீகத் தேவைகளை அடைந்து கொள்ளக் கோருவதற்கும் எவ்வித தடைகளும் இருக்க முடியாது. இது மார்க்கம் விதித்துள்ளதும் புனித அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளதுமான பாதையாகும்.
இவ்விடயத்தை மேலும் தெளிவுபடுத்துவதற்காக இதுபற்றிய ஆய்வை பின்வரும் தலைப்புகளில் மேற்கொள்கின்றோம்.
1) வஸீலா - மொழி ரீதியான, நடைமுறை ரீதியான அதன் அர்த்தம்.
2) வஸீலா சட்டம் பற்றிய கருத்துகள்.
3) அல்குர்ஆனில் வஸீலாவுக்கான அனுமதி
4) நபி மொழிகளில் வஸீலா
5) முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் வஸீலா
6) அஹ்லுல்பைத்களிடம் வஸீலா
7) வஸீலாவுக்கான அனுமதி, அதன் மார்க்க நிலை பற்றிய சிந்தனையாளர்களின் கருத்து முரண்பாடுகள்.

வஸீலா -
மொழி ரீதியான நடைமுறை ரீதியான அதன் கருத்து
அரபு மொழியில் வந்துள்ளதாவது, வஸீலா என்பது ஓர் அரசிடம் உதவி தேடுவதாகும். வஸீலா என்பது ஓர் அந்தஸ்து. வஸீலா என்பது நெருக்கம். வஸீலா என்பது நெருங்கிய இணைப்பு. ஷஷஅல்லாஹ்வை சென்றடையக் கூடிய ஓர் அமலை ஒருவன் செய்த போது அவன் அல்லாஹ்விடம் நெருக்கமானான்|| என்ற அரபு வாக்கியத்தில் வஸீலா என்பது நெருக்கம் என்ற அர்த்தத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
லபீத் எனும் கவிஞர் இவ்வாறு பாடுகின்றார்:
மனிதர்களை, தமது விடயத்தின் வல்லமை பற்றிய
அறிவற்றவர்களாக நான் காண்கிறேன்.
எனினும் எல்லா சிந்தனைகளும்
அல்லாஹ்வையே சென்றடையக் கூடியவை
எனவே, வஸீலா எனும் சொல், நெருக்கம், உதவி, அந்தஸ்து, சென்றடைதல் முதலான அர்த்தங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் கூறுகின்றது:
ஷஷஇவர்கள் ஆண்டவன் என அழைப்பவைகளும்கூட (தங்களுக்காக) தங்கள் இறைவனிடம் சிபாரிசு செய்வதற்கு இறைவனிடம் நெருங்கியவர் யார் என்பதைத் தேடிக் கொண்டு, அவனுடைய அருளையே எதிர்பார்த்து, அவனுடைய வேதனைக்கும் பயப்படுகின்றன|| (அல்இஸ்ரா - 57)
ஏனைய மொழிக் களஞ்சிய நூற்கள், வஸீலா எனும் சொல்லை ஷஉருவகப்படுத்திக் கொள்வது| எனும் அர்த்தத்தில் பிரயோகித்துள்ளன. ஏனெனில், அதனுடைய கருத்தானது தெளிவான விளக்கமுடையதாகவும், அதனுடைய யதார்த்தமானது அதன் துணைப்பொருள் குறிப்பிடும் அர்த்தத்திலிருந்து முரண்படக் கூடிய பிறிதொரு அர்த்தத்தைச் சுட்டுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
எவர் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகின்றாரோ, அவர் அப்பொருத்தத்தை பெற்றுத் தரக்கூடிய நற்கருமங்களை மேற்கொள்வதனூடாக அதனை அடைந்து கொள்ள முயற்சிப்பார். எவர் அல்லாஹ்வின் இல்லமான கஃபாவைத் தரிசிக்க விரும்புகின்றாரோ, அவர் அதன்பால் தன்னை கொண்டு சேர்ப்பவற்றினூடாக அதனைத் தரிசிக்க முனைவார். இதுவே யதார்த்தமாகும்.
தப்ஸீர் கலை அறிஞரான இப்னு கதீர், வஸீலா பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ஷஷஒரு மனிதன் தனது குறித்த ஒரு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்ள ஓர் ஊடகத்தைப் பிரயோகிப்பதே வஸீலாவாகும்||
வஸீலா சட்டம் பற்றிய கருத்துகள்
வஸீலா பற்றியும் அதன் மார்க்க அனுமதி பற்றியுமான ஆதாரங்களைக் குறிப்பிடுமுன், வஸீலாவை ஆதரித்தும் மறுதலித்தும் வந்துள்ள கருத்துகளை அறிந்து கொள்வது பொருத்தமானதாகும்.
வஸீலாவை மறுத்துரைக்கும் கருத்துகள்
அல்பானீ எனும் அறிஞர், ஷவஸீலா-அதன் வகைகளும் சட்டங்களும்| எனும் தனது நூலில் வஸீலாவை பலமாக மறுப்பதோடு, அது வழிகேடான அம்சமெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஷரஹுத் தஹாவியா எனும் நூலின் முன்னுரையில், ஷவஸீலா என்பது இஸ்லாமிய அகீதாவிற்கு அப்பாற்பட்ட அம்சம்| என வலியுறுத்தியுள்ளார்.
முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் இதுபற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ஷஷஅறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் - அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள்|| என்ற அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, சில இணைவைப்பாளர்கள் (அதாவது வஹ்ஹாபிகள் அல்லாத முஸ்லிம்கள்) மறுமையில் ஒருவர் மற்றவருக்காகப் பரிந்துரை செய்வது உண்மையானதென்றும், நபிமார்களுக்கு அல்லாஹ்விடத்தில் தலைமைத்துவமிக்க அந்தஸ்து இருக்கின்றதென்றும் கூறினால், அல்லது நபி (ஸல்) அவர்களால் பிறருக்குப் பரிந்துரை செய்ய முடியுமென்ற ஆதாரங்களை முன்வைத்தால், நீங்கள் அதனை விளங்கிக் கொள்ளவில்லையென்றால், அல்லது உங்களால் அதற்கு விடையளிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அவர்களுக்கு இப்படி பதில் கூறுங்கள்: ஷநிச்சயமாக எவருடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கின்றதோ, அவர்கள்தான் தெளிவான சட்டங்களை விட்டுவிட்டு சந்தேகத்திற்குரியவற்றைப் பின்பற்றுபவர்கள்| என அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ளான்||
வஸீலாவை மறுக்கக்கூடிய மற்றொருவரான அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் பின் பாஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ஷஷஎவர் அல்லாஹ்விடமல்லாமல் நபி (ஸல்) அவர்களிடம் தனது தேவையை யாசிக்கின்றாரோ, அவர் நிச்சயமாக இஸ்லாத்தை உடைத்தெறிந்து விட்டார்||
வஸீலாவை ஆதரிக்கும் கருத்துகள்
இமாம் nஷளகானீ அவர்கள் ஷஇறைநினைவாளர்களின் காணிக்கை| எனும் நூலில் ஷஷநபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலா தேடுவது ஆகுமானதாகும்|| எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸம்ஹூதி ஷhபிஈ இதுபற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ஷஷநபி (ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்வதென்பது அவர்களிடம் ஒரு விடயத்தை வேண்டுவதன் மூலமாகவும் இடம்பெறலாம். இது, அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்கும் தேவைகளைக் கேட்பதற்கும் காரணமாக இருப்பதற்கான சக்தியைப் பெற்றுள்ளார்கள் என்ற அர்த்தத்தைத் தருகின்றது. எனவே, அவர்களது பிரார்த்தனையை வேண்டுவதும் ஆகுமானதாகும். இங்கு சொல் மாறுபடினும் அர்த்தம் ஒன்றாகவே அமைகின்றது.
சிலர், ஷஷயாரசூலல்லாஹ்! நான் சுவனத்தில் உங்களுக்கருகில் இருக்க வேண்டுமென்று கேட்கிறேன்|| என்று பிரார்த்திப்பர். இப்பிரார்த்தனையானது, நபியவர்களின் பரிந்துரையையும், அவர்களது இருப்பின் காரணத்தையுமன்றி வேறெதையும் கருதுகோளாகக் கொண்டிருக்கவில்லை.
ஷநிதானமான வணக்கம்| எனும் நூலில் அஹ்மத் இப்னு ஹம்பலிடமிருந்து இப்னுதைமிய்யா குறிப்பிட்டுள்ள கருத்துகள், நபி (ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்வதும் அவர்களிடம் பிரார்த்திப்பதும் ஆகுமானதென்பதை தெளிவுபடுத்துகின்றன. மேலும் இதற்கு ஆதாரமாக இப்னு அபித்துன்யா, பைஹகீ, தப்ரானீ போன்றோரின் அறிவிப்புகள் பலவற்றையும் அவர் எடுத்தாள்கின்றார்.
வஸீலா ஆகுமானதென வாதிடுவோரில் இமாம் ஷhபிஈ முக்கியமானவராவார். தமது வாழ்க்கை நிகழ்வு பற்றி அவர் இவ்வாறு விபரிக்கின்றார்: ஷஷநிச்சயமாக நான் இமாம் அபூஹனீபா அவர்களிடமிருந்து பரக்கத் பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும், அதற்காக அவர்களது கப்றுக்கு அடிக்கடி செல்லக் கூடியவனாகவும் இருக்கிறேன். எனக்கு ஏதாவது ஒரு தேவை ஏற்பட்டால், இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு, அவர்களது கப்றுக்குச் செல்வேன். அவ்விடத்தில் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவேன். அத்தேவை எனக்கு விரைவாக நிறைவேறி விடும்|| (தாரீகு பக்தாத்)
வஸீலாவை ஆதரிப்போரில் ஒருவரான அபூஅலி அல்ஹிலால் (ஹம்பலிகளின் iஷஹ்) இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ஷஷஎனக்கு ஒரு தேவை ஏற்பட்டால், நான் இமாம் மூஸா இப்னு ஜஃபர் (அலை) அவர்களது கப்றுக்குச் சென்று அவர்களை வஸீலாவாகக் கொண்டு பிரார்த்தனை புரிவேன். அல்லாஹ் அத்தேவையை எனக்கு இலகுவாக்கித் தருவான்|| (தாரீகு பக்தாத்)
இமாமிய்யாக்களின் கொள்கை, ஒருவர் தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் தனது கஷ;டங்களை நீக்குவதற்காகவும் நபி (ஸல்) அவர்களையும் இமாம்களையும் வஸீலாவாகக் கொண்டு பிரார்த்தனை செய்ய முடியும் என்பதாகும். உயிரோடு இருக்கும் போது அவர்களை வஸீலாவாகக் கொள்வது எவ்வாறு ஆகுமானதோ, அதேபோன்று அவர்கள் வபாத்தான பின்னரும் அவர்களை வஸீலாவாகக் கொள்வது சாத்தியமானதாகும். ஏனெனில், அவர்கள் உலகின் முன் இல்லையென்றிருந்தாலும் அவர்களது இருப்பு நிலையானதாகும்.
