இஸ்லாமிய நூல்கள்
01. நஹ்ஜுல் பலாகா
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஸயீத் ராஸி எனபவரால் தொகுக்கப்பட்டு ' நஹ்ஜுல் பலாகா ' என நாமமிடப்பட்டுள்ள இந் நூல் ஹஸ்ரத் அலி ( அலை ) அவர்களது நல்லுபதேசங்கள் , போதனைகள் , கடிதங்கள் ஆணைகள் மற்றும் சில பொன்மொழிகள் என்பவற்றின் மொழிபெயர்ப்பாகும்.
ஹஸரத் அலி ( அலை ) அவர்களது இந்த நல்லுபதேசங்களும் போதனைகளும் இஸ்லாமிய உலகின் மிகப் பெறுமதி மிக்கதாகவும் பெரும் மதிப்புக்கு உரியதாகவும் கருதப்படுகின்றது . அன்னாரின் மறைவின் பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள் அவை , ஏகத்துவ தத்துவங்களின் இறுதி வாக்கியமாகவும் , சிறந்த குண இயல்புகளை உருவாக்கும் சொற் பொழிவுகளாகவும் உளத் தூண்டலுக்கு உந்து சக்தியாகவும் பக்தி மார்க்கத்துக்கான தூண்டுதலை அளிக்கும் நல்லுபதேசங்களாகவும் உண்மை நியாயம் என்பவற்றுக்கான வழிகாட்டும் ஒளி விளக்காகவும் இறை தூதர் ( ஸல் ) அவர்களையும் புனித குர்ஆனையும் புகழ்ந்துறைக்கும் பொக்கிஷங்களாகவும் இஸ்லாமிய ஆன்மீக மாண்புகளின் தெளிவான விளக்கங்களாகவும் இறைவனின் நற்பண்புகள் பற்றிய பயபக்தியை தூண்டும் கலந்துரையாடலாகவும் உன்னதமான இலக்கியமாகவும் சொல் இலக்கணவியலின் மாதிரியாகவும் கொள்ளப்பட்டு கற்பிக்கப்பட்டும் , வாசிக்கப்பட்டும் வருகின்றது .
01 ) ஆஃஹிரத ;
1. மனிதர்களே ! நிச்சயமாக இவ்வுலகம் அழிந்து விடுவதுளூ மறுவுலகமே நிலையானது எனவே , உங்களது அழிந்து விடுவதிலிருந்து உங்களது நிலையானதற்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் . உங்களது இரகசியங்களை அறிந்தவர்களிடத்தில் உங்களது திரைகளைக் கிழித்துவிடாதீர்கள் .
2. தன் மறுமை விடயங்களை சீர்செய்து கொள்பவருக்கு, அவருடய இம்மை விடயங்களை அல்லாஹ் சீர் செய்து கொடுக்கின்றான் .
3. எவர் மறுமையைத் தேடுகின்றாரோ, அவர் இவ்வுலகத்திலிருந்து முழுமையாக எடுத்துக் கொள்ளும் வரை அது அவரைத் தேடிக் கொண்டிருக்கும் .
4. ( உலகில் வாழுகின்ற ) முதற்கட்ட வாழ்வை அவதானித்துக் கொண்டே, ( மறுமையில் வாழுகின்ற ) அடுத்த கட்ட வாழ்வை நிராகிப்பவர்களைப் பார்த்து நான் வியப்புகின்றேன் . அவ்வாறே , அழிந்து போகும் இவ்வுலக வாழ்வை நிர்மாணிப்பவர்களையும் நிரந்தரமான மறுமை வாழ்வை புறக்கணிப்பவர்களையும் பார்த்து நான் வியம்புகின்றேன் .
5. தனக்கு உபதேசம் புரியுமாறு கேட்ட ஒரு மனிதருக்கு இமாம் அலி ( அலை ) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ளூ அமல் தவிர்ந்த ஏனையவற்றின் மூலம் மறுமையை தேடுவோனாக நீ இராதே ளூ
6. இமாம் ஹஸன் ( அலை ) அவர்களுக்கான இறுதி உபதேசத்தில் இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ளூ எனது அன்பு மகனே ! நிச்சயமாக நீ படைக்கப் பட்டிருப்பது மறுமைக்காகவே ளூ இமமைக்காக அல்ல . மரணத்துக்காகவே ளூ தொடர் வாழ்க்கைக்காக அல்ல ளூ
7. இவ்வுலகின் கசப்பு மறுமையின் இன்சுவையாகம் . இவ்வுலகின் இன்சுவை மறுமையின் கசப்பாகும் .
8. இவ்வுலகின் நாசங்களையும் மறுமையின் நிர்மாணிப்பையும் அல்லாஹ் இணைக்காது தடுத்துள்ளான் .
9. மறுமையை இலக்காக கொண்டவராக துயிலெழுபவர் பணமின்றியே செல்வந்தராகிடுவார் ளூ உறவினர்களின்றியே மனிதாபிமானமுறுவார் ளூ குடும்பத்தினர் இன்றியே கணிணியம் பெறுவார் .
10. இவ்வுலகம் , செல்வங்களைக் கொண்டானது ளூ மறுமை , செயல்களைக் கொண்டானது .
11. மறுமையின் வியாபாரப் பொருட்கள் செலவு செய்யப் படாதவை ளூ எனவே , அவற்றின் பாத்திரங்களிலிருந்து அதிகப்படுத்திக் கொள் .
12. உண்மையில் சீதேவித் தனம் என்;ற சொல்லுக்குத் தகுதியானது மறுமையின் சீதேவித்தனமாகும் . அது நான்கு வகையாது ளூ அழிவற்ற நிரந்தரம் , மடமையற்ற அறிவு , இயலாமையற்ற வல்லமை , வறுமையற்ற செல்வம் .
13. தன் மறுமை விடயங்களை சீர் செய்து கொள்பவருக்கு அல்லாஹ் அவரது இவ்வுலக விடயங்களை சீர் செய்து கொடுக்கின்றான் .
14. மறுமை சீதேவித் தனமுடையோரின் வெற்றியமாகும் .
15. இவ்வுலகைக் கொண்டு மறுமையை வாங்கியவரே சிறந்த இலாபதாரர் .
16. செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் அலங்காரங்கள் ளூ நல்லமல்கள் மறுமையின் விளைச்சல்கள் .
17. இவ்வுலக விவகாரங்கள் கருத் தொற்றுமையின் வழி நடக்கின்றன . மறுமையின் பங்குகளோ தகுதியின் வழி நடக்கின்றன .
18. இவ்வலகம் முன்வைக்கப்பட்டுள்ள வியாபாரப் பொருளாகும் ளூ அதிலிருந்து நல்லவர்களும் தீயவர்களும் உண்பார்கள் . மறுமை உண்மையின் இல்லமாகும் ளூ அதில் வல்லமை பொருந்திய அரசனே ஆட்சி செலுத்துவான் .
19. இவ்வுலகின் ஏமாற்றுகளால் மறுமைக்காக அமல் செய்வதிலிருந்து தடுக்குப் படாதிருப்பவரே உறுதியானவராவார் .
20. மறுமை உங்களது நிலையான இருப்பிடம் ளூ எனவே , உங்களுக்கு இயலுமான வரை அதற்கென தயார் செய்து கொள்ளுங்கள் .
21. இறுதிப் பயணம் நெருங்கு முன்னர் மறுமைக்கான கடடுச்சாதங்களை ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் .
22. மறுமையில் மிகவும் செல்வந்தர்களாக இருப்பவர்கள் இம்மையில் மிகவும் வறியவர்களாக இருந்தவர்களே .
23. இன்றைய நாளில் , செயல் மட்டுமே ளூ கேள்வி இல்லை . நாளை , கேள்வி மட்டுமே ளூ செயல் இல்லை .
24. நிச்சயமாக நீ மறுமைக்காகவே படைக்கப்பட்டுள்ளாய் ளூ ஆகவே , அதற்காக செயல்புரி .
25. தயார்படுத்தல்களில் சிறந்தது மறுமையை சீர் செய்யகஒத்தின் வலியைப் போக்கிவிடும் .
26. நிலையான மறுமையின் வீடு , உண்மையாளர்களின் ஸ்தலமாகும் ளூ நல்லடியார்களினதும் இறைநேசர்களினதும் தாயகமாகும் .
27. இவ்வுலகைத் தவிர்ப்பதன் மூலம் மறுமையைப் பெற்றுக் கொள்ளுங்கள் ளூ மார்க்கத்தை தவிர்ப்பதன் மூலம் இவ்வுலகைப் பெற்றுக் கொள்ளாதீர்கள் .
28. மறுமை நினைவு , மருந்தும் நிவாரணமுமாகும் .
29. மறுமையைத் தேடுபவன் தன் எதிர்பார்ப்பை அடைந்து கொள்வான் ளூ தவிரவும் , இவ்வுலகில் அவனுக்கென ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் அவனை வந்தடையும் .
30. மறுமையின் இறுதியென்பது நிரந்தரமாகும் .
31. மறுமையில் உள்ள ஒவ்வொரு விடயமும் , யதார்த்தத்தில் செவியுற்றுள்ளதை விடவும் பிரமாண்டமானதாகும் .
32. இவ்வுலகில் உனது உடலைக் கொண்டிரு ளூ மறுமையில் உனது உள்ளத்தையும் செயலையும் கொண்டிரு .
33. மறுமையில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் இவ்வுலகின் மீது பேராசையுறமாட்டார் .
34. தனது இவ்வுலகைக் கொண்டு மறுமையை வாங்குபவர் இரண்டிலும் இலாபம் பெறுவார் .
35. இவ்வுலகுக்காக மறுமையை விற்பவர் இரண்டிலும் நஷ்டமடைவார் .
36. மறுமையை சீர் செய்து கொள்பவர் உறுதியான வெற்றியைப் பெறுவார் .
37. மறுமையின் அருட் கொடைகளில் ஆசை கொள்பவர் இவ்வுலகின் எளிமையைப் போதுமாக்கிக் கொள்வார்.
38. மறுமையை இலட்சியமாகக் கொண்டவர் தனது எண்ணத்தின் உச்ச நிலைப் பயன்பாட்டை அடைந்து கொள்வார் .
39. மறுமையில் குறைந்தாலேயன்றி இம்மையில் அதிகரிப்பதில்லை .
40. மறுமையில் எவ்விதப் பங்குமற்றிருப்பவரின் நிலை எவ்வளவு கைசேதம் !
41. உலகில் தாம் பேராசையுறுபவற்றைத் தவிர்த்தாலேயன்றி , மறுமையில் தாம் விரும்பும் எதையும் எவரும் பெற்றுக் கொள்வதில்லை .
42. அழியும் இவ்வுலகை அறிந்து கொள்பவர் , நிலையான மறுவுலகுக்காக செயல்புரிவது அவசியமாகும் .
02 ) இஜ்திஹாத்
01 . தமது முயற்சியை அடைந்து கொள்ளும்படி உபதேசம் புரிவதும் உண்மையை நிலை நிறுத்துவதற்கு உதவி புரிவதும் அடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வுக்கான கடமைகளில் உள்ளவைனாகும் .
02 . ஓர் இமாமின் மீது , அவரது இறைவன் கடமையாக்கியுள்ள ( பின்வரும் ) விடயங்களைத் தவிர்த்து வேறெதுவும் கடமையில்லை : மார்க்க ஒழுக்கங்களை பிரசாரம் செய்வது , நல்லுபதேசத்தில் முயற்சிப்பது , சுன்னத்தை உயிர்ப்பிப்பது , சட்டங்களை அதற்குத் தகுதியானவர்கள் மீது நிலை நிறுத்துவது , சொத்துக்களை அவற்றுக் குரியவர்கள் மீது வெளிப்படுத்துவது .
03 . உஸ்மான் இப்னு ஹுனைபுக்கு இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ளூ நிச்சயமாக உங்களது இமாம் உலகில் கந்தல் ஆடையைப் போதுமாக்கிக் கொண்டார் . காய்ந்த ரொட்டித் துண்டுகளை உணவாக்கிக் கொண்டார் . அறிந்து கொள்ளுங்கள் , இவ்வாறு நடந்து கொள்ள உங்களால் முடியாது. எனினும் பேணுதல் , முயற்சி , கற்பொழுக்கம் , மனோவுறுதி முதலானவற்றில் என்னைப் பின்பற்றிக் கொள்ளுங்கள் ளூ
04 . பாவங்களை விடுபவரே கடுமையான இஜ்திஹாத் உள்ள மனிதராவார் .
05 . இஜதிஹாத் மிக இலாபம் தரும் விடயமாகும் .
06 . இஜ்திஹாதுக்காக செயல் புரிபவர் , தன் விருப்பத்தை அடைந்து கொள்வார் .
07 . உன்னை சீர் திருத்திக் கொள்வதில் இஜ்திஹாதை ( முயற்சியை ) விட்டுவிடாதே ளூ நிச்சயமாக , அவ்விடயத்தில் முயற்சியைத் தவிர வேறெதுவும் உனக்குதவாது .
03 ) அஜல ;
1 . மனிதனுடைய அஜல ; ( ஆயுள் முடிவு ) அவனுக்கு மறைவானது ளூ அவனது எதிர்பார்ப்பு அவனை ஏமாற்றிவிடக் கூடியது .
2 . நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுடனும் அவனைப் பாதுகாக்கும் இரு மலக்குகள் இருப்பர் . அவனது முடிவு வந்து விட்டால் , அவனுக்கும் அதற்குமிடையிலிருந்து அவர்கள் விலகிவிடுவர் . நிச்சயமாக அஜல் ( முடிவு ) பாதுகாப்பான கேடயமாகும் .
3 . தனது எதிரப்பார்ப்பின் ஒழுங்கில் நடந்து கொள்பவர் , தனது முடிவின் போது தவறிழைப்பவர் .
4 . ஏழையானவன் மனிதன் ளூ அவன் தன் இறுதி முடிவு மறைக்கபட்டவன் , குறைகளால் போர்த்தப்பட்டவன் , அமல்கள் பாதுகாக்கப்பட்டவன் . மூட்டைப் பூச்சியும் அவனை வேதனைப்படுத்துகின்றது , நோய்கள் அவனைக் கொன்று விடுகின்றன ளூ வியர்வை அவனை துர்வாடையுடையவனாக்குகின்றது .
5 . அடியான் தன் இறுதி முடிவையும் அதன் பாதையையும் அறிந்து கொள்வானானால் , தன் எதிர்ப்புக்கள் , அவற்றின் ஏமாற்றுக்கள் மீது மிகுந்த கோபமுறுவான் .
6 . அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் , மனிதர்கள் உலகத்தில் புற நிலையைக் கவனித்துக் கொண்டிருபக்கையில், அதன் அக நிலையை அவதானித்துக் கொடிருப்பர் ளூ மனிதர்கள் இவ்வுலக விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் , அவர்கள் மறுமை விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர் .
7 . நிச்சயமாக நீ உனது எதிர்பார்ப்புகளை அடைய முடியாது , உனது முடிவை மீற முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள் .
8 . நிச்சயமாக நீ உனது முடிவை முந்திவிபவனாக இல்லை ளூ உனக்குரியதல்லாத உணவு வழங்கப்படுபவனாகவும் இல்லை .
9 . நற் செயலை தீவிரப்படுத்திக் கொள்ளுங்கள் ளூ இறுதி முடிவின் அதிர்வைப் பயந்து கொள்ளுங்கள் .
10. அல்லாஹ் , ஒவ்வொரு விடயத்துக்கும் ஓர் அளவை ஏற்படுத்தியுள்ளான் ளூ ஒவ்வோர் அளவுக்கும் ஒரு முடிவையும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு ஏட்டையுதம் அமைத்துள்ளான் .
11 . ஒவ்வெரு முடிவுக்கும் , மீற முடியாத எல்லையும் தாண்ட முடியாத காரணம் இருக்கின்றன .
12 . மறுமைக்காக தீவிரப்படுங்கள் ளூ முடிவுகளை முந்திக் கொள்ளுங்கள் ளூ நிச்சயமாக மனிதர்கள் , எதிர்பார்ப்பு தம்மிலிருந்து களையப்படுவதையும் முடிவு தம்மை அச்சுறுத்துவதையும் முறையிடுவார்கள் . அச்சமயத்தில் அவர்களுக்கான தௌபாவின் வாசல் அடைக்கப்பட்டிருக்கும் .
13 . பேராசையாளனுக்கு இறுதி முடிவு போதுமானதாகும் .
14 . ஒவ்வொரு வாழ்க்கைக்கும் முடிவு இருக்கிறது .
15 . மனிதனின் மூச்சு , அவனது இறுதி முடிவை நோக்கிய காலடிகளாகும் .
16 . ' உணவும் ( ரிஸ்க் ) , இறுதி முடிவு எப்படியானவை ? ' என்று கேட்கப்பட்ட போது , இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ' நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உனக்குச் சேரவேண்டிய ரிஸ்க் இருக்கிறது . உன்னிடத்தில் அல்லாஹ்வுக்குச் சேரவேண்டிய முடிவு இருக்கிறது . அல்லாஹ் தன்னிடமுள்ள உனக்குரியதை உனக்குத் தந்தால் , உன்னிடத்திலுள்ள தனக்குரிய தான் எடுத்துக் கொள்வான் ' .
17 . தன் இறுதி முடிவை விளங்கிக் கொள்பவரின் எதிர்பார்ப்புகள் குறைவடையும் .
18 . குடும்ப உறவை இணைந்து வாழ்வது செல்வத்தை வளப்படுத்துவதும் இறுதி முடிவை தள்ளிவைப்பதுமாகும் .
19 . மனிதன் பாவங்களினால் மரணிப்பது , இறுதி முடிவினால் மரணிப்பதை விடவும் அதிகமானது .
20 . இறுதி முடிவு , போராடிக் கொண்டிருக்கிறது .
21 . இறுதி முடிவு , ஒரு கேடயமாகும் .
22 . இறுதி முடிவு , பாதுகாப்பான கோட்டையாகும் .
23 . இறுதி முடிவுகள் , எதிர்பார்ப்புகளை அறுத்துவிடும் .
24 . இறுதி முடிவு , எதிர்பார்ப்பை இழிவுபடுத்தும் .
25 . இறுதி முடிவு , எதிர்பார்ப்பின் அறுவடையாகம் .
26 . அறிந்து கொள்ளுங்கள் : நீங்கள் எதிர்பார்ப்புடைய தினங்களில் இருக்கின்றீர்கள் ளூ அதற்குப் பின்னால் இறுதி முடிவு இருக்கிறது . எவர் தனது இறுதி முடிவு வருமுன் தனது எதிர்பார்ப்புடைய தினங்களில் நற்செயல் புரிகின்றாரோ , அவருக்கு அவரது செயல் பயனளிக்கும் ளூ அவரது முடிவு அவரைப் பாதிக்காது . எவர் தனது இறுதி முடிவு வருமுன் தனது எதிர்பார்ப்புடைய தினங்களில் நற்செயல்களைக் குறைத்துக் கொள்கின்றாரோ அவரது செயல் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் ளூ அவரது முடிவும் அவரைப் பாதிக்கும் .
27 . மிகவும் நெருக்கமான விடயம் இறுதி முடிவாகும் .
28 . மிகவும் உண்மையான விடயம் இறுதி முடிவாகும் .
29 . எதிர்பார்ப்புகளின் உச்சத்தை நீங்கள் அடைந்தால் இறுதி முடிவுகளின் பயங்கரத்தை ஞாபகியுங்கள் .
30 . எதிர்பாப்புகளின் ஆபத்து இறுதி முடிவுகளின் வருகையாகும் .
31 . இறுதி முடிவுகளின் வருகையின் போது எதிர்ப்புகளின் அழிவு வெளிப்படும் .
32 . இறுதி முடிவுகளின் தாக்குதலின் போது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் இழிவுபெறும்.
33 . ஒவ்வொரு முடிவுக்கும் வருகை இருக்கிறது .
34 . இறுதி முடிவின் நெருக்கத்தையும் வருகையையும் பற்றி நீங்கள் சிந்தித்தால் , வாழ்க்கையின் சுவையும் மகிழ்ச்சியும் உங்களுக்கு மிகக் கசப்பானதாக இருக்கும் .
35 . இறுதி முடிவுகளில் நேரங்களின் அழிவு இருக்கிறது .
36 . இறுதி முடிவு என்பது சிறந்த மருந்தாகும் .
37 . இறுதி முடிவை விட பலமான கேடயம் இல்லை .
04 ) இஹ்ஸான்
1 . நன்மை செய்வதன் மூலம் உன் சகோதரனை எதிர்கொள் ; கொடை கொடுப்பதன் மூலம் அவனது தீமைகளைத் தவிர்த்துக் கொள் .
2 . மனிதன் தனது நற்செயல்களின் மூலம் பின்பற்றப்படுபவன் ; தனது திரைகளின் மூலம் ஏமாற்றப்படுபவன் ; தன்னிலுள்ள நல்ல பேச்சின் மூலம் சோதிக்கப்படுபவன் . இவற்றை நிரப்பிக் கொடுப்பது போன்ற எதன் மூலமும் அல்லாஹ் எவரையும் சோதிப்பதில்லை .
3 . உனக்கு எவ்வாறு நன்மை செய்யப்பட வேண்டுமென்று விரும்புகின்றாயோ , அவ்வாறு மற்றவர்களுக்கு நீ நன்மை செய் .
4 . நன்மையான விடயங்கள் மீதுள்ளதை விட பலமானவனாக தீமையானவற்றில் நீ ஆகிவிட வேண்டாம் .
5 . உனக்குத் தீங்கிழைத்தவருக்கும் நீ நன்மை செய் ; உனக்கு நன்மை செய்தவரை போதுமாக்கிக் கொள் .
6 . நன்மை செய்வது நாவைத் தடுக்கும் .
7 . நீ விரும்பியவருக்கு நன்மை செய் ; அவருக்குத் தலைவராக நீ ஆகிவிடுவாய் .
8 . நன்மை செய்வது சிறப்புக்குரியதாகும் .
9 . ஒரு முறை இமாம் அலி ( அலை ) அவர்கள் , ' நான் ஒருபோதும் யாருக்கும் நல்லது செய்வதில்லை ' என்று கூறினார்கள் . மனிதர்களெல்லோரும் வியப்புடன் தமது தலையை உயர்த்திப் பார்த்தார்கள் . இமாமவர்கள் இத்திருமறை வசனத்தை ஓதினார்கள் . ' நீங்கள் நன்மை செய்தால் உங்களது ஆன்மாக்களுக்கே நன்மை செய்து கொள்கின்றீர்கள் : நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றின் மீதேயாகும் .
10 . மனிதர்கள் நன்மை செய்வோரைச் சார்ந்தவர்களாவர் .
11 . நீ ( புதிதாக ) நன்மை செய்ய விரும்பும் ஒருவருக்கு நன்மை செய்யும் விடயத்தில் சுயதேர்வுள்ளவனாக நீ இருக்கிறாய் . ஆனால் , நீ ( ஏற்கனவே ) நன்மை செய்த ஒருவருக்கு தொடர்ந்து நன்மை செய்யும் , விடயத்தில் கடமைப்பட்டவனாக நீ இருக்கிறாய் . ஏனெனில் , அதனை நீ தொடராது தவிர்த்தால் , அதனைப் பாழாக்கியவனாகி விடுவாய் . நீ அதனைப் பாழாக்குவதென்றால் எதற்காக அதனை செய்தாய் ?
12 . நன்மை செய்தவனுக்கு தீமை செய்வது , அவனது கொடையைத் தடுத்து விடுகின்றது . தீமை செய்தவனுக்கு நன்மை செய்வது , அவனது கொடுமைகளிலிருந்து உன்னைப் பாதுகாக்கின்றது .
13 . நன்மை செய்வது மனிதர்களின் விடுதலைக்கு காரணமாகின்றது .
14 . மனிதன் மௌனமாக இருக்கும் போது அவன் நன்மையாளன் என்றே எழுதப்பட்டுக் கொண்டிருப்பான் . அவன் பேசும் போதுதான் நல்லவன் என்றோ , தீயவன் என்றோ எழுதப்படுகின்றான் .
15 . தீங்கிழைத்தவனுக்கு நன்மை செய்வது பகைவர்களை சீர் திருத்துகின்றது .
16 . தீங்கிழைத்தவருக்கு நன்மை செய்வது கொடைகளில் மிகச் சிறந்ததாகும் .
17 . நன்மை செய்வது என்பது ஒரு களஞ்சியமாகும் . அதை நகர்த்துபவனே சிறந்த கொடையாளன் .
18 . நன்மை செய்வது கொடைகளில் தலையாயதாகும் .
19 . நன்மை செய்வது , கனீமத் பொருளாகும் .
20 . நன்மை செய்வது , பரஸ்பர அன்பாகும் .
21 . நன்மை செய்பவன் , உதவி செய்யக் கூடியவன் .
22 . நன்மை செய்தவன் , மரணித்து சடலங்களில் இருப்பிடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரோடிருப்பான் .
23 . தனது நற்செயல் மூலம் அனைத்து மனிதர்களையும் அரவணைத்துக் கொள்பவனே சிறந்த நன்மையாளன் .
24 . கொடை என்பது நன்மை செய்தவனுடன் இணைந்திருக்கிறது .
25 . தனது நற்செயல்களை வெளிப்படுத்துபவனே சிறந்த கொடையாளன் .
26 . நன்மை செய்தவருக்கு தீங்கிழைப்பைக் கூலியாக்குவது இறை நிராகரிப்பாகும் .
27 . நன்மை செய்தவருக்கு பதிலீடாக நன்மை செய்வது பூரணமான கொடையாகும் .
28 . உனக்குத் தீங்கிழைத்தவருக்கும் நன்மை செய் ; உன்னைக் குற்றப்படுத்தியோரையும் மன்னித்து விடு .
29 . தீங்கிழைத்தவனுக்கு நன்மை செய்தால் , அவனை நீ அடைந்து கொள்வாய் .
30 . நீ நன்மை செய் ; நன்மை செய்யப்படுவாய் .
31 . உன் மீதுள்ள அருட்கொடைகளுக்கு கூலியாக , உனக்கு தீங்கிழைத்தவருக்கும் நீ நன்மை செய் .
32 . நீ அடிமை ஆக்கிக் கொண்டவர்களுக்கு நன்மை செய் ; உன்னை அடிமை ஆக்கிக் கொள்பவர்கள் உனக்கு நன்மை செய்வார்கள் .
33 . நன்மை செய் , விடுதலை பெறுவாய் .
34 . ஈமானில் மிகச் சிறந்தது பிறருக்கு நன்மை செய்வதாகும் .
35 . நன்மை செய்தவன் நிலைகளைக் கொள்ளை இட்டுக் கொள் ; சகோதரர்களை இழிவு படுத்துவதை கவனமாகத் தவிர்ந்து கொள் .
36 . பிறருக்கு நன்மை செய்தால் நீ கண்ணியம் பெறுவாய் ; நீயே பயனுறுவாய் .
37. மனிதர்களில் எவருக்கு அல்லாஹ் நன்மைகள் புரிந்து தனது வல்லமையினால் கரங்களை விரிவாக்கியுள்ளானோ அவரே நன்மை செய்யப்படுவதற்கு மிகத் தகுதி ஆனவர் .
38 . நிச்சயமாக முஃமின்கள் நன்மை செய்பவர்களாவர் .
39 . நன்மை செய்வதன் மூலம் உள்ளங்களை வெல்ல முடியும் .
40 . சக்தியின் ஆபத்து நன்மை செய்வதை தவிர்த்துக் கொள்வதாகும் .
41 . நன்மை செய்வதை நிராகரிப்பது ஹராமானவற்றை வற்புறுத்தி விடும் .
42 . நன்மை செய்தால் புன்னகைத்து , தீங்கிழைத்தால் மன்னித்து விடுபவரே அடியார்களில் சிறந்தவர் .
43 . ஈமானின் முக்கிய அம்சம் மனிதர்களுக்கு நன்மை புரிவதாகும் .
44 . இஸ்லாத்தின் அழகு நன்மை புரிவதை நடைமுறைப்படுத்துவதாகும்.
45 . நன்மை புரியும் சகோதரர்களுடன் சேர்ந்திரு ; மன்னிப்பின் மூலம் பாவங்களை அழித்து விடு .
46 . நன்மை செய்வதை தூண்டுபவைகள் மனிதனுடைய சிறப்புகளில் உள்ளவையாகும் .
47 . தீங்கிழைப்புகளை நன்மைகளின் மூலம் எதிர் கொள்ளுங்கள் .
48 . நன்மை புரிவதை அதற்குரியதல்லாத இடத்தில் வைத்தவன் அநீதி இழைத்தவன் ஆவான் .
49 . நன்மை புரிவதை கடைப்பிடியுங்கள் ; அது சிறந்த விளைச்சலும் இலாபம் தரும் வார்த்தைப பொருளுமாகும் .
50 . மனிதனின் சிறப்பு , நன்மை புரிவதை பரிமாறிக் கொள்வதாகும் .
51 . நன்மை புரிவதை தவிர்ந்து கொள்பவருக்கு சாத்தியப்பாடுகள் களையப்பட்டுவிடும் .
52 . நன்மை புரிவதை மறைத்துக் கொள்பவர் ஹராமானவற்றினால் தண்டிக்கப்படுவார் .
53 . நன்மை புரிவதன் வழக்கத்தை விட்டு விடுபவருக்கு அவரது சாத்தியப்பாடுகளின் இருப்பை அல்லாஹ் தடுத்து விடுவான் .
54 . உனக்கு நன்மை செய்ய உறுதி கொள்பவர் , உன்னை அதிகாரம் செலுத்துவதில் மென்மையாக இருப்பார் .
55 . நன்மை செய்வதை அதிகப்படுத்துபவரை அவரது சகோதரர்கள் அதிகம் விரும்புவார்கள் .
56 . நன்மை புரிவதை அதிகப்படுத்துபவர் , தனது சேவைகளையும் உதவிகளையும் அதிகப்படுத்திக் கொள்வார் .
57 . நன்மை புரிவதை விட தெளிவான சிறப்பு இல்லை .
05 ) இஹ்லாஸ்
1 . மார்க்கத்தின் ஆரம்பம் அல்லாஹ்வை அறிந்து கொள்வது ; அவனை அறிந்து கொள்வதன் பூரணத்துவம் அவனை உண்மைப்படுத்துவது ; அவனை உண்மைப்படுத்துவதன் பூணத்துவம் அவனை இஹ்லாஸ் ( தூய்மைப் ) படுத்துவது ; அவனைத் தூய்மைப் படுத்துவதன் பூரணத்துவம் அவனை விட்டும் மனிதப் பண்புகளை இல்லாதொழிப்பது .
2 . தக்வா உள்ளவர் பண்புகளை அல்லாஹ்வுக்கு இஹ்லாஸ் கொள்வார் ; அவனை தூய்மைப் படுத்துவார் .
