செவ்வாய், 12 ஜனவரி, 2010

أوامر النبى الاكرم (ص) لعلى بن أبي طالب (ع) நபி (ஸல்) அவர்கள், இமாம் அலீ (அலை) அவர்களுக்கு வழங்கிய கட்டளைகள்

• பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
• ياعلى , أنت مني بمنزلة هارون من موسي (عليهما السلام) غير انه لا نبى بعدي , وإني أوصيك اليوم بوصية ان انت حفظتها عشت حميدا ومت شهيدا ويبعثك الله يوم القيامة فقيها عالما
• 'அலீயே! மூஸாவிடம் ஹாரூன் இருந்த இடத்தில் என்னிடம் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனாலும் எனக்குப் பின்னால் எந்தவொரு நபியும் இல்லை. இன்று நான் உங்களுக்கு ஓர் உபதேசம் புரிகின்றேன். அதனை நீங்கள் பேணிவந்தால், புகழோடு வாழ்வீர்கள், இறைதியாகியாக மரணிப்பீர்கள். மறுமையில் அல்லாஹ் உங்களை அறிஞராகவும் ஞானியாகவும் எழுப்புவான்

• ' ياعلى , إني أرضي لك ما أرضي لنفسي , وأكره لك ما أكره لنفسي
• 'அலீயே! எனக்காகப் பொருந்திக் கொண்டவற்றையே உங்களுக்காகவும் பொருந்திக் கொள்கின்றேன். எனக்காக வெறுப்பவற்றையே உங்களுக்காகவும் வெறுக்கிறேன்'


• أما أنت يا على فصفيي وأميني
• 'அலீயே! நீங்கள்தான் எனது உற்ற தோழர், எனது நம்பிக்கையாளர்'


• ياعلى , من أكل الحلال صفا دينه , ورق قلبه ودمعت عيناه من حشية الله تعالي , ولم يكن لدعوته حجاب
• 'அலீயே! யார் ஹலாலை உண்கிறாரோ அவரது மார்க்கம் தெளிவாகும், அவரது உள்ளம் மென்மையுறும், அல்லாஹ்வின் அச்சத்தினால் அவரது கண்கள் நீர்சொரியும், அவரது பிரார்த்தனைகளுக்குத் திரையிருக்காது'


• ياعلى , إذا غضب الله علي عبد من عبيده رزقه مالا حراما , فإذا اشتد غضبه وكل به شيطانا يبارك له فيه ويصححه ويشغله بالدنيا عن الدين ويسهل له أمر دينه ويقول : الله غفور رحيم
• 'அலீயே! அல்லாஹ் தனது அடியார்களில் ஒருவன் மீது கோபம் கொண்டால், அவனுக்கு ஹராமான செல்வத்தை வழங்குகின்றான், அவனது கோபம் கடுமையானால், ஷைத்தானை அவன் மீது சாட்டிவிடுகின்றான். அந்த ஷைத்தானோ அவ்வடியானது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தி, அவனை சுகங்களில் திளைக்கச் செய்து, மார்க்கத்தை ஒதுக்கி துன்யாவில் ஈடுபாடு கொள்ளச் செய்து, மார்க்க விடயங்களை அவனுக்கு எளியவையாக்கி விடுகின்றான், மேலும் 'அல்லாஹ் மன்னிப்பவனும், இரக்கமுள்ளவனும்' என்றும் கூறிக் கொண்டிருப்பான்'


• ياعلى , من أكل من الشبهات اشتبه عليه دينه , واظلم قلبه , ومن أكل الحرام مات قلبه , وخلق دينه وضعف يقينه وحجب الله تعالي دعوته , وقلت عبادته
• 'அலீயே! யார் சந்தேகத்திற்குரியவற்றை உண்கின்றாரோ அவரது மார்க்கம் தெளிவற்றதாகி விடும், அவரது உள்ளம் அநீதிக்குள்ளாகி விடும். யார் ஹராமானவற்றை உண்கின்றாரோ அவரது உள்ளம் இறந்து விடும், அவரது மார்க்கம் இயலாததாகி விடும், அவரது யகீன் பலவீனமடைந்து விடும், அவரது பிரார்த்தனையை அல்லாஹ் தடுத்து விடுவான், அவரது வணக்க வழிபாடுகள் குறைந்து விடும்'


• ياعلى , لا يزال المؤمن في زيادة من دينه ما لم يأكل الحرام ولم يفارق العلماء , فإذا أكل الحرام وفارق العلماء مات قلبه وعمى عن طاعة الله عز وجل
• 'அலீயே! ஹராத்தை உண்ணாது> உலமாக்களை விட்டும் பிரியாது இருக்கும் வரை ஒரு முஃமினின் ஈமான் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். அவன் ஹராத்தை உண்டு உலமாக்களை விட்டும் பிரிந்து விட்டால்> அவனது உள்ளம் இறந்து விடும்> அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் குருடனாகி விடுவான்”

• ياعلى , اطلب من فضل الله الحلال , فإن طلب الحلال فرض علي المؤمنين
• 'அலீயே! அல்லாஹ்வுடைய செல்வத்திலிருந்து ஹலாலானதைத் தேடுங்கள், நிச்சயமாக ஹலாலானதைத் தேடுவது முஃமின்கள் மீது கடமையாகும்'


• ياعلى , ما سافر أحد في طلب الحرام إلا كان الشيطان قرينه , ولا راكبا إلا كان الشيطان رديفه , ولا جمع أحد رزقا حراما إلا كان الشيطان أكيله
• 'அலீயே! ஒருவன் ஹராத்தைத் தேடிப் பிரயாணம் செய்யும் போது, ஷைத்தான் அவனுடன் தோழனாக ஆகிவிடுகின்றான், அவன் வாகனத்தில் ஏறும் போது ஷைத்தான் அவனது உற்ற நண்பனாக மாறிவிடுகின்றான், ஒருவன் ஹராமான உணவைச் சேகரிக்கும் போது ஷைத்தானே அவற்றை உண்கின்றான்'


• ياعلى , داوم علي الوضوء , فإن الملائكة يستغفرون للانسان مادام علي الوضواء ولم يحدث
• 'அலீயே! எப்போதும் வுழுவுடன் இருங்கள், நிச்சயமாக எப்போதும் வுழுவுடன் இருக்கும் மனிதர்களுக்காக மலக்குகள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருப்பார்கள்'


• ياعلى , وعليك بالسواك ففيه أربع وعشرون فضيلة في الدين والبدن
• 'அலீயே! பற்துலக்குவதைக் கடைப்பிடித்து வாருங்கள், நிச்சயமாக அதில் உடலுக்கும் மார்க்கத்துக்கும் பயனளிக்க வல்ல இருபத்து நான்கு சிறப்புகள் உள்ளன'


• ياعلى , استقص علي إسباغ الوضوء فإنه شطر الإيمان فإذا توضأت فلا تسرف في الماء
• 'அலீயே! வுழுவை முறையாகப் பேணி வாருங்கள், நிச்சயமாக அது ஈமானின் ஒரு பகுதியாகும். நீங்கள் வுழுச் செய்தால் தண்ணீரை வீண்விரயம் செய்யாதீர்கள்'