வஸீலாவின் வகைகள்
வஸீலாவை வகைப்படுத்தியமை இப்னு தைமிய்யாவின் அபிப்பிராயமாக இருப்பினும், இதிலே வஸீலா சட்டம் பற்றிய முக்கியமான கருதுகோள்கள் உள்ளன. எனினும் இதிலே முரண்பாடுகளும் சிலவற்றில் உடன்பாடும் காணப்பட்டுள்ளன. இப்னு தைமிய்யா, வஸீலா பற்றிய நடைமுறை விடயத்தை மூன்று வகைகளாக அடையாளப்படுத்துகின்றார். அவை:
1) நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்படுவது, அவர்களை நம்பிக்கை கொள்வது என்பவற்றினூடாக வஸீலா தேடுவது. இது இஸ்லாத்தினதும் சமய விசுவாசத்தினதும் அடித்தளமாக அமைகின்ற அதேவேளை, இதனை நிராகரிப்பது பொதுவாகவும் குறிப்பாகவும் இறைநிராகரிப்பாக அமைந்து விடுகின்றது.
2) நபி (ஸல்) அவர்களது பிரார்த்தனைகள் அவர்களது பரிந்துரை என்பவற்றினூடாக வஸீலா தேடுவது. அதாவது, நபியவர்கள் தாம் உயிரோடு இருக்கும் போது தமது பிரார்த்தனைகள் மூலமாகவும் மறுமையில் தமது பரிந்துரை மூலமாகவும் பிறருக்கு வஸீலாவாக அமைய முடியும். இது விசுவாசக் கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும். இதனை நிராகரிப்பவர் காபிரும், பாவமன்னிப்பு அவசியமான முர்தத்துமாவார். அவர் தௌபா செய்யாதவிடத்து கொலை செய்யப்பட வேண்டியவர்.
3) நபி (ஸல்) அவர்களது வபாத்துக்குப் பின் அவர்களது பரிந்துரையின் மூலமாக வஸீலா தேடுவது, அவர்களது உள்ளமையைக் கொண்டு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது. இது நூதனமான பித்அத்தாகும்.
அல்குர்ஆனில் வஸீலாவுக்கான அனுமதி
இறைத்தூதர்களும் நல்லடியார்களும் வஸீலாவின் உள்ளர்த்தத்தை சமயம் சார்ந்த வணக்கவழிபாடென வரையறுத்துள்ளனர். அதிலே சந்தேகமில்லை. மனிதர்கள், அல்லாஹ்வுடனான நெருக்கத்திற்காக நபிமார்களையும் இறைநேசர்களையும் வஸீலாவாகக் கொண்டு செயற்பட்ட நிகழ்வுகள் பலவற்றை அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. வஸீலாவினூடாக அவர்களது பிரார்த்தனைகளும் வேண்டுகோள்களும் உறுதிபெற்ற நிகழ்வுகளையும் விளக்குகின்றது. அவற்றில் சில:
1) அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
ஷஷஅல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ;டரோகியையும் நான் சுகப்படுத்துவேன்; மரித்தோரையும் உயிர்ப்பிப்பேன்|| (ஆலஇம்ரான்-49)
மனிதர்கள் நபி ஈஸா (அலை) அவர்களை வஸீலாவாகக் கொண்டமைக்கான ஆதாரமாக இவ்வசனம் விளங்குகின்றது. எனினும், இந்த வஸீலாவானது, நபி ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தல்லாமல் வேறு வழியில் வல்லமை பெற்றிருக்கின்றார்கள் என்று உறுதி கொண்டிருக்கவில்லை. மாறாக, நோயாளிகளைக் குணப்படுத்தல், மரித்தோரை உயிர்ப்பித்தல் முதலான ஈஸா (அலை) அவர்களது பிரத்தியேக சக்தியானது அல்லாஹ்வினால் வழங்கப்பட்டதென்றே நம்பிக்கை கொண்டிருந்தார்கள். எனவே, இதனை இணைவைப்பாகக் கருத முடியாது. எனினும், ஈஸா (அலை) அவர்களின் சக்தி அவர்களது தனித்துவமான சக்தியேயன்றி, அல்லாஹ்வினால் வழங்கப்பட்டதல்ல என்று நம்பிக்கை கொள்வதே இணைவைப்பதாக அமையும். ஆனால், இவ்வாறு எந்த முஸ்லிமும் நம்பிக்கை கொள்வதில்லை.
2) அல்குர்ஆன் கூறுகின்றது:
ஷஷஎங்கள் தந்தையே! எங்களுடைய பாவங்களுக்காக எங்களுக்கு பாவமன்னிப்புக் கோருங்கள்| என்று அவர்கள் கூறினார்கள்|| (யூசுப்-97)
இவ்வசனத்தில் நபி யஃகூப் (அலை) அவர்களிடம் அவர்களது புதல்வர்கள் பாவமன்னிப்பைத் தாருங்கள் என்று வேண்டி நிற்கவில்லை. மாறாக, யஃகூப் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கொண்டிருந்த நெருக்கம், சிறப்பு என்பவற்றின் மூலம் தமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள் என்றே வேண்டி நின்றார்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இது யஃகூப் (அலை) அவர்களது பதிலிருந்து தெளிவாகின்றது. அவர்கள் குறிப்பிட்டார்கள்:
ஷஷநான் உங்களுக்காக பின்னர் எனது இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் அன்புடையோனுமாவான்|| (யூசுப்-98)
3) அல்குர்ஆன் கூறுகின்றது:
ஷஷஅவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில் உம்மிடம் வந்து, அல்லாஹ்வின் பாவமன்னிப்பைக் கோரி, அவர்களுக்காக தூதராகிய நீரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், அன்புடையோனாகவும் மன்னிப்புடையோனாகவுமே அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்||
(அந்நிஸா-64)
இவ்வசனம், நபி (ஸல்) அவர்கள் தௌபாச் செய்யும் முஸ்லிம்களுக்காகக் கேட்கும் பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உண்மையைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. ஏனெனில், நபியவர்கள் அல்லாஹ்விடத்தில் மாபெரும் சிறப்பும் அந்தஸ்தும் கொண்டவர்களாவார்கள். மேலும், முஸ்லிம் சமூகம் நபி (ஸல்) அவர்களது பாவமன்னிப்புக் கோரலுக்கு மிக அவசியமான நிலையைக் கொண்டுள்ளதென்பதையும் இவ்வசனம் தெளிவுறுத்துகின்றது.
அல்குர்ஆன் விபரிக்கும் வஸீலாவின் வழிமுறைகள்
அல்லாஹ், புனித அல்குர்ஆனில் வஸீலா தேடும்படியாக முஃமினான தன் அடியார்களைத் தூண்டியுள்ளான். அதற்கென மாறுபட்ட வழிமுறைகளையும் அனுமதித்துள்ளான். அல்குர்ஆன் முன்வைக்கின்ற பொதுவான வஸீலா பற்றிய வழிமுறைகள் பின்வருமாறு:
1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடுவது.
அல்குர்ஆன் கூறுகின்றது:
ஷஷஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு நீங்கள் அவனை அழையுங்கள். அவனுடைய திருநாமங்களில் தவறிழைப்போரை விட்டு விடுங்கள். அவர்கள் தமது செயலுக்குரிய கூலியை விரைவில் அனுபவிப்பார்கள்||
(அஃராப்-180)
இவ்வசனம், அல்லாஹ்வின் திருநாமங்கள் அனைத்தும் வேறுபாடுகளின்றி அழகானவை என்பதை வலியுறுத்துவதோடு, அவற்றினூடாகப் பிரார்த்தனை புரியுமாறும் ஆணையிடுகின்றது. எனவே, ஓர் அடியான், நன்மை, அழகு, அருள், பாவமன்னிப்பு, கண்ணியம் முதலான பண்புகள் அடங்கிய அல்லாஹ்வின் திருநாமங்களை நினைவுகூர்ந்த பின், தனது தேவைகளையும் நிறைவேற்றும் படியாகவும், தனது பாவங்களை மன்னிக்கும் படியாகவும் தனது கோரிக்கையை முன்வைக்கின்றபோது, அல்லாஹ் தனது திருநாமங்களின் பொருட்டினால் அவ்அடியானின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கின்றான்.
2) நல்லமல்களைக் கொண்டு வஸீலா தேடுவது.
நிச்சயமாக நல்லமல்கள் என்பவை, ஓர் அடியான் அல்லாஹ்வுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சமயம் சார்ந்த ஊடகமாக அமைந்துள்ளன. அடியான், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காகவும் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் அல்லாஹ்வுக்கு முன்வைக்கக் கூடிய வஸீலாக்களில் மிகச் சிறந்தது நல்லமலாகும்.
புனித அல்குர்ஆன் நபி இப்ராஹீம் (அலை) அவர்களது சம்பவம் பற்றி விபரிக்கின்ற போது இவ்வாறு குறிப்பிடுகின்றது:
ஷஷஇப்ராஹீமும் இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்திய போது, ஷஎங்களுடைய இரட்சகனே! இதனை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீ யாவற்றையும் கேட்போனாகவும் நன்கறிந்தோனாகவும் இருக்கின்றாய். எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் முஸ்லிம்களாகவும் எங்களுடைய சந்ததியிலிருந்து ஒரு கூட்டத்தினரை முஸ்லிம்களாகவும் ஆக்கி வைப்பாயாக. எங்களுடைய வணக்கங்களைப் பற்றியும் எமக்கு அறிவிப்பாயாக. நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனாகவும் அளவற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றாய்ஷ என்று பிரார்த்தித்தார்கள்||
(அல்பகரா:127-128)
இவ்வசனம், நல்லமல்களுக்கிடையிலான தொடர்பை - கஃபா நிர்மாணம் - வலியுறுத்துவதோடு, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அதனை உறுதி செய்ய விரும்பிப் பிரார்த்தித்த துஆ - அமலை ஏற்றுக் கொள்ளும் படியானது - அது முஸ்லிம் சமூகத்தின் சந்ததியையும் உள்ளடக்கியிருந்தது. அல்குர்ஆன் இதுபற்றி இவ்வாறு வலியுறுத்துகின்றது:
ஷஷஅவர்கள் எத்தகையோரென்றால், ஷஎங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் விசுவாசங் கொண்டோம். எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. நரக நெருப்பிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக| என்று பிரார்த்திப்பார்கள்||
(ஆலஇம்ரான்-16)
இங்கு விசுவாசம் என்பதற்கும் பாவமன்னிப்புக் கோரலுக்கும் இடையிலான தொடர்பு, விசுவாசத்தை வஸீலாவாகக் குறிப்பிட்டு பாவமன்னிப்புக் கோரும் இயல்பைக் கொண்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.
3) நபி (ஸல்) அவர்களின் துஆவினால் வஸீலா தேடுதல்.
புனித அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் சிறப்பையும் அல்லாஹ்விடம் அவர்களுக்குள்ள மகத்துவம், பெறுமதி என்பவற்றையும், அவர்களுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு விபரிக்கின்றது.
ஷஷ(விசுவாசிகளே!) அல்லாஹ்வுடைய தூதர் உங்களை அழைத்தால், அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று (சாதாரணமானதாகக்) கருதிக் கொள்ள வேண்டாம்||
(அந்நூர்-63)
புனித அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்களை உலகின் முக்கிய அமானிதமாகச் சுட்டிக் காட்டுகின்றது.
ஷஷநீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். அன்றி, அவர்கள் மன்னிப்பைக் கோரிக் கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்|| (அன்பால்-33)
புனித அல்குர்ஆன், பல இடங்களில் அல்லாஹ்வின் நினைவுகூரலுடன் நபி (ஸல்) அவர்களது பெயரை இணைத்துக் கூறுவதனூடாகவும் ஒரே செயலை அல்லாஹ்விடமும் ரசூலிடமும் இணைப்பதனூடாகவும் நபிகளாரின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்த முனைவதை அவதானிக்க முடிகின்றது. அல்குர்ஆன் கூறுகின்றது:
ஷஷஅல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெகு விரைவில் உங்கள் செயலை அறிந்து கொள்வர். பின்னர் நீங்கள் இரகசியத்தையும் பரகசியத்தையும் அறிந்தவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்|| (தௌபா-94) ஷஷஅல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருளைக் கொண்டு இவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா முஸ்லிம்களை அவர்கள் வெறுக்கின்றனர்?||
இவை போன்று இன்னும் பல்வேறு இடங்களில் அல்குர்ஆன் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் இணைத்துக் கூறுகின்றது. அல்லாஹ்விடம் இத்தகைய சிறப்புமிக்க நபி (ஸல்) அவர்களது பிரார்த்தனைகள் அல்லாஹ்வினால் எவ்வகையிலும் மறுக்கப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோ சாத்தியமில்லை. மாறாக, அது பூரணமாக அவனால் ஏற்றுக் கொள்ளப்படும். இதனடிப்படையில், நபியவர்களது துஆக்களை உடன்கொள்வதென்பது, ஒவ்வொரு மனிதனும் தனது பிரார்த்தனைகள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான உறுதியான தூணை உடன்கொண்டிருப்பது போன்றதாகும்.
இதனாலேயே அல்லாஹ் தவறிழைத்த முஸ்லிம்களை நபியவர்களின் துஆக்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறும், அவர்களது சபைகளிலிருந்து பாவமன்னிப்புக் கோருமாறும் ஏவுகின்றான். மேலும், நபிகளாரின் பாவமன்னிப்புக் கோரல் அல்லாஹ்வின் அருள் இறங்குவதற்கும், மனிதர்களின் தௌபா அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்படுவதற்கும் காரணமாக அமைவதற்காக அல்லாஹ்விடம் தமக்காக பாவமன்னிப்புக் கோருமாறு நபியவர்களை வேண்டுமாறும் அல்லாஹ் ஏவுகின்றான்.
அல்குர்ஆன் கூறுகின்றது:
ஷஷஅல்லாஹ்வின் கட்டளைக்கு வழிபடுவதற்காகவேயன்றி, மனிதர்களிடம் நாம் எந்தத் தூதரையும் அனுப்பி வைக்கவில்லை. ஆகவே, இதற்கு மாறுசெய்து அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில், உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பைக் கோரி அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், அன்புடையோனாகவும் மன்னிப்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்|| (அந்நிஸா-64)
இவ்வசனம் தொனிக்கின்ற கருத்தையே பின்வரும் வசனமும் உறுதி செய்கின்றது.
ஷஷஅவர்களை நோக்கி, ஷவாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் உங்களுடைய குற்றங்களை மன்னிக்க, அல்லாஹ்விடம் கோருவார்| என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளைத் திருப்பி கர்வத்துடன் திரும்பிச் செல்வதை நீர் காண்பீர்|| (முனாபிகூன்-5)
4) முஃமினான சகோதரனின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது.
அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
ஷஷமுஹாஜிர்களாகிய இவர்களுக்குப் பின், எவர்கள் மதீனாவுக்கு வந்தார்களோ, அவர்களுக்கும் (அதில் பங்குண்டு). இவர்கள், ஷஎங்கள் இறைவனே! எங்களையும் எங்களுக்கு முன் விசுவாசங் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள். விசுவாசங் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இருதயங்களில் குரோதங்களை உண்டுபண்ணாதே. எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க கிருபையுடையோனும், இரக்கமுடையோனுமாக இருக்கின்றாய்| என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர்|| (ஹஷ;ர்-10)
இவ்வசனமானது, முஃமின்கள், ஈமானில் முந்திவிட்ட தமது சகோதர முஸ்லிம்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்குத் தகுதியானவர்கள் என்பதை சான்றுபகர்கின்றது. மேலும், ஒரு முஃமின் தன் சகோதர முஃமினுக்காகச் செய்யக்கூடிய பிரார்த்தனை விரும்பத்தக்கதும், ஏற்றுக் கொள்ளத்தக்கதுமாகும் என்பதையும் வலியுறுத்துகின்றது.
5) நபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்டு வஸீலா தேடுவது.
இவ்வகை வஸீலாவானது, இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட நபி (ஸல்) அவர்களது துஆக்களைக் கொண்டு வஸீலா தேடுவதல்லாமல், நபியவர்களது ஆன்மாவையே வஸீலாவாகக் கொள்வதைக் குறிப்பிடுகின்றது. இதுபோன்றே நல்லடியார்களையும் வஸீலாவாகக் கொள்ள முடியும். நபிமார்களையும் நல்லடியார்களையும் வஸீலாவாகக் கொள்வதென்பது, துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான ஊடகமாக அதனை அமைப்பதும், அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குள்ள சிறப்பிடம், அந்தஸ்து என்பவற்றைப் பிரகடனப்படுத்துவதுமாகும்.
எனவே, நபிகளாரின் துஆவைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் வஸீலா தேடுவதென்பது, நேரடியாக அல்லாஹ்விடமே வஸீலா தேடுவது போன்றதாகும். எனவே, நபியவர்களையும் அவர்களது கண்ணியத்தையும் அல்லாஹ்வுடனான எமது தொடர்புக்குப் பாலமாக, வஸீலாவாக நாம் ஆக்க முடியும். வஸீலா என்பது, அல்லாஹ் சங்கைப்படுத்திய, மகத்துவப்படுத்திய, அந்தஸ்தால் உயர்த்திய அந்த மனிதத்துவத்திலிருந்து ஊற்றெடுக்கக்கூடிய பிரார்த்தனையாக உள்ளது என்பது தெளிவான விடயமாகும். இதனையே
ஷஷநாம் உமக்காக உமது புகழை உயர்த்தினோம்|| (இன்ஷpராஹ்-4) என்ற அல்குர்ஆன் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ், நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துமாறும் மரியாதை செய்யுமாறும் முஸ்லிம்களுக்கு ஆணை பிறப்பிக்கின்றான். அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
ஷஷஎவர்கள் நபியாகிய அவரை விசுவாசங் கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி புரிந்து, அவருடன் அருளப்பட்ட வேதமாகிய ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்|| (அஃராப்-157)
எனவே, துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான அனுகூலம், நபியவர்களின் தனித்துவமான உயர்வுமிக்க மனிதத்துவத்தினாலும், அல்லாஹ்விடம் அவர்களுக்குள்ள சிறப்பு ஸ்தானத்தினாலும் உறுதிப்படுத்தப்படும் நிலையில், அவர்களது துஆக்களை வஸீலாவாகப் பிரயோகிப்பதைப் போன்று அவர்களையும் வஸீலாவாகப் கொள்ள முடியும் என்பது நிச்சயமானதாகும். மாறாக, எவர் முதலாவதை ஏற்று, இரண்டாவதை மறுக்கின்றாரோ அவர் ஒன்றுடனொன்று நெருக்கமான இரு அம்சங்களைப் பிளவுபடுத்திவிட்ட ஒருவராகவே இருப்பார்.
இவ்வகையான வஸீலாக்கள், ஹதீஸ்கலை வல்லுனர்களில் பிரபல்யமானவர்களினால் சரிகாணப்பட்ட ஸஹீஹான வழியில் அறிவிக்கப்பட்ட நபி மொழிகளிலிருந்து சுட்டிக்காட்டப்பட்டவற்றினூடாக விதந்துரைக்கப்பட்டுள்ளன.
6) நல்லடியார்களையும் அவர்களது மகத்துவம், சிறப்பு என்பவற்றையும் கொண்டு வஸீலா தேடுவது.
நிச்சயமாக முஸ்லிம்களின் வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள், இவ்வகை வஸீலாவை தமது வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அம்சமாகக் காண்பர். அதாவது, அவர்கள் இயல்பாகவே நல்லடியார்களையும் அவர்களது சங்கை, சிறப்பு என்பவற்றையும் வஸீலாவாகக் கொள்ளும் நடைமுறை கொண்டவர்களாக இருந்து வருகின்றார்கள்.
ஹஸ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஷஷஅடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வுக்கான கடமைகள் எவை என்று உமக்குத் தெரியுமா?|| என்று வினவினார்கள். நான் ஷஷஅல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிக அறிந்தவர்கள்|| என்று கூறினேன். அவர்கள் சொன்னார்கள்: ஷஷஅடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வுக்கான கடமைகள், அவனை வணங்குவதும் அவனுக்கு இணைவைக்காதிருப்பதுமாகும்||
சிறிது நேரம் மௌனமாக இருந்தபின் மீண்டும் நபியவர்கள் என்னிடம் கேட்டார்கள்: ஷஷமுஆதே! அல்லாஹ் மீதுள்ள அடியார்களுக்கான கடமைகள் எவை என்று உமக்குத் தெரியுமா?|| நான் ஷஷஅல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிக அறிந்தவர்கள்|| என்று கூறினேன். அவர்கள் சொன்னார்கள்: ஷஷஅடியார்களை வேதனைப்படுத்தாதிருப்பதே அல்லாஹ் மீது கடமையாகும்|| (ஸஹீஹ் முஸ்லிம்)
எனவே, புனித அல்குர்ஆன் நபிமார்களுடையவும் நல்லடியார்களுடையவும் வஸீலா தொடர்பான நிகழ்வுகளை, தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. அதுபற்றிய பல்வேறு வகைகளையும் அடையாளப்படுத்துகின்றது. வஸீலா என்பது நபியவர்களையும் அவர்களது துஆவையும் பிரிக்கும் படியாக, துஆவுடன் மட்டும் வரையறுக்கப்பட்டதாக இல்லை. மாறாக, நபிகளாரின் ஆன்மாவையும் உள்ளடக்கியதாக அது அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
நபி மொழிகளில் வஸீலா
நபி (ஸல்) அவர்களையும் ஏனைய நல்லடியார்களையும் வஸீலாவாகக் கொள்வது ஆகுமென்பதற்கு நபிகளாரின் பெருந்தொகையான ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன. அவற்றுள் சில வருமாறு:
1) உஸ்மான் இப்னு ஹுனைப் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஒரு தடவை, கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஷஷயாரசூலல்லாஹ்! என்னைக் குணப்படுத்தும்படியாக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்|| என வேண்டிக் கொண்டார். அதற்கு நபியவர்கள், ஷஷநீ விரும்பினால் உனக்காக பின்னர் துஆச் செய்கின்றேன். அது உனக்கு சிறந்ததாக அமையும். அல்லது இப்போதே விரும்பினால் அதை செய்கிறேன்|| என்று கூறினார்கள். ஷஷஇப்போதே துஆச் செய்யுங்கள்|| என அவர் வேண்டிக் கொண்டார்.