3 . இரகசியமும் பரகசியமும் , சொல்லும் செயலும் முரண்படாதவர் இறை அமானத்தை நிறைவேற்றி , வணக்கத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றியவராவார் .
4 . தமது புதல்வர் இமாம் ஹஸன் ( அலை ) அவர்களுக்கு இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ' அல்லாஹ்விடம் யாசிப்பதில் உளத் தூய்மையைக் கடைப்பிடி ; ஏனெனில் அவனிடத்தில் கொடையும் தடையும் இருக்கிறது ' .
5. ( அஷ்தர் அன்னகயீ உடனான ஒப்பந்தத்தில் ) ' அல்லாஹ்வுக்கு உளத் தூய்மை பேணும் ஒரு விடயத்தில் விசேடத்துவமாக இருக்கவும் . அவ்விடயம் மார்க்கமாகும் . அதனுடைய கடமைகளே அல்லாஹ்வுக்கு விசேடத்துவமானவையாகும்' .
6 . இஹ்லாஸின் பூரணத்துவம் பாவங்களை விலக்கிவிடும் .
7 . சுவனத்தின் கனியைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ? அது உளத் தூய்மை என்ற நிபந்தனையுடன் சொல்லப்படுகிறன்ற ' லாயிலாஹ இல்லல்லாஹ் ' வாகும் .
8 . பூமியிலிருந்து மேலுயர்வதில் தெளிவானது இஹ்லாஸாகும் .
9 . இஹ்லாஸைக் கொண்டே முடிவுகள் அமையும் .
10 . இஹ்லாஸ் என்பது , ஈமானின் மிக உயர்ந்தது .
11 . இஹ்லாஸ் என்பது , வணக்கத்தின் வேர் .
12 . இஹ்லாஸ் என்பது , இறை நம்பிக்கையின் பயன்பாடு .
13 . இஹ்லாஸ் என்பது , மார்க்கத்தின் உச்ச நிலை .
14 . இஹ்லாஸ் என்பது , அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களின் வணக்கம் .
15 . இஹ்லாஸ் என்பது , வணக்கத்தின் பயன்பாடு .
16 . இஹ்லாஸ் என்பது , அமல்களில் சிறந்தது .
17 . சீதேவித்தனத்தின் அடையாளம் அமல்களின் மனத் தூய்மை கொள்வதாகும் .
18 . செயலில் தூய்மை கொள்வது இறை நம்பிக்கையின் இறை நம்பிக்கையின் பலமும் எண்ணத்தின் சீர் திருத்தமுமாகும் .
19 . செயல்களில் மிகச் சிறந்தது அவற்றில் தூய்மை உள்ளவையாகும் .
20 . ஈமானின் சிறந்தது இஹ்லாஸும் இஹ்ஸானுமாகும் . பண்புகளில் சிறந்தது . பகைமையைக் கைவிடுவதாகும் .
21 . நீ மனத் தூய்மை பேணினால் வெற்றி பெறுவாய் .
22 . செயலின் ஆபத்து , அதில் மனத் தூய்மையைத் தவற விடுவதாகும் .
23 . அடியான் அல்லாஹ்விடத்தில் நெருக்கமாவது அவனது எண்ணத்தின் தூய்மையைக் கொண்டே .
24 . அறிவின் பயன்பாடு செயலின் தூய்மை கொள்வதாகும் .
25 . உள்ளங்களின் அழகு ஈமானின் தூய்மை பேணுவதாகும் .
26 . சுவன வாசிகளின் தலைவர்கள் உளத் தூய்மை பேணியவர்களாவர் .
27 . அறிவின் சிறப்பு அதில் தூய்மை பேனுதலாகும் .
28 . வணக்கத்தில் தூய்மை பேணுவோர் வெற்றி பெறுவர் .
29 . அல்லாஹ்விடம் உள்ளவற்றில் ஆசையுறுவோர் தமது செயலை தூய்மைப் படுத்திக் கொள்ளவும் .
30 . எண்ணத்தைத் தூய்மைப்படுத்தியவர் குற்றச் செயல்களை விட்டும் தூய்மை ஆகிவிடுவார் .
06 ) அஃஹ்லாக ;
1 . இறையச்சம் முதன்மையான நல்லொழுக்கம் ஆகும் .
2 . உனது ஒழுக்கத்தின் குறைபாடுகளை உனது அன்பினால் மறைத்து விடு .
3 . எண்ணங்களில் மிகவும் கண்ணியமானது நல் ஒழுக்கமாகும் .
4 . நல் ஒழுக்கத்தைப் போல் சிறந்த தோழன் இல்லை .
5 . மனிதர்களுடன் அவர்களது நல் ஒழுக்கத்தின் இணைந்து இருப்பது , அவர்களது பகைமையை விட்டுமான பாதுகாப்பாகும் .
6 . உண்மைக்காக பொறுமை காப்பது சிறந்த ஒழுக்கமாகும் .
7 . எவரது நடைமுறைகள் இறுக்கமாகின்றனவோ அவரை அவரது குடும்பத்தினர் வெறுப்பர் .
8 . தன் வீழ்ச்சியை ஏற்றுக் கொள்பவன் பிறர் வீழ்ச்சியிலும் திருப்தியுறுவான் .
9 . எவரது பரகசியம் அழகாக இருக்கின்றதோ அவரது அந்தரங்கத்தை நாம் மிகவும் விரும்புவோம் .
10 . நல் ஒழுக்கத்தித் விவகாரத்தில் வளங்களின் களஞ்சியங்கள் உள்ளன .
11 . ஒவ்வொரு நற்குணத்திலிருந்தும் அழகானதை உனக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொள், நிச்சயமாக நல்லெததென்பது இயல்பானதாகும் .
12 . நல்லொழுக்கம் சிறந்த தோழனாகும் .
13 . ஏமாற்றுக் காரியங்களைப் புரியாதே, நிச்சயமாக அவை பழிப்புக்குரிய பண்புகளாகும் .
14 . நல்லொழுக்கத்தைப் போல நெருங்கிய உறவில்லை .
15 . ஒரு மனிதனிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் அவனுடைய சகோதரத்துவத்தை எதிர்பாத்திரு .
16 . ஒழுக்கத்தைச் சீர் கெடுப்பது அறிவிலிகளுடன் சேர்ந்திருப்பதாகும் . ஒழுக்கத்தைச் சீர்படுத்துவது அறிஞர்களுடன் சேர்ந்திருப்பதாகும் .
17 . நல்லொழுக்கம் , வணக்கம் புரியும் நோன்பாளியின் அந்தஸ்த்தை ஈட்டித் தரும் .
18 . எத்தனையோ கண்ணியவான்களை அவர்களுடைய பழக்கங்கள் இழிவு படுத்தி விடுகின்றன . எத்தனை இழிவானவர்களை அவர்களது பழக்கங்கள் கண்ணியப் படுத்தி விடுகின்றன .
19 . நிச்சயமாக அல்லாஹ் நல்லொழுக்கப் பண்புகளைத் தனக்கும் தனது படைப்புகளுக்கும் இடையே தொடர்பாடலாக் ஆக்கியுள்ளான் . எனவே, அல்லாஹ்வுடன் தொடர்புடைய ஒழுக்கப் பண்புகளை கடைப்பிடித்து ஒழுகுவது உங்களுக்குப் போதுமானதாகும் .
20 . ஒழுக்கப் பண்புகள் அழகாக உள்ளவரகக்குப் பாதைகளும் இலகுவாக இருக்கும் .
21 . நீங்கள் விரும்பிய பண்புகளோடு பிறருடன் இணைந்திருங்கள் , அதே பண்புகளுடனேயே அவர்களும் உங்களுடன் இணைந்திருப்பார்கள் .
22 . தன் நடைமுறைகளைச் சீர் செய்து கொள்ளாதவரின் ஒழுக்கப் பயிற்றுவிப்புகள் மனிதர்களுக்கு எவ்வித பயனுமளிக்காது .
23 . ஒரு மனிதன் தன் ஒழுக்க நிலை பற்றிப் பார்த்துணரும் கண்ணாடி பிற மனிதர்களாகும் . ஏனெனில் அவன் தனது நல்ல பண்புகளை தன் நண்பர்களிடமிருந்தும் , தன் தீய பண்புகளை தன் பகைவர்களிடமிருந்தும் உணர்ந்து கொள்கிறான் .
24 . நல்லொழுக்க நடைமுறைகள் பத்து விடயங்களைக் கொண்டுள்ளன . அவை : கொடை, நாணம், வாய்மை, அமானிதங்களை நிறைவேற்றல், பணிவுத் தன்மை, கற்பொழுக்கம், வீரம், அன்பு, பொறுமை, நன்றியுணர்வு ஆகியவையாகும் .
25 . தீய பண்பு பகைமையை ஏற்படுத்துகின்றது. அது, தன்னைப் போன்ற பண்புள்ளவனையே அங்கீகரிக்குமாறு மனிதனை வற்புறுத்துகின்றது .
26 . பிரயாணம் என்பது நல்லொழுக்கத்தின் தராசு .
27 . கொடையாளனின் ஒழுக்கப் பண்புகளில் மிகச் சிறந்தது, (தனது கொடையில்) தான் அறிந்துள்ளவற்றை மறந்து விடுவதாகும் .
28 . இறை நிராகரிப்பாளன், கெட்ட பண்புள்ளவனும் தீய பாதையுடையவனுமாவான் .
29 . இறை விசுவாசி, மென்மையான வாகனமும் இலகுவான படைப்புருவாக்கமும் உள்ளவனாவான் .
30 . இழிவான பண்புகள் , அறியாமையின் பயன்பாடுகளாகும் .
31 . தீய குணம், பெரும் அறியாமையும் வாழ்க்கையின் வீழ்ச்சியுமாகும் .
32 . தீய பண்பு , இரண்ட வேதனைகளில் ஒன்று .
33 . புகழக்குரிய பண்பு , புத்திக் கூர்மையின் பயன்பாடுகளில் ஒன்றாகும் .
34 . நிச்சயமாக உனது கொடை மனிதர்கள் அனைவரையும் சென்றடையும் பரப்பற்றது . எனவே, அவர்களில் மிகச் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள் .
35 . ஒழுக்கப் பண்புகள் அழகானால் வார்த்தைகள் மென்மையுறும் .
36 . நல்லொழுக்கப் பண்புகளினால் வளங்கள் அதிகரித்துப் பெருகும் .
37 . நல்லொழுக்கப் பண்பு அடிப்பiடான கொடையின் ஆதாராமாகும் .
38 . நல்லொழுக்கம், மார்க்கத்தில் மிகச் சிறந்தது .
39 . நல்லொழுக்கம் வளங்களை அதிகரிக்கச் செய்யும். நுற்புறவை ஏற்படுத்தும் .
40 . ஈமானில் தலையாதது நல்லொழுக்கப் பண்பும் வாய்மை பேணுதலுமாகும் .
41 . தீய குணம், விசமாகும். நன்மை செய்தவருக்கு தீங்கிழைப்பது, பழிப்பாகும் .
42 . தீய குணம் ஆன்மாவை மிருகத் தனமாக்கும். மனிதப் பண்புகளை அகற்றி விடும் .
43 . தீய குணத்தைத் தவிர அனைத்துக்கும் நிவாரணம் தரும் மருந்துண்டு .
44 . தீய குணமுள்ளவருக்குத் தலைமைத்துவம் இல்லை .
45 . நல்லொழுக்கப் பண்புள்ளதை விட வாழ்த்துக்குரிய வாழ்க்கை வேறில்லை .
46 . நடைமுறைப் பண்புகள் அழகானவரின் வாழ்க்கை சிறப்படையும் .
47 . தீய பண்புள்ளவர் தன்னைத் தானே கொடுமைப் படுத்தியவராவார் .
48 . எவரது பண்பு தீயதாகி விட்டதோ அவரது உணவு நெருக்கடியாகும் .
49 . இயல்பான நடவடிக்கை நல்லொழுக்கத்தில் சிறந்ததாகும் .
50 . அழகிய ஒழுக்கத்தில் ஈமான் சிறந்ததாகும் .
07 ) சகோதரத்துவம்
1 . மனிதாபிமானத்தின் ஒழுங்கு அழகிய சகோதரத்துவமாகும். மார்க்கத்தின் ஒழுங்கு அழகிய இறை நம்பிக்கை ஆகும் .
2 . பிறரை வேதனைப் படுத்தாதவருடன் சகோதரத்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதில் ஆசையுறு .
3 . சகோதரர்களில் கெட்டவன் வற்புறுத்துபவன் ஆவான் .
4 . சகோதரர்களை சம்பாதித்துக் கொள்ள முடியாதவனே மனிதர்களில் மிகவும் பலவீனமானவன் . அவனை விடவும் பலவீனமானவன் ஏலவே சம்பாதித்தவர்களை இழந்து விடுபவன் .
5 . உனது சகோதரர்களில் சிறந்தவன் உனக்கு உதவி புரிபவன் ஆவான் .
6 . நாவு இனிமையானவர்களுக்கு சகோதரர்கள் அதிகமாவார்கள் .
7 . தன் பழைய சகோதரர்களைப் பாதுகாத்து வருவது ஒரு மனிதனுடைய கண்ணியமாகும் .
8 . சகோதரர்களில் தீயவன் பிடுங்கிக் கொள்பவனும் வற்புறுத்துபவனும் ஆவான் .
9 . சகோதரர்கள் அதிகமிருப்பதை எச்சரிக்கிறேன் . நுpச்சயமாக உன்னை அறிந்தவர்களைத் தவிர மற்றெவரும் உன்னை வேதனைப் படுத்தமாட்டார்கள் .
10 . சகோதரர்கள் இரு வகைப் படுவர் . உறுதியான சகோதரர்கள், வெளிப்படையான சகோதரர்கள் . உறுதியான சகோதரர்கள் என்போர், கை , மணிக்கட்டு, உடலுருப்புகள், குடும்பத்தினர், மற்றும் செல்வத்தைப் போன்றவர்கள் . ஆத்தகைய உறுதியான சகோதரர்களுடன் நீ இருந்தால், அவனுக்காக உனது செல்வத்தையும் கையையும் நீ செலவு செய் . ஆவன் தெளிவு கொள்வதை நீயும் தெளிவு கொள் . ஆவன் பகைமை பாராட்டுவோரை நீயும் பகைமை பாராட்டு . அவனது இரகசியங்களை மறைத்து விடு . அவனுக்கு உதவி புரி . அவனிடத்தில் அழகை வெளிப்படுத்து . கேட்டுக் கொண்டிருப்பவனே! நன்கு அறிந்து கொள்!நிச்சயமாக அவர்கள் சிவப்பு மாணிக்கத்தை விடவும் கண்ணியமானவர்கள் . அஃதிருக்க , வெளிப்படையான சகோதரர்கள் என்போர் அவர்களிடத்தில் இருந்து நீ இன்பம் பெறுவாய் . இன்முகம் காட்டல், சுவையாகப் பேசல் என்பவற்றில் அவர்கள் உன்னுடன் நடந்து கொண்டாற் போல் நீ அவர்களுடன் நடந்து கொள்வாயாக .
11 . ஒவ்வொரு தவரைப் பற்றியும் சகோதரர்களிடம் வினாத் தொடுத்தால் அவனது நண்பர்கள் குறைந்து விடுவார்கள் .
12 . அல்லாஹ்வுக்காக சகோதரத்துவம் கொண்டிருப்பவர்கள் -அவர்களது பரஸ்பர அன்பு, அதற்கான காரணம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் .
13 . உண்மையான சகோதரர்கள் மகிழ்ச்சியின் போது அழகாகவும் கஸ்டத்தின் போது உதவியாகவும் இருப்பார்கள் .
14. சகோதரர்களில் மிகவும் சிறந்தவர், நல்லுபதேசம் புரிபவராவார். ஆவர்களில் மிகவும் கெட்டவர் ஏமாற்றுபவராவார் .
15 . சிறந்த சகோதரன் , நீ அவனை இழந்தால் அதன் பின் உலகில் இருக்க விரும்பமாட்டாயே அத்தகையவன் .
16 . சகோதரர்களில் சிறந்தவர் குறைவாக உபதேசம் புரிபவராவார் .
17 . உனது சகோதரர்களில் தீயவன், நல்வழியை விட்டு விலகி நடந்து , உன்னையும் அதனுடன் இணைத்துக் கொள்ள முயல்பவனாவான் .
18 . உனது சகோதரர்களில் கெட்டவன் உனது தவறுகளைப் பொருந்திக் கொள்பவனாவான் .
19 . வளமாக உள்ள நேரத்தில் எவ்வளவு அதிகமான சகோதரர்கள்! குhலம் நெருக்கடி ஆகிவிட்டால் அவர்கள் எப்படிக் குறைந்து விடுகிறார்கள் .
08 ) அதப்
1 . உங்களது ஆன்மாக்களில் ஒழுக்கப் பயிற்றுவிப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் .வழக்கங்களின் தீங்கிலிருந்து அவற்றை நியாயமாக விலக்கிக் கொள்ளுங்கள் .
2 . பிறரிடமிருந்து நீ எதனை வெறுக்கின்றாயோ அதனை நீ தவிர்ந்து கொள்வது எனக்குப் போதுமான ஒழுக்கமாகும் .
3 . ஒழுக்க நியமங்கள் புத்தம் புதிய ஆடைகளாகும் .
4. ஒழுக்கத்தைப் போன்ற சொத்தில்லை .
5 . புத்தியுள்ளவன் ஒழுக்க நியமங்களால் உணர்ச்சி பெறுவான ;, மிருகங்கள் அடியின் மூலமேயன்றி உணர்ச்சி பெறமாட்டா .
6 . ஒரு தந்நை தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் : அழகிய பெயரிடுவது , ஒழுக்கத்தை அழகாக்குவது , அல் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பது போன்றனவாகும்.
7 . உறுதியென்பது ஆய்ந்துணர்தலாகும். ஒழுக்கம் என்பது தலைமைத்துவம் அகும்.
8 . நெருப்பு விறகினால் மிளிர்வது போல் உனது உள்ளத்தை ஒழுக்கத்தினால் மிளிரச் செய்.
9 . சிறப்பு என்பது , புத்தியினாலும் ஓழுக்கத்தினாலும் ஆனது. பரம்பரை, குடும்பப் பெருமைகளினால் அல்ல.
10 . ஒழுக்கம் சிறந்த சொத்தாகும்.
11 . ஒழுக்கத்தில் அழகானவரே குடும்பத்தில் சங்கை ஆனவர்.
12 . ஒழுக்கம் என்பது புத்திக் கூர்மையின் வெளிப்பாடு. எனவே, உனது புத்தியை நீ விரும்பியவாறு அழகு படுத்திக் கொள்.
13 . தீய ஒழுக்கத்துடன் எவ்வித சிறப்புமில்லை.
14 . புத்தியென்பது அன்பளிப்பாகக் கிடைப்பது. ஒழுக்கம் என்பது உழைத்துப் பெறுவது.
15 .ஒழுக்கம் சந்தேகங்களைக் களைந்து விடும்.
16 . ஒழுக்கத்தை விட மிகவும் பயனுள்ளது எதுவுமில்லை.
17 . நல்லொழுக்கம் எண்ணங்களைப் பரதிநிதித்துவப் படுத்தும்.
18 . ஒரு மடையனிடம் உள்ள ஒழுக்கம் , உவர் மண்ணிலுள்ள சுவையான நீரைப் போன்றது. அதன் அளவு அதிகிரிக்கும் போதெல்லாம் கசப்பும் அதிகரிக்கும்.
19 . உங்களது பிள்ளைகளுக்கு உங்களது ஒழுக்க நடைமுறைகளைத் திணிக்காதீர்கள்.ஏனெனில் , அவர்கள் உங்களது காலமல்லாத பிரிதொரு காலத்திற்கெனப் படைக்கப் பட்டுள்ளனர்.
20 . ஒழுக்கத்தைக் கடைப் பிடித் தொழுகுங்கள். நீங்கள் அரசர்களாக இருந்தால் , தெளிவடைவீர்கள். நீங்கள் மத்திய தரத்தினராக இருந்தால், உயர்வு பெறுவீர்கள். உங்களது வாழ்க்கை உங்களுக்கு நெருக்கடி மிகுந்ததானால் , உங்களது ஒழுக்கத்தின் மூலம் நீங்கள் சிறப்புடன் வாழ்வீர்கள்.
21 . ஒழுக்கம் என்பது ஒரு மனிதனின் பூரணத்துவமாகும்.
22 . ஒரு மனிதனின் ஒழுக்கம் என்பது புத்தியை வேராகக் கொண்ட மரத்தைப் போன்றது.
23 . புத்தியில் மிகவும் சிறப்புள்ளது ஒழுக்கமாகும்.
24 .வாழ்க்கைச் சிறப்புகளில் உயர்ந்தது ஒழுக்கமாகும்.
25 . பயிர் விளைச்சல், மழையின் பால் தாகமுறுவது , புத்தியுடையவர்கள் ஒழுக்கத்தின் பால் தேவையுறுகிறார்கள் .
26 . நிச்சயமாக மனிதர்கள் தங்கம், வெள்ளியின் பால் தேவையுறுவதை விடவும் ஒழுக்கத்தின் பால் அதிகம் தேவையுறுகிறார்கள்.
27 . ஒரு மனிதன் தன் வரையறைக்குள் நிற்பதும், தனது சக்திக்கு அப்பால் செயற்படாதிருப்பதும் சிறந்த ஒழுக்கமாகும்.
28 . ஒழுக்கம் புத்திக் கூர்மையை வலுப்படுத்தும்.
29 . குடும்பப் பெருமை தீய நடைமுறையாகும்.
30 . ஒழுக்கத்தின் பயன்பாடு அழகிய நடைமுறைப் பண்புகளபகும்.
31 .அழகிய ஒழுக்கம் குடும்பத்தின் இழிவுகளை மறைத்து விடும்.
32 . ஒழுக்கத்தைத் தேடுபவன் உலகைத் தேடுபவனை விடவும் உள்ளத்துறுதி மிக்கவனாவான்.
33 . ஒவ்வொரு விடயமும் புத்தியின் பால் தேவையுறுகின்றன. புத்தி ஒழுக்கத்தின் பால் தேவையுறுகின்றது.
34 . எவரது ஒழுக்கம் குறைகின்றதோ அவரது தீமைகள் அதிகரிக்கும்.
35 . எவரது சந்தேக உணர்வு வீழ்கின்றதோ, அவரது ஒழுக்க உணர்ச்சி எழுச்சி பெறும்
.
36 . தனத இழிவான நடைமுறையினால் வீழ்ச்சியுற்றவரை அவரது எண்ணத்தின் சிறப்புக்கள் உயர்வடையச் செய்யாது.
37 . ஒழுக்கமில்லாத அரசனுக்கு சேவை செய்ய விழைபவர் ஈடேற்றத்தின் பாலிருந்து எரியும் நெருப்பை நோக்கி வெளிப்பட்டவராவார்.
38 . அல்லாஹ்வுக்கான ஒழுக்கத்தின் மீத சீர் பெறாதவர், சுய ஒழுக்கத்தின் மீது சீர் பெறமாட்டார்.
39 . புத்தியின் தோழர்களில் ஒழுக்கம் சிறந்ததாகும்.
40 . குடும்ப ஒழுங்கில் அழகிய ஒழுக்கம் சிறந்ததாகும்.
41 . தீய பேச்சாளனுக்கு ஒழுக்கமில்லை.
42 . ஒழுக்கமில்லாதவனுக்கு புத்தி இல்லை.
43 . ஒழுக்கத்தைக் களைந்து விளையாட்டை வரித்துக் கொண்டவன் தலைமை பெறமாட்டான்.
09 ) உறவுகள்
1 . பரஸ்பர அன்பு பயனுள்ள சொந்தமாகும்.
2 . கொடை கொடுத்தல் குடும்ப உறவில் மிக மென்மையானது.
3 . நெருங்கிய உறவினர் பாழாக்கியவனை தூரத்து உறவினர்கள் வலுப் பெறச் செய்வர்.
4 . பெற்றோரின் பிள்ளைகள் மத்தியில் நெருங்கிய உறவாகும். ஆன்பு உறவின் பால் தேவையுறுவதை விட உறவு அன்பின் பால் அதிகம் தேவையுறுகிறது.
5 . நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் நேசர் அல்லாஹ்வுக்கு வழிப்படுபவராவார். அவரது உறவு முறை நபிகளாரை விட்டுத் தூரமானதாக இருந்தாலும் சரியே, நிச்சயமாக நபிகளாரின் விரோதி அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். அவரது உறவு முறை நபிகளாருக்கு மிக நெருக்கமானதாக இருந்தாலும் சரியே.
6 . நெருங்கிய உறவினர்கள் மீது சட்டங்களை அமுல் படுத்துங்கள் , தூரமானவர்கள் அவற்றை விட்டுத் தவிர்ந்து கொள்வார்கள்.
7 . உறவினர்களுடையவர் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்ளாதிருப்பதும் அவசியமாகும்.
8 . உங்களது உறவினர்கள் உங்களைத் தவிர்தாலும் நீங்கள் அவர்களுடன் இணைந்து நடவுங்கள்.
9 . செல்வ வளம் உள்ளவர் அதன் மூலம் தனது உறவினர்களைச் சேர்ந்து நடக்கவும். அதிலிருந்து அழகிய விருந்துபசாரங்களை ஏற்படுத்தவும்.அதன் மூலம் கைதிகளையும் அடிமைகளையும் உரிமை இடவும். இவ்விடயங்கள் மூலமான வெற்றி என்பது உலகின் கண்ணியமும் மறுமையின் சிறப்புமாகும்.
10 . நெருங்கிய உறவினர் என்பவர் அவரது பரம்பரைத் தொடர் தூரமாக இருந்தாலும் அன்பு நெருக்கமாக உள்ளவராவார். தூரமான உறவினர் என்பவர் அவரது பரம்பரைத் தொடர் நெருக்கமாக இருந்தாலும் பகைமை தூரமாக உள்ளவராவார். உடலுக்கு கையை விட நெருக்கமானது எதுவுமில்லை. கை கெட்டு விட்டால் துண்டிக்கப் படும் துண்டிக்கப் பட்டால் இல்லாமலாகி விடும்.
11. அன்பு நெருக்கமான அரு உறவினர்களில் ஒன்று.
12 . நெருங்கிய உறவினர்களின் பகைமை தேளின் விஷத்தை விட கொடிய வலி மிக்கது.
13 . சில நெருங்கிய உறவினர்கள் தூரமான உறவினர்களை விடவும் மிகத் தூரமானவர்களாக இருப்பார்கள். சில தூரமா உறவினர்கள் , எல்லா நெருற்கிய உறவினர்களை விடவும் நெருக்கமாக இருப்பார்கள்.
14 . ஸலாம் சொல்வதைக் கொண்டேனும் குடும்ப உறவுகளுடன் சேர்ந்து நடவுங்கள்.
15 . உனது உறவைச் சேர்ந்தவரைக் கண்ணியப் படுத்து, அவர்களில் அறிவுள்ளவரை கௌரவப் படுத்து, அவர்களில் அறிவற்றவர்களுக்கு அன்பு காட்டு, அவர்களில் வறுமையுற்றோருடன் மென்மையாக நடந்து கொள். நுpச்சயமாக அவர்கள் ளஸ்டத்திலும் மகிழ்ச்சியிலும் உனக்கு சிஙந்த உதவியாக இருப்பார்கள்.
16 . குடும்ப உறவுகள் உள்ள ஒரு மனிதனின் நற் செயல் ஸதக்காவாகும்.
10 ) கருத்துப் பிடிவாதம்
1 . தனது கருத்தில் பிடிவாதம் கொள்பவர் அழிந்து விடுவார். பிற மனிதர்களுடன் ஆலோசனை செய்து கொள்பவர் அம்மனிதர்களின் அறிவுடன் கூட்டிணைவார்.
2 . குழச் செயற்பாடுகளில் ஆலோசனை சிறந்ததாகும். ஆயத்தப் படுத்தல்களில் கருத்துப் பிடிவாதம் மிகக் கெட்டதாகும்.
3 . தனது கருத்தில் மட்டும் பிடிவாதமாக இருப்பவர்களை அவர்களது பகைவர்கள் வெற்றி கொள்வர்.
4 . தனது கருத்தை மட்டும் தனக்கு போதுமாக்கிக் கொண்டவர் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டவராவார்.
5 . தனது கருத்தில் பிடிவாதம் கொள்பவர் , தனது பகைவர்களை வெற்றி கொள்வதில் பலமற்றவராகி விடுவார்.
6 . தனது கருத்தில் பிடிவாதமாக இருப்பவர் சருக்கி விடுவார்.
7 . வழி காட்டல்களை உள்வாங்கிக் கொள்வதும் கரு;துப் பிடிவாதத்தைக் களைந்து விடுவதும் புத்தியுள்ளவனின் கடமை ஆகும்.
8 . கருத்துப் பிடிவாதம் உள்ளவன் தவறிலும் குற்றத்திலும் விழுபவனாவான்.
11 ) இஸ்திஃக்பார்
1 . இஸ்தி;;;ஃக்பார் இருக்கும் போது நிராசையுருபவர்களைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.
2 . இஸ்திஃக்பார் வழங்கப் படுபவர் மன்னிப்பில் இருந்து தடுக்கப் படமாட்டார்.
3 . இஸ்திஃக்பார் மூலம் நறுமணம் பெறுங்கள், பாவங்களின் துர்வாடை உங்களை இழிவடையச் செய்யாது.
4 . 'வெற்றி தன்னுடன் இருக்கம் போது மனிதன் அழிவுக்கு உள்ளாவது வியப்பானது ' என்று இமாம் அலி (அலை) அவர்கள் கூறியபோது , ' (அந்த வெற்றி ) எது ?' என வினவப் பட்டது. அவர்கள் பதில் அளித்தார்கள்,' தௌபாவும் இஸ்திஃக்பாரும் '
5 . நீ அல்லாஹ்வைப் புகழ்வது என்பது அவன் புறத்தில் உள்ளதாகும்.அவனிடம் நீ இஸ்திஃக்பார் தேடுவதென்பது உன் புறத்தில் உள்ளதாகும்.
6 . மூன்று விடயங்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை அடியானுக்கு அதிகம் பெற்றுத் தரக் கூடியது. அதிகமான இஸ்திஃக்பார் , அயலவர்கன் மீதான இரக்கம் , அதிகமான ஸதக்கா.
7 . இஸ்திஃக்பார் பாவங்களுக்கு மருந்தாகும் .