• ياعلى , إذا حضر وقت صلاتك فتهيأ لها وإلا شغلك الشيطان واذا نويت خيرا فعجل وإلا منعك الشيطان عن ذلك
• 'அலீயே! உங்களது தொழுகை நேரம் வந்து விட்டால், அதற்காக விரைந்து செல்லுங்கள், இல்லையெனில், ஷைத்தான் உங்களைப் பிறழச் செய்து விடுவான். நன்மையொன்றைச் செய்ய நினைத்தால், அதனைத் துரிதப்படுத்துங்கள், இல்லையெனில் ஷைத்தான் அதை விட்டும் உங்களைத் தடுத்து விடுவான்'


• ياعلى , عليك بالصلوات في أوقاتها فإنها رأس كل فضيلة وسنام كل عبادة
• 'அலீயே! தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழுது வாருங்கள், அது எல்லா நன்மைகளினதும் தலையாயதும், எல்லா வணக்க வழிபாடுகளினதும் அடிப்படையானதுமாகும்'


• ياعلى , أحب العبيد الي الله تعالي عبد ساجد يقول في سجوده : رَبِّ إنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إلاَّ أنْتَ
• 'அலீயே! அல்லாஹ்விடத்தில் மிகவும் அன்புக்குரிய அடியான் யாரெனில், சுஜூதிலிருந்து கொண்டு பின்வருமாறு பிரார்த்திப்பவனாவான்: 'எனது இரட்சகனே! நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன், எனவே என்னை மன்னிப்பாயாக, நிச்சயமாக உன்னையன்றி பாவங்களை மன்னிப்போன் வேறு யாருமில்லை'


• ياعلى , إنَّ أخبث الناس سرقة من يسرق من نفسه , فقال علي (ع): وكيف ذاك يارسول الله؟ قال: الذي لا يتم ركوعه وسجوده فهو سارق في صلاته ممحوق عند الله في دينه
• 'அலீயே! மனிதர்களில் மிக மோசமான திருடன் தன்னிடமே திருடுபவனாவான்' என நபியவர்கள் கூறிய போது, 'அது எவ்வாறு யாரசூலல்லாஹ்' என அலீ (அலை) அவர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள், 'தனது தொழுகையின் ருகூவையும் சுஜூதையும் பூரணப்படுத்தாதவனே தனது தொழுகையில் திருடுபவனாவான், அவன் அல்லாஹ்விடத்தில் வெறுப்புக்குரியவனுமாவான்' என்று கூறினார்கள்.


• ياعلى , مِن كرامة المؤمن من عند الله تعالي زوجة موافقة تسره , والصلاة مع الإمام , وجيران محبون له
• 'அலீயே! கணவனை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய உடன்பாடுள்ள மனைவி, இமாமுடன் இணைந்து தொழுவது, தன்னை விரும்பக் கூடிய அயலார் என்பன ஒரு மனிதனுக்கு அல்லாஹ்விடத்திலிருந்து கிடைக்கும் கொடைகளாகும்'


• ياعلى , عليك بصيام البيض من كل شهر – يوم ثلاثة عشر وأربعة عشر وخمسة عشر – فإنه يبيض اللهُ به وجوه الصائمين غدا وهو صوم الدهر كله
• 'அலீயே! ஒவ்வொரு மாதத்தினதும் பீழ் தினங்களில் நோன்பிருந்து வாருங்கள் (13, 14, 15ம் தினங்கள்) அந்நாட்களில் நோன்பிருப்பவர்களின் முகங்களை அல்லாஹ் வெண்மையாக்கி வைக்கின்றான், அது காலம் முழுவதும் நோன்பு நோற்பது போன்றதாகும்'


• ياعلى , من صام رمضان واجتنب فيه من الحرام والبهتان , رضي عنه الرحمن وأوجبت له الجنان
• 'அலீயே! ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று அதிலே ஹராத்தையும் வீணானவற்றையும் தவிர்ந்து கொள்பவரை அல்லாஹ் திருப்தி கொள்கின்றான், அவருக்கு சுவர்க்கத்தை கட்டாயமாக்கி விடுகின்றான்'


• ياعلى , من شيَّع شهر رمضان بستة من شوال كتب الله له صوم الدهر كله
• 'அலீயே! ரமழான் மாதத்திலும் அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்களிலும் நோன்பிருப்பவருக்கு அவ்வருடம் முழுவதும் நோன்பிருந்த நன்மையை அல்லாஹ் வழங்குகின்றான்'


• ياعلى , رأيت علي باب الجنة : من خالف هواه كانت الجنة مأواه , ومن اتبع هواه كانت النار مأواه
• 'அலீயே! சுவர்க்கத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்ததை நான் கண்டேன்: 'தனது தீய இச்சைக்கு மாறு செய்பவரின் தங்குமிடம் சுவர்க்கமாகும், தனது தீய இச்சையைப் பின்பற்றுபவரின் தங்குமிடம் நரகமாகும்'


• ياعلى , لكل صائم فرحتان ودعوة مستجابة , فإذا أفطرت فقل: اَللَّهُمَّ لِوَجْهِكَ صُمْتُ وَعَلَي رِزْقِكَ أفْطَرْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ يَا غَفَّارُ اغْفِرْ لِي (ثلاث مرات)
• 'அலீயே! ஒவ்வொரு நோன்பாளிக்கும் இரண்டு மகிழ்ச்சிகளும் ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனையும் உள்ளன. எனவே, நீங்கள் நோன்பு திறந்தால் இவ்வாறு கூறுங்கள்: 'யாஅல்லாஹ்! உனக்காகவே நோன்பு நோற்றேன், உனது ஆகாரத்தைக் கொண்டே நோன்பைத் திறந்தேன், உன் மீதே தவக்கல் வைத்தேன், மன்னிப்பளிப்பவனே! என்னை மன்னிப்பாயாக (மூன்று முறை)'



• ياعلى , بادر في حاجة أخيك المسلم , فإن الله عز وجل يسارع في قضاء حوائجك , وإذا أتاك طالب حاجة فاعلم أنه نعمة ومنة من الله عز وجل حين أراد أن يغفر ذنبك ويقضى حوائجك
• 'அலீயே! உங்களது சகோதர முஸ்லிமின் தேவையை நிறைவு செய்து கொடுக்க விரைந்து செல்வீராக. அவ்வாறு செய்தால், உங்களது தேவையை நிறைவு செய்து தருவதற்கு அல்லாஹ் விரைந்து வருவான். ஒரு தேவையை வேண்டியவராக ஒருவர் உங்களிடம் வந்தால், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், அது அல்லாஹ்விடத்திலிருந்து வந்த அருளும் கொடையுமாகும். உங்களது பாவங்களை மன்னிப்பதற்கும், உங்களது தேவைகளை நிறைவு செய்வதற்கும் அவன் நாடியுள்ளான்'


• ياعلي , من أطعم مسلما بطيبة من نفسه كتب الله تعالي له ألف ألف حسنة ومحا عنه من السيئات مثل ذلك ورفع له ألف ألف درجة
• 'அலீயே! தன்னிடமுள்ளவற்றில் நல்லவற்றிலிருந்து ஒரு முஸ்லிமுக்கு யார் உணவளிக்கின்றாரோ அவருக்கு ஆயிரமாயிரம் நன்மைகளை அல்லாஹ் வழங்குகின்றான், அதேயளவு அவரது பாவங்களை அவன் மன்னிக்கின்றான், ஆயிரமாயிரம் அந்தஸ்துகளை அவருக்காக உயர்த்துகின்றான்'