நபியவர்கள் எழுந்து, அம்மனிதரை வுழுச் செய்யுமாறு ஏவினார்கள். பூரணமாக வுழு செய்தபின், இரண்டு ரஅகத்துகள் தொழச் சொன்னார்கள். அதன்பின் இவ்வாறு பிரார்த்தியுங்கள் என்று கீழ்க்காணும் துஆவை கற்றுக் கொடுத்தார்கள்:
ஷஷயாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நபிமார்களுக்கெல்லாம் அருளான முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டினால் உன்னை முன்னோக்கிக் கேட்கிறேன். முஹம்மதே! நிச்சயமாக நான் எனது குறித்த தேவை நிறைவேற்றப்படுவதற்காக தங்களைக் கொண்டு எனது இரட்சகனிடம் முன்னோக்கியுள்ளேன். யாஅல்லாஹ்! எனது விடயத்தில் அவரை பரிந்துரைக்கச் செய்வாயாக||
இந்த ஹதீஸ், சந்தேகமற ஸஹீஹான ஹதீஸாகும். இப்னு தைமிய்யா உள்ளிட்ட பலர் இதனை ஸஹீஹ் என ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஹதீஸ் ஸஹீஹான ஹதீஸ் என உறுதியாக எடுத்துரைக்கும் இமாம் ராபிஈ அவர்கள், அந்த கண்பார்வையற்ற மனிதர் நபிகளாரின் பொருட்டினால் பார்வையை அடைந்து கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் தவிர, நஸாஈ, பைஹகீ, தபரானீ, திர்மிதீ, ஹாகிம் முதலானோரும் தமது கிரந்தங்களில் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளனர்.
கண்பார்வையற்ற அம்மனிதருக்கு அவரது தேவையை நிவர்த்திப்பதற்காக நபிகளாரை வஸீலாவாகக் கொள்ளும் முறையினைத் தெளிவுபடுத்திய இந்த ஹதீஸ், வஸீலாவின் பூரணமான சமயத் தொடர்பு நிலையைத் தெளிவாக வலியுறுத்துகின்றது. இங்கு வஸீலாவாகக் கொள்ளப்படும் நபியவர்கள் எனக் குறிக்கப்படுவது நபி (ஸல்) அவர்களேயன்றி, அவர்களது துஆக்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது அந்தஸ்து, தொடர்பு என்பவற்றின் பொருட்டினாலேயே அல்லாஹ்வை எதிர்நோக்க வேண்டுமென இது அறிவுறுத்துகின்றது.
2) அபூசயீதல் குத்ரீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்: எவர் தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் செல்ல வெளியாகின்றாரோ, அவர் இவ்வாறு ஓதிக் கொள்ளவும்:
ஷஷயாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடத்தில் யாசிப்போரின் பொருட்டினால் கேட்கிறேன். தொழுகைக்காக நடந்து செல்வோரின் பொருட்டினால் கேட்கிறேன். நிச்சயமாக நான் தீங்கிழைப்பவனாகவோ, குழப்பம் ஏற்படுத்துவோனாகவோ, முகஸ்துதி மிக்கவனாகவோ, தற்புகழ்ச்சி விருப்பம் கொண்டவனாகவோ வெளியாகவில்லை. மாறாக, உனது கோபத்தை பயந்தும் உனது திருப்பொருத்தத்தை வேண்டியுமே வெளியாகினேன். ஆகவே, நரகிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறும் எனது பாவங்களை எனக்காக மன்னிக்குமாறும் உன்னிடம் கேட்கின்றேன். நிச்சயமாக பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை|| இவ்வாறு கூறினால், அல்லாஹ் தனது அருளுடன் அவரை முன்னோக்குகின்றான். அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் பாவமன்னிப்புக் கோருவார்கள்.
(இப்னு மாஜா)
இந்த ஹதீஸ், இறைநேசர்கள், நல்லடியார்களின் கண்ணியம், அந்தஸ்து, மற்றும் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குள்ள கௌரவம் என்பவற்றைக் கொண்டு வஸீலா தேட முடியும் என்பதற்கும், அவர்களை மனிதர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பிணைப்பாகவும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் தேவைகள் நிவர்த்திக்கப்படுவதற்குமான பரிந்துரைப்பாளர்களாகவும் கொள்ள முடியும் என்பதற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
3) அனஸ் இப்னு மாலிக் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: ஹஸ்ரத் அலி அவர்களின் தாயார் பாத்திமா பிந்து அஸத் மரணித்த போது, அங்கு நுழைந்த நபி (ஸல்) அவர்கள், அவர்களது தலைப்பகுதியில் அமர்ந்து கொண்டார்கள். ஷஷஎனது தாயாருக்குப் பிறகு எனக்குத் தாயாக இருந்தவரே! உங்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!|| என்று பிரார்த்தித்தார்கள். அவர்களது சிறப்புகளை எடுத்துரைத்தார்கள். தமது கைகளினாலேயே அவர்களுக்கு கபனுடை தரித்தார்கள்.
அதன்பின் உஸாமா இப்னு ஸைத், அபூஅய்யூப் அல்அன்சாரி, உமர் இப்னுல் கத்தாப், மற்றும் ஒரு கறுப்பு அடிமை ஆகியோரை அழைத்து கப்று தோண்டும்படி பணித்தார்கள். தோண்டப்பட்ட கப்றை தமது கைகளினால் சீர்செய்தார்கள். மண்ணை வெளியே அகற்றினார்கள். அதன்பின் கப்றினுள் இறங்கிய நபியவர்கள், ஜனாஸாவை உள்ளே வைத்து ஒரு பக்கம் சாய்ந்தாற் போல் படுக்க வைத்தார்கள். பின்பு சொன்னார்கள்:
ஷஷஅல்லாஹ்தான் உயிர்ப்பிக்கக் கூடியவனும் மரணிக்கச் செய்யக்கூடியவனும். அவனோ மரணமேயற்ற நித்திய ஜீவனாவான். யாஅல்லாஹ்! உனது நபியின் பொருட்டினாலும், எனக்கு முன்னர் வந்த உனது நபிமார்களின் பொருட்டினாலும் எனது தாயார் பாத்திமா பிந்து அஸத் அவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக! அவரது நுழைவிடத்தை விசாலப்படுத்தி வைப்பாயாக!|| (கஷ;புல் இர்தியாப்)
4) ஸவாத் இப்னு காரிப் எனும் கவிஞர் நபிகளார் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து யாத்த கசீதாவில் அவர்களைக் கொண்டு வஸீலா தேடியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அல்லாஹ்வையன்றி இரட்சகனில்லையென சான்றளிக்கிறேன்.
நீங்கள் எல்லா மறைவானவற்றின் மீதும் அபயமளிக்கப்பட்டுள்ளீர்கள்.
சிறப்பும் சங்கையும் கொண்டவரே!
நீங்கள் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான தொடர்புள்ள ரசூலாவீர்கள்.
நன்மை மிக்க தூதரே! நீங்கள் கொண்டு வந்ததை நாமேற்றோம்.
நன்மைகளின் சிறப்பு வடிவங்களை அதில் கண்டோம்.
உங்களையன்றி பரிந்துரைகளற்ற அந்நாளில்
எனக்கு நீங்கள் பரிந்துரையாளராக இருக்க வேண்டும்.
முஸ்லிம்களுடைய நடைமுறையில் வஸீலா.
நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும் அவர்களது மறைவுக்குப் பின்னரும் அவர்களையும் நல்லடியார்களையும் வஸீலாவாக் கொண்டு, அவர்களது சிறப்பின் பொருட்டினால் பரிந்துரை தேடும் நடைமுறை முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இதற்கு பின்வரும் நிகழ்வுகளை சான்றுகளாகக் கொள்ளலாம்.
1) நபி (ஸல்) அவர்கள் வபாத்தான போது அங்கு வந்த ஹஸ்ரத் அபூபக்கர் அவர்கள், ஷஷமுஹம்மதே! எங்களைப் பற்றி அல்லாஹ்விடம் நினைவுகூருங்கள். நாங்கள் தொடர்ந்தும் உங்கள் செயன்முறையிலே நிலைத்திருப்போம்|| என்று நபியவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.
2) ஷஇருளில் விளக்கு| எனும் தனது நூலில் ஹாபிஸ் அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னுமூஸா அந்நுஃமானீ குறி;ப்பிடுகின்றார்: அலி இப்னு அபீதாலிப் (அலை) அவர்கள் கூறியதாக ஹாபிஸ் அபூஸயீத் ஸம்ஆனி எழுதியுள்ளார்: நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி, அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்ட மூன்று நாட்களின் பின் ஒரு காட்டரபி எங்களிடம் வந்தார். நபிகளாரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றிருந்த அவர், நபிகளாரின் கப்றின் மீது விழுந்து புரண்டு, மண்ணை அள்ளித் தன் தலைமேற் போட்டுக் கொண்டு அழுதார். ஷஷயாரசூலல்லாஹ்! நாங்கள் கூறுவதை செவிமடுப்பதாக சொன்னீர்கள். ஷஅவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில் உம்மிடம் வந்து, அல்லாஹ்வின் பாவமன்னிப்பைக் கோரி, அவர்களுக்காக தூதராகிய நீரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், அன்புடையோனாகவும் மன்னிப்புடையோனாகவுமே அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்| என்று அல்லாஹ் அருளியுள்ளான். நான் எனது ஆன்மாவுக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீங்கள் எனக்காக பாவமன்னிப்புக் கோருவீர்கள் என்பதற்காக தங்களிடம் வந்துள்ளேன்|| என்று பரிதாபமாகக் கூறினார். அப்போது கப்றின் உள்ளேயிருந்து, ஷஷஉனக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது|| என்று அசரீரியான சப்தம் வந்தது. (வபாஉல்வபா லிஸ்ஸம்ஹூதி)
3) துஆக் கேட்பது, அல்லாஹ்விடம் யாசிப்பது, நபிகளாரை முன்னிறுத்தி அவர்கள் மூலம் வஸீலா தேடுவது, அவர்களது பரிந்துரை ஏற்றுக் கொள்ளக் கோருவது முதலான விடயங்களை நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு தெளிவாக கற்றுக் கொடுத்து, இவ்வாறு பிரார்த்திக்குமாறு கூறினார்கள்:
ஷஷயாஅல்லாஹ்! நிச்சயமாக அருள்மிக்க நபியான உனது திருத்தூதரை வஸீலாவாகக் கொண்டு அவர்களின் பொருட்டினால் நான் உன்னிடத்தில் யாசிக்கிறேன். முஹம்மதே! யாரசூலல்லாஹ்! நிச்சயமாக நான் தங்களின் பொருட்டினால் எனது தேவையை நிவர்த்திக்குமாறு எனது இரட்சகனிடம் யாசிக்கிறேன். யாஅல்லாஹ்! எனது விடயத்தில் அவரை சிபாரிசு செய்யவைப்பாயாக!|| (மஜ்மூஉர் ரஸாயில் வல்மஸாயில் லிப்னி தைமிய்யா)
4) ஸஹீஹுல் புஹாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது: உமர் இப்னு கத்தாப் அவர்களது காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்ட போது, அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்கள் மூலம் மழை தேடிப் பிரார்த்தித்துள்ளார்கள். ஷஷயாஅல்லாஹ்! நாங்கள் உனது நபியின் பொருட்டினால் தண்ணீர் வேண்டிய போதெல்லாம் நீ எமக்கு மழையைத் தருவித்தாய். இப்போது அந்த நபியினது பெரிய தந்தையின் பொருட்டினால் கேட்கின்றோம். எமக்கு மழையை அருள்வாயாக|| இப்பிரார்த்தனையின் பின் அவர்கள் மீது அல்லாஹ்வினால் மழை பொழியப்பட்டது.