8 . அல்லாஹ்வடைய வேதனையிலிருந்து தடுக்கும் இரு பாதுகாப்புக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உயர்த்தப் பட்டு விட்டது . ஒன்று எஞ்சியுள்ளது. ஊயர்த்தப் பட்ட பாதுகாப்பு என்பது , நபி (ஸல்) அவர்கள் ஆகும். எஞ்சியுள்ள பாதுகாப்பு என்பது இஸ்திஃக்பார் ஆகும். அல்லாஹ் குர் ஆனில் கூறியுள்ளான் : ' (நபியே!) நீங்கள் அவர்களுடன் இருக்கும் வரை அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை. ஆவ்வாறே , அவர்கள் இஸ்திஃக்பார் செய்து கொண்டிருக்கும் வரையும் அவர்களை அவன் வேதனைப் படுத்துவோனாக இல்லை. '
9 . அஸ்தஃக்பிருல்லாஹ் ( நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன் ) என்று கூறிய ஒரு மனிதருக்கு அலி (அலை) அவர்கள் கூறினார்கள் ' மனிதனே! உனக்கு இஸ்திஃக்பார் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? அது உயர்வுள்ளோரின் அந்தஸ்த்து , அதில் ஆறு கருத்துக்கள் பொதிந்துள்ளன. அவை: முதலாவது ,கடந்து விட்ட பாவச் செயல்களுக்காக கைசேதப் படுதல், இரண்டாவது அப் பாவங்களின் பால் மீண்டும் திரும்புவதில்லை என்று உறுதி செய்து கொள்வது , மூன்றாவது எவ்வித குற்றமுமற்ற வகையில் நீ அல்லாஹ்வை சந்திக்கும் வகையில் படைப்புகளுக்கு அவர்களது உரிமைகளை முழுமையாக வழங்குதல் , நான்காவது நீ வீணாக்கிய மார்க்கக் கடமைகளை நினைவுறுத்தி அவற்றை நிறைவேற்றல், ஐந்தாவது ஹராமான செல்வத்தில் வளர்ந்த உடற் தசையை கவலை மூலமாக வாட்டி , எலும்பும் தோலுமாக ஆகச் செய்து , அவற்றுக்கிடையே புதிய ஹலாலான தசை உருவாகச் செய்தல் , ஆறாவது பாவத்தின் சவையை உடலுக்கு சுவைக்கக் கொடுத்தது போல் வழிபடுதலின் வலியையும் உடலுக்கு சுவைக்கக் கொடுத்தல். இந்நிலையில் நீ கூறு அஸ்தஃக்பிருல்லாஹ் '
10 . இஸ்திஃக்பார் சுமைகளை நீக்கி விடும் .
11 . உனக்குக் குற்றம் இழைக்கப் பட்டால் நீ பாவமன்னிப்புத் தேடு .
12 . புத்தியுள்ள மனிதன் , தீங்கிழைத்தால் இஸ்திஃக்பார் தேடுவான் . புhவம் புரிந்தால் கை சேதப் படுவான் .
13 . ஓர் அடியான் அருளுக்கும் பாவத்துக்கும் டையில் உள்ளான். இஸ்திஃக்பார் ( அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடல் ) , ஷுக்ர் ( அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்தல் ) ஆகியவையே அவ்விரண்டையும் சீர் செய்து கொடுக்கின்றன .
14 . தவஸ்ஸுல் ( இறை உதவி தேடல் ) என்பதில் மிகச் சிறந்தது , இஸ்திஃக்பார் ஆகும் .
15 . நல்ல இஸ்திஃக்பார் பாவங்களை அழித்த விடும் .
12 ) இஸ்திகாமா
1 . சிப்பீன் யுத்தத்தின் பின் மனிதர்கள் ஒன்றிணைந்து ஜிஹாத் மேற் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இமாம் அலி ( அலை ) அவர்களைக் கண்டதும் மௌனமானார்கள். ஆவர்களைப் பார்த்து இமாமவர்கள் கூறினார்கள் : 'தெளிவான ஒரு பாதையை நீங்கள் சுமந்து உள்ளீர்கள். நாசமானவனைத் தவிர மற்றெவரும் அப் பாதையில் அழிவுக்கு உள்ளாகமாட்டார்கள். ஆப்பாதையில் இஸ்திகாமாவாக ( கொள்கைப் பிடிப்புடன் ) இருப்பவர் சுவனம் புகுவார். தடுமாறுபவர் நரகம் புகுவார் ' .
2 . ஸலாமத் ( ஈடேற்றம் ) என்பது இஸ்திகாமத்துடனே ஆகும் .
3 . ஆன்மா உறதி அறற்வர் அத்தகைய பிறரைப் பழிக்க வேண்டாம் .
4 . புத்தியின் பயன் இஸதிகாமாவாகும் .
5 . மிகச் சிறந்த சீதேவித்தனம் மார்க்கத்தில் உறுதி கொள்வதாகும் .
6 . இஸ்திகாமாவுடைய வழி முறையைப் பற்றி பிடித்துக் கொள் . அது கண்ணியத்தைப் பெற்றுத் தரும் பழிப்;பைப் போக்கி விடும் .
7 . மார்க்கம் உறுதி பெறாதவனின் எள்ளம் எவ்வாறு உறுதி பெறும் !
8 . இஸ்திகாமாவைத் தவிர ஈடேற்றமான பாதை வேறில்லை .
9 . ஈடேற்றத்தின் மீது விருப்புள்ளவர் , தனது ஆன்மாவை இஸ்திகாமாவின் பால் நிலை நிறுத்திக் கொள்வார் .
10 . இஸ்திகாமாவை விட சிறப்புக்குரிய வழி வேறில்லை .
13 ) வீண் விரயம்
1 . செல்வத்தை அதற்கு பொருத்தமற்ற வழியில் செலவிடுவது அழிவும் வீண் விரயமும் ஆகும். அது செல்வந்தரை உலகில் உயர்த்தும் மறுமையில் தாழ்த்தும் .
2 . வேண்டுமென்றே வீண் விரயம் செய்வதைத் தவிர்ந்து கொள். இன்றைய நாளில் நாளையை நினைவு படுத்திக் கொள் . ஊனக்கு அவசியமான அளவு பணத்தை செலவு செய் . எஞ்சியவற்றை உனது தேவையுடைய நாளுக்காக சேமித்து வை .
3 . வீண் விரயம் செய்பவனுக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன. தன்னுடையது அல்லாததை உண்பான் , தன்னுடையது அல்லாதவற்றைக் கொடுப்பான் , தன்னுடையது அல்லாதவற்றை வாங்குவான் .
4 . வீண் விரயமின்றிச் செலவு செய்வது குறைவாக உள்ள செல்வத்தை அதிகரிக்கச் செய்யும். வீண் விரயம் செய்வது அதிகமான செல்வத்தையும் அழித்து விடும் .
5 . அதிக செலவைத் தவிர்ந்து வீண் விரத்தை விட்டொழிப்பவரே உண்மையான மனிதராவார் .
6 . நற் செயல்கள் தவிர்ந்த ஏனைய அனைத்திலும் வீண் விரயம் செய்வது பழிப்புக்குரியதாகும் .
7 . வீண் விரயமின்றி செலவு செய்வது , மாறு செய்யாது வாக்கை நிறைவேற்றுவது , கோபம் வந்தால் அன்பு கொள்வது என்பவைகளே புத்தியாகும் .
8 . உள்ளதைப் போதுமாக்கிக் கொள்வது , வீண் விரயத்திற்காக அதிகம் முயற்சிப்பதை விட சிறந்தது .
9 . உங்களுடைய ஆன்மாக்களுக்கு பாவ மன்னிப்பை அணியுங்கள் , அதிக செலவையும் வீண் வரயத்தையும் தவிர்ந்து கொள்ளுங்கள் .
10 . கொடையாளர்களின் அவலட்சனம் வீண் விரயமாகும் .
11 . வீண் விரயத்தை விட்டு விடுங்கள் , நிச்சயமாக வீண் விரயம் செய்யும் ஒருவன் - அவனது தர்மம் புகழப் படமாட்டாது. அவனது ஏழ்மையில் இரக்கம் காட்டப் படமாட்டாது .
12 . குறைவாக உண்பதென்பது , நல்லொழுக்கமாகும் . அதிகமாக உண்பது வீண் விரயமாகும் .
13 . போதுமென்ற மனத்தைக் கைக் கொண்டு , வீண் விரயத்தைத் தவிர்ந்து கொண்டவனுக்கு நன்மாராயம் உண்டாவதாக .
14 . அதிகமான செலவையும் வீண் விரயத்தையும் தவிர்ந்து கொள். நீதியையும் நேர்மையையும் கடைப் பிடித்தொழுகு .
15 . நற் செயல்களை மேற் கொள்ளுதல் , அதிகமாக வழிப்படுதல் ஆகியவற்றில் தவிர ஏனைய அனைத்து விடயங்களிலும் வீண் விரயம் பழிப்புக்குள்ளாக்கப்படும் .
16 . வீண் விரயம் செய்வதிலே எவ்வித சிறப்புமில்லை .
17 . அதிக செலவு , வீண் விரயம் என்பவற்றைத் தவிர்ந்து கொள்வது மிக உன்னதமான சிறப்பகளாகும் .
18 . வீண் விரயமின்றி செலவு செய்வதும் , மாறிழைக்காது வாக்கை நிறைவேற்றுவதும் மனிதாபிமானமுள்ள செயல்களாகும் .
19 . உனது ஆசையிலும் உனது போபத்திலும் வீண் விரயம் செய்யாதே . அவ்விரண்டும் உன்னை இழிவு படுத்தி விடும் .
20 . ஒரு யாசகனை – அவன் வீண் விரயம் செய்தாலும் விரட்டி விட வேண்டாம் .
21 . செலவு செய்வதை சீர் படுத்திக் கொள்ளாத மனிதரை அவரது வீண் விரயம் அழித்து விடும் .
22 . பெருமை , வீண் விரயம் என்பவற்றை அணிந்து கொள்பவர் , கண்ணியம் . சிறப்பு என்பவற்றைக் களைந்தவராவார் .
14 ) இஸ்லாம்
1 . எனக்கு முன்னர் எவரும் இணைந்திராதவாறு இஸ்லாத்துடன் நான் இணைந்திருப்பேன். இஸ்லாம் என்பது அடிபணிதலாகும். ஆடிபணிதல் என்பது உறுதி கொள்வதாகும். உறுதி கொள்வது என்பது உண்மைப் படுத்தலாகும். ஊண்மைப் படுத்துவது என்பது தீர்மானிப்பதாகும். தீர்மானிப்பது என்பது நிறைவேற்றுவதாகும். நிறைவேற்றுவது என்பது நடைமுறைப் படுத்துவதாகும் .
2 . மனிதர்களிடத்தில் ஒர காலம் வரும் , அக்காலத்தில் அல் குர்ஆனில் அதன் எழுத்தைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்காது . இஸ்லாத்தில் அதன் பெயரைத் தவிர வேறெதுவும் எஞ்சியிராது .
3 . நிச்சயமாக இந்த இஸ்லாம் , அல்லாஹ் தனக்கெனத் தேர்வு செய்து கொண்டதும் தனக்கு முன்னால் அடிபணியுமாறு கட்டளை இட்டதுமான அவனது மார்க்கமாகும் .
4 . இஸ்லாத்தை விட உயர்ந்த சிறப்பு இல்லை .
5 . உன்கென நீ திருப்தி கொள்வதை பிறருக்காகவும் திருப்தி கொள் . நீ முஸ்லிமாகி விடுவாய் .
6 . இஸ்லாம் என்பது உனது உள்ளம் அமைதி பெறுவதும் உனது கை , நாவு என்பவற்றில் இருந்து முஸ்லி;கள் ஈடேற்றம் பெறுவதுமாகும் .
7 . மனிதர்களில் அழகிய பண்புடையவர் , அழகிய இஸ்லாத்தை உடையவர் ஆவார் .
8 . தனது இலக்கை மறுமையாகக் கொண்டவரும் தனது அச்சம் , எதிர் பார்ப்பு என்பவற்றை சீர் படுத்திக் கொண்டவருமே முஸ்லிம்களில் சிறந்தவர் ஆவார் .
9 . அல்லாஹ் இஸ்லாத்தை உங்களுக்கு விதி ஆக்கியுள்ளான் . ஆதன் வழி முறைகளை இலகு படுத்தி உள்ளான் . அதனை எதிர்ப்பவர்களிடமிருந்து அதன் சட்டங்களைக் கண்ணியப் படுத்தி உள்ளான் .
10 . இஸ்லாத்தின் உச்சம் அடி பணிதலாகும் .
11 . இஸ்லாம் புற அவயம் தெளிவானது , அதன் அக அவயம் ஆத்மார்த்தமான மகிழ்ச்சிக்கு உரியது .
12 . இஸ்லாத்தின் கண்ணியத்துடன் உன்னை எதிர் கொள்பவர் மிக உறுதியான காரணத்துடன் உன்னை எதிர் கொண்டவராவார் .
13 . இஸ்லாத்தை விட்டும் தடுப்பவன் புத்தியுடையவன் இல்லை .
15 ) படிப்பினை பெறுதல்
1 . படிப்பினை பெறுதல் உபதேசம் புரியும் எச்சரிக்கையாளர் ஆகும் .
2 . படிப்பினைக்குரிய நிகழ்வுகள் அதிகம் உள்ளன. படிப்பினை பெறுவதோ குறைவாக உள்ளது .
3 . ஒரு முஃமின் உலகைப் பார்ப்பது படிப்பினை மிக்க பார்வையுடனேயே , அதிலே அவன் பொய் சொல்வது சிரமங்களின் திணிப்பினாலேயே , அதிலே அவன் செவி மடுப்பது கோபம் ஆவேசம் என்ற காதினாலேயே .
4 . ( இமாம் அலி ( அலை ) அவர்கள் கலீபா முஆவியாவுக்கு எழுதினார்கள் ) ' கடந்த காலங்களை நீர் அவதானித்தால் எஞ்சியுள்ளவற்றை பாதுகாத்துக் கொள்ள முடியும் ' .
5 . தனக்கு முன்னால் உள்ள சமூகத்திடமிருந்து படிப்பனை பெற்றுக் கொள்பவனை , அவனது இறை அச்சமானது , சந்தேகங்களின் பிடியிலிருந்து பாதுகாக்கும் .
6 . படிப்பினை மிக்க அவதானிப்பு உனக்கு நேர் வழியைக் ஈட்டித் தரும் .
7 . சிந்த்திதுப் பார்ப்பவர் படிப்பினை பெறுவார் .
8 . அவதானிப்பு இல்லாத பார்வைகள் அனைத்தும் வீணானவை ஆகும் .
9 . விளக்கத்தை விட்டுமான தேவை இன்மை , படிப்பினை மிக்க அவதானிப்பில் இருக்கிறது .
10 . படிப்பினை பெறுதல் பாவ மன்னிப்பை வழங்கும் .
11 . புத்தியில் சிறந்தது படிப்பனை பெறுதலாகும் , உறுதியில் சிறந்தது உண்மைகளை வெளிப் படுத்துவதாகும் , அறியாமையில் பெரியது ஏமாற்றுவதாகும் .
12 . அறிவும் அவதானிப்பும் உடையவர்களுக்கு ஒவ்வொரு விடயத்திலும் உபதேசமும் படிப்பினையும் இருக்கிறது .
13 . அல்லாஹ் ஓர் அடியானை விரும்பினால் படிப்பினைகள் மூலம் அவனுக்கு உபதேசிப்பான் .
14 . ஆழ்த சிந்தனையுடனான பார்வையினால் படிப்பினை மிக்க அவதானிப்பு ஏற்படும் .
15 . உலகின் நடைமுறைகளில் படிப்பினை இருக்கிறது .
16 . படிப்பினைக்காக உதாரணங்கள் முன் வைக்கப் படலாம் .
17 . அவதானிப்புகள் அதிகமானால் தவறுகள் குறைவடையும் .
18 . படிப்பினைகளால் உபதேசம் பெறுபவர் சீர் பெறுவார் .
16 ) மன்னிப்புக் கோரல்
1 . மன்னிப்புக் கோரலுக்கான நிகழ்வுகளைத் தவிர்ந்து கொள்வது மன்னிப்புக் கேட்பதை விடக் கண்ணியத்துக்குரியது .
2 . உன்னிடம் மன்னிப்புக் கோருபவரது மன்னிப்பை நீ ஏற்றுக் கொள் .
3 . தவிர்ந்து கொள்ள முடியுமான ஒரு பாவத்திற்காக மன்னிப்புக் கோருவதை உனக்கு எச்சரிக்கிறேன் , நிச்சயமாக மன்னிப்புக் கோரும் விடயத்தில் உங்களுக்கு அழகான நிலை , பாவங்களிலிருந்த ஈடேற்றம் பெறுவதற்கான ஸ்தானத்தை அடைந்த கொள்வதாகும் .
4 . அடிக்கடி மன்னிப்புக் கோருவது பாவங்களின் நினைவூட்டலாகும் .
5 . உனது சகோதரனின் மன்னிப்பை ஏற்றுக் கொள் . அவனுக்கு எந்தத் தடையும் இல்லை என்றாலும் அவனுக்கென ஒரு தடையை ஏற்படுத்திக் கொள் .
6 . தாழ்ந்த மன்னிப்புக் கோரலின் மூலம் கோபத்தின் கண்ணியம் உறுதி பெறாது .
7 . குற்றம் அல்லாததற்காக மன்;னிப்புக் கோருபவன் ஒரு குற்றத்தை தன் மீது திணித்துக் கொள்கிறான் .
8 . மன்னிப்புக் கோரலின் நிலைகளை உனக்கு எச்சரிக்கிறேன் . சில தடைகள் , ஒரு மனிதன் அதை விட்டும் நீங்கியவானாக இருந்தாலும் அதைச் செய்ததாக அவன் மீது ஆதாரங்களை நிறுவி விடுகின்றன .
9 . தவறிழைத்தவருக்கான பரிந்துரை அதனை ஏற்றுக் கொள்வதாகும். அதற்கான பரிகாரம் அது குறித்து மன்னிப்புக் கோருவதாகும் .
10 . அதிகமான மன்னிப்புக் கோருதலை உனக்கு எச்சரிக்கிறேன் . அதிகமான பொய் தவறுகளை இணைத்துக் கொள்கிறது .
11 . இரண்டு விடயங்கள் பொய் கூறுவதிலிருந்து தவிர்க்க மாட்டாது . அவை , அதிகமாக வாக்களிப்பது , அதிகமா மன்னிப்புக் கோருவது .
12 . பழிப்புக்குரிய விடயத்திற்காக மன்னிப்புக் கோருபவன் , மனிதர்களில் மிக இழிவானவன் .
13 . ஆளுமை குறைவடைந்தால் தவறுகளினால் பலவீனப் படுவது அதிகரிக்கும் .
14 . மனிதர்களில் தீயவன் , மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாதவனும் பாவங்களை வெறுக்காதவனுமே .
15 . மன்னிப்புடனான தாழ்மையே குற்றம் இழைத்தவனின் சிபாரிசு .
16 . உனக்கு கஷ்டம் நிகழ்வதை விரும்பாத ஒருவனுக்கு நீ தீங்கிழைக்காதே .
17 . மன்னிப்புக் கோரலுடன் தண்டனை பெறுவது எவ்வளவு இழிவானது !
18 . மன்னிப்புக் கோருபவன் தவறிழைப்பது எவ்வளவு பாவமானது !
19 . அதிகமாக மன்னிப்புக் கோரலை ஏற்படுத்திக் கொள்வது பாவங்களைப் பெரிதாக்கும் .
20 . மன்னிப்புக் கோருபவனைத் தண்டிப்பவன் அதிகமான பாவம் புரிந்தவனாவான் .
17 ) சீரான செலவு
1 . சீரான செலவு செய்பவன் மோசடி செய்பவன் அல்லன் . (சீரான செலவு என்பது வீண் விரயத்திற்கும் கஞ்சத் தனத்திற்கும் இடைப்பட்ட அத்;தியவசியச் செலவாகும் )
2 . செலவு செய்பவனாக இரு , வீண் விரயம் செய்பவனாக இராதே . நடை முறைப் படுத்துவோனாக இரு , பொய்யுரைப்பவனாக இராதே .
3 . சீரான செலவு குறைவாக உளள்தை வளர்ச்சி அடையச் செய்யும். வீண் விரயம் கண்ணியத்தை அழித்து விடும்.
4 . சீரான செலவு இரக்கையில் அழிவு ஏற்படாது .
5 . சீரான செலவைக் கைக் கொள்பவன் செல்வத்தின் தொடரிருப்பை சிலையாகப் பெற்றவன் ஆவான் . சீரான செலவு அவனது ஏழ்மையை அழுத்தி அகற்றி விடும் .
6 . வீண் விரயமின்றி சீராக செலவு செய்வதும் மாறிழைக்காது வாக்கை நிறைவேற்றுவதும் மனிதாபிமானச் செயல்களாகும் .
7 . செல்வத்திலும் ஏழ்மையிலும் சீராக செலவு செய்பவர் எதிர் காலத்திற்கான சேமிப்பை மேற் கொண்டவராவார் .
8 . செலவு செய்வதை சீர் படுத்திக் கொள்ளாத மனிதரை வீண் விரயம் அழித்து விடும் .
9 . சீராக செலவு செய்பவருக்கு வாழ்க்கை இலகுவாகி விடும் .
10 . சீராக செலவு செய்வதில் எவ்வித அழிவுமில்லை .
11 . தேவைக்கு அதிகமான செலவு அனைத்தும் வீண் விரயமாகும்.
12 . சீராக செலவு செய்பவன் செல்வத்தைத் தடுத்து வைத்துக் கொள்வது , வீண் விரயம் செய்பவன் தருமம் செய்வதை விட அழகானது .
18 ) உண்ணல்
1 . நபி ( ஸல் ) அவர்கள் தரையில் அமர்ந்து உண்பார்கள் . ஓர் அடிமையைப் போன்று அமர்ந்து இருப்பார்கள் . தமது கைகளினாலேயே தமது செருப்பைத் தைப்பார்கள் . தமது கைகளினாலேயே தமது உடைக்கு ஒட்டுப் போடுவார்கள் . கோவேறு கழுதையின் மீதேறிப் பயணம் செய்வார்கள் .
2 . தனது வீட்டுடன் தொடர்பாயிருப்பவர் , தனது கோதுமையை உண்பவர் , தனது இறைவனை வழிப்படுவதில் ஈடபட்டிருப்பவர் ஆகியோருக்கு சுபோசனம் உண்டாவதாக!
3 . மனிதன் தனக்கு உண்ண முடியாததை சேமிக்கிறான் , தான் குடியிருக்க முடியாததை நிர்மானிக்கிறான் , பின்னர் தான் சுமந்த செல்வத்தையும் நிர்மானித்த கட்டடத்தையும் விட்டவனாக வெளியாகி அல்லாஹ்விடத்தில் செல்கின்றான் , இது அவதானிக்கப் பட வேண்டியது.
4 . ஒவ்வோர் அம்புடனும் ஒரு காயம் இருக்கிறது , ஒவ்வோர் உணவிலும் ஓர் பொறுப்பு இருக்கிறது.
5 . அளவுக்கதிகமாக உணவு உண்டால் வயிறு மூச்சடைப்பை ஏற்படுத்தும்.
6 . உணவைக் குறைத்தால் நோய்கள் குறையும் . பேச்சைக் குறைத்தால் இழிவு நீங்கும்.
7 . குறைவாக உண்பது உடல் பலவீனப் படுவதை பலமாகத் தடுக்கும்.
8 . குறைவாக உண்பது நல்லொழுக்கமாகும். அதிகமாக உண்பது வீண் விரயமாகும்.
9 . உணவு குறைந்தால் வலிகளும் குறையும்.
10 . தொடர்ந்து வயிறு புடைக்க உண்பது பல்வகை நோய்களுக்கும் வித்திடும்.
11 . தேனீயைப் போன்று நீ இரு , அது உண்டால் நல்லதையே உண்ணும் , சேமித்தால் நல்லதையே சேமிக்கும் , ஒரு கிளையின் மீது அமர்ந்தால் அதைத் தகரக்கமாட்டாது.
12 . அதிகமாக உண்பது அதிகமான உணவாசையில் உள்ளதாகும் , உணவாசை கெட்ட குறைபாடாகும்.
13 . அதிகமான உணவும் உறக்கமும் உடலை வருத்தும் , வியாதிகளைத் திணிக்கும்.
14 . வயிறு புடைக்க உண்பதை உங்களுக்கு எச்சரிக்கிறேன் . நிச்சயமாக அது உள்ளத்தைக் குறுகியதாக்கும். உணர்வுகளை சோம்பேறித் தனமாக்கும். ஊடலைப் பழுதாக்கும் .
15 . வயிறு புடைக்க உண்பதை உனக்கு எச்சரிக்கிறேன் . எவர் அதனைக் கைக் கொள்கிறாரோ , அவரது நோய்கள் அதிகரிக்கும் . கனவுகள் நாசமாகி விடும் .
16 . உணவுக்கு முன்னும் பின்னும் தோடம் பழம் உண்ணுங்கள் . நபி ( ஸல் ) அவர்களின் குடும்பத்தினர் அவ்வாறே செய்து வந்தார்கள் .
17 . வயிறையும் பாலுறுப்பையும் இலட்சியமாகக் கொண்டவர்களே அல்லாஹ்விடத்தில் மிகக் கோபத்திற்கு உரியவர்கள் .
18 . எவரது நோக்கம் வயிற்றுக்குள் நுழைவதைப் பற்றியதாக இருக்கின்றதோ அவரது பெறுமதி வயிற்றிலிருந்து வெளியேறுவதைப் போன்றதாகும் .
19 ) இமாமத்
1 . மனிதர்களுக்கு இமாமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்பவர் , பிறருக்கு கற்பிப்பதற்கு முன்னர் தனக்குக் கற்பித்துக் கொள்ளட்டும் . தனது நாவினால் பயிற்றுவிப்பதற்கு முன்னர் தனது நடத்தையினால் பயிற்றுவிக்கட்டும் . தனக்குத் தானே கற்பிப்பவரும் தன்னைத்தானே பயிற்றுவிப்பவரும் , பிற மனிதர்களுக்கு பற்பித்து அவர்களைப் பயிற்றுவிப்பவர்களை விட கண்ணியம் பெறுவதற்கு மிகத் தகுதியுடையவர்களாவர் .
2 . இச் சமூகத்திற்கான ஒழுங்கமைப்பாக அமானத்தை ( இமாமத்தை ) யும் இமாமத்திற்கான கண்ணியமாக அதற்கு வழிப் படுதலையும் அல்லாஹ் விதித்துள்ளான் .
3 . மிகப் பெரிய மோசடி ஒரு சமூகத்தின் மோசடி ஆகும் . முpக அழிவான ஏமாற்று இமாம்களின் ஏமாற்றாகும் .
4 . மனிதர்களில் கெட்டவர் அநீதியான தலைவர் , அவர் தானும் வழி கெட்டு பிறரையும் வழி கெடுப்பார் . நடைமுறையிலுள்ள சுன்னாவை இல்லாதொழிப்பார் . தடைப்பட்ட வழி கேடுகளை உயிர்ப்பிப்பார் .
5 . ஏழைகளின் ஏழ்மை அவர்களை நைத்துவிடாதவாறு மனிதர்களுடன் இரக்கமாக நடந்து கொள்ளல் வேண்டுமென நீதியான ( உண்மையான ) இமாம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் .
6 . ஏழைகளின் ஏழ்மை அவர்களை இழிவுக்கு உள்ளாக்கிவிடாதவாறு பொதுமக்களுக்காக தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என நீதியான இமாம்கள் மீது அல்லாஹ் வீதித்துள்ளான் .
7 . நீதியான இமாம் , தொடர் நேர்ச்சியாகப் பொழியும் மழையை விடச் சிறந்தவர் .
8 . தனது இமாமுக்கு வழிபட்டவர்கள் தனது இறைவனுக்கு வழிபட்டவராhர் .
9 . தனது பொறுப்பிலுள்ள மக்களுக்கு இஸ்லாத்தினதும் ஈமானினதும் எல்லைகளைக் கற்பிப்பது ஓர் இமாமுக்கு கடமையாகும் .
10 . உங்களது இமாமுக்கு வழிபட்டு நடவுங்கள் ; அவர்கள் உங்களுக்கான இன்றைய சாட்சியாளர்களாகவும் , அல்லாஹ்விடத்தில் நாளைய பரிந்துரையாளர்களாகவும் இருக்கின்றார்கள் .
11 . நிச்சயமாக இமாம்கள் அல்லாஹ்வுடைய படைப்புகள் மீது அவனது சட்டங்களை நிலை நிறுத்துபவர்களாகவும் அவனது அடியார்கள் மீது அவனை மிக அறிந்தவர்களாகவும் இருப்பார்கள் . அவர்களை அறிந்தவர்களும் அவர்களால் அறியப்பட்டவர்களுமே சுவனம் நுழைவார்கள் ; அவர்களை நிராகரித்தவர்களும் அவர்கால் நிராகரிக்கப்பட்டவர்களும் நரகம் புகுவார்கள் .
20 ) அமானத்
1 . அமானத்தை அலட்சியப்படுத்தி , மோசடியை மேற் கொண்டு , அவ்விரண்டிலுமிருந்து தன்னையும் தன் மார்க்கத்தையும் களைந்து கொள்ளாதவர் , இம்மையில் இழிவையும் நாசத்தையும் தன்னில் அணிந்து கொண்டவராவார் ; மறுமையில் அவர் மிக இழிவானவராகவும் நாசத்துக்குரியவராகவும் இருப்பார் .
2 . எவரது இரகசியமும் பரகசியமும் , சொல்லும் செயலும் முரண்படவில்லையோ அவர் அமானத்தை நிறைவேற்றியவராகவும் வணக்கத்தில் இஹ்லாஸ் பேணியவராகவும் இருப்பார் .
3 . உன்னை நம்பியவன் - அவன் உனக்கு துரோகமிழைத்தாலும் - நீ அவனுக்கு துரோகமிழைக்காதே .
4 . ஒவ்வொரு நற்பண்பும் சிறப்புக்குரியதாகும் ; அமானத் தவிர்ந்த ஏனையவை மனிதக் கூட்டங்களிடையே அற்பமானவையாகும் . நிச்சயமாக அமானத் மனிதர்களின் பல தரப்பினரிடையேயும் சென்றடைய வல்லது ; அதை தன்னிடம் கொண்டுள்ளவர் சிறப்பிக்கப்படுவார் .
5 . அமானத்தை நிறைவேற்றுவது வளங்களின் திறவுகோலாகும் .
6. அமானத்தை நிறைவேற்றுவதில் உற்பத்திப் பெருக்கு உள்ளது ; ஏனெனில் அது உன்னிடத்தில் பாதுகாப்புக்காக விடப்பட்டது போன்றதாகும் .
7 . துரோகச் செயல் அமானத்தை அழித்து விடும் .
8 . உங்களில் நம்பிக்கை வைத்தவர்களின் அமானத்தை நிறைவேற்றுங்கள் .