• ياعلى , أكرم الضيف فإن الضيف اذا نزل بقوم نزل بسعة رزقه , واذا ارتحل إرتحل بذنوب أهل البيت فيلقيها في البحر
• 'அலீயே! விருந்தாளியை கண்ணியப்படுத்துங்கள், ஒரு கூட்டத்தாரிடம் விருந்தாளி வந்தால், அவர் ரிஸ்க் விஸ்தீரணத்தைக் கொண்டு வந்துள்ளார், அவ்வீட்டாரின் பாவங்களைக் கொண்டு சென்று கடலில் எறிகின்றார்'


• ياعلى , ثلاثة تحت ظل العرش يوم القيامة , رجل أحب لإخيه ما أحب لنفسه ورجل بلغه أمر فلم يقدم فيه ولم يتأخر حتي يعلم أن ذلك الامر لله رضي أو سخط , ورجل لم يعب أخاه بعيب حتي
• يصلح ذلك العيب عن نفسه , فإنه كلما أصلح من نفسه عيبا بدا له منها آخر وكفي بالمرء في نفسه شغلا
• 'அலீயே! மறுமை நாளில் மூவர் அர்ஷின் நிழலில் இருப்பார்கள்: தான் விரும்பியவற்றையே தனது சகோதரனுக்காகவும் விரும்பிய மனிதர், தன்னிடம் வந்த ஒரு விடயம் அல்லாஹ்விடத்தில் திருப்திக்குரியதா அல்லது கோபத்திற்குரியதா என்பதை அறியாது அதனை மேற்கொள்ளவோ அல்லது பிற்படுத்தவோ முனையாத ஒரு மனிதர், தனது குறைகளைத் திருத்திக் கொள்ளும் வரை தனது சகோதரனின் குறைகளைப் பேசித் திரியாத மனிதர், அவர் ஒவ்வொரு முறையும் தனது குறைகளைத் திருத்திக் கொள்ளும் போது, அவரது மற்றொரு குறை வெளிப்படும், (இவ்வாறு குறைகளை ஆராய்வதில்) ஒவ்வொரு மனிதனும் தனது விடயங்களில் ஈடுபடுவதே போதுமானது'


• ياعلى , اذا تصدقت فتصدق من أحل ما عندك , فإن صدقة لقمة أو تمرة حلال أحب الي الله تعالي من مائة مثقال حرام , وصدقة تمرة تقدمها قبل موتك انفع لك من مائة مثقال بعدك تتصدق عنك
• 'அலீயே! நீங்கள் தர்மம் செய்தால், உங்களிடத்தில் உள்ளவற்றில் மிக நல்லவற்றிலிருந்தே தர்மம் செய்யுங்கள். ஹலாலான ஒரு கவளத்தை அல்லது ஒரு பேரீத்தம்பழத்தை தர்மம் செய்வது ஆயிரம் மிஸ்கால் ஹராத்தை தர்மம் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது. உங்களது மரணத்துக்கு முன்னால், ஒரு பேரீத்தம்பழத்தை தர்மம் செய்வது, உங்களுக்குப் பின்னால் உங்களுக்காக நூறு மிஸ்கால் தர்மம் செய்வதை விட அதிக பயனுள்ளது'


• ياعلى , إن أولياء الله تعالي لم ينالوا منعة الله وغفرانه بكثرة العبادة , ولكن نالوها بسخاوة النفس والاستهانة بالدنيا
• 'அலீயே! அல்லாஹ்வின் நேசர்கள் அவனது அருளையும் பாவமன்னிப்பையும் அதிக வணக்க வழிபாட்டின் மூலமாகப் பெறவில்லை, மாறாக, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, துன்யாவை ஒதுக்கியதன் மூலமாகவே அவற்றைப் பெற்றுக் கொண்டார்கள்'


• ياعلى , إعمل لله خالصا فإن الله تعالي لايقبل إلا ماكان خالصا لوجهه , واذا عملت فاعمل لله , واذا انفقت فأنفق لله , فإن المراءاة في الدين كالنار في الحطب , والمراءاة في الدين أخفي علي أمتي من دبيب النمل علي الصفا في الليلة الظلماء وهو الشرك الأصغر , قال الله تعالي : <فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلاَ يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أحَدًا>
• 'அலீயே! அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் அமல் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தனக்குத் தூய்மையாக இல்லாதவற்றை ஒப்புக் கொள்ளமாட்டான். எனவே நீங்கள் அமல் செய்தால் அல்லாஹ்வுக்காக அமல் செய்யுங்கள், நீங்கள் செலவு செய்தால் அல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள். மார்க்க விடயத்தில் காண்பிக்கும் முகஸ்துதியானது விறகினால் எழும் நெருப்பைப் போன்றதாகும். மார்க்கத்தில் முகஸ்துதி செய்வது இருண்ட இரவில் ஸபா மலை மீது ஊரும் எறும்பின் காலடிச் சுவட்டை விடவும் எனது உம்மத்தினருக்கு இலகுவானதாக இருக்கும். அது சிறிய ஷிர்க்காகும். அல்லாஹ் கூறுகின்றான்: 'எவர் தனது ரப்பை சந்திக்க வேண்டுமென விரும்புகிறாரோ அவர் நற்கருமங்களைச் செய்யட்டும், தனது ரப்பை வணங்கட்டும் அவனுக்கு வேறொருவரை இணைவைக்காதிருக்கட்டும்'


• ياعلى , تمني جبرئيل (ع) أن يكون من ابن آدم لسبع خصال : للصلوات الخمس مع الإمام , ومجالسة العلماء , وعيادة المريض , وتشييع الجنازة , وسقى الماء , والصلح بين الاثنين , وإكرام اليتيم , فاحرص يا على ما تمني
• 'அலீயே! ஏழு விடயங்களுக்காக, ஜிப்ரீல் (அலை) அவர்கள் தானும் மனித சமுதாயமாக இருக்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அவை, இமாமுடன் தொழும் ஐவேளைத் தொழுகை, உலமாக்களுடனான அமர்வு, நோயாளியை சந்தித்தல், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லல், நீர் புகட்டுதல், இருவரிடையே சமாதானத்தை ஏற்படுத்தல், அநாதைகளை ஆதரித்தல் என்பனவாகும். அவர் ஆசைப்பட்டவற்றை நீங்களும் ஆசை கொள்வீர்களாக அலீயே!'