5) கலீபா மன்சூர், மாலிகீ மத்ஹபின் ஸ்தாபகரான இமாம் மாலிக்கிடம் நபி (ஸல்) அவர்களை தரிசிக்கின்ற, அவர்கள் மூலம் வஸீலா தேடுகின்ற முறை பற்றி இவ்வாறு வினவினார்: ஷஷஅபூஅப்தில்லாஹ் அவர்களே! நான் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுமா? அல்லது ரசூலுல்லாவை முன்னிலைப்படுத்தி பிரார்த்திக்க வேண்டுமா?||
இமாம் மாலிக் இவ்வாறு பதிலளித்தார்: ஷஷநபி (ஸல்) அவர்கள், மறுமை நாள் வரைக்கும் உமது வஸீலாவாகவும், உமது தந்தை நபி ஆதமின் வஸீலாவாகவும் இருக்க, அவர்களை விட்டு உமது முகத்தை ஏன் திருப்பிக் கொள்கின்றீர்? நபியவர்களையே நீர் முன்னோக்கவும். அவர்களை வஸீலாவாகக் கொண்டு அவர்களது பொருட்டினால் பரிந்துரை தேடவும். அல்லாஹ் உங்களுக்கு பரிந்துரை வழங்குவான். அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்: ஷஷஅவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில் உம்மிடம் வந்து, அல்லாஹ்வின் பாவமன்னிப்பைக் கோரி, அவர்களுக்காக தூதராகிய நீரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், அன்புடையோனாகவும் மன்னிப்புடையோனாகவுமே அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்|| (வபாஉல் வபா)
6) இமாம் ஷhபிஈ அவர்கள் நபிகளாரின் குடும்பத்தினர் பற்றி யாத்த கவிதைத் தொடரின் சில வரிகளாவன:
நபியின் குடும்பத்தினர் எனது வம்சத்தினர்
அவர்களே எனது இறை தொடர்பாளர்கள்
அவர்கள் பொருட்டால் கேட்கிறேன். நாளை எனக்குக் கிடைக்கும்
வலது கரத்தில் எனது பட்டோலை.
இவ் ஆதாரங்கள், சான்றுகள், வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் நபிமார்கள், நல்லடியார்களை வஸீலாவாகக் கொண்டு அவர்களது பொருட்டினால் பிரார்த்தனை புரிவதென்பது சமயம் சார்ந்த அடிப்படை அம்சம் என்பது தெளிவாகின்றது. அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது: ஷஷவிசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவன்பால் சென்றடையக் கூடிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள். தவிர, அவனுடைய பாதையில் யுத்தம் செய்யுங்கள். அதனால், நீங்கள் வெற்றியடையலாம்||
(அல்மாயிதா-35)
இங்கு வஸீலா என்பது, கடமைகளை நிறைவேற்றல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல் என்பவற்றோடு மட்டும் வரையறுக்கப்பட்டதாக இல்லாமல், விரும்பத்தக்க அம்சங்களையும் பொதிந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
அஹ்லுல் பைத்தினரிடத்தில் வஸீலா
அல்குர்ஆனைக் கொண்டும் இறைநேசர்களைக் கொண்டும் வஸீலா தேடும்படியாக அஹ்லுல்பைத் இமாம்கள் அதிகமாகத் தூண்டியுள்ளார்கள். இமாமிய்யாக்களின் நூற்கள், ஹதீஸ் தொகுப்புகள், பிரார்த்தனைத் தொகுதிகள் முதலானவற்றில் வஸீலா பற்றிய விடயம் சந்தேகமற மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னுதாரணங்கள் சில வருமாறு:
1) ஹாரிஸ் இப்னு முகீரா அறிவித்துள்ளார்: அபூஅப்தில்லாஹ் (அலை) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். அவர்கள் குறிப்பிட்டார்கள். ஷஷஎச்சரிக்கிறேன், உங்களில் ஒருவர் தனது தேவைகளை நிறைவேற்ற அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக இருந்தால், முதலில் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்து, நபியவர்கள் மீது ஸலவாத் கூறியபின்பேயன்றி தனது தேவைகளைக் கேட்கக் கூடாது|| (பிஹாருல் அன்வார்)
2) ஜாபிருல் அன்ஸாரி கூறியதாக அபூஜஃபர் (அலை) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம், ஷஷஅலி இப்னு அபீதாலிப் பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?|| எனக் கேட்ட போது, ஷஷஅவர் எனது ஆன்மா|| என நபியவர்கள் பதிலளித்தார்கள். ஷஷஹஸன் ஹுஸைன் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?|| எனக் கேட்ட போது நபியவர்கள் இவ்வாறு சொன்னார்கள்:
ஷஷஅவர்கள் இருவரும் எனது உயிர். அவர்களது அன்னையாகிய பாத்திமா எனது மகள். அவரை வேதனைப்படுத்தக் கூடியது என்னையும் வேதனைப்படுத்தும். அவரை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியது என்னையும் மகிழ்ச்சிப்படுத்தும். அல்லாஹ்வை சாட்சியாகக் கொண்டு குறிப்பிடுகின்றேன். எவர், இவர்களை பகைத்துக் கொள்கின்றாரோ, அவருக்கு நானும் பகைவனாவேன். எவர், இவர்களுடன் உடன்பட்டுச் செல்கின்றாரோ, அவருக்கு நானும் உடன்பட்டவனாக இருப்பேன். ஜாபிரே! நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து அந்தப் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், இவர்களது பெயர்களைக் கொண்டு பிரார்த்தனை புரியுங்கள். ஏனெனில், இவர்களின் பெயர்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவையாக இருக்கின்றன||
3) நபி (ஸல்) அவர்கள் வஸீலாவுடன் துஆ கேட்கும் முறையை இவ்வாறு கற்றுத் தந்துள்ளார்கள்:
ஷஷயாஅல்லாஹ்! முஹம்மதின் பொருட்டினாலும் அவர்களது குடும்பத்தினரின் பொருட்டினாலும் உன்னை முன்னோக்குகின்றேன். அவர்களைக் கொண்டு உன்னை நெருங்குகின்றேன்.எனது தேவைகளுக்கு மத்தியில் அவர்களையே முற்படுத்துகின்றேன்|| (பிஹாருல் அன்வார்)
4) இமாம் அலி (அலை) அவர்கள் தமது துஆவில் இவ்வாறு இரைஞ்சக் கூடியவர்களாக இருந்தார்கள்,
ஷஷமுஹம்மத் நபியவர்களின் பொருட்டினாலும் அவர்களது குடும்பத்தினரின் பொருட்டினாலும் அவர்களை விட மகத்துவம் வாய்ந்த உனது வல்லமையின் பொருட்டினாலும் கேட்கிறேன். அவர்களது குடும்பத்தினன் போன்று அவர்கள் மீது நீ ஸலவாத் சொல்வாயாக. யாஅல்லாஹ்! முந்திய உனது முஃமினான அடியார்களில் யாசித்தோருக்கு நீ எவற்றையெல்லாம் கொடுத்தாயோ அவற்றில் சிறந்ததையும், எஞ்சியுள்ள முஃமின்களுக்கு நீ எவற்றைக் கொடுக்க இருக்கின்றாயோ அவற்றில் சிறந்ததையும் எனக்குத் தருவாயாக!||
5) இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தமது அரபா துஆவில் பின்வருமாறு பிரார்த்தித்துள்ளார்கள்:
ஷஷயாஅல்லாஹ்! நீ கடமையாக்கிய, மகத்துவப்படுத்திய இந்த மாலை வேளையில் உனது நபியும் ரசூலும் உனது படைப்பில் மிகச் சிறந்தவருமான முஹம்மத் நபி அவர்களின் பொருட்டினால் உன்னை முன்னோக்குகின்றேன்|| (இக்பாலுல் அஃமால்)
6) இமாம் ஸைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் ரமழான் மாத சிறப்பு துஆவில் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள்:
ஷஷயாஅல்லாஹ்! இந்த மாதத்தின் சிறப்பின் பொருட்டினாலும், இதிலே உலகின் ஆரம்பம் முதல் இறுதிவரை உன்னை வணங்கக் கூடிய அடியார்களின் பொருட்டினாலும், உனக்கு நெருக்கமான மலக்கின் பொருட்டினாலும், நீ அனுப்பி வைத்த நபியின் பொருட்டினாலும், நீ குறிப்பாக்கியுள்ள நல்லடியாரின் பொருட்டினாலும் கேட்கிறேன்||
(அஸ்ஸஹீபதுஸ் ஸஜ்ஜாதிய்யா)
வஸீலாவையும் அதன் சமயவியலையும் மறுப்போரின் முரண்கருத்துகள்
மரணித்தவர்களைக் கொண்டு வஸீலா தேட முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். இறந்தவர்கள் பதிலளிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையிலும், அவர்கள் இல்லாமை எனும் இயல்பை அடைந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவதானது இழிவான செயலென்றும் இவர்கள் கருதுகின்றனர்.
இவ்வாதாட்டம் அல்குர்ஆனின் தெளிவான கூற்றுக்களால் முற்றாக நிராகரிக்கப்படுகின்றது. மரணித்தவர்கள் இல்லாமையைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை அல்குர்ஆன் வன்மையாக மறுக்கின்றது. இதுபற்றிய அல்குர்ஆனின் கூற்றுகள் சில:
1) மரணித்த நல்லடியார்கள் பற்றி குறிப்பிடும் அல்குர்ஆன்,
ஷஷஅவர்களுக்கு காலையிலும் மாலையிலும் அவர்களுக்குரிய உணவு வழங்கப்படுகின்றது|| எனக் கூறுகின்றது. முஃமின்கள் பற்றிய குர்ஆன் கூறும் இந்நிலையானது இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்குச் சாத்தியமாகக் கூடியதாகும்.
2) ஆலமுல் பர்சஹ் எனும் கப்றிலான மனிதர்களின் இரண்டாம் கட்ட வாழ்க்கையில் காபிர்கள், பாவிகள் அடைந்து கொள்கின்ற வேதனைகள் பற்றி விவரணப்படுத்துகின்ற அல்குர்ஆன்,
ஷஷகாலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுவார்கள். தீர்ப்புக் காலம் நிலைபெறும் நாளிலோ, பிர்அவ்னுடைய ஜனங்களை கடுமையான வேதனையில் நுழைவியுங்கள் என்று கூறப்படும்|| எனக் குறிப்பிடுகின்றது.
இவ்வசனம், மரணத்திற்குப் பின்னால் மறுமை வரைக்குமான காலப்பகுதி பற்றிய அம்சத்தை சுட்டிக் காட்டுகின்றது. அக்காலப் பகுதியில் அனைவரும் உயிர்பெற்றிருக்கும் நிலைபற்றித் தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில், காலையிலும் மாலையிலும் பாவிகள் நரகின் மீது எடுத்துக் காட்டப்பட்டுக் கொண்டிருந்ததற்குப் பின்னரே மறுமை வரும் என்பது இங்கு குறிப்பிடப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.