9 . உன்னில் நம்பிக்கை வைக்கப்பட்டால் அந்த அமானத்தை நீ நிறைவேற்று ; நீ நம்பிக்கை வைத்தவர் மீது சந்தேகம் கொள்ளாதே ; நிச்சயமாக அமானத் இல்லாதவருக்கு ஈமான் இல்லை .
10 . அமானத்தின் மூலம் செயல் புரிபவர் மார்க்கத்தைப் பூரணப்படுத்தியவராவார் .
11 . அமானத்தில் அலட்சியம் செய்பவர் மோசடியில் விழுந்து விடுவார் .
12 . இஸ்லாத்தில் தலையாயது அமானத்தாகும் .
13 . அல்லாஹ் ஓர் அடியானை விரும்பினால் , அவனுக்கு அமானத்தில் விருப்பை ஏற்படுத்துவான் .
14 . அமானத் வலுப்பெற்றால் வாய்மை அதிகரிக்கும் .
15 . அமானத் - அதைப் பேணுவோருக்கு வெற்றியாகும் .
16 . அமானத், பாதுகாப்பாகும் .
17 . அமானத் என்பது ஈமான் ; புன்முறுவல் என்பது இஹ்ஸான் .
18 . அமானத் , வாய்மையை நிறைவேற்றுவதன் பால் நிர்ப்பந்திக்கும் .
21 ) நன்;மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
1 . நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் முன்னிலையில் , அனைத்து நற்செயல்களும் அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் புரிவதும் ஆழமான கடலில் சிறுதுளியைப் போன்றவையே .
2 . நன்மையை ஏவுதலை பொதுமக்களின் சீர்திருத்தத்திற்காகவும் தீமையைத் தடுப்பதை அறியாதோரின் பாதுகாப்புக்காகவும் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் .
3 . மனிதர்கள் நல்லவற்றை உள்ளத்தினால் உணராமலும் தீயவற்றை வெறுக்காமலும் இருந்தால் அவர்களில் உயர்ந்தவரை தாழ்ந்தவராகவும் தாழ்ந்தவரை உயர்ந்தவராகவும் அல்லாஹ் அல்லாஹ் பிரட்டிவிடுவான் .
4 . நன்மையை ஏவுபவர் முஃமின்களின் முதுகை பலப்படுத்தியவராவார் ; தீமையைத் தடுப்பவர் காபிர்களின் மூக்குகளை உடைத்தவராவார் .
5. முஃமின்களே ! பகைமையும் தீமையும் நடைமுறைப்படுத்துவதைக் காணும் ஒருவர் அவற்றை தன் உள்ளத்தால் வெறுத்தால் அவர் பாதுகாப்புடன் தன் பொறுப்பிலிருந்து நீககிடுவார் ; தனது நாவினால் அவற்றை அவர் தடுத்தால் அவர் நன்மை பெறுவார் ; முந்தியவரை விட இவர் சிறந்தவர் . அல்லாஹ்வின் சட்டம் ஓங்கவும் அநீதியாளர்களின் ஆதிக்கம் வீழ்ச்சியுறவுமென வாளினால் அத்தீய செயல்களை தடுத்தால் அதுவே நேர்வழியின் பாதையை அடைந்ததாகவும் அதனை நிலை நாட்டியதாகவும் அமையும் ; அத்தகையவரது உள்ளம் யகீன் எனும் உறுதியான நம்பிக்கையினால் ஒளியூட்டப்படும் .
6 . நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் அல்லாஹ்வுடைய பண்புகளில் உள்ளவையாகும் . அவ்விரண்டும் வாழ்க்கை முடிவை நெருங்க விடாது . ரிஸ்கையும் குறைய விடாது .
7 . நன்மையை பிறருக்கு ஏவிக் கொண்டே அதனை செய்யாமல் விடுபவர்களையும் , தீமையை பிறருக்கு விளக்கிக் கொண்டே அதனைச் செய்பவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் .
8 . நன்மையை ஏவு , அதனைச் செய்பவனாக இரு . உனது கையினாலும் நாவினாலும் தீமையைத் தடு . உனது முயற்சினால் தீமை செய்பவனை விட்டும் தவிர்ந்து கொள் .
9 . நன்மையை ஏவுதல் படைப்பினங்களின் செயல்களில் மிகச் சிறந்ததாகும்.
10 . நன்மையை பரஸ்பரம் பரி மாறிக் கொள்ளுங்கள் , பிறருக்கும் அதனை ஏவுங்கள் ; தீமையை பரஸ்பரம் தவிர்ந்து கொள்ளுங்கள் , பிறருக்கும் அதனை விலங்குங்கள் .
11 . நன்மையை ஏவுபவனாகவும் அதனைச் செய்பவனாகவும் இரு ; மாறாக , ஏவிவிட்;டு அதனைச் செய்யாது தவிர்ந்து , பாவங்களின் பால் ஒதுங்கி , இறை கோபத்தை அடைந்தவனாக ஆகிவிடாதே .
12 . நன்மையை ஏவுபவனாகவும் தீமையைத் தடுப்பவனாகவும் நற்செயலை செய்பவனாகவும் தீய செலை தவிர்ந்து கொள்பவனாகவும் இரு.
13 . மார்க்கத்தின் துண்டுகள் - நன்மையை ஏவுதல் தீமையைத் தடுத்தலும் சட்டங்களை நிலை நிறுத்தலுமாகும் .
22 ) ஆசை
1 . மனிதர்களே ! நான் உங்களிடத்தில் மிகவும் அஞ்சுவது இரண்டு விடயங்களிலாகும் ; இச்சையைப் பின்தொடர்தலும் நீண்ட ஆசையும் . இச்சையைப் பின் தொடர்தலானது , சத்தியத்தைத் தடுக்கும் . ஆசையானது மறுமையை மறக்கச் செய்யும் .
2 . ஆசை அதிகரித்தால் செயல்கள் கெட்டுவிடும் .
3 . செயலின்றி மறுமையை எதிர் பார்ப்பவனாகவும் அதிகமான ஆசையுடன் தௌபாவை வேண்டுபவனாகவும் இராதே . இத்தகையவன் உலகில் துறவிகளின் சொற்களைப் பேசுவான் ; பேராசையாளர்களின் செயல்களைப் புரிவான் .
4 . தனது ஆசையின் போக்கில் நடந்து கொள்பவர் தனது வாழ்க்கை முடிவை பாழ்படுத்தியவராவார் .
5 . எவரது உள்ளம் உலகாசையி;ன் வழியில் நடக்கின்றதோ அவரது உள்ளம் உலகின் மூன்று நெருக்கடிகளில் விழும் ; விலகிச் செல்லாத கவலை , தவிர்ந்து கொள்ள முடியாத ஆசை , அடைய இயலாத எதிர் பார்ப்பு .
6 .நிச்சயமாக நீ உனது ஆசையை அடையப் போவதில்லை , உனது முடிவை மீறப் போவதும் இல்லை என்பதை உறுதியாக அறிந்து கொள் .
7 . அறிந்து கொள்ளுங்கள் : ஆசை புத்தியை மழுங்கடிக்கும் ; நினைவுகளை மறக்கச் செய்யும் . எனவே , ஆசையை விலக்குங்கள் ; நிச்சயமாக அது ஏமாற்றமாகும் ; பேராசையுடையவன் ஏமாற்றப்படுவோனாவான் .
8 . உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததெல்லாம் அவர்களது நீண்ட ஆசையினாலும் முடிவை மறந்ததனாலேயுமாகும் . உபதேசங்கள் பயனளிக்காத , தண்டனைகள் இறங்குகின்ற , இறுதி நேரம் வரும் வரை அவர்கள் இவ்வாறு இருந்தார்கள் .
9 . மனிதர்களே ! ஆசையைக் குறைப்பது , அருட் கொடைகளுக்காக நன்றி தெரிவிப்பது , கண்ணியவான்களிடத்தில் பேணுதலாக நடப்பது என்பவையே துறவறமாகும் .
10 . மறுமைக்காக விரையுங்கள் . வாழ்;க்கை முடிவுகளை முந்திக் கொள்ளுங்கள் . நிச்சயமாக மனிதர்கள் எதிர்பார்ப்புகள் தமக்குத் தடைப் படுவதையும் , இறுதி முடிவு தம்மை இறுக்குவதையும் தம்மை விட்டும் தௌபாவின் வாசல் அடை படுவதையும் முறையிடுவார்கள் .
11 . உலகில் துறவறம் என்பது ஆசையை சுருக்கிக் கொள்வதாகும் .
12 . எத்தனையோ எதிர் பார்ப்புகள் தீராத வேதனை உடையனவாகவும் , எத்தனையோ ஆசைகள் வெறும் பொய்யானவையாகவும் இருக்கின்றன .
13 . ஒரு மனிதன் தான் ,தனக்கு விருப்பமானவர்களைவ விட்டுப் பிரிய வேண்டும் , மண்ணினுள் வாழ வேண்டும் , விசாரணைக்கு முகங் கொடுக்க வேண்டும் , தான் தேடி விட்டு விட்டு வந்தவற்றை விட்டும் தேவையற்று இருக்க வேண்டும் , முற்படுத்திய நற்செயல்களின் பால் தேவையுற வேண்டும் , என்பதை தெளிவாக அறிந்து கொள்வானானால் , ஆசையைக் குறைத்து , நற் செயல்களை அதிகரிப்பதன் மூலம் சுதந்திர புருஷனாக ஆகிவிடுவான் .
14 . தனது இறுதி முடிவை சுதந்திர புருஷனாக ஆகிவிடுவான் .
15 . அதிகமான ஆசை மனிதர்களின் கழுத்தை நெரிக்கும் .
16 . மார்க்கத்தில் சிறப்பானது ஆசையைச் சுருக்கிக் கொள்வதாகும் ; வணக்கத்தில் பிரபலானது செயலில் இஹ்லாஸ் பேணுவதாகும் .
17 . நிச்சயமாக அல்லாஹ் தீய செயலின் பாலான நீண்ட ஆசை மீது மிக்க கோபம் கொள்கின்றான் .
18 . மனிதர்களில் பெரும் ஆசையுள்ளவன் தீய செயல் புரிபவனாவான் .
19 . ஆசைகளை உறுதி கொள்வதை உனக்கு எச்சரிக்கின்றேன் ; நிச்சயமாக அது அறிவிலிகளின் அடையாளமாகும் .
20 . ஓர் அறிவிலி , தன் ஆசையின் மீது உறுதி கொண்டிருப்பான் ; நற்செயலைக் குறைத்துக் கொள்வான் .
21 . ஆசையானது எப்போதும் பொய்யாக்கப்பட வேண்டியதாகும் . மனிதனின் நீண்ட ஆயுள் , வேதனைக்குரியதாகும் .
22 . ஆசையென்பது கானல் நீர் போன்றது ; அதைப் பார்த்தவர்களை அது ஏமாற்றிவிடும் ; அதனை எதிர்பார்ப்பவர்களை அது பாழாக்கிவிடும் .
23 . ஆசையை சுருக்கிக் கொள்வது உடலுக்கு சிறந்த உதவியாகும் .
24 . தனக்கு இயலாலதவற்றின் மீது ஆசை கொண்டால் அவனது கவலை அதிகரிக்கும் .
25 . எவர் ஆசைகளில் மூழ்கி விடுகின்றாரோ அவரை அவ்வாசைகளே ஏமாற்றிவிடும் .
26 . எத்தனையோ பேராசையாளர்கள் தம் எண்ணத்தை அடைந்து கொள்ளவதே இல்லை .
27 . நிச்சயமாக இறுதி முடிவின் உண்மை உங்களது உள்ளங்களை விட்டும் அகன்று விட்டது ; ஆசையின் ஏமாற்றுகள் உங்களை மிகைத்து விட்டன .
28 . ஆசைகளின் ஏமாற்றுகளிலே வாழ்க்கையின் முடிவு இருக்கிறது .
29 . நான் வியம்புகிறேன் ; தனது வாழ்க்கை முடிவு பற்றி தெரியாத நிலையில் மனிதன் எவ்வாறு தன் ஆசைகளைப் பெருக்கிக் கொள்வான் ?
30 . ஆயுள் கழிவதென்பது ஆசைகளுக்கும் சிந்தனைக்கும் இடையிலுள்ளது .
31 . மனிதர்களின் இழிவு பேராசைகளில் மூழ்குவதாகும் .
32 . எத்தனையோ நீண்ட எதிர் பார்ப்புகள் பொய்யான ஆசைகளுக்கு உரியனவாகும் .
33 . எத்தனையோ பொய்யான ஆசைகள் நீண்ட எதிர் பார்ப்புக்கு உரியனவாகும் .
34 . எத்தனையோ இறுதி முடிவுகள் ஆசைகளின் கீழேயே உள்ளன .
35 . ஆசையின் பயன் செயல்கள் கெட்டு விடுவதாகும் .
36 . ஆசைகளின் அதிகரிப்பினால் மகத்துவங்களின் உயர்ச்சிப் படிகள் எளிமை உடையதாகி விடும் .
37 . ஆசையானது , மறதியாளர்களின் உள்ளங்களின் மீதுள்ள ஷைத்தானின் தலைமையாகும் .
38 . ஆசையானது மரணத்தை நெருக்கமாக்கி , நல்லெண்ணத்தைத் தூரப் படுத்தி விடும் .
39 . ஆசை என்பது நல்ல முடிவுகளுக்குத் திரை ஆகும் .
40 . ஆசைகள் முடிவுறாதவை .
41 . ஆசைகள் , வாழ்க்கை முடிவைச் சமீபிக்கச் செய்யும் .
42 . ஆசையானது மிகப் பெரும் மோசடிக் காரணாகும் .
43 . ஆசைகள் அதிகரித்தவர் தீயவராகி விடுவார் .
23 ) பேராசை
1 . பேராசை சிந்தனையாளர்களின் கண்களைக் குருடாக்கி விடும் .
2 . சிறந்த செல்வம் பேராசைகளை விட்டு விட்டுவதாகும் .
3 . காலம் மனித உடல்களைச் சோதிக்கின்றது . ஆசைகளைப் புதுப்பிக்கின்றது . மரணத்தை நெருக்கமாக்குகிறது . பேராசைகளை தூரப் படுத்துகின்றது . இவற்றில் வெற்றி பெறுபவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்வார் . இவற்றைத் தவற விடுபவர் சிரமப் பட்டு விடுவார் .
4 . ஒரு சட்டத்தைச் செவியுற்று அதனைப் பேணுகின்ற , சேர் வழியின் பால் அழைக்கப் பட்டு அதனை அண்மிக்கின்ற , பேராசைகளை நிராகரிக்கின்ற , தன் வெற்றிக்கான பாதையாக பொறுமையை ஏற்படுத்திக் கொள்கின்ற மனிதனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக !
5 . வழி கெட்ட ஷைத்தானும் , தீய நப்ஸுல் அம்மாராவும் , ( கவாரிஜ்களாகிய ) அவர்களை பேராசையினால் வழி கெடுத்து விட்டன . பாவங்களை அவர்களுக்கு விசாலப் படுத்தி விட்டன . வெற்றியை அவர்களுக்கு வாக்களித்து , பின்னர் நரகத்தில் கடுமையாக எறிந்து விட்டன .
6 . பேராசையின் பால் சாய்ந்திருப்பதை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன் , நிச்சயமாக அது மடமையின் அம்சமாகும் .
7 . பேராசைகள் உன்னை உண்மைப் படுத்துவது அரிது .
8 . மரணத்தை ஞாபகிப்பவர் தன் பேராசைகளை மறந்து விடுவார் .
9 . இறை அச்சம் என்ற மரங்களை நடுபவர் , பேராசை என்ற பழங்களைத் தவிர்ந்து கொள்வார் .
10 . மரணம் வந்து விட்டால் பேராசைகள் பழிப்புக்குள்ளாகி விடும் .
11 . பேராசைகளை விட்டு விடுவதே மிகப் பயனுள்ள மருந்தாகும் .
12 . பேராசைகளின் பெறு பேறு கை சேதமாகும் .
13 . ஆயுள் கழிவதென்பது பேராசைகளுக்கும் எதிர் பார்ப்புகளுக்கும் இடையிலுள்ளது .
14 . மறுமைக்காக செயல் புரிபவர் தன் ஆசைகளை அடைந்து கொள்வார் .
15 . தன் பேராசைகளை நிராகரித்து மறுமையின் வாழ்வுக்காக துன்யாவை தவிர்ந்து கொண்டவருக்கு சுபோசனம் உண்டாவதாக !
24 ) தண்டித்தல்
1 . நிச்சயமாக அல்லாஹ் தன்னை வழிப்படுவதற்கு நன்மையையும் , தனக்கு மாறிழைப்பதற்கு தண்டனையையும் ஏற்படுத்தி உள்ளான் . இது , தனது தண்டனையிலிருந்து தன் அடியார்களைப் பாதுகாப்பதற்காகவும் , அவர்களை சுவனத்தின் பால் சேர்ப்பதற்காகவுமே ஆகும் .
2 . மனிதர்களே ! அல்லாஹ் , தனது தண்டனைகளின்; போது உங்களை அச்சமுள்ளவர்களாகக் கண்டது போலவே , அவனது அருட்கொடைகளின் போது நீதியானவர்களாக உங்களைக் காணட்டும் .
3 . அருட் கொடைகள் முடிவுறுவதைப் பயந்து கொள்ளுங்கள் . தண்டனைகளின் பீடையை தவிர்ந்து கொள்ளுங்கள் .
4 . அருட் கொடைகளை நிராகரிப்பதை உங்களுக்கு எச்சரிக்கின்றேன் . அது உங்களுக்குத் தண்டனையை இறக்கும் .
5 . பழிவாங்கும் பண்புடன் தலைமைத்துவம் இல்லை .
6 . ( மார்க்கத்தின் ) எல்லை மீறலைப் பயந்து கொள்ளுங்கள் , நிச்சயமாக அது தண்டனையை இறக்கும் . அருளைக் களையும் . நெருக்கடிகளைத் திணிக்கும் .
7 . தண்டனைகள் இறங்குவது குடம்ப உறவுகளைத் துண்டித்து வாழ்வதில் உள்ளது .
8 . அருட்கொடைகளுக்கு நன்றி தெரிவிப்பது , தண்டனைகள் இறங்குவதில் இருந்தான பாதுகாப்பாகும் .
9 . குடும்ப உறவைச் சேர்ந்து வாழ்வது , அருட் கொடைகளை அதிகரிக்கும் . தண்டனைகளைத் தடுக்கும் .
10 . அநாதைகளுக்கும் அடிமைகளுக்கும் அநீதி இழைப்பது , தண்டனைகளை இறக்கி , அருட் கொடைகளை களைந்து விடும் .
11 . அல்லாஹ் விலக்கிய பாவங்களைச் செய்வது , தண்டனைகளைத் துரிதப் படுத்தும் .
12 . தண்டிப்பதில் துரிதப் படுவது , பழிப்புக்குரிய தீய செயலாகும் .
13 . ஒரு வீரனின் செயல்களில் மிக இழிவானது . பழி வாங்குவதாகும் .
14 . ஒவ்வோர் அநீதியாளனுக்கும் தண்டனை உண்டு .
15 . கற்றவாளியைத் தண்டிப்பவன் , உலகில் அவனது சிறப்புக்களைப் பாழாக்கி விட்டான் . மறுமையின் நன்மைகள் அவனுக்குத் தவறி விடும் .
25 ) நீதி
1 . 'சிறப்புக்குரியவர் யார் ' என இமாம் அலி ( அலை ) அவர்களிடம் வினவப் பட்ட போது , ' பலவீனமானவர்களுடன் நீதியாக நடந்து கொள்பவன் ' என அவர்கள் கூறினார்கள் .
2 . அநீதியான ஆட்சின் கீழ் நீ சக்தி உள்ளவனுக்கு பயப்படுவதை விடவும் அதிகமாக , நீதியான ஆட்சியின் கீழ் இருந்தால் பலவீனமானவனுக்கு நீ இரக்கம் காட்டு . நிச்சயமாக நீ அறியப் படாத வகையில் ரணம் உணரப் படாத நிலையில் உதவி என்பது உன்னை வந்தடையும் .
3 . நீதியானவனாக இருக்கும் நிலையில் ஆளப் படுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள் . அநீதியாளனாக இருக்கும் நிலையில் ஆட்சி பரிவதைத் தேர்ந்தெடுக்காதே .
4 . மூன்று விடயங்கள் மிகக் கடினமான செயல்களாகும் . எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கொள்வது , சகோதரர்களுக்கு செல்வத்தினால் உதவுவது , மனிதர்களுடன் ஆத்மார்த்தமான நீதியுடன் நடந்து கொள்வது .
5 . நீதியாக நடப்பது , முரண்பாட்டை அகற்றி பரஸ்பர அன்புணர்வை ஏற்படுத்தும் .
6 . ஒரு முஃமின் தனக்கு நீதி செய்யாதவர்களுடனும் நீதியாக நடந்து கொள்வான் .
7 . நீதியாக நடந்து கொள்வது அன்பை நிரந்தரமாக்கி வைக்கும் .
8 . நீதியாக நடப்பது , சிறப்பியல்புகளின் அடையாளமாகும் .
9 . ஈமானில் சிறந்தது , மனசாட்சிக்கு ஒப்ப மனிதர்களுடன் நீதியாக நடந்து கொள்வதாகும் .
10 . நன்மையானவற்றில் மிகச் சிறந்தது , நீதியின் நன்மையாகும் .
11 . மனிதர்களில் மிக நீதியானவர் , ஆட்சியாளர்களின் திணிப்பின்றி சுயமாக நீதியுடன் நடந்து கொள்பவராவார் .
12 . மனழதர்களில் மிக நேர்மையானவர் , சக்தியுடன் நீதி செலுத்துபவர் . மனிதர்களில் பெரும் அன்பு மிக்கவர் , சக்தியுடன் அன்பு செலுத்துபவர் .
13 . சக்தியின் ஸக்காத் நீதியாகும் .
14 . பிற மனிதர்களோடு நீதியாக நடந்து கொள்ளுங்கள் .முஃமின்களோடு விருந்துபசாரமாக நடந்து கொள்வதாகும் .
15 . நீதியின் உச்சபட்சம் , ஒரு மனிதன் தனது ஆன்மாவுடன் நீதியாக நடந்து கொள்வதாகும் .
16 . அநீதியாளனிடமிருந்து அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி செலுத்தாதவரின் சக்திகளை அல்லாஹ் பிடுங்கி விடுவான் .
17 . நீதியைப் புறக்கணிப்பவருக்கு அல்லாஹ் அவரது சாத்தியப் பாடுகளை அகற்றி விடுவான் .
18 . நீதியுடனேயே சகோதரத்துவம் நிலைத்து இருக்கும் .
26 ) அஹ்லுல் பைத்
1 . உங்களது நபியின் அஹ்லுல் பைத்தினரைக் கவனியுங்கள் , அவர்களது நல் வழியைக் கைக் கொள்ளுங்கள் . அவர்களது சுவடுகளைப் பின் பற்றுங்கள் . அவ்வாறிருந்தால் , நீங்கள் நேர் வழியை விட்டும் வெளிப்படமாட்டீர்கள் . அவமானத்தில் விழுத்தப் படமாட்டீர்கள் .அவர்கள் அமைதியானால் நீங்களும் அமைதியாகுங்கள் . அவர்கள் உத்வேகம் கொண்டால் நீங்களும் உத்வேகம் பெறுங்கள் . அவர்களை முந்தி விடாதீர்கள் , வழி கெட்டு விடுவீர்கள் . அவர்களை விட்டும் பிந்தி விடாதீர்கள் , அழிந்து விடுவீர்கள் .
2 . ( அஹ்லுல் பைத்தினராகிய ) அவர்களிடத்திலே அல் குர்ஆனின் அற்புதங்கள் உள்ளன . அவர்கள் ரஹ்மானின் பொக்கிஷங்கள் . அவர்கள் பேசினால் உண்மையே பேசுவார்கள் .அவர்கள மௌனமானால் முந்தப்படமாட்டார்கள் .
3 . நாங்கள் நிழல் தரும் மரங்கள் , தோழர்கள் , பொக்கிஷங்கள் , வாயில்கள் . வீடுகளில் , அவற்றின் வாயில்கள் வழியாகவே உட்செலல் வேண்டும் . அவற்றின் வாயில் அல்லாத பிற வழியால் உற் செல்பவர் திருடர் எனப்படுவார் .
4 . இந்த சமூகத்தில் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களுடைய குடும்பத்தினருக்கு யாரும் ஈடாகமாட்டார்கள் . எப்போதும் அருட் கொடைகளைக் கொண்டுள்ளவர்கள் கூட அவர்களுக்கு சமமாகமாட்டார்கள் . அவர்கள் மார்க்கத்தின் அடிப்படைகள் . யகீனின் தூண்கள் , உயர்வுகள் அவர்கள் பால் இணைகின்றன . அடுத்து வரவோர் அவர்களிடமே இணைக்கப்படுவர் . அவர்களுக்கு உண்மையான விலாயத்தின் விஷேட தன்மைகள் உள்ளன . அவர்களிடம் உபதேசமும் வாரிசுரிமையும் இருக்கின்றன . இப்போது உண்மை அதற்கு உரியவர்களிடம் திரும்பி விட்டது . அதன் தளத்திற்கு திருப்பப்பட்டு விட்டது .
5 . (அஹ்லுல் பைத்தினராகிய) அவர்கள் , அல்லாஹ்வின் அந்தரங்க ஸ்தானமுள்ளவர்களாக , அவனது ஏவலில் பிடிப்புள்ளவர்களாக , அவனது அறிவின் காவலர்களாக , அவனது ஞானத்தின் தளங்களாக , அவனது வேதத்தின் குகைகளாக , அவனது மார்க்கத்தின் சிகரங்களாக உள்ளார்கள் .அல்லாஹ் அவர்களைக் கொண்டு நபியின் மனத்தளர்வை சீர் படுத்தினான் . அவர்களது உடலின் நடுக்கத்தை அகற்றினான் .
6 . மனிதர்களில் மிகப் பெரும் குருடர் எம்மீதான அன்பு , எமது சிறப்பு என்பவற்றை விட்டும் பராமுகமாக இருப்பவரே . அவர் எவ்வித குற்றக் காரணமுமின்றியே எம்முடன் பகைமை நிறுவினார் . எனினும் , நாம் அவரை உண்மையின் பால் அழைத்தோம் . பிறர் , உலகின் பக்கமும் குழப்பங்களின் பக்கமும் அவரை அழைத்தனர் . அதன் தாக்கத்தினால் எம்முடனான பகைமையை அவர் நிரந்தரமாக்கிக் கொண்டார் .
7 . எமது சிறப்புக்களை அறிந்து , எம்மைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கி , எமது அன்பைத் தூய்மைப் படுத்தி , நாம் கூறியவற்றின் படி செயல் புரிந்து , நாம் விலக்கியவற்றைத் தவிர்ந்தும் நடப்பவரே மனிதர்களில் சீதேவியாவார் . அவர் எம்மில் உள்ளவர் , மறுமையில் அவர் எம்முடன் இருப்பார் .
8 . நன்மைகளில் மிக அழகானது எம்மை நேசிப்பதாகும் . தீமைகளில் மிகக் கெட்டது எம்மைக் கோபிப்பதாகும் .
9 . எம்மை நேசிப்பவரும் , எம்மீது பகைமை கொள்வோருடன் பகைமை பாராட்டுவருமே மனிதர்களில் உயர்வானவர் .
10 . அல்லாஹ் பூமியில் எம்மைத் தேர்ந்தெடுத்துள்ளான் . எமெக்கென ஒரு கூட்டத்தையும் தேர்ந்தெடுத்துள்ளான் . அவர்கள் எமக்கு உதவி புரிவார்கள் . எமது மகிழ்ச்சியினால் தாமும் மகிழ்ச்சி உறுவார்கள் . எமது கவலையினால் தாமும் கவலை உறுவார்கள் . எமக்காக தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பார்கள் . அவர்களில் எங்களில் , எங்கள் ஆதரவில் உள்ளவர்கள் . அவர்கள் சுவனத்தில் எம்முடன் இணைந்திருப்பார்கள் .
11 . நிச்சயமாக எமது விடயம் சிரமமானதும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும் . அல்லாஹ் எவரது உள்ளத்தை ஈமானுக்காக பரிசோதித்தானோ அவர்களைத் தவிர வேறெவரும் அதை தாங்கிக் கொள்ளமாட்டார்கள் . எமது ஹதீஸ்களை அமைதியான நெஞ்சங்களும் அழகான பண்புகளுமே பாதுகாக்கும் .
12 . அறிந்து கொள்ளுங்கள் , அஹ்லுல் பைத்தினர் அறிவின் வாயில்கள் , இருளுக்கான ஒளி , சமூகங்களின் பிரகாசம் .
13 . வானத்திலுள்ளவற்றுக்கு நட்சத்திரங்கள் பாதுகாப்புப் போல் நானும் எனது அஹ்லுல் பைத்தினரும் இப்பூமியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாகும் .
14 . எங்களின் மூலமாக வழிகேட்டில் இருந்த நீங்கள் நேர் வழி பெற்றீர்கள் . உயர் நிலையை எட்டினீர்கள் . எங்களின் மூலம் தீங்குகளில் இருந்து விடுதலை பெற்றீர்கள் .
15 . எமது பாதை நாட்டமாகும் . எமது வழிமுறை நேர் வழியாகும் .
16 . உங்களது நபியின் குடும்பத்தினர் மீது நேசம் கொண்டிருங்கள் , அது அல்லாஹ்வுக்கான உங்களது கடமையும் அல்லாஹ்வின் மீது உங்களுக்கு உள்ள கடமையை வற்புறுத்தக் கூடியதுமாகும் . அல்லாஹ்வின் கூற்றை நீங்கள் அவதானிக்கவில்லையா ? ' ( நபியே ) நீர் கூறுவீராக ! இதற்காக எனது குடும்பத்தினர் மீது அன்பு கொள்வதைத் தவிர வேறெதையும் உங்களிடம் நான் கேட்கவில்லை '
17 . எமது கப்பல் அல்லாதவற்றின் மீது ஏறியவர் மூழ்கி விடுவார் .
18 . எம்மைப் பின் பற்றி ஒழுகுபவர் எம்முடன் இணைந்தவராவார் .
19 . எம்மை விட்டும் முரண்படுபவர் அழிந்து விடுவார் .
20 . எங்களுக்கான விலாயத்துடையவும் வழிப்படுதலுடையவுமான கடமை மனிதர்கள் மீது உள்ளது . அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் அழகிய கூலியும் இருக்கிறது .
21 . அஹ்லுல் பைத்தினராகிய எம்மைப் பின் பற்றுபவர் , கஷ்டத்தின் போது பொறுமையை அணிந்து கொள்ளட்டும் .