• ياعلى , كثرة الاستغفار حصن حصين من النار للتائبين
• 'அலீயே! அதிக இஸ்திஃக்பார் பாவமன்னிப்புக் கோருவோருக்கான பாதுகாப்பான கேடயமாகும்'


• ياعلى , مثل المصلي كالتاجر لا يخلص له ربحه حتي يأخذ رأس ماله , كذلك المصلي لا تقبل له نافلة حتي يؤدي الفريضة
• 'அலீயே! தொழுகையாளி ஒரு வியாபாரியைப் போன்றவராவார். அவ்வியாபாரி தனது முதலைப் பெற்றுக் கொண்டால்தான் இலாபத்தைக் காண முடியும். அவ்வாறுதான் தொழுகையாளியின் சுன்னத்தான தொழுகைகள் அவர் பர்ழைத் தொழுதால்தான் ஏற்றுக் கொள்ளப்படும்'


• ياعلى , أربع من يكن فيه كمل إسلامه : الصدق والشكر والحياء وحسن الظن
• 'அலீயே! நான்கு விடயங்கள் எவரிடம் இருக்கின்றனவோ அவரது இஸ்லாம் முழுமை பெறும்: அவை உண்மை, நன்றி தெரிவிப்பு, நாணம், நல்லெண்ணம் என்பனவாகும்'


• ياعلى , أصدق وإن ضرك في العاجل فإنه ينفعك في الآجل , ولا تكذب وإن ينفعك في العاجل فإنه يضرك في الآجل
• 'அலீயே! உலகில் உங்களுக்கு தீங்கு விளைவித்தாலும் உண்மையே பேசுங்கள், நிச்சயமாக உண்மை மறுமையில் உங்களுக்கு பயனளிக்கும். உங்களுக்கு பயனளித்தாலும் பொய் பேசாதீர்கள், நிச்சயமாக பொய் மறுமையில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்'


• ياعلى , اذا تقرب الناس الي الله في أبواب البر فتقرب إليه بأنواع العقل تسبقهم بالدرجات والزلفي عند الناس في الدنيا وعند الله في الآخرة
• 'அலீயே! மனிதர்கள் நன்மைகளினூடாக அல்லாஹ்வை நெருங்கினால், நீங்கள் புத்தியினூடாக அவனை நெருங்குங்கள். அப்போது இம்மையில் மனிதர்களிடத்திலும் மறுமையில் அல்லாஹ்விடத்திலும் அந்தஸ்தாலும் சிறப்பாலும் எல்லோரையும் முந்திக் கொள்வீர்கள்'


• ياعلى , اذا أكرمك الله بأربع خصال , فلا عليك ما فاتك من الدنيا : صدق الحديث , وحفظ الأمانة , وسخاء النفس , وعفة البطن
• 'அலீயே! அல்லாஹ் நான்கு விடயங்களைக் கொண்டு உங்களைக் கண்ணியப்படுத்தினானெனில், இம்மையில் நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை என்றாகும். அவை பேச்சில் உண்மை, அமானத்தைப் பாதுகாத்தல், உயிர்த்தியாகம், வயிற்றின் ஒழுக்கம் என்பனவாகும்'


• ياعلى , لا تجهر بقراءتك ولا بدعائك حيث يصلي الناس , فإن ذلك يفسد عليهم صلواتهم
• 'அலீயே! மனிதர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நீங்கள் உங்களது ஓதலையோ பிரார்த்தனையையோ சத்தமிட்டுச் செய்யாதீர்கள், அது அவர்களது தொழுகையைப் பழுதாக்கி விடும்'


• ياعلى , ألف صديق قليل , وعدو واحد كثير
• 'அலீயே! ஆயிரம் நண்பர்களாயினும் குறைவுதான், ஒரு எதிரியே அதிகம்'


• ياعلى , إن أهل المعروف في الدنيا هم أهل المعروف في الآخرة
• 'அலீயே! இம்மையில் நன்மையுடையவர்களே மறுமையிலும் நன்மையுடையவர்களாவர்'


• ياعلى , لا توبة للتائب حتي يصفو بطنه من الحرام ويطيب كسبه
• 'அலீயே! தனது வயிற்றை ஹராத்திலிருந்து விலக்கி தனது உழைப்பை சீராக்கிக் கொள்ளும் வரை எந்தவொரு பாவமன்னிப்புத் தேடுவோனுக்கும் பாவமன்னிப்பு இல்லை'


• ياعلى , جدِّد التوبة كل يوم فإني أجددها كل يوم سبعين مرة
• 'அலீயே! நாள்தோறும் தௌபாவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்: நான் நாள்தோறும் எழுபது விடுத்தம் அவ்வாறு புதுப்பித்துக் கொள்கின்றேன்'


• ياعلى , من دعا ناسا إلي الهدي فاتبعوه كان له من الأجر مثل أجورهم من غير أن ينقص من أجورهم شيء , وما دعا أحد قوما إلي ما نهي الله تعالي عنه إلا كتب الله عليه من الوزر مثل أوزارهم من غير أن ينقص من أوزارهم شيء
• 'அலீயே! ஒருவன் மனிதர்களை நேர்வழியின் பக்கம் அழைத்து, அவ்வழைப்பை அவர்கள் பின்பற்றினால், அவர்களுக்குக் கிடைக்கும் கூலியின் அளவு – அவற்றில் எவ்விதக் குறைவும் அவர்களுக்கு ஏற்படாமல் - அவனுக்கும் கிடைக்கும். அவ்வாறே ஒருவன் மனிதர்களை அல்லாஹ் விலக்கிய ஒன்றின் பக்கம் அழைத்தால், அவர்களுக்குக் கிடைக்கும் தீமையின் அளவு – அவற்றில் எவ்விதக் குறைவும் அவர்களுக்கு ஏற்படாமல் - அவனுக்கும் கிடைக்கும்'


• ياعلى , لأن يهدي الله علي يديك رجلا خير لك مما طلعت عليه الشمس
• 'அலீயே! உங்கள் மூலம் அல்லாஹ் ஒரு மனிதனை நேர்வழி பெறச் செய்வது, சூரியன் உதிக்கும் அனைத்துப் பொருட்களை விடவும் உங்களுக்குச் சிறந்ததாகும்'


• ياعلى , رضي الله تعالي كله في رضي الوالدين وسخط الله تعالي في سخطهما
• 'அலீயே! அல்லாஹ்வின் அனைத்துத் திருப்தியும் பெற்றோரின் திருப்தியிலேயே உள்ளது, அவ்வாறே அல்லாஹ்வின் கோபமும் அவர்களது கோபத்திலேயே உள்ளது'


• ياعلى , كل نعيم يزول إلا نعيم أهل الجنة , وكل هم منقطع إلا هم أهل النار
• 'அலீயே! எல்லா நிஃமத்துகளும் அழிந்து விடக் கூடியவை, சுவர்க்கவாசிகளின் நிஃமத்தைத் தவிர. அவ்வாறே எல்லா கவலைகளும் நீங்கிவிடக் கூடியவை, நரகவாசிகளின் கவலையைத் தவிர'


• ياعلى , أكرم الجار وإن كان كافرا , وأكرم الضيف وإن كا كافرا , وأطع الوالدين وإن كانا كافرين , ولا ترد السائل وإن كان كافرا
• 'அலீயே! உங்கள் அயலானைக் கண்ணியப்படுத்துங்கள், அவன் காபிராக இருந்தாலும். உங்கள் விருந்தாளியைக் கண்ணியப்படுத்துங்கள், அவன் காபிராக இருந்தாலும். உங்கள் பெற்றோருக்குக் கட்டுப்படுங்கள், அவர்கள் காபிர்களாக இருந்தாலும். யாசிப்போனை விரட்டாதீர்கள், அவன் காபிராக இருந்தாலும்'