இதிலிருந்து, மரணம் என்பது முழுமையாக அழிந்து, இல்லாமல் போவதல்ல என்பதையும் அதுவும் வாழக்கையின் ஒரு படித்தரம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
இறந்த ஒரு சடலத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? பர்சஹ் எனும் மனிதர்களின் இரண்டாம் கட்ட வாழ்க்கையானது இத்தகைய தொடர்புளைத் தடுக்கும் இயல்பைக் கொண்டுள்ளதா?
இதற்கான விடையை அல்குர்ஆனின் கூற்றுக்களிலும் நபிகளாரின் ஹதீஸ்களிலும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. அதாவது, கப்றுக்குள் வாழும் மனிதர்கள், உலகில் உயிரோடு வாழக்கூடிய மனிதர்களின் கூற்றுகளை செவிமடுக்கின்றார்கள். அதன்மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. கீழ்க்காணும் தரவுகளை இதற்கான ஆதாரங்களாகக் குறிப்பிடலாம்.
1- நபி ஸாலிஹ் (அலை) அவர்கள் தமது மக்களுக்கு சன்மார்க்க அழைப்பு விடுத்த போது, மக்களால் வேண்டப்பட்ட அல்லாஹ்வின் அத்தாட்சியான ஓர் ஒட்டகத்தை அவர்கள் முன்னிறுத்தி, அதற்கு எவ்வித தீங்கும் இழைக்கக்கூடாது என கட்டளையிட்டிருந்தார்கள். எனினும், மக்களோ வரம்பு மீறி அவ் ஒட்டகத்தின் கால் நரம்புகளை அறுத்து விட்டதனால், அல்லாஹ் அவர்களை மிகக் கடுமையாக சோதித்தான். இதுபற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
ஷஷஆகவே, பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால், அவர்கள் தங்கள் வீடுகளில் இறந்து வீழ்ந்து கிடக்க பொழுது புலர்ந்தது. (ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக் கொண்டு, ஷஎன்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும், நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை| என்று கூறினார்||
(அஃராப்-78)
அல்லாஹ், ஸாலிஹ் நபியின் கூட்டத்தினரான ஸமூத் மக்களை பூகம்பத்தினால் அழித்து விட்டதன் பின்னர், ஸாலிஹ் நபியவர்கள், அழிந்து மண்ணோடு சென்று விட்ட அம்மக்களை விளித்து தமது கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார்கள் என்ற அல்குர்ஆனின் இவ்வரலாற்று நிகழ்வு, மனிதர்களுடன் அவர்களது இறப்புக்குப் பின்னரும் தொடர்பு கொள்ள முடியும் என்ற உண்மைக்குச் சான்றாக விளங்குகின்றது.
2- நபி ஷ{ஐப் (அலை) அவர்கள் அல்லாஹ்வினால் அழிக்கப்பட்ட தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் என்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது:
ஷஷஷ{ஐப் அவர்களிலிருந்து விலகி, ஷஎன்னுடைய மக்களே! நிச்சயமாக நான் என் இறைவனின் செய்திகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, அதனை நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு துக்கிப்பேன்| என்று கூறினார்||
நபி ஷ{ஐப் அவர்கள், இவ்வாறு அழிந்து போன தமது மக்களை அழைத்து முன்னிறுத்திக் கூறிய இவ்விடயம் மேற்படி விடயத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
ஸாலிஹ் நபியவர்களும் ஷ{ஐப் நபியவர்களும் பூகம்பத்தின் மூலமாக அழிக்கப்பட்ட தமது கூட்டத்தினரை அழைத்து நேரடியாக வினாத்தொடுக்கும் படியான கூற்றுகளை கூறியுள்ளார்களெனின் இதன் அர்த்தம் என்ன?
ஆனால், இக்கூற்றுகள் வெறுமனே கைசேதத்தினாலும், கவலையினாலும் சொல்லப்பட்டவை என விளக்கம் கொடுப்பது, அடிப்படை தப்ஸீர் துறைக்குப் புறம்பான விளக்கமாகவே அமையும்.
இவ்விடயம் தொடர்பாக அல்குர்ஆனில் மட்டுமன்றி, நபிகளாரின் வாழ்க்கையிலும் நமக்கான படிப்பினைகளும் ஆதாரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் சில:
1- ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், பத்ர் களத்திற்குச் சென்று, பத்ர் யுத்தத்தில் கொல்லப்பட்ட குறைஷpக் காபிர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த குலைப் எனும் இடத்திற்கு வந்தார்கள். இரவின் மத்திய நேரமாக இருந்த அத்தருணத்தில் நபியவர்கள், அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த குறைஷpகளை விளித்து இவ்வாறு கூறினார்கள்: ஷஷகுலைப்வாசிகளே! உத்பாவே! iஷபாவே! உமையாவே! அபூஜஹ்லே! மற்றும் குறைஷpகளே! உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்தவற்றைக் கண்டு கொண்டீர்களா? எனது இரட்சகன் எனக்கு வாக்களித்தவற்றை நான் கண்டு கொண்டேன்|| நபிகளாரின் இக்கூற்றைக் கேட்டதும் அங்கிருந்த முஸ்லிம்கள் நபிகளாரை நோக்கி, ஷஷயாரசூலல்லாஹ்! மண்ணோடு மண்ணாகிவிட்ட ஒரு சமூகத்தை நீங்கள் அழைக்கிறீர்களே?|| என்று வினவிய போது, நபியவர்கள் சொன்னார்கள்: ஷஷஉங்களை விடவும் நான் சொல்பவற்றை அவர்கள் நன்கு செவிமடுப்பார்கள். ஆனாலும் அவர்களால் பதிலளிக்க முடியாது|| (ஸஹீஹ் புஹாரி)
2- முஸ்லிம்கள் தமது தொழுகையின் முடிவில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாம் சொல்கின்றார்கள்.
ஷஷநபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் அவனது பரகத்தும் உண்டாவதாக|| நிச்சயமாக நபிகளாரின் வழிமுறையென்பது அவர்களது வாழ்விலும் மரணத்தின் பின்னும் நிலைபெற்றிருக்கக் கூடியது என்பதையும், தொழுகை முதலான வணக்கங்களின் போதும் அவர்களுடனான தொடர்புகள் அறுந்துவிடுவதில்லையென்பதையுமே இவ்விடயம் அறிவுறுத்தி நிற்கின்றது.
3- நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்:
ஷஷஎவர் எனது மறைவுக்குப் பின் என்னை தரிசித்து எனக்கு ஸலாம் கூறுகின்றாரோ, அவருக்கு நான் பத்துமுறை பதில் ஸலாம் சொல்கின்றேன். அவரை பத்து மலக்குமார்கள் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்கின்றார்கள். எவர் வீட்டிலிருந்து கொண்டு எனக்கு ஸலாம் சொல்கின்றாரோ, அவருக்கு பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனது உயிரை எனக்கு மீட்டுத் தருகின்றான்|| (சுனன் அபீ தாவூத்)
4- நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஷஷஎவர் எனது மறைவுக்குப் பின் என்னை சந்திக்கின்றாரோ, அவர் என்னை நான் உயிரோடு இருக்கும் போதே சந்தித்தவர் போன்றாவார்|| (கன்சுல் உம்மால்)
ஆலமுல் பர்சஹில் உள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றதெனில், தேவைகளை அவர்களிடம் வேண்டுவதும் அவர்களை வஸீலாவாகக் கொள்வதும் ஆகாதா? அல்லது அது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாக அமையுமா? ஏனெனில் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது,
ஷஷநிச்சயமாக விடயங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குரியவையே|| (ஆலஇம்ரான்-154)
இதற்கான விடையாக நாம் குறிப்பிடுவது, எல்லா விடயங்களுமே அல்லாஹ்வுக்குரியவையே. அவையனைத்தும் அவனது நாட்டப்படியே இடம்பெறுகின்றன. நபிமார்கள், நல்லடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அனுமதியோடு பிறருக்கு பரிந்துரை செய்யலாம் என்ற விடயமும் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அம்சமே. நபி ஈஸா (அலை) அவர்கள் நோயாளிகளை குணப்படுத்தியதும் மரித்தோரை உயிர்ப்பித்ததும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் பிரகாரமான அம்சங்களே. அதற்காக ஈஸா நபியை நம்பிக்கை கொள்வது இணைவைப்பாக ஆக முடியுமா?
எல்லா விடயங்களுமே அவற்றுக்கென குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறை ஒழுங்குகளை சற்றும் பிசகாமல் ஒழுகி நடக்கின்றன. இதனை மூஸா (அலை) அவர்களது கூற்றிலிருந்து உணர முடிகின்றது:
ஷஷ(மூஸா நபி) கூறினார்: இது என்னுடைய கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என்னுடைய ஆடுகளுக்கு தழைகளைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு உபயோகங்களும் உள்ளன|| (தாஹா-18)
நபியவர்கள் தமது பரிசுத்த நிலையுடன், அல்லாஹ் தவிர்ந்த ஏனையோரிடமும் உதவி தேடியிருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களது விடயத்தில் இறங்கிய கீழ்வரும் வசனம் இதனை உறுதி செய்கின்றது:
ஷஷநபியே! அல்லாஹ்வும் முஃமின்களில் உம்மை பின்பற்றக் கூடியவர்களும் உமக்குப் போதுமானவர்களாவர்||
(அன்பால்-64)
இவ்வசனமானது, நபி ஈஸா (அலை) அவர்கள் தமது சிஷ;யர்களை தமக்கு உதவியாகக் கொண்டிருந்தது போன்று, நபி (ஸல்) அவர்கள் தமது முஃமின்களை தமக்காக உதவியாகக் கொண்டிருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. ஈஸா நபியவர்கள் ஷஷஅல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?|| (ஆலஇம்ரான்-52) எனக் கேட்ட போது, அவர்களது சிஷ;யர்கள் ஷஷநாங்கள் அல்லாஹ்வுடைய உதவியாளர்கள்|| எனக் கூறினார்கள் என்பதாக அல்குர்ஆன் விவரிக்கின்றது. அதே போன்று நபி மூஸா (அலை) அவர்களும் தமது சகோதரர் ஹாரூனை தமக்கு உதவியாகக் கொண்டிருந்தார்கள். ஷஷஉம் சகோதரைக் கொண்டு நாம் உம் புஜத்தை பலப்படுத்துவோம்|| (கஸஸ்-35) என்று அல்லாஹ் அவர்களுக்குக் கூறியிருந்தான்.
இவை தவிர, அல்லாஹ்தஆலா தனக்காக தனது அடியார்களிடம் உதவி கோரி நிற்கும் நிலையையும் அல்குர்ஆன் விபரிக்கின்றது:
ஷஷநீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவன் உங்களுக்கு உதவி புரிவான்||
(முஹம்மத்-7)
மேலும், ஷஷஎவர்கள் (முஜாஹித்களாகிய) இவர்களுக்கு இடமளித்து வைத்துக் கொண்டு, உதவியும் புரிகின்றார்களோ அவர்கள்தாம் உண்மையான விசுவாசிகள்|| (அன்பால்-74) என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது.