22 . நாங்கள் உண்மையின் பால் அழைப்பவர்கள் , படைப்புகளின் தலைவர்கள் , உண்மை உரைப்பவர்கள் , எமக்கு வழிப் படுபவர் ஜெயம் பெறுவார் , எமக்கு மாறிழைப்பவர் அழிந்து விடுவார் .
23 . நாங்கள் பாவமன்னிப்பின் வாயில் , அது ஈடேற்றத்தின் வாயில் . அதில் நுழைபவர் ஈடேற்றமும் வெற்றியும் பெறுவார் . அதிலிருந்து முரண்படுபவர் அழிந்து விடுவார் .
24 . நாங்கள் அடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வின் நம்பிக்கையாளர்களும் அவனது பூமியில் உண்மையை நிலை நிறுத்துவோருமாவோம் . எங்களின் மூலம் நல்லவர்கள் வெற்றியும் தீயவர்கள் அழிவும் பெறுவார்கள் .
25 . ( அஹ்லுல் பைத்தினராகிய ) அவர்கள் இஸ்லாத்தை நிலை நிறுத்தபவர்கள் , ஒற்றுமையைக் கட்டி எழுப்புபவர்கள் . அவர்களின் மூலம் சத்தியம் அதன் இடத்தை அடைந்தது , அசத்தியம் அதன் இடத்திலிருந்து அகன்றது . அதன் நாவு அதன் பிறப்பிடத்திலிருந்து விலக்கப் பட்டது . அவர்கள் மார்க்கத்தை அறிவிப்புகள் , செவியுறுதல்கள் , எனும் சிலை இல்லாமல் பாதுகாப்பும் கவனிப்பும் கொண்டு நாகரிகப் படுத்தினார்கள் . அவர்கள் ஈமானின் களஞ்சியங்கள் .நன்மையின் பொக்கிஷங்கள் .அவர்கள் அதிகாரம் செலுத்தினால் நீதியாக நடந்து கொள்வார்கள் . பேசினால் ஆதாராம் கூறுவார்கள் .
27 ) ஈமானும் முஃமினும்
1 . ஈமானைப் பற்றி இமாம் அலி ( அலை ) அவர்களிடம் வினவப்பட்ட போது , அவர்கள் கூறினார்கள் 'ஈமான் என்பது உள்ளத்தால் அறிவதும் , நாவினால் மொழிவதும் , உறுப்புகளால் செயல் புரிவதுமாகும் ' .
2 . தன்னிடமுள்ளதை விட அல்லாஹ்விடம் உள்ளதே உறுதியானது என்று ஆகும் வரை , ஒரு அடியானின் ஈமான் நிதர்சனமாகாது .
3 . அல்லாஹ் ஷிர்க்கிலிருந்து தூய்மைப் படுத்துவதற்காகவே ஈமானைக் கடமையாக்கி உள்ளான் .
4 . ஈமான் என்பது , உனக்குத் தீங்கிழைக்கும் பொய்யை உனக்குப் பயனளிக்கும் உண்மையாக ஆக்குவதும் , உனது செயலை விடச் சிறந்தது உனது பேச்சில் இல்லாதிருப்பதும் , பிறரது பேச்சுகளில் அல்லாஹ்வை நீ அஞ்சுவதுமாகும் .
5 . ( முஃமினுடைய பண்புகளில் ) ஒரு முஃமின் - அவனது மலர்ச்சி முகத்திலும் , அவனது கவலை உள்ளத்திலும் இருக்கும் . அவன் விசாலமான மனமுள்ளவனும் எளிமையான பக்குவம் உள்ளவனும் ஆவான் . பெருமையை வெறுப்பான் . பிரபல்யத்தை ஒதுக்குவான் .நீண்ட கவலை உடையவனாக , பெரும் துக்கமுடையவானாக , அதிக மௌனமுள்ளவனாக , காலத்தைப் பயன்படுத்துவோனாக , நன்றி தெரிவிக்கும் பொறுமையாளனாக , தனது சிந்தனையில் ஆழ்ந்தவனாக , குறைந்த நட்பு உடையவனாக , படைப்புகளில் மென்மையானவனாக , மிருதுவான பண்புள்ளவனாக இருப்பான் . அவனது ஆன்மா மிகக் கெட்டியானதாகும் . அவன் ஓர் அடிமையை விடவும் தாழ்மையாக நடந்து கொள்வான் .
6 . முஃமினுக்கு மூன்று நேரங்கள் உண்டு . அவன் தனது இரட்சகனுடன் சம்பாஷிக்கும் நேரம் , தன் வாழ்க்கைக்காக முயற்சிக்கும் நேரம் , தனது ஆன்மாவிற்கும் அதன் சுவைகளுக்கமிடையே உள்ள அழகானவற்றiயும் ஆகுமானவற்றையும் தவிர்ந்து கொள்ளும் நேரம் .
7 . ஈமானைப் பற்றி வினவப்பட்ட போது இமாம் அலி (அலை) அவர்கள் கூறினார்கள் 'ஈமான் நான்கு தூண்களில் உள்ளது . பொறுமை , உறுதி , நீதி , ஜிஹாத் ' .
8 . நான் முஃமின்களின் தலைவர் , பணம் தீயவர்களின் தலைவன் .
9 . பெண்ணின் மாற்றம் நிராகரிப்பு , ஆணின் மாற்றம் ஈமான் .
10 . தர்;மத்தின் மூலம் உங்களது ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் .
11 . நாணம் பொறுமை போன்ற ஈமான் இல்லை .
12 . ஈமான் மிகப் பிரகாசமான வழி , வெளிச்சமான ஒளி விளக்கு . ஈமானின் மூலம் நன்மையின் பால் வழிகாட்டப்படும் . நன்மையின் மூலம் இமானின் பால் வழி காட்டப்படும் . ஈமானின் மூலம் அறிவு நிறுவப்படும் .
13 . நிச்சயமாக முஃமின்கள் அமைதியானவர்கள் , முஃமின்கள் அன்பு நிறைந்தவர்கள் , முஃமின்கள் அச்சமுள்ளவர்கள் .
14 . ஈமான் உள்ளத்தில் வெண்ணிறப் புள்ளியை எற்படுத்துகின்றது . ஈமான் அதிகரிக்கும் போதெல்லாம் வெண் நிறப் புள்ளியும் அதிகரிக்கின்றது .
15 . ஒரு முஃமின் இன்னொரு முஃமினின் சகோதரன் , அவனுக்கு மோசடி செய்யமாட்டான் . பழித்துரைக்கமாட்டான் , அவனுக்கு உதவுவதை விட்டு விடமாட்டான் .
16 . முஃமின்களைச் சிரமப் படுத்தாதே . மரக்கிளை வெட்டப் படுவதைப் போன்று நீயும் வெட்டப் படுவாய் . ( முஃமின்களை எதிர்ப்பவரின் நன்மைகளை அல்லாஹ் அழித்து விடுவான் )
17 .முஃமின்களின் நுண்ணறிவைப் பயந்து கொள்ளுங்கள் . அவன் அல்லாஹ்வின் ஒளியினால் பார்க்கின்றான் .
18 . அறிந்து கொள்ளுங்கள் , முஃமின் என்பவன் , மனிதர்கள் ஓய்வுற்றிருக்கும் நிலையில் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான் . இரவு நேரமாகிவிட்டால் அவனது முகம் விரிவடைந்து விடும் . தனது உடலின் கடமையாக அல்லாஹ்வை சிரம் பணிந்து இருப்பான் . தனது அடிமைத் தளையின் உரிமையிடலில் தன்னைப் படைத்த அல்லாஹ்வுடன் சம்பாஷித்துக் கொண்டிருப்பான் . இவ்வாறு நீங்களும் இருங்கள் .
19 . எவருக்கு நன்மைகள் சந்தோசத்தையும் தீமைகள் கவலையையும் ஏற்படுத்துகின்றனவோ , அவர் முஃமின் .
20 . ஈமான் நான்கு தூண்களில் உள்ளது . அல்லாஹ்வின் ஏற்பாடுகளை திருப்தி கொள்வது , அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுவது , அனைத்தையும் அல்லாஹ்வுக்காக மேற் கொள்வது , அல்லாஹ்வுக்கு அடிபணிவது .
21 . தனக்குக் கிடைத்துள்ள ஈமான் தவறிழைப்பதற்காக அல்ல என்பதையும் , தவறிழைப்பதால் தனக்கு அது கிடைக்காது என்பதையும் , அறியும் வரை எவரும் ஈமானின் சுவையை உணரமாட்டார்கள் .
22 . நான்கு விடயங்கள் உள்ளன , அவை உள்ளவருக்கு ஈமான் பூரணமடைந்து விடும் . அல்லாஹ்வுக்காகவே கொடுப்பது , அல்லாஹ்வுக்காகவே தடுப்பது , அல்லாஹ்வுக்காகவே விரும்பவது , அல்லாஹ்வுக்காகவே வெறுப்பது .
23 . வெற்றி என்பது ஈமானுடன் ஆகும் .
24 . ஈமான் பாதுகாப்பாகும் .
25 . ஈமான் என்பது ஒரு மரம் , அதன் வேர் ஒரு யகீன் ( உறுதி ) அதன் கிளை இறையச்சம் , அதன் ஒளி நாணம் , அதன் கனி கொடைத்திறன் .
26 . ஈமானின் மூலமே வெற்றி கிட்டும் .
27 . ஈமானின் மூலம் சீதேவித் தனத்தின் உயர்வையும் தலைமைத்துவத்தின் அந்தஸ்த்தையும் எட்ட முடியும் .
28 . ஈமானின் பயன்பாடு அல்லாஹ்விடம் வெற்றி பெருவதாகும் .
29 . மூன்று விடயங்கள் உள்ளன . அவை உள்ளவர் ஈமானைப் பரி பூரணப் படுத்தியவர் ஆவார் . அன்பிலும் கோபத்திலும் நீதியாக நடந்து கொள்வது , ஏழ்மையிலும் செல்வத்திலும் நடுத்தரமாக இருப்பது , அச்சத்தையும் ஆதரவையும் சமத்துவமாகக் கொள்வது .
30 . மூன்று விடயங்கள் ஈமானின் பொக்கிஷங்களில் உள்ளவையாகும் . சோதனைகளை மறைப்பது , தர்மம் புரிவது , நோயுறுவது .
31 . ஈமானி;ன் அழகு , தூய்மையான அந்தரங்கமும் , வெளிப்படையான நற்செயலுமாகும் .
32 . முஃமினின் சிறப்பு அவனது ஈமானாகும் ; அவனது கண்ணியம் அவனது வழிப்படுதல் .
33 . ஈமானை உண்மைப்படுத்துவதும் நற்செயல்கள் புரிவதும் மிகச் சிறந்த பொக்கிஷங்களாகும் .
34 . தனது ஈமானை உண்மைப்படுத்தியவர் வெற்றி பெறுவார் ; இஸ்லாத்தை அழகாக்கியவர் நேர்வழி பெறுவார் .
35 . அடிபணிதலும் உறுதியான நிலை நாட்டியவரே ஈடேற்றத்தை அடைந்து கொள்வார் .
36 . அடிபணிதலும் உறுதியான வழிப்படுதலுமே ஒரு மனிதனுடைய ஈமானின் அடையாளங்களாகும் .
37 . ஈமானும் அமலும் ஒட்டிப் பிறந்த இரு சகோதரர்களும் , இணை பிரியா இரு நண்பர்களுமாகும் . அவற்றில் , ஒன்றில்லாமல் மற்றையதை அல்லாஹ் அங்கீகரிக்க மாட்டான் .
38 . முஃமின் புத்தியும் சமயோசித அறிவுமுள்ளவன் .
39 . முஃமின் அதிக அமலும் குறைந்த தடுமாற்றமும் உள்ளவன் .
40 . இவ்வுலகம் முஃமினின் சிறையாகும் , மரணம் அவனது காணிக்கையாகும் , சுவனம் அவனது தங்கும் இடமாகும் .
41 . முஃமினுக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன ; வாய்மை , யகீன் ஆசைகளை சுருக்கிக் கொள்ளல் .
42 . முஃமின் - உலகம் , அவனமு போட்டி மைதானமாகும் ; அமல் , அவனது இலட்சியமாகும் ; மரணம் , அவனது காணிக்கையாகும் ; சுவனம் , அவனது ஒதுங்குமிடமாகும் .
43 . முஃமின் - பார்த்தால் படிப்பினை பெறுவான் , மௌனமானால் சிந்தனையுறுவான் , பேசினால் உபதேசம் புரிவான் , கொடுக்கப்பட்டால் நன்றி செலுத்துவான் , சோதிக்கப்பட்டால் பொறுமை செய்வான் .
44 . முஃமின் தன் ஆன்மாவின் மீது நம்பிக்கையுள்ளவனும் தனது இச்சைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவோனுமாவான் .
45 . முஃமின் - அவனது முயற்சி உலகாசையற்றது ; அவனது இலக்கு மார்க்கம் ; அவனது கண்ணியம் போதும் என்ற மனம் ; அவனது உழைப்பு மறுமைக்கானது ; அவனது நன்மைகள் அதிகமானது ; அவனது அந்தஸ்து உயர்வானது ; தனது முடிவிலும் வெற்றியிலும் அவன் சிறப்புறுவான் .
46 . தான் எடுப்பதும் கொடுப்பதும் , கோபிப்பதும் திருப்தி கொள்வதும் அல்லாஹ்வுக்காக என்றுள்ளவரே , சிறப்பான ஈமானுள்ள முஃமினாவார் .
47 . முஃமின் , மகிழ்ச்சியின் போது நன்றியுள்ளவனாய் இருப்பானன் , கஷ்டத்தின் போது பொறுமையோடிருப்பான் , நல்லவற்றின் போது அச்சம் உள்ளவனாயிருப்பான் .
48 . முஃமின் என்பவன் - அவனது உழைப்பு தூய்மையானது , அவனது பண்பு அழகானது , அவனது அந்தரங்கம் ஆரோக்கியமானது . அவன் , தனது செல்வத்தில் அதிகமானவற்றை செலவு செய்வான் , தனது பேச்சில் அதிகமானவற்றை தடுத்துக் கொள்வான் . மனிதர்களுக்குத் தீங்கிழைக்காது அவர்களுடன் ஆத்மார்த்தமான நீதியுடன் நடந்து கொள்வான் .
28 ) பார்த்தல்
1 . ஒரு கூட்டத்தின் செயலை ஏற்றுக் கொள்பவன் அவர்களுடன் அதிலுள்ளவற்றைப் போன்றாவான் . பாத்திலானவற்றில் நுழைபவர்கள் மீமு இரண்டு குற்றங்கள் உள்ளன , அதைச் செய்த குற்றம் , அதை அங்கீகரித்த குற்றம் .
2 . அறிந்து கொள்ளுங்கள் , எவரை சத்தியம் ஆட் கொள்கின்றதோ அவர் சுவனத்தின் பக்கம் உள்ளார் . எவரை அசத்தியம் ஆட் கொள்கின்றதோ அவர் நரகத்தின் பக்கம் உள்ளார் .
3 . ' நிச்சயமாக சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நான்கு விரல்களே உள்ளன ' இக் கூற்றின் கருத்து பற்றி இமாம் அலி ( அலை ) அவர்களிடம் வினவப் பட்டபோது , அவர்கள் தமது விரல்களை ஒன்று சேர்த்து தமது கண்ணுக்கும் காதுக்கும் இடையில் வைத்தார்கள் . பின் சொன்னார்கள் : ' அசத்தியம் என்பது நான் கேள்வியுற்றேன் என்று நீ கூறுவதாகும் . சத்தியம் என்பது நான் பார்த்தேன் என்று கூறுவதாகும் '
4 . சத்தியம் பாதுகாக்கும் , அசத்தியம் வீழ்த்திவிடும் .
5 . ' புத்தியுள்ளவன் யார் ? என வினவப் பட்டபோது , இமாம் அலி
( அலை ) அவர்கள் , ' அசத்தியத்தை நிராகரிப்பவன் ' எனக் கூறினார்கள் .
6 . மனிதர்களின் திருப்தியென்பது எட்ட முடியாத உச்சமாகும் . எனவே , உனது முயற்சியால் நல்லதை தேர்ந்து எடுத்துக் கொள் . அசத்தியத்தை அங்கீகரிப்பவனின் கோபத்தை நீ பொருட்படுத்தாதே .
7 . அதிகமாக இருப்பினும் , அசத்தியம் பேணுவோரே பிளவு பட்டு பரிவுக்கு உள்ளானவர்கள் . குறைவாக இருப்பினும் , சத்தியம் பேணுவோரே ஒற்றுமையுடன் இணைந்த கூட்டத்தினர் ஆவர் .
8 . அசத்தியங்கள் வழிகேடுகளை ஏற்படுத்துபவை ஆகும் .
9 . அசத்தியத்துக்கான உதவிக்கு காரணமாக அமைவது , இழிவும் மோசடியுமாகும் .
10 . அசத்தியத்துக்கு உதவுபவர் கைசேதப் படுவார் .
11 . அசத்தியத்தில் ஏறிக் கொள்பவரை அவரது அவ்வாகனமே அழித்து விடும் .
12 . அசத்தியத்தின் மூலம் உனக்கு சாதகமாக சாட்சி சொல்பவர் , அதைப் போன்றதின் மூலம் பாதகமாகவும் உனக்கு சாட்சி சொல்வார் .
13 . அசத்தியத்தின் பால் ஒதுங்குபவர் கண்ணியம் பெறமாட்டார் .
14 . அசத்தியத்தை செயலாற்றுபவர் இழிவுக்கும் வேதனைக்கும் உரியர் ஆவார் .
15 . ' சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு எவ்வளவு ? ' என வினவப்பட்ட போது , ' நான்கு விரல்களாகும் ' எனக் கூறிய இமாம் அலி ( அலை ) அவர்கள் தமது கையை தமது கண்களுக்கும் காதுக்குமிடையில் வைத்தார்கள் . பின் கூறினார்கள் : ' உனது கண்கள் கண்டவை சத்தியமாகும் . உனது காதுகள் கேட்டவை பெரும்பாலும் அசத்தியமாகும் ' .
29 ) கஞ்சத்தனம்
1 . கஞ்சத்தனம் குறைபாடுகள் அனைத்தினதும் கூட்டிணைப்பு . அது ஒவ்வொரு தீமைக்கும் தலைமை தாங்கும் கடிவாளம் .
2 . கஞ்சத்தனம் இழிவாகும் , கோழைத்தனம் குறைபாடாகும் , ஏழ்மை புத்திக் கூர்மையை அதன் ஆதாரத்தை விட்டும் இல்லாமலாக்கிவிடும் . இட்டுக் கட்டுவது சொந்த ஊரிலேயே பரதேசி நிலையாகும் .
3 . கஞ்சத்தனம் உள்ளவனைப் பார்த்து ஆச்சரியமுறுகிறேன் . அவன் தான் பயப்படுகின்ற ஏழ்மையை தனக்கு விரைவாக்குகிறான் . தான் தேடுகின்ற செல்வத்தை இழந்து விடுகிறான் . இவ்வுலகில் ஏழைகளின் வாழ்க்கை வாழ்கிறான் . மறுமையில் செல்வந்தர்களுக்கு உரிய கேள்வி கணக்குக் கேட்கப் படுகின்றான் .
4 . ( எனது மகனே ! ) கஞ்சனுடன் நட்புக் கொள்வதை உனக்கு எச்சரிக்கிறேன் . நிச்சயமாக நீ தேவைப்படும் விடயத்தில் அதிக தேவை உடையவனாக அவன் ஆகிவிடுவான் .
5 . பெண்களது விவகாரங்களில் நல்லதாக இருப்பது , ஆண்களது விவகாரங்களில் கெட்டதாக இருக்கும் : அதிக அலங்காரம் , கோழைத்தனம் , கஞ்சத்தனம் . பெண் அதிக அலங்காரமுடையவளாக இருந்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமாட்டாள் , அவள் கஞ்சத்தனம் உள்ளவளாக இருந்தால் தனதும் கணவனதும் சொத்துக்களைப் பாதுகாப்பாள் , அவள் கோழைத்தனம் உள்ளவளாக இருந்தால் அவளுக்குக் காண்பிக்கப் படும் அனைத்தை விட்டும் பிரிந்து விடுவாள் .
6 . நிச்சயமாக கஞ்சத்தனம் , கோழைத்தனம் , பேராசை என்பன எல்லா வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துபவை ஆகும் . தீய எண்ணம் இவற்றை ஒன்றிணைக்கிறது .
7 . நோய்களின் அதிகரிப்பு கஞ்சத்தனத்தின் அடையாளமாகும் .
8 . சத்தியத்துக்காக செலவு செய் . பிறருக்காக சேமித்து வைப்பவனாக இராதே .
9 . கஞ்சத்தனம் இழிவைத் திணிக்கும் .
10 . வீண் விரயத்தை விடவும் கஞ்சத்தனத்தில் சக்தி உள்ளவனாக ஆகிவிடாதே .
11 . உலோபியின் செல்வத்திற்கு திடுக்கிடும் நிகழ்வுகளையும் வாரிசுகளையும் நன்மாராயம் கூறுங்கள் .
12 . கஞ்சத்தனத்துடன் நன்மை இல்லை .
13 . கஞ்சத்தனம் ஏழ்மையை விடவும் மனிதனைப் பாதிக்கக் கூடியது . ஏனெனில் , ஏழை எதுவும் கிடைக்கப் பெற்றால் மனவிசாலமுறுவான் . உலோபியோ ஏதும் கிடைக்கப் பெற்றாலும் மன விசாலமுறமாட்டான் .
14 . உலோபிகளிடம் செல்வம் ஒன்று சேர்ந்திருப்பது , இரு பெரும் வரட்சிகளில் ஒன்றாகும் .
15 . கஞ்சத்தனத்தை உங்களுக்கு எச்சரிக்கிறேன் , அது உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது . அதுதான் மனிதர்களின் இரத்தத்தைச் சிந்தச் செய்தது . அதுவே குடும்ப உறவுகளைச் சீர் குலைத்தது . எனவே , அதனைத் தவிர்ந்து கொள்ளுங்கள் .
16 . மனிதர்களிலுள்ள உலோபிகள் - தமது குற்றச் செயல்கள் பற்றிய அவர்களது மறதி , எளிமையான நற் செயல்களை விடவும் தாழ்ந்ததாக ஆகிவிட்டது .
17 . உலோபியின் நண்பன் , அவன் மூலம் முன்னேற்றம் பெறமாட்டான் .
18 . கொடையாளிகள் மீதான உலோபியின் கோபம் , அவனது கஞ்சத்தனத்தை விடவும் ஆச்சரியமானது .
19 . உனது ஆலோசனைகளில் உலோபியை நுழைய விடாதே . அவன் , உனக்கும் செல்வத்துக்கும் இடையில் நின்று வறுமையை ஏற்படுத்தி விடுவான் .
20 . உலோபியைத் தவிர மற்றெவரும் செல்வத்தை விட்டு வைக்கமாட்டார்கள் . உலோபி தவறு இழைப்பவனாவான் .
21 . உலோபிக்கு மனிதாபிமானம் இல்லை .
22 . கஞ்சத்தனம் கொள்ளாதே , ஏழையாகி விடுவாய் . வீண் விரயம் செய்யாதே , பாவமிழைத்து விடுவாய் .
23. தனது நற்செயல்களில் கஞ்சத்தனம் கொள்பவன் தனது ஈமானை நிலைப் படுத்தமாட்டான் .
24 . அறிவுடையவனின் கஞ்சத்தனம் எவ்வளவு இழிவானது .
25 . அதிக செல்வத்துடன் இருக்கையில் கஞ்சத்தனம் கொள்வது , எவ்வளவு இழிவானது !
26 . தனது தேவையின் போதும் கஞ்சத்தனம் கொள்பவன் மீது அல்லாஹ் சினம் கொள்கிறான் .
27 . செல்வத்தைத் தடுத்து வைத்து அதனைப் புகழ்பவருக்கு , அதனைப் புகழாத ஒருவரை அல்லாஹ் வாரிசாக்கிக் கொடுப்பான் .
28 . தனது விடயத்தில் கஞ்சத்தனம் கொள்பவன் , பிறர் விடயத்தில் மிகக் கஞ்சத்தனம் உள்ளவனாக ஆகிவிடுவான் .
29 . ஒரு மனிதனை கஞ்சத்தனம் உள்ளவனாக நீங்கள் கண்டால் , அவனை இழிவுக்கு உள்ளானவனாகவே நீங்கள் உணர்வீர்கள் . அனைத்துப் பார்வைகளும் அவனை விட்டுத் தாழ்ந்து விடும் . அனைத்து உள்ளங்களும் அவனை விட்டுத் திரும்பி விடும் .
30 . தனது விடயத்திலும் கஞ்சத்தனம் கொள்பவனுக்கு நன்மைக்கான எச்சந்தர்ப்பமும் இல்லை . அவனது சொத்தக்கள் மற்றவர்களுக்கே போய்ச் சேரும் .
31 . கஞ்சத்தனம் உள்ளவனுக்கு நல்ல நண்பன் இல்லை .
32 . அதிக கஞ்சத்தனம் வசைகளைப் பெற்றுத் தரும் .
33 . செல்வம் நீங்குவதற்கான காரணம் தேவையுள்ளவனுக்குக் கொடுக்காமல் தடுத்து வைப்பதாகும் .
34 . இருப்பவற்றில் கஞ்சத்தனம் கொள்வது அடியார்கள் மீதான தீய எண்ணமாகும் .
35 . ஓர் உலோபி , உலகில் தனக்கு மிக எளிய விடயங்களிலும் கஞ்சத்தனம் கொள்வான் . தனது வாரிசுக்கு அனைத்தையும் வழங்கி விடுவான் .
36 . கஞ்சத்தனத்தின் அதிகரிப்பு இளமையைப் பாதிப்பதும் சகோதரத்துவத்தைப் பாழாக்குவதுமாகும் .
37 . இரண்டு பண்புகள் ஒரு முஃமினிடத்தில் ஒன்று சேர்ந்திருக்காது . அவை : தீய பண்பு , கஞ்சத்தனம் .
38 . கஞ்சத்தனத்தையும் நயவஞ்சகத் தனத்தையும் தவிர்ந்து கொள்ளுங்கள் , அவ்விரண்டும் மிக இழிவான குணங்களாகும் .
39 . பொருளாதாரத்தில் ஆபத்து கஞ்சத்தனம் ஆகும் .
40 . செல்வ நிலையின் ஆபத்து கஞ்சத்தனம் ஆகும் .
41 . கஞ்சத்தனத்தில் மிக இழிவானது , செல்வத்தை அதற்குத் தகுதி உடையவர்களை விட்டும் தடுத்து வைத்துக் கொள்வதாகும் .
42 . படைப்புகளில் அல்லாஹ்வுக்கு மிகத் தூரமானவர் , செல்வந்தராக உள்ள உலோபி .
43 . செல்வத்தில் அல்லாஹ் கடமை ஆக்கியவற்றை வெளியாக்குவதில் கஞ்சத்தனம் கொள்வது மிக இழிவான கஞ்சத்தனம் ஆகும் .
44 . உலோபி இவ்வுலகில் இழிவுக்கு உள்ளாக்கப் படுகின்றான் . மறு உலகில் பழிப்புக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப் படுகின்றான் .
45 . கஞ்சத்தனம் அவமானத்தைத் தேடித் தரும் . நரகில் நுழைத்து விடும் .
46 . கஞ்சத்தனம் இரண்டு வறுமைகளில் ஒன்றாகும் .
47. கஞ்சத்தனம் அதைக் கைக் கொள்பவனை இழிவுக்கு உள்ளாக்குகிறது . அதை விலக்குபவனைக் கண்ணியப் படுத்துகின்றது .
48 . உலோபி வறுமையைத் தீவிரப் படு;த்துகிறான் .
30 ) பித்அத்
1 . பிரச்சினைகளுக்கு உதவுவோராக , பித்அத்தை உருவாக்குவோராக இருக்காதீர்கள் . ஒற்றுமையின் கயிறு கட்டப் பட்டுள்ள , வழிபாட்டின் தூண்கள் நிர்மாணிக்கப் பட்டுள்ள விடயத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் .
2 . மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிகக் கெட்டவர் அநீதி இழைக்கும் இமாம் ஆவார் . அவர் , தானும் வழி கெட்டு பிறரையும் வழி கெடுப்பார் . அவர் , அறிமுகமான வழி முறைகளை மரணிக்கச் செய்து , கை விடப்பட்ட பித்அத்களை உயிர்ப்பிப்பார் .
3 . மனிதர்கள் இரு வகையினர் ஆவர் : மார்க்கத்தைப் பின்பற்றுபவர் , பித்அத்தை நிலை நிறுத்துபவர் . பித்அத்தை நிலை நிறுத்துபவருக்கு அல்லாஹ்விடத்தில் ஆதாரமோ , சுன்னத்தோ இல்லை . தெளிவான சான்றும் இல்லை .
4 . ஒரு பித்அத் உருவாக்கப் படும் போது ஒரு சுன்னத் தவற விடப்படுகிறது . எனவே , பித்அத்தைப் பயந்து கொள்ளுங்கள் . தெளிவான பாதையைப் பற்றிப் பிடியுங்கள் . விடயங்களில் உறுதியானது அவற்றில் சிறந்ததாகும் . அவற்றில் புதிதானவை தீயவை ஆகும் .
5. ஒரு மனிதருக்கு சுபோசனம் உண்டாவதாக ! அவர் தன்னை தாழ்த்திக் கொள்வார் . அவரது உழைப்பு சரியானது . அவரது அந்தரங்கம் சீரானது . அவரது பண்பு அழகானது . அவர் , தனது செல்வத்தில் அதிகமானவற்றை செலவு செய்வார் . தனது நாவிலிருந்து அதிகமானவற்றைத் தடுத்துக் கொள்வார் . மனிதர்களை விட்டும் தீமையைத் விலக்கிக் கொள்வார் . சுன்னத் அவருக்கு விசாலமாக இருக்கும் . அவர் பித்அத்தின் பால் இணைந்திருக்கமாட்டார் .
6 . பித்அத்துடையவரிடம் சென்று அவரை கண்ணியப் படுத்துபவர் , இஸ்லாத்தை உடைப்பதற்கு முயற்சித்தவர் ஆவார் .
7 . பித்அத்தைப் போல் தீனை உடைப்பது வேறு ஒன்றுமில்லை , பேராசையைப் போன்று மனிதர்களைப் பாதிப்பது வேறெதுவுமில்லை .
8 . சுன்னத் என்பது , அல்லாஹ் மீதாணையாக ! முஹம்மத் ( ஸல் ) அவர்களின் சுன்னத் ஆகும் . பித்அத் என்பது அதை விட்டும் பிரிந்துள்ளவை ஆகும் .
31 ) அல்பிர்
1 . பெற்றோருக்குத் தொண்டு புரிவது இயல்பில் மிக சங்கைக்கு உரியதாகும் .