• ياعلى , اذا أتي علي المؤمن أربعون صباحا ولم يجالس العلماء قسا قلبه وجسر علي الكبائر لأن العلم حياة القلب , ولا عبادة إلا بالعلم ولا ينفع إلا مع العمل
• 'அலீயே! ஒரு முஃமின் நாற்பது காலை நேரங்களில் உலமாக்களுடன் அமராது (அவர்களது உரைகளைச் செவியேற்காது புறக்கணித்து) இருந்தால், அவனது உள்ளம் இரக்கமற்றுக் கறுத்து விடுகின்றது, பெரும்பாவங்களில் ஈடுபாடு தோன்றுகின்றது. ஏனெனில் அறிவு என்பது உள்ளத்தின் உயிராகும், அறிவின்றி வணக்கம் இல்லை, வணக்கமின்றி அறிவு பயன் தராது'


• ياعلى , أصل التقي الورع عن كل ما حرّم الله تعالي , ورأس الكرم في ترك المعاصي
• 'அலீயே! இறையச்சத்தின் அடிப்படை அல்லாஹ் ஹராமாக்கிய அனைத்தை விட்டும் பேணுதலாக இருப்பதாகும். கண்ணியத்தின் தலைமை பாவங்களைத் தவிர்ப்பதிலுள்ளது'


• ياعلى , قلة طلب الحوائج من الناس هو الغني الحاضر , وكثرة الحوائج الي الناس مذلة وهو الفقر الحاضر
• 'அலீயே! மனிதர்களிடம் தேவைகளைக் கேட்பதைத் தவிர்ந்து கொள்வது உண்மையான செல்வமாகும். மனிதர்களிடம் தேவைகளைக் கேட்பதை அதிகரித்துக் கொள்வது இழிவும் பெரும் வறுமையுமாகும்'


• ياعلى , كن بشَّاشا فإن الله تعالي يحب البشاشين ويبغض العبوس
• 'அலீயே! எப்போதும் புன்முறுவலோடு இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் புன்முறுவலோடு உள்ளவர்களை விரும்புகின்றான், கடுகடுப்பானவர்களை வெறுக்கின்றான்'


• ياعلى , أنت تبين لأمتي ما اختلفوا فيه من بعدي
• 'அலீயே! எனக்குப் பின், எனது உம்மத்தினர் முரண்பாடு காணும் விடயங்களை தெளிவுபடுத்தக் கூடியவர் நீங்கள்தான்'


• ياعلى , كثرة النوم تميت القلب , وتذهب بالبهاء , وتورث النسيان , وكثرة الضحك تميث القلب , وكثرة الذنوب تقسي القلوب , وتورث الندم الكثير
• 'அலீயே! அதிக தூக்கம் உள்ளத்தை இறக்கச் செய்து விடும். கண்ணியத்தைப் போக்கி விடும், மறதியை ஏற்படுத்தும். அதிக சிரிப்பு உள்ளத்தை இறக்கச் செய்து விடும். அதிக பாவம் உள்ளத்தை இரக்கமற்றுக் கறுக்கச் செய்து விடும், அதிக கைசேதத்தை ஏற்படுத்தும்'


• ياعلى , أنت تغسل جثتي وتؤدي ديني وتواريني في حفرتي وتفي بذمتي , وأنت صاحب لوائي في الدنيا والآخرة
• 'அலீயே! நீங்கள்தான் எனது ஜனாஸாவை குளிப்பாட்டுவீர்கள், எனது மார்க்கத்தை வழிநடத்துவீர்கள், என்னைக் குழியில் அடக்கம் செய்வீர்கள், எனது கடமைகளை நிறைவேற்றுவீர்கள். நீங்கள்தான் இம்மையிலும் மறுமையிலும் எனது கொடியைச் சுமக்கக் கூடியவர்'


• ياعلى , يدك في يدي تدخل معي يوم القيامة حيث أدخل
• 'அலீயே! உங்களது கை எனது கையிலுள்ளது. மறுமையில் நான் சுவர்க்கத்தில் நுழையும் போது நீங்களும் என்னுடன் நுழைவீர்கள்”


• ياعلى , من أكل شبعا علي شبع مات قلبه وفسد لحمه ويخاف عليه المرض
• 'அலீயே! யார் வயிறு முட்டச் சாப்பிடுகின்றாரோ அவரது உள்ளம் இறந்து விடுகின்றது, அவரது உடற்தசை கெட்டு விடுகின்றது> நோய் அவரை நெருங்கி விடுகின்றது'


• ياعلى , سبب رحمة الله طاعته كما أن سبب غضبه معصيته
• 'அலீயே! அல்லாஹ்வின் ரஹ்மத்திற்கான காரணம் அவனுக்கு வழிப்படுவதாகும். அவ்வாறே அவனது கோபத்திற்கான காரணம் அவனுக்கு மாறு செய்வதாகும்'


• ياعلى , انظر الي من هو أدني منك في المال وأرفع في العبادة والتقي , تزدد بذلك ايمانا ويقينا
• 'அலீயே! செல்வத்தில் உங்களை விடத் தாழ்ந்தவரையும் வணக்க வழிபாட்டில் உங்களை விட உயர்ந்த இறையச்சமுள்ளவரையும் அவதானியுங்கள், இதனால் உங்களது ஈமானும் யகீனும் அதிகரிக்கும்'


• ياعلى , و خير الناس عند الله تعالي أنفعهم للناس , وشر الناس من طال عمره وساء عمله , وأحب الناس من طال عمره وحسن عمله
• 'அலீயே! அல்லாஹ்விடத்தில் சிறந்த மனிதர் மனிதர்களுக்கு அதிகம் பயனளிப்பவராவார். அதிக ஆயுளைப் பெற்று தீய செயல்களில் ஈடுபடுபவரே மனிதர்களில் கெட்டவராவார். அதிக ஆயுளைப் பெற்று நற்செயல்கள் புரிவபவரே மனிதர்களில் மிகவும் விருப்பத்திற்குரியவராவார்'


• ياعلى , اذا جلس اليك الخصمان فلا تقض بينهما حتي تسمع من الآخر كما سمعت من الاول فإنك اذا فعلت ذلك تبين لك القضاء . قال علي (ع) : فما أشكل على قضاء بعد ذلك
• 'அலீயே! தர்க்கம் புரியும் இருவர் உங்களிடம் வந்தால், அவர்களில் முதலாமவரிடம் கேட்டறிந்தது போல் இரண்டாமவரிடமும் கேட்டறியும் வரை நீங்கள் அவர்களிடையே தீர்ப்பளிக்காதீர்கள். இவ்வாறு நீங்கள் செய்தால் வழங்க வேண்டிய தீர்ப்பு உங்களுக்குத் தெளிவாகி விடும்' அலீ (அலை) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: 'இதற்குப் பின் எந்தவொரு தீர்ப்பும் எனக்குச் சிரமமாக இருக்கவில்லை'


• ياعلى , علامة حسن السريرة عند الله تعالي حسن الحرمة
• 'அலீயே! அல்லாஹ்விடத்தில் நல்ல மகிழ்ச்சியின் அடையாளம் அழகிய சங்கைப்படுத்தலாகும்'


• ياعلى , وللعالم ثلاث علامات : صدق الكلم واجتناب الحرام وأن يتواضع للناس كلهم
• 'அலீயே! ஓர் அறிஞருக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன. பேச்சில் உண்மை, ஹராத்தைத் தவிர்ந்து கொள்ளல், மனிதர்கள் அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ளல்'