எனவே, அல்லாஹ் தவிர்ந்த ஏனையவற்றை வஸீலாவாகக் கொண்டு உதவி தேடுவது ஆகுமென்பதை நாம் வழக்கப்படுத்திக் கொள்கின்றோம். ஏனெனில், அதற்கு அல்லாஹ்வுடைய அங்கீகாரம் இருக்கின்றது. அதேபோன்று நபிமார்கள், இறைநேசர்களையும் அவர்கள் உலகில் உயிரோடு இருக்கும் போதோ, மரணித்த பின்னரோ அவர்களிடம் உதவி தேடுவதும் அவர்களை வஸீலாவாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் ஆகுமான விடயங்களேயாகும்.
நிச்சயமாக, ஸஹாபாக்கள் எவருமே நபி (ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்வதை அவர்களது வாழ்விலும் சரி, மறைவுக்குப் பின்னரும் சரி நிராகரிக்கவில்லை.
நபிமார்களையும் நல்லடியார்களையும் அவர்களது மறைவுக்குப் பின் வஸீலாவாக் கொள்வது.
நபி (ஸல்) அவர்களை, அவர்களது மறைவுக்குப் பின்னரும் வஸீலாவாகக் கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும் அவர்களது பொருட்டினால் அல்லாஹ்விடம் யாசிப்பதும் முஸ்லிம்களிடையே நடைமுறையில் இருந்து வருகின்ற அம்சமாகும். அத்தகைய துஆக்கள் அதிகம் உள்ளன. அவற்றுள் சில வருமாறு:
1- முஸ்னத் அஹ்மதில் வந்துள்ளதாவது:
ஷஷயாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடத்தில் யாசிப்போரின் பொருட்டினால் கேட்கிறேன். தொழுகைக்காக நடந்து செல்வோரின் பொருட்டினால் கேட்கிறேன். நிச்சயமாக நான் தீங்கிழைப்பவனாகவோ, குழப்பம் ஏற்படுத்துவோனாகவோ, முகஸ்துதி மிக்கவனாகவோ, தற்புகழ்ச்சி விருப்பம் கொண்டவனாகவோ வெளியாகவில்லை. மாறாக, உனது கோபத்தை பயந்தும் உனது திருப்பொருத்தத்தை வேண்டியுமே வெளியாகினேன். ஆகவே, நரகிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறும் எனது பாவங்களை எனக்காக மன்னிக்குமாறும் உன்னிடம் கேட்கின்றேன். நிச்சயமாக பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை||
இந்த ஹதீஸிலே நல்லடியார்களது துஆக்களூடாக மட்டுமன்றி நல்லடியார்களின் ஆன்மாவையும் வஸீலாவாக் கொள்ள முடியும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இருக்கின்றது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைப் பிரயோகமானது நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி நாள் வரையான அனைத்து யாசகர்களையும் உள்ளடக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மலாயிக்காமார்கள், மற்றும் முஃமினான ஜின்களையும் உள்வாங்கியதாகக் காணப்படுகின்றது. அதாவது, முஃமினான மனிதர்களை மட்டுமன்றி, முஃமினான ஜின்கள், மற்றும் மலக்குகளின் பொருட்டினாலும் துஆக்கள் இரைஞ்ச முடியும் என்பதையே இது விளக்குகின்றது. எனவே, இதனை வெறுமனே சமகாலத்தில் வாழுகின்ற உயிர் ஜீவன்களுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ள முனைவது தவறான செயற்பாடாகவும், சமய நெறிமுறைக்கு முரண்பாடானதாகவும் அமையும்.
2- நஸாஈ மற்றும் திர்மதீ என்பவற்றில் வந்துள்ளதாவது:
ஷஷயாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நபிமார்களுக்கெல்லாம் அருளான முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டினால் உன்னிடத்தில் வேண்டுகின்றேன். முஹம்மதே! நிச்சயமாக நான் எனது குறித்த தேவை நிறைவேற்றப்படுவதற்காக தங்களைக் கொண்டு எனது இரட்சகனை முன்னோக்கியுள்ளேன். யாஅல்லாஹ்! எனது விடயத்தில் அவரை பரிந்துரைக்கச் செய்வாயாக||
இது, நபி (ஸல்) அவர்களது வபாத்துக்குப் பின்னர் அவர்களை வஸீலாவாகக் கொண்டு முஸ்லிம்கள் கேட்ட துஆக்களில் ஒன்றாகும்.
இந்த துஆ பற்றிய இப்னு தைமிய்யாவின் முரண்கருத்துகள்.
இப்னு தைமிய்யாவும், ஸலபீன்கள், வஹாபிகளாகிய அவரைப் பின்பற்றுவோரும் நபிமார்கள், மற்றும் நல்லடியார்களிடம் அவர்களது மறைவுக்குப் பின் வஸீலா தேடுவதை நிராகரிக்கின்றனர். அது சமய முரண் செயலெனவும் வாதிடுகின்றனர். இதுபற்றிய இப்னு தைமிய்யாவின் கருத்தாவது:
ஷஷபடைக்கப்பட்டவர்களைக் கொண்டு துஆச் செய்வதோ, படைப்பினங்களைக் கொண்டு உதவி தேடுவதோ வஸீலாவில் இல்லை. நிச்சயமாக வஸீலா என்பது, அல்லாஹ்விடமான பிரார்த்தனையும் அல்லாஹ்விடமான உதவி தேடலுமாகும். எனினும், இப்னுமாஜாவில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த ஹதீஸின் தன்மை பற்றிய ஒரு கேள்வியுள்ளது.
அதாவது, நபியவர்கள் தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் செல்லும் போது, ஷஷயாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடத்தில் யாசிப்போரின் பொருட்டினால் கேட்கிறேன்....|| எனும் துஆவை இரைஞ்சியுள்ளார்கள். ஆனால், இது நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது மேற்கொண்ட வஸீலாவாகும். எனவே, ஒருவர் மறைந்ததற்குப் பின்னரும் அவர் மூலம் வஸீலா தேடுவது ஆகும் என்பதற்கு ஆதாரமாக இதனைக் குறிப்பிடுவது பிழையான அணுகுமுறையாக அமையும்||
மேலும், நபிகளாரது காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்காகப் பிரார்த்திக்குமாறு நபியவர்களை வேண்டிக் கொண்டார்கள். நபியவர்களும் அந்த மனிதர்களுக்காக பிரார்த்தித்தார்கள். சிலர் நபிகளாருடன் இணைந்து தாமும் பிரார்த்தித்தார்கள். காட்டரபியின் நிகழ்விலும் இதனையே அவதானிக்க முடிகின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதுமட்டுமல்லாமல், நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த போது, அவர்களை வஸீலாவாக் கொண்டு பிரார்த்தித்த மக்கள், அவர்களது மறைவுக்குப் பின்னர், அப்போது உயிரோடு இருந்த அப்பாஸ் (ரழி) அவர்களை வஸீலாவாகக் கொண்டு பிரார்த்தித்தமையானது, மரணித்தவர்களை வஸீலாவாகக் கொள்ள முடியாது என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது. அவ்வாறுதான் முஆவியா அவர்களும் தம்மத்தியிலிருந்த யசீத் இப்னுல் அஸ்வத் அல்ஜுர்ஷP என்பவரை வஸீலாவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஷஷயாஅல்லாஹ்! நாங்கள் எங்களில் சிறந்தவரைக் கொண்டு உன்னிடத்தில் வஸீலா தேடுகின்றோம். யசீதே! அல்லாஹ்வின் பால் உங்கள் கைகளை உயர்த்துவீராக!||
இறுதியாக இப்னுதைமிய்யா இவ்வாறு கூறி தன் கூற்றை நிறைவு செய்கின்றார்: ஷஷஉலமாக்களில் எவரும் வஸீலாவையோ, நபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்டு அவர்களது மறைவுக்குப் பின்னர் மழைவேண்டிப் பிரார்த்திப்பதையோ மார்க்கக் கடமையாகக் குறிப்பிடவில்லை. மழைவேண்டிப் பிரார்த்திப்பதிலோ, உதவி தேடிப் பிரார்த்திப்பதிலோ, ஏனயை விடயங்களுக்காகப் பிரார்த்திப்பதிலோ அவர்கள் இவ்வழிமுறையை விரும்பவில்லை. துஆ என்பது மார்க்கத்தின் முக்கிய பாகமாகும்||
இப்னுதைமிய்யாவின் இம்முரண்கருத்துகளுக்கான விடைகள் மிகத் தெளிவானவையாகும். அவரது கூற்றின் நிலைபற்றி ஆராய்வோம்.
1- நிச்சயமாக அவர் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவது, அவர்களது அந்தஸ்தைக் கொண்டு வஸீலா தேடுவது ஆகிய இரண்டையும் கலந்து ஆராய்ந்ததாலேயே அவருக்கு இம்முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இவ்விரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. ஷஷமுஹம்மதே! யாரசூலல்லாஹ்! நிசச்யமாக நான் உங்களைக் கொண்டு அல்லாஹ்வை முன்னோக்குகின்றேன்|| என்ற பிரார்த்தனைக்கும் ஷஷயாஅல்லாஹ்! உன்னிடத்தில் முஹம்மத் நபியின் பொருட்டினால் கேட்கின்றேன்|| என்ற பிரார்த்தனைக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. முன்னையதில், நபிகளாரை முன்னோக்கி, நேரடியாக அவர்களிடமே கேட்பதும் பின்னையதில், நபிகளாரினதும் அவர்களது சிறப்புகள் அந்தஸ்துகளதும் பொருட்டினால் கேட்பதும் குறித்துக் காட்டப்படுகின்றது. இவ்விரண்டும் நபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்டு கேட்கப்படக்கூடிய இருவழிமுறைகளைக் கொண்ட வஸீலாக்களாகும்.
2- இப்னு தைமிய்யா, தனது கருத்தில் நபி (ஸல்) அவர்களை முன்னோக்குவது அவர்களிடம் துஆ செய்யக் கோருவது ஆகிய இரு அம்சங்களையும் ஒன்றோடொன்று இணைத்து சிந்தித்துள்ளார். அதனையே பிரகடனமும் செய்துள்ளார். ஆனால், இவ்விரண்டும் தனித்தனியான வௌ;வேறு அம்சங்களாகும். காட்டரபி நபிகளாரிடம் ஒரு தேவை நிமித்தம் வந்து, ஷஷயாரசூலல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விடம் எமக்காக சிபாரிசு செய்ய வேண்டுமென தங்களை வேண்டுகின்றோம்|| எனக் கோரிய போது, நபியவர்கள் அவருக்கு அதனை நிவர்த்தித்துக் கொடுத்தார்கள்.
3- மரணித்தவர்கள் மூலம் வஸீலா தேடுவதை உலமாக்கள் எவரும் ஆதரிக்கவில்லையென்பது இப்னுதைமிய்யாவின் மற்றுமொரு கூற்றாகும். ஏனெனில் துஆ பற்றிய அனைத்து வகைகளையும் ஒன்றுசேர்த்த அவர், ஷஷஉலமாக்களில் எவரும் வஸீலாவையோ, நபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்டு அவர்களது மறைவுக்குப் பின்னர் மழைவேண்டிப் பிரார்த்திப்பதையோ மார்க்கக் கடமையாகக் குறிப்பிடவில்லை. மழைவேண்டிப் பிரார்த்திப்பதிலோ, உதவி தேடிப் பிரார்த்திப்பதிலோ, ஏனயை விடயங்களுக்காகப் பிரார்த்திப்பதிலோ அவர்கள் இவ்வழிமுறையை விரும்பவில்லை|| என்று குறிப்பிடுகின்றார்.