2 . கஷ்டங்களின் போது பொறுமை கொள்வதும் , சோதனைகளை மறைப்பதும் நற்செயல்களின் பொக்கிஷங்களில் உள்ளவையாகும் .
3 . கஞ்சத்தனத்துடன் நன்மை இல்லை .
4 . நற் செயலைக் கொண்டு ஒரு சுதந்திரவான் ( இறைவனிடம் ) அடிமையாகி விடுகிறான் .
5 . நற்செயல்களில் நீ களைப்படைந்தாலும் , நிச்;சயமாக களைப்பு நீங்கிவிடும் , நற் செயல் நிலையாக இருக்கும் .
6 . நான்கு விடயங்கள் சுவனத்தின் பால் அழைக்கின்றன . சோதனைகளை மறைப்பது , தர்மங்களை இரகசியமாகச் செய்வது , பெற்றோருக்கு நன்மை புரிவது , ஷ லாயிலாஹ இல்லல்லாஹ் | வை அதிகப் படுத்திக் கொள்வது .
7 . நற்செயல் என்பது , உனது ஆன்மா அமைதி பெறுவதும் , உனது உள்ளம் நிம்மதி அடைவதுமாகும் . பாவம் என்பது , உனது ஆன்மாவை சிரமத்திற்கு உள்ளாக்குவதும் , உனது நெஞ்சைத் தடுமாற்றம் அடையச் செய்வதுமாகும் .
8 . கஷ்டத்தில் உள்ளோருக்குத் தருமம் செய்வது , கோபத்தின் போதும் உண்மை பேசுவது , சக்தி இருந்தும் மன்னித்து விடுவது ஆகியவை நற் செயல்களில் மிகச்; சிறப்பிற்கு உரியவை ஆகும் .
9 . நல்லவர்களின் மரணம் அவர்களுக்கு ஆறுதல் ஆகும் . தீயவர்களின் மரணம் உலகுக்கு ஆறுதலாகும் .
10 . மனிதன் தன் ஆயுளைக் கொண்டு வாழ்வதை வி;ட , தன் நன்மைகளைக் கொண்டு வாழ்வதே அதிகமாகும் .
11 . பிறருக்கு நன்மை புரிவது , சீர் திருத்தும் செயலாகும் .
12 . நற் செயல் , நன்மை வழங்கப் படுபவற்றில் மிகத் தீவிரமானது .
13 . நல்லவர்களின் ஆன்மா , எப்போதும் தீயவர்களின் செயல்களை வெறுத்திருக்கும் .
14 . நல்லவர்களின் ஆன்மா தீயவர்களின் ஆன்மாவை விட்டும் தூரமானதாகும் .
15 . நற் செயலுடன் அருள் சுற்றிக் கொண்டிருக்கிறது .
16 . நற் செயல் நெருக்கமானால் பிரபலமும் அதன் நினைவும் தூரமாகிவிடும் .
17 . தனது நற் செயல்களை பரத்துபவரின் ஞாபகப் படுத்தல்கள் பிரபலமாகி விடும் .
18 . வீண்விரயம் என்பது , நற் செயல் தவிர ஏனைய அனைத்திலும் பழிப்புக்கு உரியதாகும் .
19 . நற் செயல்களில் மிகச் சிறப்புக்கு உரியது , பொருத்தமானவர்களுக்கு நிறைவேற்றப் படும் நற் செயலாகும் .
20 . உனது நற்செயலை மறந்து விடாதவரே நீ நன்மை புரிவதற்கு மிகத் தகுதியானவர் .
21 . நீங்கள் உங்களது செயல்கள் அனைத்திற்கும் உரித்துடையவர்கள் . எனவே , நன்மையைத் தவிர வேறெதையும் செய்யாதீர்கள் .
22 . சிறப்புகளின் கூட்டிணைப்பு என்பது நற் செயல்களை மேற் கொள்வதில் இருக்கின்றது .
32 ) குழப்பம் விளைவித்தல்
1 . குழப்பத்தின் வாளை உருவியவர் அதனாலேயே கொல்லப் படுவார் .
2 . குழப்பத்தைத் தீவிரப் படுத்துபவரதும் , அநீதியைத் தடுப்பதில் அமைதியாய் இருப்பவரதும் நிலைமைகள் ..... அல்லாஹ் , அல்லாஹ் !
3 . குழப்பமும் பொய்சாட்சியும் மனிதனை அவனது தீனிலும் துன்யாவிலும் அழித்து விடுகின்றன . அவனிடம் குறை காண்பவர்களிடம் அவனது தவறுகளை வெளிப் படுத்துகின்றன .
4 . இமாம் அலி ( அலை ) அவர்கள் தமது புதல்வர் இமாம் ஹஸனுக்கு கூறினார்கள் : ' போட்டிக்காக நீ பிறரை அழைக்க வேண்டாம் . அதன் பால் நீ அழைக்கப்பட்டால் அதற்கு விடை கொடு . நிச்சயமாக அதன் பால் அழைப்பவன் குழப்பவாதி ஆவான் . குழப்பவாதி சண்டைக்காரன் ஆவான் .
5 . நீதி செலுத்துவோர்களில் எல்லாம் மிகச் சிறந்த நீதியாளனான அல்லாஹ்விடத்தில் , குழப்பவாதிகளாக இனங்காணப் படுபவர்களுக்கு கேடு உண்டாவதாக !
6 . குழப்பம் மறுமையின் நேரத்தை இழுத்துக் கொண்டு வரும் .
7 . குழப்பம் தீமையின் பால் இட்டுச் செல்லும் .
8 . குழப்பத்துடன் வெற்றி இல்லை .
9 . மிகவும் பழிப்புக்கு உரியது சக்தியுடன் குழப்பம் விளைவிப்பதாகும் .
10 . தண்டனைகளில் விரைவானது , குழப்பம் , ஏமாற்று , பொய்ச்சத்தியம் என்பவற்றுக்கான தண்டனை ஆகும் .
11 . குழப்பம் அருட்கொடைகளைக் களைந்து விடும் .
12 . குழப்பம் தண்டனைகளை ஏற்படுத்தும் .
13 . குழப்பம் மனிதர்களிடையில் சண்டையை எற்படுத்தும் . மறுமையை நெருக்கமாக்கும் .
14 . குழப்பவாதியின் தண்டனை எவ்வளவு பாரியது !
15 . குழப்பவாதிகளுக்கும் பகைமையாளர்களுக்கும் தண்டனை எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது !
33 ) வீணாக்குதல்
1 . தயாளமுள்ளவனாக இரு , வீண்விரயம் செய்பவனாக இராதே . ஆக்குபவனாக இரு , அழிப்பவனாக இராதே .
2 . அறிந்து கொள்ளுங்கள் : செல்வத்தை அதற்கு தகுதி அற்றவருக்கு கொடுப்பது , வீண்விரயமும் அதிக செலவுமாகும் . அது , அவ்வாறு செய்பவரை உலகில் உயர்த்தும் . மறுமையில் தாழ்த்தி விடும் . மனிதர்களிடத்தில் சங்கையைப் பெற்றுத் தரும் . அல்லாஹ்விடத்தில் இழிவைத் தேடித்தரும் .
3 . முன்யோசனையுடன் ( செல்வம் ) கொஞ்சத்தைக் கொண்டிருப்பது , வீண் விரயத்துடன் அதிகம் கொண்டிருப்பதை விட நிலையானது .
4 . சீரான செலவு , கொஞ்சமாக உள்ளதை அதிகரிக்கச் செய்யும் . வீண்விரயம் அதிகமாக உள்ளதையும் அழித்து விடும் .
5 . வீண் விரயத்தைப் போன்ற மடமை வேறில்லை .
6 . வீண் விரயத்தைத் தவிர்ந்து கொள்வதும் , முன் யோசனையை அழகாக்கிக் கொள்வதும் புத்தியில் உள்ளதாகும் .
7 . வீண் விரயத்தின் மூலம் பெருமை அடிப்பவன் வறுமையின் மூலம் சோதிக்கப் படுவான் .
8 . கொடையின் ஆபத்து வீண் விரயமாகும் .
9 . நீ , வீண் விரயத்தையும் அதிக செலவையும் விட்டு விட்டு , நீதியையும் நேர்மையையும் கடைபிடித்து ஒழுக வேண்டும் .
10 . வீண் விரயம் என்பது , ஏழ்மையான தோழன் .
11 . வீண் விரயம் இழிப்பின் முகவரி ஆகும் .
34 ) அனுபவம்
1 . அனுபவத்தின் மூலமும் சோதனைகளின் மூலமும் அல்லாஹ் யாருக்கு பயன் அளிக்கவில்லiயோ , அவர் , எந்த உபதேசத்தின் மூலமும் பயன் பெறமாட்டார் .
2 . ஆசைகளின் பால் சாய்ந்திருப்பதை உங்களுக்கு எச்சரிக்கிறேன் . நிச்சயமாக அது மடமையின் அம்சமாகும் . புத்தி என்பது அனுபவங்களைப் பாதுகாத்துக் கொள்வதாகும் . நீ அனுபவம் பெற்றவற்றில் சிறந்தது , உனக்கு உபதேசம் புரிந்ததாகும் .
3 . அனுபவமும் அறிவும் அன்பும் உள்ள ஒரு உபதேசகரின் தவறு , கவலையைத் தந்து கைசேதத்தையும் ஏற்படுத்தி விடும் .
4 . அறிந்து கொள்ளுங்கள் : நிச்சயமாக இந்த மெல்லிய உடற் தோலுக்கு நரகின் மீது பொறுமை இல்லை . எனவே , உங்களது ஆன்மாக்களுக்கு இரக்கம் காண்பியுங்கள் . நிச்சயமாக நீங்கள் உலகின் சோதனைகளில் அதனை அனுபவப் படுத்தி உள்ளீர்கள் .
5 . ( மாலிக்கே ! ) ஸாலிஹான வீட்டை உடையவர்களாகவும் , இஸ்லாத்தில் முந்திக் கொள்பவர்களாகவும் உள்ளவர்களில் , அனுபவமும் நாணமும் கொண்டவர்களைப் பற்றிப் பிடித்துக் கொள் . நிச்சயமாக அவர்கள் சங்கையான ஒழுக்க சீலர்களாகவும் , சரியான இலட்சியம் கொண்டவர்களாகவும் , வீண் விரயம் செய்வதிலான பேராசை மிகக் குறைந்தவர்களாகவும் , விடயங்களை அவதானிப்பதில் ஆழமானவர்களாகவும் இருக்கின்றனர் .
6 . தனக்கு வழங்கப் பட்ட அனுபவத்தினாலும் புத்தியினாலும் பயன் பெறாதவனே மூதேவி ஆவான் .
7 . அனுபவங்களைப் பாதுகாப்பது அல்லாஹ்வின் கிருபையில் உள்ளதாகும் .
8 . அகபவங்களின் மூலம் உபதேசம் பெறுபவனே புத்தி உள்ளவன் .
9 . அனுபங்களைப் பாதுககாத்து வைப்பதே புத்தி ஆகும் .
10 . அனுபவங்கள் இல்லை எனின் பாதைகள் குருடாகி விடும் .
11 . அனுபவங்களில் முன்னேற்றகரமான அறிவு இருக்கிறது .
12 . புத்தி என்பது அனுபவங்களினால் வளர்க்கப் படுகின்ற சொத்தாகும் .
13 . அனுபவசாலிகளுடன் அமர்ந்திருப்பாயாக : நிச்சயமாக அது உயர்ந்த ஸ்தானத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தும் . மிகச் சிறந்த சலுகைகளையும் அவர்களிடமிருந்து பெற்றுத் தரும் .
14 . அனுபவம் , குறைவடையாதது . புத்தியுள்ளவன் , அதில் அதிகப் படுத்திக் கொள்வான் .
15 . அனுபவம் என்பது , தேடிப் பெறும் புத்தியாகும் .
16 . அனுபவம் உள்ளவன் வைத்தியரை விடவும் ஞானம் உள்ளவன் .
17 . அனுபவம் என்பது , அவதானிப்பைப் பெற்றுத் தரும் .
18 . அனுபவம் என்பது , பயனுள்ள அறிவாகும் .
19 . உறுதி அனுபவத்தின் பாதுகாப்பாகும் .
20 . நாட்கள் அனுபவங்களைத் தருகின்றன .
21 . அனபவங்களினால் விளக்கம் பெற்று , மாற்றீடுகளை அறிந்து கொண்டவரே உறுதியான மனிதர் ஆகும் .
22 . அனுபவங்களைப் பாதுகாத்துக் கொள்வது , தலையாய புத்தி ஆகும் .
23 . அனுபவத்தின் பயன்பாடு , சிறந்த தெரிவுத் திறன் ஆகும் .
24 . ஒரு மனிதனின் பார்வை , அவனது அனுபத்தின் அளவை பொறுத்தது .
25 . அனுபவத்தின் பால் தேவை அற்றிருப்பவன் தண்டனைகளை விட்டும் பார்வை அற்றவனாகி விடுவான் .
26 . அனுபவம் பெறுபவன் உறுதி அதிகம் உள்ளவன் ஆவான் .
27 . அனுபவத்தின் மூலம் நீதி செலுத்துபவர் , தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வார் .
28 . அனுபவம் அதிகரித்தால் தவறுகள் குறைவடையும் .
29 . ஒழுக்கம் கற்பிப்பதற்கு அனுபவம் போதுமானது .
30 . ஒவ்வொரு அனுபவத்திலும் உபதேசம் இருக்கிறது .
31 . அறிவுடையவர்களுக்கு அவர்கள் பெற்ற அனுபவம் போதுமான உபதேசம் ஆகும் .
35 ) முன்யோசனை
1 . முன்யோசனையை போன்ற புத்தி இல்லை .
2 . செயலுக்கு முன் சிந்திப்பது , கைசேதத்திலிருந்து உன்னைப் பாதுகாக்கும் .
3 . போதிய செலவுடனான சிறந்த முன்யோசனை , வீண் விரயத்துடனான அதிக செலவை விட உனக்குப் போதுமானது .
4 . முன்யோசனை இல்லாதவனுக்கு செல்வம் இல்லை .
5 . முன்யோசனையுடன் ( செல்வம் ) கொஞ்சத்தைக் கொண்டிருப்பது , வீண்விரயத்துடன் அதிகம் கொண்டிருப்பதை விட நிலையானது .
6 . செயலுக்கு முன் சிந்திப்பது , தவறிலிருந்து அபயமளிக்கும் .
7 . முன்யோசனை , செல்வத்தின் அரைவாசியாகும் .
8 . புத்தியின் உயர்வை சிறப்பாக அறிவிப்பது , அழகிய முன்யோசனை ஆகும் .
9 . வாழ்க்கையின் ஆபத்து தவறான முன்யோசனை ஆகும் .
10 . தவறான முன்யோசனை அழிவுக்குக் காரணமாகும் .
11. தவறான முன்யோசனை வறுமையின் திறவு கோலாகும் .
12 . அழகிய முன்யோசனை , கொஞ்சமாக உள்ள செல்வத்தை அதிகரிக்கும் . தவறான முன்யோசனை , அதிகமான செல்வத்தையும் அழித்து விடும் .
13 . வாழ்க்கையின் சீராக்கம் முன்யோசனை ஆகும் .
14 . முன்யோசனை தவறாகி விட்டால் , அம்முன்யோசனையிலேயே அவரது அழிவு இருக்கும் .
15 . முன்யோசனை தவறாகி விட்டால் அவரது அழிவு துரிதமாகி விடும் .
16 . அழகிய முன்யோசனையுடன் வறுமை இராது .
36 ) தக்வா
1 . இறையச்சம் நல்லொழுக்கத்தின் தலைமை ஆகும் .
2 . இறையச்சத்தைப் பொன்ற கொடை இல்லை .
3 . இறையச்சத்துடனான அமல் குறைவடையாது . ஏற்றுக் கொள்ளப் படக்கூடியது எவ்வாறு குறைவடையும் ?
4 . இறையச்சத்தை விட சிறந்த கண்ணியம் இல்லை .
5 . அறிந்து கொள்ளுங்கள் : உள்ளத்தின் இறையச்சம் உடலின் ஆரோக்கியம் ஆகும் .
6 . சிஃப்ஃபீன் யுத்தத்திலிருந்து வந்த போது இமாம் அலி ( அலை ) அவர்கள் கூபாவின் புற நகர்ப் பகுதிகளில் இருந்த கப்றுகளுக்குச் சென்றார்கள் . கப்றுகளைப் பார்த்துக் கூறினார்கள் ' கடினமான வீட்டையும் , எளி;மையான இடத்தையும் , இருளான மண்ணறையையும் கொண்டவர்களே ! நீங்கள் எங்களை முந்திவிட்டீர்கள் . நாங்கள் உங்களைத் தொடர்ந்து வந்து இணையக் கூடியவர்கள் ' பின் தமது தோழர்களிடம் திரும்பிக் கூறினார்கள் ' அறிந்து கொள்ளுங்கள் : அவர்களுக்கு பேசுவதற்கு அனுமதி அளிக்கப் பட்டால் , ஷநிச்சயமாக சிறந்த கட்டுச்சாதம் இறையச்சம்தான் |என்பதை உங்களுக்கு அறிவிப்பார்கள் '
7 . குறைவாகவேனும் , அல்லாஹ்வைப் பயந்து கொள் , மெலிதாகவேனும் , உனகும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு திரையை ஏற்படுத்திக் கொள் .
8 . ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வைப் பயந்து கொள் .
9 . அல்லாஹ்வின் அடியார்களே ! அறிந்து கொள்ளுங்கள் : நிச்சயமாக , இறையச்சமுள்ளவர்கள் , இம்மையின் அவசரத்தையும் மறுமையின் அமைதியையும் எடுத்துக் கொண்டார்கள் ; அவர்கள் , இவ்வுலகத்தாருடன் அவர்களது உலகத்தில் கூட்டிணைந்திருந்தார்கள் ; அவர்களுடன் அவர்களது மறுமையின் இவ்வுலகத்தார் கூட்டிணைந்திருக்கவில்லை . அவர்கள் இவ்வுலகில் மிகச் சிறப்பான அமைதியைப் பேணினார்கள் ; மிகச் சிறந்த உணவை உண்டார்கள் . குழப்பவாதிகள் பெற்றுக் கொண்டதையே அவர்களும் தமக்குரிய பங்காக எடுத்துக் கொண்டார்கள் . கர்வமுள்ள ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டதையே அவர்களும் எடுத்துக் கொண்டார்கள் . பின்னர் அவற்றை விட்டும் அதிகமான கட்டுச் சாதத்துடனும் இலாபமான வியாபாரத்துடனும் திரும்பி விட்டார்கள் . அவர்களது துன்யாவில் அதன் துறவறத்தின் சுவையை அடைந்தார்கள் . நாளை மறுமையில் தாம் அல்லாஹ்வின் அயலவர்கள் என்பதை உறுதி பூண்டார்கள் . அவர்களது பிரார்த்தனைகள் நிராகரிக்கப் படமாட்டாது . அவர்களது எந்தச் சுவையும் குறைக்கப் படமாட்டாது .
10 . அல்லாஹ்வின் அடியார்களே ! உங்களுக்கு இறையச்சத்தை நான் உபதேசிக்கிறேன் . நி;ச்சயமாக அது கடிவாளமும் தூணுமாகும் . அதன் அடிப்படைகளைக் கடைப் பிடியுங்கள் . அதன் யதார்த்தங்களில் ஒற்றுமைப் படுங்கள் . வாழ்க்கையின் நிம்மதியின் பால் சென்றடைவீர்கள் .
11 . தனக்கு முன்னாலுள்ள தண்டனைகள் மூலம் படிப்பினை பெறுபவரை அவரது இறையச்சம் சந்தேகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தடுத்து விடும் .
12 . அல்லாஹ்வின் அடியாளர்களே ! அறிந்து கொள்ளுங்ககள் : நிச்சயமாக இறையச்சம் என்பது , கண்ணியம் நிரம்பிய இல்லமாகும் . தீமை என்பது இழிவு நிரம்பிய இல்லமாகும் . அறிந்து கொள்ளுங்கள் : இறையச்சத்தின் மூலம் பாவங்களின் சுவடுகள் அழிக்கப் படுகின்றன .
13 . ( இறையச்சம் உள்ளவர்கள் ) தமது அமல்களில் குறைவு ஏற்படுவதை விரும்பமாட்டார்கள் . அதிகமாக உள்ளவற்றை மேலும் அதிகப் படுத்தவுமாட்டார்கள் . அவர்கள் தமது ஆன்மாவில் ஐயம் கொள்வார்கள் . தமது அமல்களில் ஆசை கொள்வார்கள் .
14 . உலகில் இறையச்சம் உள்ளவர்களே சிறப்பு உடையவர்கள் ஆவார்கள் . அவர்களது பேச்சு நல்லது . அவர்களது ஆடை எளிமையானது , அவர்களுடைய நடை பணிவுத் தன்மை உடையது .
15 . அல்லாஹ்வின் அடியார்கள் , அவனது இடங்களின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் . நிச்சயமாக நீங்கள் மிருகங்கள் , பறவைகள் பற்றியும் கேள்வி கணக்கு கேட்கப் படுவீர்கள் .
16 . இறையச்சத்தை விட கண்ணியமான கொடை வேறில்லை.
17 . பணமில்லாத செல்வ நிலை யாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ , அவர் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும் .
18 . இறையச்சம் அனைத்து நன்மைகளின் பாலும் இட்டுச் செல்லும் .
19 . இறையச்சம் என்ற மரத்தை நடுபவர் , நேர்வழி என்ற பழத்தைப் பறிப்பார் .
20 . ஈமானின் மூளை இறையச்சமும் பேணுதலும் ஆகும் . அவ்விரண்டும் உள்ளத்தின் செயல்கள் ஆகும் .
21 . இவ்வுலகத்தினதும் மறுஉலகத்தினதும் நலவுகள் இரண்டு அம்சங்களில் உள்ளன . அவை : செல்வம் , இறையச்சம் .
22 . உலகில் மனிதர்களின் தலைவர்கள் என்போர் தர்மசிந்தையாளர்கள் ஆவர் , மறுமையில் தலைவர்களாக இருப்போர் இறையச்சம் உள்ளோர்கள் ஆவர் .
23 . ' மனிதர்களில் அல்லாஹ்விடம் சிறப்புக்கு உரியவர் யார் ? ' எனக் கேட்கப் பட்டபோது , இமாம் அலி ( அலை ) அவர்கள் குறிப்பிட்டார்கள் : ' மனிதர்களில் அதிகம் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவர்கள் , இறையச்சத்தினால் அதிகம் அறிந்துள்ளவர்களும் உலகில் அதிகம் பற்றற்று வாழ்பவர்களும் ஆவார்கள் ' .
24 . அல்லாஹ்வைப் பயப்படுபவர்களை மனிதர்கள் விரும்புவார்கள் .
25 . இறையச்சம் , அதன் பால் தஞ்சம் அடைந்தவர்களுக்கு மிகப் பாதுகாப்பான கோட்டை ஆகும் .
26 . இறையச்சம் உள்ளோர்கள் - அவர்களது உள்ளங்கள் கவலை மிக்கவையாகும் . அவர்களது தீமைகள் தடுக்கப் பட்டவை ஆகும் .
27 . இறையச்சம் -அதன் வெளிப்புறம் , உலகின் சிறப்பாகும் . அதன் உற்புறம் , மறுமையின் சிறப்பாகும் .
28 . இறையச்சமுள்ளோர் - அவர்களது ஆன்மாக்கள் போதுமென்ற இயல்புள்ளவை . அவர்களது இச்சைகள் மரணித்தவை . அவர்களது முகங்கள் மலர்ச்சி மிக்கவை . அவர்களது உள்ளங்கள் கவலை மிக்கவை .
29 . அல்லாஹ்வை நீ பயந்து நடந்தால் , அவன் உன்னைப் பாதுகாப்பான் .
30 . இறையச்சம் உனது வாழ்க்கையில் உனக்கான பாதுகாப்பு , உனது மரணத்தின் பின் உனக்கான உயர் பதவி .
31 . இறையச்சம் என்ற ஆடையே உடைகளில் மிகச் சிறப்புக்கு உரியதாகும் .
32 . தீமைகளைப் பயப்படுபவர் , நன்மைகளைச் செய்பவர் போன்றவர் ஆவார் .
33 . இறையச்சம் உள்ளவனுக்கு மூன்று அடையாளங்கள் உண்டு : அமல்களில் இஹ்லாஸ் கொள்வது , பேராசைகளை சுருக்கிக் கொள்வது , நற் செயல்களை கொள்ளை இடுவது .
34 . இறையச்சத்தின் மூலமே அன்றி ஈமான் பயன் பெறாது .
35 . இறையச்சத்தை விடப் பாதுகாப்பான கோட்டை இல்லை .
36 . சுவனத்தின் அரசர்கள் , இஹ்லாஸுடன் இறையச்சம் உள்ளோராவர் .
37 . பாவச் செயலைப் பயப்படுபவர் , நற் செயலை செய்தவர் போன்றவர் ஆவார் .
37 ) பணிவுத்தன்மை
1 . இறையச்சம் சிறப்புகளின் ஏணியாகும் .
2 . எவரது உள்ளம் அல்லாஹ்வுக்காகப் பணிகின்றதோ , அவரது உடல் அல்லாஹ்வுக்கான வழிப்படுதலில் சடைவுறாது .
3 . பணிவுத்தன்மை அலங்காரமான பெருமை ஆகும் .
4 . பணிவுத்தன்மை ஈடேற்றத்தை ஈட்டித் தரும் .
5 . சிறப்புக்குரிய மனிதரின் அழகு , பணிவுத்தன்மை ஆகும் .
6 . மனிதர்களை , அவர்களது தேவைகளின் போது முக மலர்வுடனும் பணிவுத் தன்மையுடனும் சந்திப்பாயாக . ஒருவர் உனக்கு பதிலீடாகும் நிலை ஏற்பட்டால் , அடக்கு முறையின் இழிவைத் தவிர்ந்தவனாகவும் பணிவுத் தன்மையுடனும் அவர்களைச் சந்திப்பாயாக .
7 . பணிவுத்தன்மை , சிறப்பு நிலையின் அடிப்படைகளில் ஒன்றாகும் .
8 . ஒரு மனிதன் , தன் அந்தஸ்த்தில் பணிவுத் தன்மை கொள்வது , அவனது வீழ்ச்சியின் போது , அவனுக்கான வசைகளில் இருந்து அவனைப் பாதுகாக்கும் தடுப்பாகும் .
9 . பணிவுத் தன்மையின் பயன்பாடு , பரஸ்பர அன்புணர்வாகும் .
10 . கர்வமுள்ளவர்களிடம் பெருமையடிப்பது , உண்மையிலேயே பணிவுத் தன்மை ஆகும் .
11 . பணிவுத் தன்மை , பொறாமைக்காரன் அடைந்து கொள்ள முடியாத பெரும் அருட் கொடையாகும் .
12 . ஆட்சியாளர்களோடு எச்சரிக்கையோடு இரு , நண்பனுடன் பணிவுத் தன்மையோடு இரு .
13 . பணிவுத் தன்மை புத்தியின் தலைமை ஆகும் . பெருமை அடித்தல் மடமையின் தலைமை ஆகும் .
14 . உயர்நிலையுடன் பணிவுத் தன்மை கொள்வது , சக்தியிருந்தும் மன்னித்து விடுவது போன்றதாகும் .
15 . பணிவுத் தன்மை , சிறப்புகளுக்கான ஸக்காத் ஆகும் .
16 . பணிவுத் தன்மை , தாழ்ந்தவர்களையும் உயர்த்தி வைக்கும் .
17 . பணிவுத் தன்மை , அறிவின் பயன்பாடாகும் .
18 . படைப்புகளில் மிகச் சிறப்புக்கு உரியவை பணிவுத் தன்மை , இரக்கம் , பிறருடன் மென்மையாக நடந்து கொள்வது முதலானவை ஆகும் .
19 . தன்னைத் தாழ்த்திக் கொள்பவரே மனிதர்களில் பெரும் அந்தஸ்து உள்ளவர் .
20 . அல்லாஹ்வுக்காகப் பணிவுத் தன்மையோடு இருங்கள் , அவன் உங்களை உயர்த்தி வைப்பான் .
21 . நல்ல மனிதரின் பணிவுத் தன்மை அவருக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
22 . பணிவுத் தன்மையை கொண்டிருப்பது , பெரும் சிறப்பாகும் .
23 . பணிவுத் தன்மையைப் போன்ற சிறப்பான ஒன்றை , எவரும் தேடிப் பெற முடியாது .
24 . பணிவுத் தன்மை உடையோருக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகப் படுத்தாமல் விடுவதில்லை .
25 . உயர்நிலையில் இருந்தும் பணிவாக நடந்து , தடுக்கப்பட்ட நிலையிலும் தாழ்மையாக உள்ளவரே மனிதர்களில் சிறப்புக்கு உரியவர் .
26 . உங்களுக்கு அறிவு கற்பித்தவர்களுடனும் , நீங்கள் அறிவு கற்பிப்பவர்களுடனும் பணிவாக நடந்து கொள்ளுங்கள் . ஆதிக்க உணர்வு மிக்க அறிஞர்களாக ஆகிவிடாதீர்கள் . அவ்வாறு ஆகிவிட்டால் உங்களுடைய அறிவால் உங்களது மடமை நீங்கிவிடாது .
38 ) அலட்சியம்
1 . அலட்சிய நிலைக்கு வழிப்படுபவர் , கடமைகளை வீணாக்கியவர் ஆவார் . புறம் பேசுபவனுக்கு வழிப்படுபவர் நண்பனை வீணாக்கியவர் ஆவார் .
2 . அருட்கொடைகள் தடுக்கப் படுவதற்கு அலட்சியமும் ஒரு காரணமாகும் .
3 . அலட்சியம் , வீணாக்கக் கூடியது .
4 . அலட்சியம் மற்றும் இயலாமை என்பவற்றில் , அழிவு உறபத்தி செய்யப் படுகிறது .
5 . அலட்சியத்தனால் இழப்புகள் ஏற்படும் .
6 . தற்பெருமையையும் அலட்சியத்தையும் கைவிடுபவருக்கு வெறுப்பான நிகழ்வுகள் ஏற்படாது .
7 . அலட்சியத்தினால் சோம்பேறித் தனமான நிலைகள் உருவாகும் .
8 . அலட்சியத்துக்கு வழிப்படுபவரை , கைசேதங்கள் சூழ்ந்து கொள்ளும் .
39 ) தௌபா
1 . தௌபாவை விட அதிகம் வெற்றி பெறக்கூடிய பரிந்துரையாளர் வேறில்லை .
2 . உலகில் இரண்டு மனிதர்களுக்கே நன்மை உண்டு . ஒருவர் பாவம் செய்து தௌபாவின் மூலம் அதனைத் தடுத்துக் கொண்ட மனிதர் , நன்மையான விடயங்களின் பால் விரைந்து செல்லும் மனிதர் .