• ياعلى , من قرأ القرآن ولم يحلل حلاله ولم يحرم حرامه كان مع الذين نبذوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون
• 'அலீயே! அல்குர்ஆனை ஓதி, அதன் ஹலாலைப் பேணாமலும் ஹராமைத் தவிர்ந்து கொள்ளாமலும் இருப்பவர்கள், எதுவும் அறியாதவர்களைப் போன்று அல்லாஹ்வின் வேதத்தை இழிவுபடுத்தியவர்களுடன் (மறுமையில்) இருப்பார்கள்'


• ياعلى , وللصالح ثلاث علامات : يصلح ما بينه وبين الله تعالي بالعمل الصالح , ويصلح دينه بالعلم , ويرضي للناس ما يرضي لنفسه
• 'அலீயே! நல்லடியாருக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன. அல்லாஹ்வுக்கும் தனக்கும் இடையில் நல்லமல்களைக் கொண்டு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார், தனது மார்க்க விடயங்களை தனது அறிவினால் சரிப்படுத்திக் கொள்வார், தனக்கு விரும்புபவற்றையே ஏனைய மனிதர்களுக்கும் விரும்புவார்'


• ياعلى , وللمحسن ثلاث علامات : يبادر في طاعة الله , ويجتنب محارم الله , ويحسن الي من أساء اليه
• 'அலீயே! நல்ல மனிதருக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் துரிதம் காட்டுவார், அல்லாஹ்வின் விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வார், தனக்குத் தீங்கிழைத்தவருக்கு நல்லது புரிவார்'


• ياعلى , وللحليم ثلاث علامات : يصل من قطعه ويعطي من حرمه ولا يدعو علي من ظلمه
• 'அலீயே! இரக்கமுள்ளவருக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன: தனது உறவைத் துண்டிப்பவருடனும் சேர்ந்து வாழ முயற்சிப்பார், தனக்கு மறுத்தவருக்கும் கொடுப்பார், தனக்கு அநீதியிழைத்தவருக்கு எதிராக பிரார்த்திக்க மாட்டார்'


• ياعلى , وللصبور ثلاث علامات : الصبر علي طاعة الله , والصبر عن معصية الله والصبر علي أحكام الله
• 'அலீயே! பொறுமையாளருக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன: அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் பொறுமையாயிருத்தல், அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் பொறுமையாயிருத்தல், அல்லாஹ்வின் சட்டங்களின் மீது பொறுமையாயிருத்தல்'


• ياعلى , عليكم بالدعاء بين الأذان والإقامة فإنها لا ترد وبعد كل مكتوبة فإنها مستجابة
• 'அலீயே! அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் பிரார்த்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், நிச்சயமாக அது நிராகரிக்கப்படமாட்டாது. ஒவ்வொரு பர்ழு தொழுகைக்குப் பின்னாலும் (பிரார்த்தியுங்கள்) அது ஏற்றுக் கொள்ளப்படும்'


• ياعلى , عليك بالصدق ولا تخرج من فيك كذبة أبدا , ولا تجترين علي خيانة أبدا , والخوف من الله كأنك تراه , وابذل مالك ونفسك دون دينك , وعليك بمحاسن الأخلاق فاركبها , وعليك بمساوئ الأخلاق فاجتنبها
• 'அலீயே! உண்மையைக் கடைப்பிடியுங்கள். உங்களது வாயிலிருந்து ஒருபோதும் பொய் வெளிப்படக் கூடாது. ஒருபோதும் மோசடி செய்யாதீர்கள். அல்லாஹ்வை காண்பது போன்று அவனுக்கு பயந்து நடவுங்கள், மார்க்கத்துக்காகவே உங்களது உயிரையும் செல்வத்தையும் செலவிடுங்கள், நற்பண்புகளை முழுமையாகக் கடைப்பிடியுங்கள், கெட்ட விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள்'


• ياعلى , خمسة تجلو القلب وتذهب بالقساوة: مجالسة العالم , مسح رأس اليتيم وكثرة الإستغفار بالأسحار , وترك السمر بالليل , والصوم بالنهار
• 'ஐந்து விடயங்கள் உள்ளத்தைத் தெளிவாக்கி முரட்டுத்தனத்தைப் போக்கி விடும்: அவை அறிஞருடன் அமர்ந்திருத்தல், அநாதையின் தலையைத் தடவிவிடுதல், அதிகாலை நேரத்தில் இஸ்திஃக்பாரை அதிகப்படுத்திக் கொள்ளல், இரவு நேரங்களில் அரட்டையடிப்பதைத் தவிர்ந்து கொள்ளல், பகலில் நோன்பிருத்தல்'


• ياعلى , خمسة تزيد في نور البصر: النظر الي الكعبة , والنظر في المصحف , والنظر في وجه الوالدين , والنظر في العالم , والنظر في الماء الجاري
• 'அலீயே! ஐந்து விடயங்கள் பார்வைத் திறனை அதிகப்படுத்தும்: கஃபாவைப் பார்த்தல், குர்ஆனைப் பார்த்தல், பெற்றோரின் முகத்தைப் பார்த்தல், அறிஞரைப் பார்த்தல், ஓடும் நீரைப் பார்த்தல்'


• لولاك يا على ما عرف المؤمنون من بعدي
• 'அலீயே! நீங்கள் இல்லையெனில், எனக்குப் பின் முஃமின்கள் அறியப்படமாட்டார்கள்'


• ياعلى , اذا اثني عليك في وجهك فقل: اَللَّهُمَّ اجْعَلْنِي خَيْرًا مِمَّا يَظُنُّونَ وَلاَ تُؤَاخِذْنِي مِمَّا يَقُولُونَ وَاغْفِرْ لِي مَا لاَ يَعْلَمُونَ , تسقط عنك العجب
• 'அலீயே! உங்கள் முகத்திற்கு நேர் நீங்கள் புகழப்பட்டால், நீங்கள் கூறுங்கள்: 'யாஅல்லாஹ்! இவர்கள் எண்ணுவதிலிருந்து நல்லவற்றை எனக்குத் தருவாயாக. இவர்கள் பேசுபவற்றினால் என்னைத் தண்டித்து விடாதே. இவர்கள் அறியாதவற்றிலிருந்து எனக்கு மன்னிப்பளிப்பாயாக' இவ்வாறு கூறினால், தற்பெருமை உங்களை விட்டும் அகன்று விடும்'


• ياعلى , اذا أكلت أو شربت أو لبست أو ركبت , فقل : بِسْمِ اللهِ وَالْحَمْدُ ِللهِ
• 'அலீயே! நீங்கள் சாப்பிட்டால், குடித்தால், உடையணிந்தால், வாகனத்தில் ஏறினால் 'பிஸ்மில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே') என்று கூறிக் கொள்ளுங்கள்'


• ياعلى , وقر الكبير وارحم الصغير , تكن من الفائزين
• 'அலீயே! பெரியோரை மதியுங்கள், சிறியோர் மீது இரக்கம் காட்டுங்கள், நீங்கள் வெற்றியாளராகி விடுவீர்கள்'