முதலில், மரணித்தவர்களைக் கொண்டு வஸீலா தேட முடியும் என்பதற்கான உலமாக்களின் அனுமதியை வெளிப்படுத்தக் கூடிய ஆதாரங்களை முன்வைத்துவிட்டு, பின்னர் உலமாக்கள் எவரும் இதனை ஆதரிக்கவில்லையெனக் கூறுவது இப்னுதைமிய்யாவின் தெளிவற்ற சிந்தனையையே வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
இப்னு தைமிய்யாவின் கூற்றுகளை மறுதலிக்கக் கூடிய சில விடயங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.
பிரதானமாக, நபி (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலா தேடக் கூடாது என்றால், அதனை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரங்களையும் இப்னு தைமிய்யா முன்வைக்கவில்லை. இதற்கு முற்றிலும் பொருத்தமற்ற சான்றுகளையே இவ்விடயத்தில் நிறுவ எத்தனித்துள்ளார். எனவே, ஆதாரமற்ற ஒரு விடயம் எப்படி உறுதியான சமயச் செயன்முறையாக அமைய முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
பிரபல ஸஹாபியான உஸ்மான் இப்னு ஹுனைப் அவர்களது தெளிவான அறிவிப்புகளால் சரிகாணப்பட்டுள்ள இவ்விடயத்தை மறுதலிக்க முடியாது. அவர்கள் உஸ்மான் இப்னு அப்பானுடைய காலத்தில், நபி (ஸல்) அவர்களைக் கொண்டு எவ்வாறு வஸீலா தேடுவது என்பதை பிறருக்கு கற்றுக் கொடுத்து, பின்னர் அவர்களிடம் பரிந்துரை செய்யக் கோருவார்கள்.
பைஹகீ அறிவித்துள்ள ஒரு ஹதீஸாவது: கலீபா உஸ்மான் இப்னு அப்பானுடைய ஆட்சிக் காலத்தில் ஒரு மனிதர் பெரும் தேவையுடையவராக இருந்தார். ஆனால், அவரது தேவை குறித்து கலீபா அவர்கள் எத்தகைய சிரத்தையும் காண்பிக்கவில்லை. கலீபாவை தனியாக சந்திக்க எத்தனித்த போதும் அவரால் அது முடியவில்லை. ஒரு நாள் அம்மனிதர் உஸ்மான் இப்னு ஹுனைபை சந்தித்தார். இதுபற்றி அவரிடம் முறையிட்டார். உடனே உஸ்மான் இப்னு ஹுனைப் அவர்கள் தண்ணீர் எடுத்து வரச் செய்து அதன் மூலம் அம்மனிதரை வுழுச் செய்யச் சொன்னார்கள். பின் பள்ளிவாயலுக்கு அழைத்து வந்து இரண்டு ரகத் தொழச் செய்தார்கள். பின்னர் இவ்வாறு ஓதும்படி சொன்னார்கள்: ஷஷயாஅல்லாஹ்! நிச்சயமாக நான் அருள் மிக்க நபியான உனது திருத்தூதர் முஹம்மத் நபியின் பொருட்டினால் உன்னை முன்னோக்குகின்றேன். முஹம்மதே! நிச்சயமாக நான் எனது தேவை நிவர்த்திக்கப்படுவதற்காக உங்களைக் கொண்டு எனது இரட்சகனை முன்னோக்கியுள்ளேன்|| இவ்வாறு கூறிய பின், உனது தேவையைக் குறிப்பிட்டு பிரார்த்திக்கவும்|| என உஸ்மான் இப்னு ஹுனைப் அம்மனிதருக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அம்மனிதரும் அவ்வாறே செய்து விட்டு, கலீபாவை சந்திக்கச் சென்ற போது, கலீபா அவர்கள் இறங்கி வந்து அம்மனிதரின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று, தனது விரிப்பில் அவரை அமர வைத்து, அவருடைய தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்றியும் கொடுத்தார்கள்.
அங்கிருந்து வெளியே வந்த அம்மனிதர், உஸ்மான் இப்னு ஹுனைபை சந்தித்தார். ஷஷஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக. கலீபா என்னை திரும்பியும் பார்க்காதவராக இருந்தார். நீங்கள் கற்றுத் தந்த அம்சங்களூடாக நான் எனது தேவைகளை கலீபாவிடம் இப்போது அடைந்து கொண்டேன்|| என மகிழ்ச்சியுடன் அவர் கூறினார். உஸ்மான் இப்னு ஹுனைப் சொன்னார்: ஷஷஅவற்றை நான் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்தே நான் அவற்றைக் கேட்டேன். கண்பார்வையற்ற ஒரு மனிதர் வந்து தனது தேவையை நிவர்த்திக்கக் கோரிய போது நபியவர்கள் இவ்வாறே சொல்லிக் கொடுத்தார்கள்|| என்று அந்நிகழ்வை அவருக்கு விளக்கிக் கூறினார்.
பைஹகீ குறிப்பிடுகின்றார்: இச்சம்பவத்தை அஹ்மத் இப்னு iஷப், ஹிஷhம், அபூஉமாமா முதலானோர் உஸ்மான் இப்னு ஹுனைபை தொட்டும் அறிவிப்பு செய்துள்ளார்கள். எனினும் இப்னு தைமிய்யாவோ, வஸீலா விடயத்தில் தனது கருத்திலேயே தொடர்ந்தும் நிலைத்திருந்தார். இந்த ஹதீஸுக்கு அதிகமான இணைப்புகளையும் எடுத்துக் கூறினார்.
ஸலபீன்களிடமிருந்து ஒரு வரலாற்று நிகழ்வு எடுத்துக் காட்டப்படுகின்றது. இப்னு அபித்துன்யா, தனது நூலான மஜானித் துஆவில் இதனைக் குறிப்பிடுகின்றார். ஒரு மனிதர், அப்துல்மலிக் பின் ஸயீத் பின் ஜுபைரிடம் வந்து, வலிமிக்கவராக தன் வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தார். அவரது நிலையை அவதானித்த அப்துல் மலிக், ஷஷஉனக்கு சுகப்படுத்த முடியாத பெரும் நோயொன்று பீடித்துள்ளது|| என்று கூறினார். கவலையுற்ற அம்மனிதர், ஷஅது என்ன நோய்?| என வினவிய போது, ஷகழுத்துப் புற்றுநோய்| என ஜுபைர் விடையளித்தார். அதிர்ச்சியும் கைசேதமும் அடைந்த அம்மனிதர், அல்லாஹ்விடம் மண்டியிட்டு, ஷஷஅல்லாஹ், அல்லாஹ், எனது இரட்சகனே அல்லாஹ்! நான் எதனையும் உனக்கு இணைவைக்கவில்லை. யாஅல்லாஹ்! அருள் மிக்க நபியாகிய உனது முஹம்மத் நபியின் பொருட்டினால் உன்னை முன்னோக்குகின்றேன். முஹம்மதே! நான் உங்களைக் கொண்டு உங்களதும் எனதும் இரட்சகனை முன்னோக்குகின்றேன். எனக்கு ஏற்பட்டுள்ள நோய் நீங்க எனக்காக அருள்புரியுங்கள்||
இவ்வாறு துஆ இரைஞ்சிய பின் அம்மனிதரைப் பார்த்து ஜுபைர் சொன்னார்: ஷஷநீ சுகம் பெற்று விட்டாய். உன்னில் எவ்வித நோயுமில்லை||
இந்த துஆவும், இது போன்ற துஆக்களும் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன என்று இப்னுதைமிய்யா கூறியுள்ளார். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் தமது மன்சகுல் மரூஸி எனும் நூலில் எடுத்துக் கூறியுள்ள நபிகளாரைக் கொண்டு வஸீலா தேடக்கூடிய துஆக்களையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். எனவே, மரணித்தபின் நபிமார்களையும் நல்லடியார்களையும் வஸீலாவாகக் கொள்ள முடியாது, அவர்களிடம் எமது தேவைகளை முன்வைக்கக் கூடாது என்ற இப்னு தைமிய்யாவின் கருத்து மேற்குறிப்பிடப்பட்ட தரவுகள் மூலம் நிராகரிக்கப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. இப்னு தைமிய்யாவின் இக்கருத்துகள் ஷஅத்தவஸ்ஸுல் வல்வஸீலா| என்னும் அவரது நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், இவையனைத்தும் தவறான சிந்தனையின் விளைவுகள் என்பது தெளிவாகின்றது.
உண்மை யாதெனில், முன்சென்ற ஸலபீன்களில் மிக அதிகமானோர் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலா தேடும் மார்க்க நடைமுறையையும் ஒழுங்கையும் தவறாது பேணிவந்துள்ளார்கள். நபிகளாரின் மறைவுக்குப் பின்னரும் இந்நிலை தொடரப்பட்டுள்ளது. அதேவேளை, நபியவர்களுடன் மட்டும் அவர்கள் தமது வஸீலா தேடல்களை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தும் சிறப்பும் உள்ளவர்களாகக் கணிக்கப்பட்ட அனைத்து நல்லடியார்களையும் தமது வஸீலாவில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆய்வின் சுருக்கம்.
மரணம் என்பது முழுமையான அழிவு என்பதல்ல. மரணித்து கப்றுக்குள் சென்று ஆலமுல் பர்சஹ் எனும் உலகில் வாழுகின்ற மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமான விடயமாகும். முஸ்லிம்களுடைய முந்திய, மற்றும் சமகால நிகழ்வுகள், ஆன்மா, துஆ என்ற வேறுபாடின்றி நபிமார்களைக் கொண்டும் நல்லடியார்களைக் கொண்டும் - அவர்கள் உயிருடன் இருந்தாலும் மரணித்திருந்தாலும் - வஸீலா தேட முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றது. வஸீலாவை ஏற்றுக் கொள்வோர் தெளிவான ஆரோக்கியமான சிந்தனையுள்ளவர்களாக இருக்கின்ற அதேவேளை, வஸீலாவை விலக்கானதெனக் கூறி தடுக்கக் கூடியவர்கள் பிழையான அணுகுமுறை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது அல்குர்ஆன் ஹதீஸின் ஆதாரங்களூடாக தெளிவுபடுத்தப்படுகின்றது.
ஓர் அடியான் அல்லாஹ்வுடன் நெருக்கமாகக் கூடிய ஊடகத்தை தனது சுயவிருப்பின் பேரில் தேர்ந்தெடுக்க முடியாது. அது மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டு எல்லையிடப்பட்ட அம்சமாக விளங்குகின்றது. அது பற்றிய கருத்தியலின் அடிப்படையில் அதன் நிகழ்வு சாத்தியமாகும். இந்த மேலோட்டமான கருத்திற்கு அப்பாற்பட்ட தொடர்புகள் அனைத்தும் நூதனம் எனும் பித்அத்தும் வழிகேடுமாகும்.