3 . தனக்கு உபதேசிக்குமாறு கேட்ட ஒரு மனிதருக்கு இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ' அமல் இன்றி மறுமையைத் தேடுவோனாகவோ , நீண்ட ஆசைகளோடு தௌபாச் செய்பவனாகவோ , ஆகிவிடாதே . அத்தகையவன் , இச்சை மேலீட்டால் பாவங்களை மேற் கொள்வான் . தௌபாவை மறந்து விடுவான் . '
4 . அல்லாஹ் ஒரு மனிதன் மீது நன்றியின் வாயிலைத் திறப்பவனாகவோ , அதிகரிப்பின் வாயிலை அடைப்பவனாகவோ இல்லை . அவன் தன் அடியான மீது தௌபாவின் வாயிலைத் திறப்பவனாகவோ , பிழைபொறுப்பின் வாயிலை அடைப்பவனாகவோ இல்லை .
5 . இரண்டு ரக்அத்துகள் தொழுது , அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேட்கும் வரை பாவங்கள் என்னை கவலைக்கு உள்ளாக்கி விடும் .
6 . மறுமைக்காக விரையுங்கள் , முடிவுகளை முந்திக் கொள்ளுங்கள் , நிச்சயமாக மனிதர்கள் , எதிர்பார்ப்பு தம்மில்pருந்து களையப் படுவதையும் முடிவு தம்மை அச்சுறுத்துவதையும் முறையிடுவார்கள் . அச்சமயத்தில் அவர்களுக்கான தௌபாவின் வாசல் அடைக்கப்பட்டிருக்கும் .
7 . பாவங்களில் நிலை பெற்றிருந்த எத்தனையோ மனிதர்கள் தமத ஆயுளின் இறுதியிலேயே தௌபாச் செய்கிறார்கள் .
8 . பாவங்களை இட்டு நீங்கள் நிராசையுற வேண்டாம் , தௌபாவின் வாசல் திறந்தே இருக்கிறது .
9 . பாவங்களினால் சோதிக்கப் பட்டு பின் தௌபா செய்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார் .
10 . நீ அல்லாஹ்வை சந்;தித்ததில் சிறப்புக்கு உரியவை , உள்ளத்தின் உபதேசமும் பாவங்களுக்கான தௌபாவும் ஆகும் .
11 . ' தன்னுடன் வெற்றி இருக்கும் போதே அழிந்து போகும் மனிதனைப் பார்த்து வியப்புறுகிறேன் ' என்று கூறிய இமாம் அலி ( அலை ) அவர்களிடம் , ' அந்த வெற்றி என்பது என்ன ? ' என வினவப்பட்டது . அதற்கவர்கள் கூறினார்கள் : ' தௌபாவும் இஸ்திஃக்பாரும் '
12 . தௌபா செய்யும் வரை மரணிக்காது இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம் . நாம் மரணிக்கும் வரை தௌபா செய்ய மாட்டோம் .
13 . தவறிழைத்தவனின் சிபாரிசு அதை ஏற்றுக் கொள்வதாகும் . அதற்கான தௌபா அதனை மன்னிக்கத் தேடுவதாகும் .
14 . ' ஏற்றுக் கொள்ளப்படும் தௌபா என்ன ? ' என்று வினவப்பட்ட போது , இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ' உள்ளத்தால் கைசேதப் படுவது , நாவினால் இஸ்திஃக்பார் தேடுவது , இனி பாவங்களின் பால் திரும்புவதில்லை என உறுதி கொள்வது '
15 . தௌபா செய்பவர்களின் பண்புகள் பற்றி இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் . ' பாவ விருட்சங்களைத் தறித்து , அகப்பார்வையை அங்கு நடுவார்கள் , கைசேதம் என்ற நீர் ஊற்றுவார்கள் , ஸலாமத் என்ற கனிவகைகளைப் பறிப்பார்கள் , கண்ணியமும் திருப்தியும் முடிவில் அவர்களுக்குக் கிடைக்கும் '
16 . பாவங்களை விட்டு விடுவது தௌபா செய்வதை விட இலகுவானதாகும் .
17 . தௌபா , இஸ்திஃக்பார் என்பவற்றில் இலகுவானவையும் , பாவங்களையும் அவற்றைத் தொடர்பவைகளையும் அழித்து விடும் .
18 . தௌபா பாவங்களிற்கு பரிகாரமாகும் .
19 . தௌபாவின் பயன்பாடு , ஆன்மாவின் முன்னேற்றத்தை அடைந்து கொள்வதாகும் .
20 . அழகிய தௌபா , குற்றச் செயல்களை அழித்து விடும் .
21 . தௌபா செய்பவன் , பாவத்திலிருந்து அகன்றவன் ஆவான் .
22 . தௌபா வழங்கப்பட்டவர் , அது ஒப்புக் கொள்ளப் படுவதிலிருந்து தடுக்கப் படமாட்டார் .
23 . தனது தௌபாவை அலட்சியம் செய்பவனுக்கு மார்க்கம் இல்லை .
24 . மரணம் வருமுன் பாவங்களுக்காக தௌபா செய்து கொள்ளவும் .
25 . தௌபா , உள்ளங்களைத் தூய்மைப் படுத்தும் . பாவங்களைக் கழுவி விடும் .
26 . தௌபா ரஹ்மத்தை இறங்கச் செய்யும் .
27 . தௌபா என்பது , உள்ளத்தின் கைசேதமம் , நாவின் இஸ்திஃக்பாரும் , தவறுகளைத் தவிர்ப்பதும் , மீண்டும் அவற்றைச் செய்வதில்லை என உறுதி பூணுவதுமாகும் .
40 ) தௌஹீத்
1 . மார்க்கத்தின் ஆரம்பம் அல்லாஹ்வை அறிந்து கொள்வது , அவனை அறிந்து கொள்வதன் பூரணத்துவம் அவனை உண்மைப் படுத்துவது , அவனை உண்மைப் படுத்துவதன் பூரணத்துவம் அவனை ஏகத்துவப் படுத்துவது , அவனை ஏகத்துவப் படுத்துவதன் பூரணத்துவம் அவனுக்கு இஹ்லாஸ் கொள்வது , அவனுக்காக இஹ்லாஸ் கொள்வதன் பூரணத்துவம் அவனை விட்டும் மனிதப் பண்புகளை இல்லாதொழிப்பது .
2 . வணக்கத்துக்கு உரியோன் அல்லாஹ்வைத் தவிர வெற யாருமில்லை எனவும் , அவன் தனித்தவன் இணையற்றவன் என்றும் சான்று பகர்கிறேன் , அவன் தனக்கு முன் யாருமற்ற ஆரம்பமானவன் , தனக்குப் பின் யாருமற்ற இறுதியானவன் , அவனது வர்ணனைகளில் சந்தேகம் கொள்ள முடியாது , அவனது அமைப்பியல் பற்றி உள்ளங்கள் கணிக்காது .
3 . நீண்ட முயற்சியும் , அடைந்து கொள்ள முடியாத பத்திக் கூர்மையும் கண்டு கொள்ள முடியாத அந்த அல்லாஹ் மிக்க பாக்கியம் உள்ளவன் . அவன் , அனைத்திற்கும் ஆரம்பமானவன் , அனைத்திலும் இறுதியானவன் .
4 . குர்ஸ் , அர்ஷ் , வானம் ,பூமி , ஜின் , மனித வர்க்கம் அனைத்திற்கும் முதலாய் உள்ள அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் . அவன் எண்ணங்களால் எட்டப்பட முடியாதவன் . யாசிப்பவர்களைத் தட்டி விடமாட்டான் . அவனது செல்வங்கள் குறைந்து விடாதவை . கண்களினால் பார்க்கமாட்டான் . அவனது இருப்பிடம் வரையறை அற்றது . அவனுக்குத் திருமண உறவுகள் இல்லை . அவன் , செல்களுக்குள் சிக்கமாட்hன் . அவன் , புலன்களால் உணரப்படாதவன் , மனிதர்களுக்கு ஒப்பில்லாதவன் .
5 . ( அல்லாஹ் ) அவன் ஒருவனே , பலரில்லை . அவன் நிலையானவன் , அவனுக்கு அழிவில்லை . அவன் உறுதியானவன் , வீழ்வதில்லை . புத்தி அவனை நினைக்கிறது , உணர்வுகளால் இல்லை . அவனைக் காண்பவர் சான்று பகர்வார் , நேரடியாக ( பார்ப்பது ) இல்லை .
6 . ( அல்லாஹ் ) அவனின் அமைப்பியலைக் கணித்தவர் அவனை ஏகத்துவப் படுத்தியவரல்ல . அவனுக்கு ஒப்புரைத்தவர் , அவனை அடைந்து கொண்டவர் அல்ல . அவனுக்கு நிகராக எதுவுமில்லை . அவன் பால் சுட்டுபவர் , அவனை ஐயம் கொள்பவர் அவனை விட்டும் தேவை அற்று இருக்கமாட்டார் .
7 . அறிந்து கொள் , என் மகனே ! உனது இறைவனுக்குக் கூட்டாளி இருந்திருந்தால் அக் கூட்டாளியின் தூதுவர்கள் உன்னிடத்தில் வந்திருப்பார்கள் . அவர்களது ஆட்சியினதும் , அதிகாரத்தினதும் சுவடுகளை நீ கண்டிருப்பாய் . அவர்களது செயல்களையும் பண்புகளையும் நீ அறிந்திருப்பாய் . ஆனால் அல்லாஹ் - தன்னைப் பற்றி அவன் விபரிப்பது போல் - அவன் ஒரே இறைவன் .
8 . தௌஹீத் என்பது , உருவம் கற்பிக்காது இருப்பதாகும் .
9 . தௌஹீத் , ஆன்மாவின் வாழ்க்கை ஆகும் .
10 . அல்லாஹ்வை அறிந்தவன் , அவனை ஏகத்துவப் படுத்துவான் .
11 . அல்லாஹ்வை ஏகத்துவப் படுத்தியவன் அவனுக்கு படைப்புகளை ஒப்பிடமாட்டான் .
41 ) தௌஃபீக்
1 . அனுபவங்களைப் பாதுகாத்துக் கொள்வது , அல்லாஹ்வின் கிருபைகளில் நின்றும் உள்ளதாகும் .
2 . கிருபையை போன்ற தலைமைத்துவம் இல்லை .
3 . கிருபை , சிறந்த தலைமை ஆகும் .
4 . தடுமாற்;ற நிலையில் உள்ளத்துறுதி கொள்வது , இறை கிருபையில் உள்ள ஒன்றாகும் .
5 . எவரும் தேவை அற்றிருக்க முடியாத ஒரு விடயம் , கிருபை ஆகும் .
6 . வானத்தில் இருந்து இறங்குபவற்றில் மிக்கத் தெளிவானது , கிருபை ஆகும் .
7 . கிருபை என்பது , ரஹ்மத் ஆகும் .
8 . கிருபையும் மோசடியும் ஆன்மாவுடன் மோதிக் கொள்கின்றன . வெற்றி பெறுவது , அவரிடத்தில் அமர்ந்த விடும் .
9 . கிருபை , வெற்றியின் தலைமை ஆகும் .
10 . கிருபை , சீதேவித் தனத்தின் தலைமை ஆகும் .
11 . கிருபை அல்லாஹ்வின் பாதுகாப்பு ஆகும் .
12 . அழகிய கிருபை என்பது , சிறந்த உதவி புரிதல் ஆகும் . அழகிய செயல் என்பது , சிறந்த தோழமை ஆகும் .
13 . கிருபையினால் உதவி பெறாதவன் வணக்கத்தினால் எவ்வாறு மகிழ்ச்சியுறுவான் ?
14 . கிருபை அதிகமானவன் அமலை அழகாக்கிக் கொள்வான் .
15 . கிருபை அதிகம் இல்லாதவன் சத்தியத்தின் பால் சாயமாட்டான் .
16 . கிருபை இல்லாமல் அறிவு பயன் தராது .
17 . கிருபையைப் போன்ற உதவி இ;ல்லை .
18 . இழிவானவற்றை நல்லதாக்க முயல்பவனும் , உபதேசங்களை அலட்சியப் படுத்துபவனும் கிருபை செய்யப் படமாட்டான் .
42 ) சந்தேகம்
1 . தன்னை சந்தேகத்துக்கு உரிய இடத்தில் வைத்துக் கொண்டவர் , தன்னைத் தவறாக நினைப்பவர்களைத் தூற்ற வேண்டாம் .
2 . உனது சகோதரனின் விடயங்களைச் சிறப்பாக வைத்திரு , அவனை விட உயர்வான நிலை உன்னை வந்தடையும் . உனது சகோதரனில் இருந்து வெளியான வார்த்தைகளை தீயதாகக் கருதாதே . அவற்றிலிருந்து நன்மைகளும் இருக்கக் கூடும் .
3 . தீய இடங்களுக்குள் நுழைபவன் சந்தேகிக்கப் படுவான் .
4 . பாவங்களுக்கு நெருக்கமாக இருப்பவன் சந்தேகிக்கப் படுவான் .
5 . உங்களது புத்தியைக் கண்காணித்துக் கொள்ளுங்கள் . அது , தவறுகள் நிகழ்வதை அஞ்சிக் கொள்வதாகும் .
6 . உலகில் உபதேசம் புரியும் பலர் உன்னிடத்தி;ல் சந்தேகத்திற்கு உரியோர் ஆவார் .
7 . தன்னைக் கண்காணித்துக் கொள்பவர் , ஷைத்தானின் ஏமாற்றுகளில் இருந்து பாதுகாக்கப் பெறுவார் .
8 . அல்லாஹ்வின் பங்கு வைப்பில் உறுதி கொண்டவர் உணவில் சந்தேகம் கொள்ளமாட்டார் .
9 . தன் அந்தரங்கத்தை உன்னிடத்தி;ல் பாதுகாத்துக் கொள்பவர் உன்னை சந்தேகத்திற்கு உள்ளாக்கி விடுவார் .
43 ) நம்பிக்கை ( உறுதி ) கொள்ளல்
1 . தன்னிடம் உள்ளதை விட அல்லாஹ்விடம் உள்ளதில் அதிக நம்பிக்கை கொள்ளும் வரை எந்த அடியானுடைய ஈமானும் உண்மை ஆகாது .
2 . இரண்டு விடயங்களை நம்பிக்கை கொள்வது அடியானுக்கு அவசியம் இல்லை . ஆரோக்கியம் , செல்வம் . அவன் நோயுற்றால் ஆரோக்கித்தைக் காணும் போதும் , அவன் தேவையுற்றால் செல்வத்தைக் காணும் போதும் .
3 . ஆலோசிப்பதை விட உறுதியான உதவி வேறில்லை .
4 . அல்லாஹ் அல்லாதவற்றில் நம்பிக்கை கொள்வது , கொஞ்சமாக இருப்பினும் இழிவானதாகும் .
5 . நம்பிக்கை கொள்ளாதவர் , நம்பிக்கை கொள்ளப் படமாட்டார் .
6 . தனது தீய புத்தியினால் எவரையும் நம்பாதவனும் , தனது தீய செயலினால் எவராலும் நம்பப் படாதவனுமே மனிதர்களில் மி;கக் கெட்டவன் ஆவான் .
7 . அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது , பலமான ஈடுபாடாகும் .
8 . திருப்தியின் அடிப்படை சிறப்பான முறையில் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதாகும் .
9 . தன்னை அதிகம் நம்புவது , ஷைத்தானுடைய சதி வலைகளில் மிக உறுதியானதாகும் .
10 . தனக்கென அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளவை எப்போதும் தவறிவிடமாட்டாது என்று உறுதியான நம்பிக்கை கொள்பவரின் உள்ளம் ஆறுதல் அடைந்து இருக்கும் .
11 . அல்லாஹ்வை நம்பிக்கை கொள்பவர் , தனது யகீனைப் பாதுகாத்துக் கொள்வார் .
12 . அல்லாஹ்வை உறுதி கொள்பவர் , அவனில் தவக்குல் வைப்பார் .
13 . அல்லாஹ்வை உறுதி கொள்பவர் , பிற விடயங்களில் தேவையற்றவர் ஆகி விடுவார் .
14 . அல்லாஹ்வின் பங்கு வைப்பில் உறுதி கொண்டவர் , உணவில் சந்;தேகம் கொள்ளமாட்டார் .
15 . தன்னில் உறுதி கொள்பவர் தனக்குத் தானே துரோகம் இழைத்தவர் ஆவார் .
16 . உனது நன்னடத்தைகளில் நம்பிக்கை கொண்டவர் உனத அதிகாரியிடம் பரிந்துரை செய்வார் .
17 . உனது உடன் படிக்கையாளர்களை நீ ஏமாற்றினால் , உன்னில் யார் நம்பிக்கை வைப்பார் ?
18 . தன்னைத் திருப்தி கொண்டு , வழிகேடுகளில் நம்பி;க்கை கொள்பவன் அழிந்து விடுவான் .
19 . உனது இரகசியங்களைப் பரப்புபவனை நீ நம்பிக்கை கொள்ளாதே !
20 . மார்க்கம் இல்லாதவனின் உடன் படிக்கையை நம்பி விடாதே !
21 . உனது அறிவிலியான நண்பனை விட , அறிஞனான பகைவனிடம் நம்பிக்கை வை .
22 . தனது ஆன்மாவுக்கு அழகாகத் தெரிபவற்றை எல்லாம் நம்பிக்கை கொள்வது , ஒரு மனிதன் ஏமாற்றப் படுவதற்குப் போதுமானதாகும் .
23 . தீனுடையவும் துன்யாவுடையவும் விடயங்களில் நம்பிக்கை கொள்ளப் படுவது , ஒரு மனிதன் ஈடேற்றம் பெறுவதற்குப் போதுமானதாகும் .
24 . உன்னில் அதிக நம்பிக்கை வைப்பதை உனக்கு எச்சரிக்கிறேன் . அது , மிகப் பெரிய ஷைத்தானின் வழி கேடாகும் .
25 . ஈமானுடைய அம்சங்களில் மிகவும் உறுதியானது , அல்லாஹ்வுக்காக அன்பு வைப்பதும் அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வதும் ஆகும் .
26 . தனது தீய செயலினால் எவரையும் நம்பாதிருப்பவனே மனிதர்களில் மிகவும் கெட்டவன் .
44 ) புகழ்
1 . அல்லாஹ்வைப் புகழ்கின்ற ஒவ்வொருவருக்கும் , அவர்களுடைய புகழின் அடிப்படையில் நன்மையான கொடையும் கூலியும் இருக்கிறது . ரஹ்மத்தி;ன் சேமிப்பாகவும் பிழை பொறுப்பின் களஞ்சியமாகவும் உன்னை நான் பார்க்கிறேன் .
2 . நான் , அதிக புகழையும் அதைக் கேட்பதையும் விரும்புபவன் என்று உங்களது எண்ணத்தில் கணிக்கப் படுவதை வெறுக்கிறேன் . நான் அவ்வாறில்லை . எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே .
3 . இழிவானவற்றைப் புகழ்வது , தீயவற்றைத் துதிப்பது , அறிவிலிகளின் பேச்சு ஆகியவற்றைத் தவிர்ந்த விடயங்களில் , பொருத்தம் அல்லாத மனிதர்களுக்கு , கடமையில்லாத நேரங்களில் நன்மை செய்வதில் நற் பாக்கியம் இல்லை .
4 . தகுதியானவர்களாயினும் அதிகமாக புகழ்வது வெளிப் பகட்டாகும் . தகுதியானவர்களை குறைவாகப் புகழ்வது இயலாமையும் பொறாமையும் ஆகும் .
5 . ஒரு மனிதன் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது – அது உண்மையாக இருப்பினும் - இழிவானதாகும் .
6 . தகுதியில்லாத ஒருவனைப் புகழ்வதை இட்டு உன்னை எச்சரிக்கிறேன் ., அவ்வாறு செய்வது அவனது பண்பை உறுதிப் படுத்தும் . உன்னைப் பொய்யாக்கி விடும் .
7 . நீ புகழ்ந்தால் சுருக்கமாக்கிக் கொள் .
8 . தீயவர்களைப் புகழ்வது , மிகப் பெரும் பாவமாகும் .
9 . அளவுகடந்த புகழும் புகழ்ச்சியும் ஷைத்தானின் சதி வலைகளில் பலமானவை ஆகும் .
10 . நல்ல புகழ் என்பது , நல்லடியார்களின் நாவுகளினால் வெளிப்படுவதாகும் .
11 . கெட்ட புகழ் என்பது , தீயவர்களின் நாவுகளினால் வெளிப்படுவதாகும் .
12 . அதிக புகழ் வெளிப் பகட்டாகும் . அது , அகம் பாவத்தை ஏற்படுத்தும் . கண்ணியத்தைத் தூரப் படுத்தும் .
13 . உன்னைப் புகழ்ந்தவன் உன்னை அச்சுறுத்துவபன் ஆவான் .
14 . உன்னில் இல்லாதவற்றைக் கொண்டு ஒருவன் உன்னைப் புகழ்ந்தால் - நீ பத்தி உள்ளவனாயின் அது உனக்கு இழிவானதாகும் .
15 . தன்னில் இல்லாத ஒன்றைக் கொண்டு புகழப் படுபவன் , அதனால் வசப் படுத்தப் படுவான் .
16 . தன்னைத்தானே புகழ்பவன் தன்னை அறுத்துக் கொண்டவன் ஆவான் .
45 ) ஃதவாப்
1 . அல்லாஹ் தனக்கு வழிப் படுவதற்கு நன்மைகளையும் தனக்கு மாறிழைப்பதற்கு தண்டனையையும் வைத்துள்ளான் . இது , தனது தண்டனையிலிருந்து தன் அடியார்களைப் பாதுகாப்பதற்கும் , சுவனத்தில் அவர்களை நுழைவிப்பதற்குமே ஆகும் .
2 . சுவர்க்கம் போதுமான நன்மையும் சிறப்பும் ஆகும் . நரகம் போதுமான தண்டனையும் வேதனையும் ஆகும் .
3 . செல்வம் வழங்கப் பட்டவர் , அதன் மூலம் உறவினர்களை சேர்ந்து வாழட்டும் . விருந்துகளை அழகாக்கிக் கொள்ளட்டும் . நன்மையை எதிர்பார்த்தவராக , சட்டங்கள் கடமைகள் மீது தனது ஆன்மாவை பொறுமை ஆக்கி;க் கொள்ளட்டும் .
4 . தனது இறைவனுக்கான கடமைகள் , தனது ரஸுலுக்கான கடமைகள் , ரஸுலின் குடும்பத்திற்கான கடமைகள் ஆகியவற்றை நன்கு அறிந்தவராக மரணிப்பவர் தனது விரிப்பிலேயே மரணித்தாலும் , அவர் ஷஹீதாவார் . அவரது கூலி அல்லாஹ்விடத்தில் உள்ளது . அமல் செய்ய நாடியவற்றுக்கான நன்மைகளையும் அவர் அடைந்து கொள்வார் . அவரது நிய்யத் ( எண்ணம் ) உருவிய வாளின் ஸ்தானத்தில் நிற்கும் .
5 . உலகில் இறையச்சம் உள்ளவர்களே சிறப்புடையவர்கள் ஆவார்கள் . அவர்களது பேச்சு நல்லதாகும் . அவர்களத ஆடை எளிமையானது ஆகும். ஆவர்களது நடை பணிவுத் தன்மையானது ஆகும் . அல்லாஹ் அவர்களுக்கு எழுதியுள்;ள இறுதி முடிவு இல்லை எனின் அவர்களுடைய உயிர்கள் அவர்களது உடலில் இமைப் பொழுதேனும் தரித்திருக்காது . ( இது ) அவர்களுக்கு நன்மைகளின் பால் உள்ள ஈடபாட்டினாலும் தண்டனையிலுள்ள அச்சத்தினாலுமாகும் .
6 . ஸாலிஹான அமலைப் போன்ற வியாபாரம் இல்லை . நன்மையைப் போன்ற இலாபம் இல்லை .
7 . நல்லவனின் நன்மையினால் தீயவனைத் தடத்து நிறுத்து .
8 . கூலி என்பது , நாவின் பேச்சிலும் , கைகளினதும் கால்களினதும் செயலிலும் இருக்கிறது .
9 . தண்டனையைப் பயந்து அதிலிருந்து பாதுகாப்புப் பெறாதிருப்பவனதும் , நன்மையை எதிர்பார்த்து அதற்காக செயல் புரியாதிருப்பவனதும் நிலை ஆச்சரியமானது .
10 . அல்லாஹ்விடத்தில் நன்மை என்பது , அனுபவத்தின் அளவைப் பொறுத்ததாகும் .
11 . நன்மையை தேடிப் பெறுவது , மிகச் சிறந்த இலாபம் ஆகும் . அல்லாஹ்வைப் பொருந்திக் கொள்வது தலை சிறந்த வெற்றி ஆகும் .
12 . நன்மையைப் போன்ற பொக்கிஷம் வேறில்லை .
46 ) திடுக்கம்
1 . நீ பொறுமை செய்தால் , முன்னேற்பாடு நடைபெற்று உனக்கு கூலி வழங்கப்படும் . நீ பொறுமை இழந்தாலும் , முன்னேற்பாடு நடைபெறும் . நீ கூலி இன்றி கை விடப்பட்டு விடுவாய் .
2 . பொறுமையினால் வெற்றி பெறாதவர் , திடுக்கத்தினால் அழிந்து விடுவார் .
3 . பொறுமை உலகங்களை மிகைக்கும் , திடுக்கம் காலத்தின் முகவரியில் உள்ளதாகும் .
4 . திடுக்கம் என்பது , பொறுமையை விடக் களைப்பானது .
5 . சோதனைகளின் போது பொறுமை இழப்பது , பெரும் சிரமமாக அமையும் .
6 . உனது கையிலிருந்து தவறி விட்டவற்றிற்காக நீ பொறுமை இழந்தால் , உனக்கு இது வரை கிடைக்காதிருப்பதற்காகவும் பொறுமை இழந்திரு .
7 . பொறுமையோடு இருங்கள் , அதன் மூலம் உறுதியானவன் தனக்குரியதைப் பெற்றுக் கொள்வான் .பொறுமை இழந்தவனும் அதன் பக்கமே தஞ்சமடைவான் .
8 . சோதனை என்பது ஒன்றே . நீ பொறுமை இழந்தால் அது இரண்டாகி விடும் .
9 . திடுக்கத்தைப் பொறுமையினால் அடக்குங்கள் . திடுக்கமானது கூலியை அழித்து , பொருளாதார அழிவையும் ஏற்படுத்தி விடும் .
10 . சோதனைகளின் போது பொறுமை இழப்பது , அச்சோதனைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் . அச்சமயத்தில் பொறுமை பேணுவது , அச் சோதனைகளை நீக்கிவிடும் .
11 . பொறுமை இழப்பது , முன்னளப்பைத் தடுக்காது , ஆயினும் கூலிகளை அழித்து விடும் .
12 . சோதனைகளின் போது பொறுமை இழப்பது , மிகக் கடுமையான சோதனை ஆகும் .
13 . திடுக்கம் அதிகரித்தவன் பொறுமையின் சிறப்பை இழந்தவன் ஆவான் .
14 . பொறுமை இழப்புடன் நன்மை இல்லை .
15 . பொறுமை இழப்பவன் தன்னைத்தானே வேதனைப் படுத்துகிறான் . அல்லாஹ்வின் ஏவலை வீணாக்குகிறான் . தன் நன்மைகளை விற்று விடுகிறான் .
16 . பொறுமையும் திடுக்கமும் ஒன்று சேர்ந்திருக்காது .
17 . நீங்கள் விரும்பாதவை கொஞ்சமாக நடக்கும் போது பொறுமை இழக்காதீர்கள் . அவ்வாறாயின் , நீங்கள் வெறுக்கும் அவற்றை அதிகமாக நிகழச் செய்து விடுவீர்கள் .
47 ) ஜமாஅத்
1 . பெருங் கூட்டத்தினருடன் சேர்ந்திருங்கள் . நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி என்பது , கூட்டாக இணைந்து இருப்பவர்களுடனாகும் . பிரிந்து நிற்பதை உங்களுக்கு எச்சரிக்கிறேன் . ஆட்டு மந்தைகளில் தனித்து நிற்கும் ஒன்று ஓநாய்க்கு இரையாவது போல் , மனிதர்களில் தனித்து நிற்பவர்கள் ஷைத்தானுக்கு இரையாகி விடுவார்கள் .
2 . பிரச்சினைகளைத் தோற்றுவிப்போராக , பித்அத்துக்களை உருவாக்குவோராக இருக்காதீர்கள் . ஒன்றிணைந்த கூட்டத்தின் கயிறு கட்டப் பட்டுள்ள விடயத்தைக் கடைப் பிடியுங்கள் .
3 . ஷைத்தான் அவனது பாதைகளை உங்களுக்கு இலகு படுத்திக் காட்டுகிறான் . உங்களது மார்க்கத்தை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து , உங்களை , கூட்டத்தை விட்டும் பிரித்து விடவே அவன் விரும்புகிறான் .
4 . உங்களது உள்ளங்கள் இணைந்திருப்பது குறைவாக இருக்கும் நிலையில் , உங்களது எண்ணிக்கை அதிகரித்திருப்பதில் எவ்விதத் தேவையும் இல்லை .
5 . இணைந்த கூட்டம் ஒன்றின் கலக்கம் , பிரிந்த தனி மனிதரின் தெளிவை விட சிறந்ததாகும் .
6 . பிரிந்திருப்பது என்பது , அதிகமாக இருந்தாலும் பிழையானது ஆகும் . கூட்டாக இருப்பது என்பது , குறைவாக இருந்தாலும் சரியானது ஆகும் .
7 . இணைந்த கூட்டம் - அல்லாஹ் மீது ஆணையாக – அவர்கள் குறைவாக இருந்தாலும் , உண்மையுடையவர்களை ஒன்றிணைத்தவர்களாக இருப்பர் . பிரிந்துள்ளவர்கள் , அவர்கள் அதிகமாக இருந்தாலும் , பிழையானவர்களை ஒன்றிணைத்தவர்களாக இருப்பர் .
8 . இணைந்த கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளுங்கள் . தனித்துள்ளவர்களை தவிர்ந்து கொள்ளுங்கள் .
48 ) ஜன்னத்
1 . பின்னால் நரகைப் பெற்றுத் தரும் நன்மை , அது நன்மையே அல்ல . பின்னால் சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும் தீமை , அது தீமையே அல்ல . சுவர்க்கத்தைத் தவிர்ந்த அனைத்து அருட் கொடைகளும் இழிவானவை ஆகும் . நரகத்தைத் தவிர்நத அனைத்து சோதனைகளும் நிவாரணம் பெறக் கூடியவை ஆகும் .
2 . சுவர்க்கத்தின் பால் ஆசை உள்ளவர்கள் தீய இச்சைகளைத் தவிர்ந்து கொள்வர் .