• ياعلى , اذا دخلت المسجد فابدأ برجلك اليمني وقل: بِسْمِ اللهِ وَالسَّلاَمُ عَلَي رَسُولِ اللهِ , اَللَّهُمَّ افْتَحْ لِي أبْوَابَ رَحْمَتِكَ وَأبْوَابَ فَضْلِكَ , واذا برزت من المسجد فابدأ برجلك اليسري وقل كذلك
• 'அலீயே! நீங்கள் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் உங்களது வலது காலை முற்படுத்துங்கள், பின் இவ்வாறு கூறுங்கள் 'அல்லாஹ்வின் பெயரால், ரசூலுல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாவதாக. யாஅல்லாஹ்! உனது அருளின் வாயில்களையும் உனது செல்வத்தின் வாயில்களையும் எனக்குத் திறந்து விடுவாயாக' நீங்கள் மஸ்ஜிதிலிருந்து வெளியேறினால், உங்களது இடது காலை முற்படுத்துங்கள், முன்கூறியது போன்றே கூறுங்கள்'


• ياعلى , صلة الرحم يزيد في العمر
• 'அலீயே! உறவினரைச் சேர்ந்து நடப்பது ஆயுளை அதிகரிக்கும்'


• ياعلى , إذا قل رزقك فأكثر من الإستغفار وأكثر من قول لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إلاَّ بِاللهِ الْعَلِىِّ الْعَظِيمِ
• 'அலீயே! உங்களது ரிஸ்க் குறைந்து விட்டால், இஸ்திஃக்பாரை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம் (உயர்வும் மகத்துவமும் உள்ள அல்லாஹ்வைக் கொண்டேயன்றி எவ்வித சக்தியும் பலமும் இல்லை) என்று சொல்வதையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்'


• ياعلى , طوبي لمن أحبك وصدق فيك , وويل لمن أبغضك وكذب فيك
• “அலீயே! உங்களை விரும்பி உங்களை உண்மைப்படுத்தியவர்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக. உங்களைக் கோபப்படுத்தி உங்களைப் பொய்யாக்கியவர்களுக்கு நாசம் உண்டாவதாக”


• أبشر ياعلى , حياتك وموتك معي
• 'அலீயே! நன்மாராயம் கூறுங்கள், உங்களது வாழ்வும் மரணமும் என்னுடன்தான்'


• ياعلى , أوثق عري الإيمان الحب في الله والبغض في الله
• 'அலீயே! ஈமானில் மிகவும் கனமானது அல்லாஹ்வுக்காக விரும்புவதும், அல்லாஹ்வுக்காக வெறுப்பதுமாகும்'


• ياعلى , من كظم غيضا وهو يقدر علي امضائه أعقبه الله يوم القيامة أمنا وإيمانا يجد طعمه
• 'அலீயே! தனது கோபத்தைச் சாதிக்க முடியுமான நிலையிலும் அதனை எவர் அடக்கிக் கொள்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அவற்றின் சுவையை உணர வழங்குகின்றான்'


• ياعلى , كيف أنت اذا أزهد الناس في الآخرة , ورغبوا في الدنيا وأكلوا التراث أكلا لما وأحبوا المال حبا جما واتخ والدار الآخرة , وأصبر علي مصائب الدنيا وبلواها حتي ألحق بك إن شاء الله قال: صدقت , اللهم افعل ذلك به
• 'அலீயே! மனிதர்கள் மறுமையை வெறுத்து உலகின் மீது ஆசை கொண்டு, பிறருடைய அனந்தரச் சொத்துகளை உண்டு, மிக்க அளவு கடந்து பொருளை நேசித்து, அல்லாஹ்வின் மார்க்கத்தை வருமானம் பெறும் வழியாகவும், அல்லாஹ்வின் செல்வத்தை இழிவாகவும் கருதிச் செயற்பட்டால், அச்சந்தர்ப்பத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?' என நபியவர்கள் வினவிய போது, நான் கூறினேன்: 'நான் அவர்களையும் அவர்கள் தெரிவு செய்ததையும் விட்டு விடுவேன். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமையின் வீட்டையும் நான் தெரிவு செய்வேன். துன்யாவின் சோதனைகள் கஷ்டங்களின் போது பொறுமை காப்பேன், அல்லாஹ் நாடினால் நான் உங்களைச் சந்திக்கும் வரை இவ்வாறே நடந்து கொள்வேன்' நபியவர்கள் கூறினார்கள்: 'உண்மை கூறினீர்கள். யாஅல்லாஹ்! அவர் அவ்வாறே நடந்து கொள்ளச் செய்வாயாக 'ياعلى , شر الناس من أكرمه الناس إتقاء شره
• 'அலீயே! மனிதர்களில் தீயவன் யாரெனில், அவனது தீமைக்குப் பயந்து மனிதர்கள் அவனை கண்ணியப்படுத்துவார்கள்'


• ياعلى , شارب الخمر كعابد وثن
• 'அலீயே! மதுபானம் அருந்துபவன் சிலையை வணங்குபவனைப் போன்றவனாவான்'


• ياعلى , كل مسكر حرام , وما أسكر كثيره فالجرعة منه حرام
• 'அலீயே! போதையூட்டும் அனைத்தும் ஹராமாகும். ஒரு பொருள் அதிகமானால் போதை ஏற்படுத்தும் எனில், அதிலிருந்து ஒரு துளியும் ஹராம்தான்'


• ياعلى , ثلاثة من مكارم الأخلاق في الدنيا والآخرة , أن تعفو عمن ظلمك , وتصل من قطعك , وتحلم عمن جهل عليك
• 'அலீயே! மூன்று விடயங்கள் இம்மையிலும் மறுமையிலும் நற்பண்பாடுகளில் உள்ளவையாகும். அவை, உங்களுக்கு அநீதியிழைத்தவனையும் மன்னித்து விடுதல், உங்களது உறவைத் துண்டித்து வாழ்பவருடனும் இணைந்து வாழ முயற்சித்தல், உங்கள் மீது அறியாமையை வெளிப்படுத்தியவன் மீதும் இரக்கம் காட்டுதல்'


• ياعلى , أنت سيد في الدنيا وسيد في الآخرة , حبيبك حبيبي وحبيبي حبيب الله , وعدوك عدوي وعدوي عدو الله , والويل لمن أبغضك بعدي
• 'அலீயே! நீங்கள் இம்மையிலும் தலைவர்> மறுமையிலும் தலைவர். உங்களது விருப்பத்திற்குரியவர் எனது விருப்பத்திற்குரியவராவார். எனது விருப்பத்திற்குரியவர் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவராவார். உங்களது எதிரி எனக்கு எதிரியாவான். எனது எதிரி அல்லாஹ்வுக்கு எதிரியாவான். எனக்குப் பின் உங்களைக் கோபித்தவன் மீது நாசம் உண்டாவதாக'


• ياعلى , المؤمن من أمنه المسلمون علي أموالهم ودمائهم , والمسلم من سلم المسلمون من يديه ولسانه , والمهاجر من هجر السيئات
• 'அலீயே! முஸ்லிம்கள் தமது செல்வம், உயிர் என்பவை விடயத்தில் எவரிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொண்டார்களோ அவரே முஃமினாவார். முஸ்லிம்கள் எவரது கை, நாவு என்பவற்றிலிருந்து ஈடேற்றம் பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். தீமைகளை யார் வெறுத்தொதுக்குகின்றாரோ அவரே முஹாஜிராவார்'


• ياعلى , موت الفجأة راحة للمؤمن وحسرة للكافر
• 'அலீயே! திடீர் மரணம் முஃமின்களுக்கு ஆறுதலும் காபிர்களுக்கு கைசேதமுமாகும்'