3 . அல்லாஹ் தனக்கு வழிப் படுவதற்கு நன்மையையும் , தனக்கு மாறிழைப்பதற்கு தண்டனையையும் வைத்துள்ளான் . இது , தனது தண்டனையிலிருந்து தன் அடியார்களைப் பாதுகாப்பதற்கும் சுவனத்தி;ல அவர்களை நுழைவிப்பதற்குமாகும் .
4 . அறிந்து கொள்ளுங்கள் : சத்தியம் எவரை ஆட்கொள்கின்றதோ , அவர் சுவர்க்கம் செல்வார் . அசத்தியம் எவரை ஆட்கொள்கின்றதோ , அவர் நரகம் செல்வார் .
5 . சுவர்க்கம் உறவினர்களின் பாதங்களின் கீழ் உள்ளது .
6 . அல்லாஹ் , எண்ணத்தில் உண்மை , ஸாலிஹான அமல் என்பவற்றின் மூலம் தான் விரும்பிய அடியார்களை சுவர்க்கத்தில் நுழைவிக்கிறான் .
7 . உங்களுக்கும் , சுவர்க்கம் அல்லது நரகத்துக்கும் இடையில் , மரணம் இறங்குவதைத் தவிர வேறு இடை வெளி கிடையாது .
8 . அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நிலையில் உலகை விட்டுப் பிரிபவர் , சுவர்க்கம் நுழைவார் .
9 . உங்களது ஆன்மாக்களுக்கு சுவர்க்கமே பெறுமதி ஆகும் . அப் பெறுமதியைக் கொண்டே சுவர்க்கத்தை வாங்குங்கள் .
10 . ஒரு கூட்டம் ஷஅத்ன்| எனும் சுவர்;க்கங்களுக்கு முந்திச் சென்று விட்டது . அவர்கள் அதிகம் தொழுபவர்களாகவோ , அதிகம் நோன்பிருப்பவர்களாகவோ , அதிகம் ஹஜ்ஜு , உம்ரா செய்பவர்களாகவோ இருக்கவில்லை . மாறாக , அவர்கள் அல்லாஹ்வின் ஏவல்களை உணர்ந்திருந்தார்கள் . அவர்களது வழிப்படுதல்கள் அழகாக இருந்தன . அவர்களது பேணுதல் சரியாக இருந்தது . அவர்களது யகீன் பரிபூரணமாக இருந்தது . சீமான் தனத்தின் மூலமும் உயரந்தஸ்தின் மூலமும் அவர்கள் பிறரை விட மேல் நிலையை எட்டினார்கள் .
11 . நான்கு விடயங்கள் சுவனத்தின் பால் அழைக்கின்றன . சோதனைகளை மறைப்பது , தர்மங்களை இரகசியமாக செய்வது , பெற்றோருக்கு நன்மை புரிவது , ஷலாயிலாஹ இல்லல்லாஹ்|வை அதிகப் படுத்தி;க் கொள்வது .
12 . சுவர்க்கம் , வழிப்படுபவர்களின் கூலி ஆகும் .
13 . சுவர்க்கம் , பாதுகாப்பான இல்லமாகும் .
14 . சுவர்க்கம் , வெற்றியாளர்களின் தங்கும் இடமாகும் .
15 . சுவர்க்கம் , மிகச் சிறந்த முடிவாகும் .
16 . சுவர்க்கம் , முந்திக் கொண்டவர்களின் இலக்காகும் .
17 . சுவர்க்கம் , நல்லவர்களின் இல்லமாகும் .
18 . அடிபணிதலின் இலக்கு , மறுமையின் சுவர்க்க இல்லத்தை வெற்றி கொள்வது .
19 . அறிந்து கொள்ளுங்கள் : சுவர்க்கத்தைப் போன்ற ஒன்றை நான் கண்டதில்லை , அதை வேண்டுபவன் வெற்றி பெறுவான் . அவ்வாறே நரகத்தைப் போன்ற ஒன்றையும் நான் கண்டதில்லை , அதிலிருந்து விரண்டு ஓடுபவனும் வெற்றி பெறுவான் .
20 . செயல்களை அழகாக்கி . எண்ணத்தை தூய்மை ஆக்கிக் கொண்டவர்களைத் தவிர மற்றெவரும் சுவர்க்கத்தை வெற்றி கொள்ளமாட்டார்கள் .
21 . வெறும் எதிர்பார்ப்புகள் மூலம் சுவர்க்கம் கிட்டாது .
22 . சுவர்க்கத்தின் கூட்டத்தினர் எப்போதும் அருட் கொடை உடையவர்கள் ஆவார்கள் .
49 ) அயலவர்
1 . எனது மகனே ! பயணத்திற்கு முன் தோழனைப் பற்றி விசாரித்துக் கொள் . வீட்டைப் பெறுமுன் அயலவர்களைப் பற்றி விசாரித்துக் கொள் .
2 . உங்களது அயலவர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் . அவர்கள் , உங்களது நபியினால் உபதேசிக்கப் பட்டவர்கள் . அயலவர்கள் , வாரிசுரிமை பெற்று விடுவார்களோ என நாம் எண்ணுமளவிற்கு அவர்களைப் பற்றி நபியவர்கள் எமக்கு உபதேசம் செய்து கொண்டே இருந்தார்கள் .
3 . அயலவர்களின் கடமைகளை நிறைவேற்றுவது , இழிவானவற்றைத் தவிர்ந்து கொள்வது ஆகிய புகழுக்குரிய விடயங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் .
4 . உனக்குப் பயனளிக்காத பொருட்களை உன்னிடத்தில் அனுப்பி வைக்கும் செல்வந்த அயலவன் கெட்டவன் ஆவான் .
5 . கெட்ட அயலவர்களிடம் இருந்து உங்களது மரணித்தவர்களின் புதை குழிகளைத் தூரப் படுத்தி வையுங்கள் . நல்ல அயலவன் இவ்வுலகில் பயனளிப்பது போலவே மறுமையிலும் பயனளிப்பான் .
6 . நெருங்கிய உறவினர்கள் , தூரமாக விலகிச் செல்லாமல் அடிக்கடி சந்திப்புகளை ஏற்படுத்தி;க் கொள்வது அவசியமாகும் .
7 . உனது அயலவன் உனக்கு அநீதி இழைத்தாலும் , அவனுக்கு நன்மை செய் . நீ நல்ல முஸ்லிம் ஆகிவிடுவாய் .
8 . நான்கு விடயங்கள் மூதேவித் தனமாகும் : கெட்ட அயலவன் , கெட்ட பிள்ளை , கெட்ட மனைவி , நெருக்கடியான இல்லம் .
9 . கெட்ட அயலவன் அதிக பாதிப்புக்களை ஏற்படத்துவோனாகவும் கடுமையான சோதனையாகவும் இருப்பான் .
10 . தீங்கிழைக்கமாட்டான் என உங்களுக்கு நம்பிக்கை உள்ளவனை உங்களது அயலவனாக்கிக் கொள்ளுங்கள் . அவனது நன்மைகள் உங்களுக்கு சிரமம் தராது .
11 . தனது இரகசியங்களை அயலவனிடம் வெளியிடுபவன் தன் திரைகளைத் தானே கிழித்தவன் ஆவான் .
12 . இயல்பான அயலவர்களாய் இருப்பது , மனிதாபிமானம் ஆகும் .
13 . பழிப்புக்கு உரியவர்களின் அடையாளம் கெட்ட அயலவனாக இருப்பதாகும் .
14 . நல்ல அயலவனாய் இருப்பவர்களுக்கு அயலவர்கள் அதிகம் கிடைப்பார்கள் .
15 . மஸ்ஜிதின் எல்லை நாற்பது முழங்களாகும் . அயலவனின் எல்லை , நான்கு திசைகளுமாக நாற்பது வீடுகள் ஆகும் .
50 ) கொடை
1 . கொடை , இலட்சியங்களின் பாதுகாவலன் ஆகும் .
2 . பின்னுள்ள வாழ்க்கையில் நம்பிக்கை உள்ளவர் , அதிக கொடை கொடுப்பவராக இருப்பார் .
3 . நீதி , விடயங்களை அவற்றின் இடத்தி;ல் வைக்கும் . கொடை , அவற்றின் திசைகளிலிருந்து அவற்றை வெளிப்படுத்தும் .
4 . கொடையின் முடிவு கொடை கொடுக்கப் படுபவனை அடைந்து கொள்வதாகும் .
5 . தன்னைப் போன்றோர் கஞ்சத்தனம் கொள்ளும் விடயங்களை செலவு செய்பவனே கொடையாளி ஆவான் .
6 . தனது செல்வத்தினால் கொடை கொடுப்பவன் தன்னை அதற்கென அர்ப்பணித்தவன் ஆவான் . செல்வத்தை நேரடியாகக் கொடுக்காவிடின் பிற வழிகளிலாவது அவன் கொடுக்கவும் .
7 . கஷ்டத்தில் இருப்போருக்கு கொடை கொடுப்பது , கோபத்திலும் உண்மை பேசுவது , சக்தி இருந்தும் மன்னித்து விடுவது என்பன நற் செயல்களில் மிகச் சிறந்தவை ஆகும் .
8 . தர்மத்தில் சிறந்தது கொடை ஆகும் .
9 . ஒரு மனிதனின் கொடை , அவனது பகைவர்களிடத்திலும் அவன் மீதான அன்பை ஏற்படுத்தும் . அவனது கஞ்சத்தனம் , அவனது பிள்ளைகளிடத்திலும் அவன் மீதான கோபத்தை ஏற்படுத்தும் .
10 . கொடையின் மூலம் மனிதர்களுக்கு தலைமை வகிக்க முடியும் .
11 . கொடையில் சிறந்தது , கடமைகளை உரியவர்களுக்கு நிறைவேற்றுவதாகும் .
12 . கொடை கொடுப்பது , உலகில் புகழுக்கு உரியது . மறுமையில் சீதேவித் தனமானது .
13 . மனிதர்கள் இரு வகையினர் : எதிர்பார்ப்பின்றி கொடை கொடுப்பவர் , கொடுக்காது தடுத்து வைப்பவர் .
51 ) ஜிஹாத்
1 . ஈமானின் தூண்களில் ஜிஹாத் ஒன்றாகும் . அது நான்கு கிளைகளை உடையது : நன்மையை ஏவுதல் , தீமையைத் தடுத்தல் , எல்லா இடங்களிலும் உண்மை பேசுதல் , தீயவர்களை வெறுத்தல் . நன்மையை ஏவபவர் முஃமின்களின் முதுகுகளைப் பலப் படுத்துகிறார் , தீமையைத் தடுப்பவர் காபிர்களின் மூக்கை உடைக்கின்றார் , எல்லா இடங்களிலும் உண்மை பேசுபவர் தன் மீதுள்ள கடமையைப் பூர்த்தி செய்வார் , தீயவர்களை வெறுப்பவர் அல்லாஹ்வுக்காகவே பிறரைக் கோபிப்பார் , அல்லாஹ் அவருக்காகப் பிறரைக் கோபிப்பான் . மறுமையில் அவன் அவரைத் திருப்தி கொள்வான் .
2 . நீங்கள் வெற்றி கொள்ள வேண்டியதில் முதன்மை ஆனது , ஜிஹாத் ஆகும் . ஜிஹாத் என்பது , உங்களின் கைகளின் மூலமாக , பின் நாவுகளின் மூலமாக , பின் உள்ளத்தின் மூலமாக இடம் பெற வேண்டும் . தனது உள்ளத்தினாலேனும் நல்லவற்றை உணர்ந்து தீயவற்றை வெறுக்காது இருந்தால் , அவர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவராகவும் தாழ்ந்தவர் உயர்ந்தவராகவும் ஆக்கப் படுவார்கள் .
3 . ஹஜ்ஜு , பலவீனமானவர்களின் ஜிஹாத் ஆகும் . பெண்களின் ஜிஹாத் கணவனின் கடமைகளைப் பூர்த்தி செய்வதாகும்.
4 . அறிந்து கொள்ளுங்கள் : ஜிஹாத் என்பது , சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும் . அல்லாஹ் தனது விசேட நேசர்களுக்காக அதனைத் திறக்கின்றான் . அது தக்வாவின் ஆடை ஆகும் . பாதுகாப்பான அல்லாஹ்வின் கவசமாகும் . உறுதியான கேடயம் ஆகும் . அதை வெறுத்துத் தவிர்ப்பவருக்கு அல்லாஹ் இழிவு எனும் ஆடையை அணிவிக்கிறான் . சோதனைகளைச் சூழ வைக்கிறான் . சிறுமையும் இழிவும் அவர்களுக்குப் போர்த்தப் படுகின்றன . அவரது உள்ளத்தில் திடுக்கம் நிறைந்த நோய் புகுத்தப் படுகிறது . ஜிஹாதை வீணாக்கியதற்காக அவரிலிருந்து சத்தியம் பிடுங்கப் படுகிறது . பூகம்பம் அவரைப் பிடிக்கும் . சேவைகள் அவருக்குத் தடுக்கப் படும் .
5 . அல்லாஹ்வுடைய பாதையில் உங்களது செல்வங்கள் , உங்களது உயிர்கள் , உங்களது நாவுகள் மூலமாக ஜிஹாத் புரியும் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் .
6 . மனிதர்களில் அல்லாஹ்விடம் உதவி தேடும் வசீலாக்களில் மிகச் சிறந்தவை : அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொள்ளல் , அவனது பாதையில் ஜிஹாத் புரிதல் என்பவை ஆகும் . நிச்சயமாக இது இஸ்லாத்தின் தூய்மை ஆகும் .
7 . உங்களது பகைவர்களுடன் ஜிஹாத் செய்வது போல் உங்களது இச்சைகளுடனும் ஜிஹாத் செய்யுங்கள் .
8 . உங்களது துன்யாவில் மூன்று விடயங்கள் எனக்கு விருப்பம் மிக்கவை : விருந்தாளிகளைக் கண்ணியப் படுத்தல் , கோடை காலத்தில் நோன்பு இருத்தல் , அல்லாஹ்வுடைய பாதையில் வாளினால் போராடுதல் .
9 . அறிந்து கொள்ளுங்கள் : ஜிஹாத் என்பது , சுவனத்தின் பெறுமதி ஆகும் . தனது நப்ஸுடன் போரிடுபவர் அந்த சுவனத்தை அடைந்து கொள்வார் . அது – அதை அறிந்தவர்களுக்கு – மிகக் கௌரவமான அல்லாஹ்வின் நன்மை ஆகும் .
10 . அல்லாஹ்வுக்கு வழிப் படுவதிலும் , அவனுக்கு மாறு செய்யாதிருப்பதிலும் தனது நப்ஸுடன் ஜிஹாத் புரிபவர் ஷஹீதுடைய அந்தஸ்தில் இருப்பார் .
11 . இச்சைகளுக்கு எதிராக நப்ஸுடன் போராடுவதும் , உலக சுகங்களை விட்டும் நப்ஸைப் பாதுகாப்பதுமே மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும் .
12 . நப்ஸுடனான ஜிஹாத் சுவகத்திற்கான மஹர் ஆகும் .
13 . உனது நப்ஸுடன் போராடு . ஒரு நண்பன் மற்றொரு நண்பனிடம் கேள்வி கேட்பது போல் , நப்ஸுடன் கேள்வி கணக்குக் கேள் .
14 . தனது நப்ஸுடன் போராடுபவர் , இறை அச்சத்தைப் பூரணப் படுத்தியவர் ஆவார் .
15 . நப்ஸுடனான போராட்டம் , நல்லோரின் அடையாளம் ஆகும் .
16 . ஜிஹாத் புரிபவர்களுக்காக சுவனத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன .
17 . ஜிஹாத் என்பது , மார்க்கத்தின் தூணும் நல்லோரின் வழி முறையும் ஆகும்.
18 . வீரர்களின் ஸக்காத் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரிவது ஆகும் .
52 ) அறியாமை
1 . அறியாமையுடனான தொடர்பை நிலைப் படுத்திக் கொண்டால் , சத்தியத்தை விட்டுமான குருடு நிலைப் பட்டுவிடும் .
2 . வரம்பு மீறுவோனையும் , எதையும் செய்யாதிருப்பவனையும் தவிர்த்து , வேறு அறிவிலியை நீ காணமாட்டாய் .
3 . உங்களது அறிவை அறியாமை ஆகவும் , உங்களது உறுதியை சந்தேகமாகவும் , ஆக்கிக் கொள்ளாதீர்கள் . நீங்கள் அறிந்தால் , பூரணமாக அறியுங்கள் . நீங்கள் உறுதி கொண்டால் , அதை நம்பிக்கை கொள்ளுங்கள் .
4 . அறிவைப் போன்ற செல்வம் இல்லை . அறியாமையைப் போன்ற ஏழ்மை இல்லை .
5 . அறியாமையுடன் பேசுவதில் நன்மை இல்லாதிருப்பது போன்றே , அறிவுடன் மௌனமாய் இருப்பதிலும் நன்மை இல்லை .
6 . எத்தனையோ அறிஞர்களை அவர்களது அறியாமையே கொன்று விடுகிறது . அவர்களது அறிவு அவர்களுக்கு எவ்வித பயனும் அளிப்பதில்லை .
7 . மனிதர்கள் தாம் அறியாதவற்றுக்கு எப்போதும் எதிரியாகவே இருப்பார்கள் .
8 . அறிவுள்ளவர்கள் மீது கற்பிப்பதை அல்லாஹ் கடமை ஆக்கும் வரை , அறிவில்லாதவர்கள் மீது கற்றுக் கொள்வதை அல்லாஹ் கடமை ஆக்குவதில்லை .
9 . ' அறிவுள்ளவனைப் பற்றி எமக்குக் கூறுங்கள்' எனக் கேட்கப் பட்ட போது , இமாம் அலி ( அலை ) அவர்கள் ' அவன் ஒவ்வொரு விடயத்தையும் அதற்குரிய இடத்தில் வைப்பான்' உன்று கூறினார்கள் . ' அறிவிலியைப் பற்றி எமக்குக் கூறுங்கள்' எனக் கேட்கப் பட்ட போது , 'நீ செய்து விட்டாய்' என்று கூறினார்கள் .
10 . தனது அறிவிலிருந்தான ஓர் அறிஞனின் முதல் பதிலீடு , மனிதர்கள் அவனின் அறியாமை மீது உதவுவோராக இருப்பதாகும் .
11 . அறிவிலியைத் தவிர்;ந்து நடப்பது , அறிஞனுடன் சேர்ந்து நடப்பதற்குச் சமமானதாகும் .
12 . அருட் கொடைகளை நிராகரிப்பது , இழிவாகும் . அறிவிலியுடன் சேர்ந்து நடப்பது , துர்க்குரி ஆகும் .
13 . அறியாமையை விட வலி தரும் நோய் வேறில்லை .
14 . அறியாமை வழி கேடாகும் .
15 . அறிவிலியின் அருட் கொடை மாட்டுக் கொட்டகையில் உள்ள தோட்டத்தைப் போன்றதாகும் .
16 . மனிதன் தான் அறியாதவற்றுக்குப் பகைவன் ஆவான் .
17 . உலகில் உள்ளவற்றை நேரடியாகக் கண்டு கொண்டே அதன் பக்கம் விருப்புற்றுச் சாய்வது , அறியாமை ஆகும் .
18 . கல்வி கற்றுக் கொண்டிருக்கும் ஓர் அறிவிலி , அறிஞனுக்கு சமமாவான் . பிடிவாதம் உள்ள ஓர் அறிஞன் , மோசமான அறிவிலிக்குச் சமமாவான் .
19 . அறியாமையின் வழி நடப்பவன் நீதியான பாதையை விட்டுவிடுவான் .
20 . அறிவைப் போன்ற பயனுள்ளது வேறில்லை . அறியாமையைப் போன்ற பாதிப்பு உள்ளது வேறில்லை .
21 . அறிவிலியுடன் தோழமை கொள்பவன் தன் அறிவைக் குறைத்துக் கொள்வான் .
22 . அறிவிலியின் கோபம் அவனது சொல்லில் ஆகும் . அறிஞனின் கோபம் அவனது செயலில் ஆகும் .
23 . ஒரே கல்லால் இரு முறை அடி வாங்குபவன் மிகப் பெரும் அறிவிலி ஆவான் .
24 . அறிவிலிக்கு எதிராக ஆதாரம் பெறுவது இலகுவானதாகும் . ஆனால் , அதை நிரூபிப்பது கடினமானது ஆகும் .
25 . அறிவிலி ஆறு அம்சங்கள் மூலம் அறியப் படுவான் : தேவை அற்றவற்றுக்காக கோபித்தல் , பயனின்றிப் பேசுதல் , பொருத்தமற்ற இடத்தில் தர்மம் செய்தல் , தனது பகைவர்களில் தன் நண்பனை அறியாதிருத்தல் , இரகசியங்களை வெளிப் படுத்தல் , எல்லோரையும் நம்புதல் .
26 . அறிஞன் , மரணித்தாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பான் . அறிவிலி , உயிரோடு இருந்தாலும் இறந்து விட்டவனாவான் .
27 . அறியாமை கெட்ட முடிவாகும் .
28 . அறியாமை பாதங்களைச் சறுக வைக்கும் . கை சேதத்தை ஏற்படுத்தும் .
29 . அறிவிலிக்கு வழிப்படுவது , அறியாமையின் அடையாளம் ஆகும் .
30 . அறிவிலியின் சரியான செய்கை அறிஞனின் தடுமாற்றததைப் போன்றதாகும் .
31 . தோழர்களில் கெட்டவன் அறிவிலி ஆவான் .
32 . சோதனைகளில் கெட்டது , அறியாமை ஆகும் .
33 . அறியாமையின் அதிகரிப்பு அவமானத்தை ஏற்படுத்தும் .
34 . அறிவிலியின் தவறுகள் மன்னிக்கப்படும் .
35 . அறிவிலியின் பார்வை அவமானத்தைத் தரும் .
36 . தகாதவற்றில் ஆசை கொள்வது , அறியாமை ஆகும் .
37 . சில அறியாமை , அறிவை விடப் பயனுள்ளதாகும் .
38 . சில அறிவிலிகள் தமது அறியாமையினால் வெற்றி பெற்று விடுவார்கள் .
39 . செல்வந்தனின் அறியாமை அவனைத் தாழ்த்தி விடும் , ஏழையின் அறிவு அவனை உயர்த்தி வைக்கும் .
40 . அறிவிலியின் பொருளாதாரம் , அவனது பணத்திலும் ஆசையிலும் ஆகும் .
41 . தனது ஆசைகளாலும் மோசடிகளாலும் ஏமாற்றப் படுபவனே அறிவிலி ஆவான் .
42 . அறிவிலி , அறிஞர்கள் விரும்புவதை வெறுக்கக் கூடியவனாக இருப்பான் .
43 . சிறப்புகளை அறியாதிருப்பது , இழிவான தவறாகும் .
44 . அறிவிலி என்பவன் , தண்ணீர் வெளிப்படாத இறுகிய பாறை , பசுமை துளிர்க்காத வறட்சியான விருட்சம் , புற்பூண்டுகள் முளைக்காத பாலை நிலம் ஆவான் .
45 . அறியாமையுடன் செயல் புரிபவன் தன் பாதை தவறி நடப்பவன் போன்றவன் ஆவான் . நடப்பதற்கான அவனது முயற்சி , அவனது தேவையை விட்டும் அவனைத் தூரப் படுத்தி விடும் .
46 . ஒரு மனிதன் தனது விடயங்களை அறியாதிருப்பதே , மிகப் பெரும் அறியாமை ஆகும் .
47 . வாள் முனையிலன்றி அறியாமையை ஒளிக்க முடியாது .
48 . நீங்கள் அறியாதவற்றுக்கு எதிராகச் செயற் படாதீர்கள் , ஏனெனில் நீங்கள் அறியாதவையே அதிகம் உள்ளன .
49 . மிகக் கடினமான சோதனை அறியாமை ஆகும் .
50 . தான் கால் வைக்கும் இடத்தை அறியாதவன் , தனது கை சேதத்தின் அதிகரிப்பினால் சோதிக்கப் படுவான் .
51 . தவறுகளின் அதிகரிப்பு அறியாமை ஏற்படுவதை எச்சரிக்கும் .
52. எத்தனையோ கண்ணியவான்களை அவர்களது அறியாமை தாழ்த்தி விடுகின்றது .
53 . அறிவிலி ஆசைப் படும் விடயங்களில் பற்றற்றவனாக நீ இரு .
54 . அறிவிலியின் செயல் தீயதாகும் , அவனது அறிவு வழி கேடாகும் .
55 . அறிவிலியின் அருள் பெருகும் போதெல்லாம் , அந்த அருளில் உள்ள அவனது இழிவும் அதிகரிக்கிறது .
56 . அறியாமை , அனைத்துத் தீமைகளினதும் அடிப்படை ஆகும் .
57 . அறியாமை , மிகப் பெரும் நோய் ஆகும் .
58 . அறிவிலி , தன் அறியாமையைக் குறைக்கும் வழியைத் தெரிந்து கொள்ள மாட்டான் .
53 ) தேவை
1 . ஒரு முஃமினிடம் தன் தேவையை முறை இட்டவன் , அல்லாஹ்விடமே அதனை முறை இட்டவன் ஆவான் . ஒரு காபிரிடம் முறை இட்டவன் , அல்லாஹ்வைப் பற்றி முறை ஈடு செய்தவன் ஆவான் .
2 . தேவையைத் தவற விடுவது , அதை பொருத்தமில்லாதவரிடம் வேண்டுவதை விடச் சிறந்தது ஆகும் .
3 . மூன்று விடயங்களைக் கொண்டே தேவைகள் நிறைவேறும் : தேவைகள் பெறுமதி உறுவதற்காக அவற்றை சிறிதாகக் கருதுவது , அவை வெளிப் படுவதற்காக அவற்றை மறைப்பது , அவை அமைதி உறுவதற்காக அவற்றை அவசரப் படுத்துவது .
4 . அல்லாஹ்வின் அருட் கொடைகளை அதிகம் பெற்றவரின் பால் மனிதர்களின் தேவை அதிகமாக இருக்கும் . அத் தேவைகளில் தனக்கு கடமையானவற்றை நிறைவேற்றுபவருக்கு அவ் அருட் கொடைகள் நிரந்தரமாகவும் நிலையாகவும் கிடைக்கும் . அக்கடமையை நிறைவேற்றாதவருக்கு அவ் அருட் கொடைகளட நீங்கி அழிந்து விடும் .
5 . தேவைகளின் போது பணிவுடனும் , தேவை அற்ற நிலையில் கர்வத்துடனும் இருப்பது எவ்வளவு பழிப்புக்கு உரியது !
6 . நீ விரும்பியவரிடம் உதவி தேடிக் கொள் . அவரது கைதியாக நீ ஆகிவிடுவாய் .
7 . தேவை உள்ளவருக்கு வழங்கப் படம் அன்பளிப்பு பொருட்களில் மிகச் சிறந்ததாகும் .
8 . தேவையின் போதே உண்மையான நண்பனை இனங்காணலாம் .
9 . உங்களது சகோதரனின் தேவையை அறிந்தால் அவனிடம் எதையும் கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டாம் .
10 . இமாம் அலி (அலை) அவர்கள் தமது தோழர்களுக்கு கூறினார்கள் : ' உங்களுக்கு என்னிடத்தில் ஏதேனும் தேவை இருந்தால் , அதை ஒரு கடிதத்தில் எழுதி என்னிடத்தில் தாருங்கள் . இது யாசிப்பின் சங்கடத்தி;ல் இருந்து உங்களது முகத்தைப் பாதுகாப்பதறக்கு ஆகும்'
11 . உனது தேவைகளின் போது உனது அதிகாரியிடம் பொறுமை கொள் , ஏனெனில் அவருக்கு முக்கியமானவனாக நீ இல்லை . உன் மூலம் அவரது காரியங்கள் நிலை பெறுவதும் இல்லை .
12 . தேவை உள்ளவனுக்கு வழங்குவதை மறு நாளுக்குப் பிற் படுத்தி வைக்காதே . நாளை என்ன நடக்கும் என்பதை நீ அறியமாட்டாய் .
13 . கண்ணியமானவர்களிடம் தேவைகளை வேண்டுங்கள் . அதை நிறைவேற்றுவது , அல்லாஹ்வின் கையில் உள்ளது .
14 . மூன்று பேரிடம் உங்கள் தேவைகளைக் கேட்காதீர்கள் : அதிகம் பொய் சொல்பவன் , அவன் குறித்த தேவை தூரத்தி;ல் இருந்தாலும் அதனை நெருக்கமாக்கி வைத்து விடுவான் . மடையன் , அவன் உனக்கு நல்லது செய்வதாக நினைத்து தீங்கு விளைவித்து விடுவான் . பிறரிடம் தேவை உள்ள மனிதன் , அவன் தனது தேவையைப் பாதுகாக்க உனது தேவையைப் பயன் படுத்திக் கொள்வான் .
15 . தேவையின் போது மென்மையாக நடந்து கொள்வது சிறந்த உதவியாக அமையும் .
16 . தேவைகளை , அதற்குத் தகுதி அற்றவர்களிடம் கேட்பது மரணத்தை விடக் கடியது .
17 . நீ , உனது தேவையை யாசிப்பவனிடம் அமைதியாக நடந்து கொள் .
18 . உன்னிடத்தில் தனது தேவையை வேண்டி நிற்பவன் , தனது தேவையின் அளவைப் பொருத்து உனக்கு வழிப்படுபவனாக இருப்பான் .
19 . இழிவானவற்றில் தனது தேவையைக் கொண்டிருப்பவன் நாசமடைந்து விடுவான் .
20 . தேவையுள்ள மனிதன் - பெருமை அடித்தாலும் - அவனது தேவையை நிராகரிக்காதே .
21 . உன்னிடம் தேவையை வேண்டுபவன் மீது அன்பாக நடந்து கொள்வது உனக்குக் கடமை ஆகும் .
22 . உங்களிடம் மனிதர்கள் தேவை உடையோராய் இருப்பது அல்லாஹ் உங்களுக்கு செய்து உள்ள அருள் ஆகும் . அதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் , தவற விட்டு விடாதீர்கள் , இல்லை எனில் அந்த அருள் தண்டனையாக மாற்றப்பட்டு விடும் .
23 . தன்னிடம் வந்த தன் சகோதர முஸ்லிமின் தேவையை நிரைவேற்றிக் கொடுக்காதவனைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன் . அவன் நல்ல விடயங்களுக்கு தகுதியானவனாக தன்னைக் காண்பதில்லை , அவன் நன்மையை எதிர்பார்ப்பதும் இல்லை , தண்டனையைப் பயப் படுவதும் இல்லை , ஒழுக்கச் செயன் முறைகளில் நீங்கள் பற்றற்று இருக்கிறீர்களா ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)