• ياعلى , ركعتان يصليهما العالم أفضل من ألف ركعة يصليها العابد
• 'அலீயே! ஓர் அறிஞர் தொழும் இரண்டு ரகஅத்துகள், அறிவற்ற வணக்கவாளி தொழும் ஆயிரம் ரகஅத்துகளை விடச் சிறந்தது'


• ياعلى , من تعلم علما ليماري به السفهاء أو يجادل به العلماء او ليدعو الناس الي نفسه فهو من أهل النار
• 'அலீயே! மூடர்களுக்குக் காண்பிப்பதற்காக, அல்லது அறிஞர்களுடன் விவாதிப்பதற்காக, அல்லது தன் பக்கம் மக்களை அழைத்துக் கொள்வதற்காக யார் அறிவைக் கற்றுக் கொள்கின்றாரோ அவர் நரகவாதியாவார்'


• ياعلى , من أحزن والديه فقد عقهما
• 'அலீயே! தனது பெற்றோரை கவலை கொள்ளச் செய்தவர் அவர்களைத் துன்புறுத்தியவராவார்'


• ياعلى , من فارقني فقد فارق الله , ومن فارقك يا على فقد فارقني
• 'அலீயே! என்னைப் பிரிந்தவர் அல்லாஹ்வைப் பிரிந்தவராவார். உங்களை யார் பிரிகின்றாரோ அவர் என்னைப் பிரிந்தவராவார்'


• ياعلى , من مسح يده علي رأس يتيم ترحما له , أعطاه الله عز وجل بكل شعره نورا يوم القيامة
• 'அலீயே! ஒருவர் தனது கையினால் இரக்கத்துடன் ஓர் அநாதையின் தலையைத் தடவி விட்டால், அவ்வநாதையின் முடிகளின் எண்ணிக்கையின் அளவுக்கு அல்லாஹ் அவருக்கு மறுமையில் ஒளியை வழங்குகின்றான்'


• ياعلى , آفة الحديث الكذب , وآفة العلم النسيان , وآفة العبادة الفترة , وآفة الجمال الخيلاء , وآفة الحلم الحسد
• 'அலீயே! பேச்சின் ஆபத்து பொய்யாகும், அறிவின் ஆபத்து மறதியாகும். வணக்கவழிபாட்டின் ஆபத்து தடைப்படுதலாகும், அழகின் ஆபத்து பெருமையாகும், அன்பின் ஆபத்து பொறாமையாகும்'


• ياعلى , كن سخيا فإن الله يحب السخى , وكن شجاعا فإن الله يحب الشجاع , وكن غيورا فإن الله يحب الغيور , وإن امرؤ سألك حاجة فاقضها , فإن لم يكن لها أهل كنت أنت لها أهلا
• 'அலீயே! கொடையாளியாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் கொடையாளியை விரும்புகின்றான். வீரனாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் வீரனை விரும்புகின்றான். உற்சாகமுள்ளவராக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் உற்சாகமுள்ளவரை விரும்புகின்றான். ஒரு மனிதன் உங்களிடம் ஒரு தேவையைக் கேட்டால் அதனை நிறைவேற்றிக் கொடுங்கள்'


• ياعلى , أفضل الجهاد من أصبح لا يهم بظلم أحد
• 'அலீயே! மிகச் சிறந்த ஜிஹாத், எவருக்கும் அநீதியிழைக்கும் எண்ணமின்றி காலை நேரத்தை ஆரம்பிப்பதாகும்'


• ياعلى , من خاف الناس لسانه فهو من أهل النار
• 'அலீயே! எவரது நாவுக்கு மனிதர்கள் பயப்படுகின்றார்களோ அவர் நரகவாசியாவார்'


• ياعلى , إصنع المعروف ولو الي السفلة , فقال على (ع) ومن السفلة؟ قال: الذي إن وعظ لم يتعظ وإن زجر لم ينزجر ولا يبالي بما قال وبما قيل فيه
• 'அலீயே! பிற்போக்குவாதிகளாயினும் அவர்களுக்கும் நன்மையே செய்வீராக' என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, 'யார் பிற்போக்குவாதிகள்?' என அலீ (அலை) அவர்கள் கேட்டார்கள். நபியவர்கள் கூறினார்கள்: 'அவர்கள் யாரெனில், உபதேசம் புரியப்பட்டால் அதனை ஏற்று நடக்கமாட்டார்கள், விரட்டப்பட்டால் வெளியேறமாட்டார்கள், தாம் கூறியவற்றையோ தமக்குக் கூறப்பட்டவற்றையோ கவனித்து நடக்கமாட்டார்கள்'


• ياعلى , شر الناس من باع آخرته بدنياه , وشر من ذلك من باع آخرته بدنيا غيره
• 'அலீயே! தனது துன்யாவுக்காக தனது மறுமையை விற்பவரே மனிதர்களில் கெட்டவராவார். இதை விடவும் கெட்டவர், பிறரது துன்யாவுக்காக தனது மறுமையை விற்பவராவார்'


• ياعلى , لا يدخل الملك بيتا فيه التماثيل او ريح النبيذ أو عاق لوالديه ولا بيتا لا يدخله الضيف
• 'அலீயே! உருவச் சிலைகள், அல்லது மதுபான வாடை, அல்லது பெற்றோரைத் துன்புறுத்துபவன் உள்ள வீட்டுக்கும், விருந்தாளிகள் நுழையாத வீட்டுக்கும் மலக்குகள் நுழைய மாட்டார்கள்'


• ياعلى , إني أحب لك ما أحب لنفسي وأكره لك ما أكره لنفسي
• 'அலீயே! நான் எனக்காக எதை விரும்புகின்றேனோ அதையே உங்களுக்காகவும் விரும்புகின்றேன். எனக்காக எதை வெறுக்கின்றேனோ அதையே உங்களுக்காகவும் வெறுக்கின்றேன்'


• ياعلى , جعلت الذنوب كلها في بيت , وجعل مفتاحها شرب الخمر
• 'அலீயே! பாவங்கள் அனைத்தும் ஒரு வீட்டில் இடப்பட்டுள்ளன. அவ்வீட்டின் திறவுகோலாக மதுபானம் அருந்துதல் ஆக்கப்பட்டுள்ளது'


• ياعلى , يأتي علي شارب الخمر ساعة لايعرف فيها ربه عزوجل
• 'அலீயே! மதுபானம் அருந்துவபனுக்கு ஒரு நேரம் வரும், அந்நேரத்தில் தனது ரப்பையே அவன் அறிந்து கொள்ள மாட்டான்'


• ياعلى , شر السراق من يسرق للشيطان , فقال على (ع) كيف ذلك يارسول الله ؟ فقال صلي الله عليه وآله وسلم : ما نقص أحد من المكيال قبضة ولا حنفة إلا وأخذ الشيطان ذلك من أرزاقهم
• 'அலீயே! ஷைத்தானுக்காகத் திருடுபவனே மிகக் கெட்ட திருடனாவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, 'அது எவ்வாறு யாரசூலல்லாஹ்?' என இமாம் அலீ (அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள். 'ஒருவன் தனது அளவை நிறுவையில் ஒரு பிடியை அல்லது ஓர் அளவை குறைத்து விட்டால், அதனை அவர்களது ரிஸ்க்கிலிருந்து ஷைத்தான் எடுத்துக் கொள்கின்றான்' என்றார்கள்.


• ياعلى , ينبغي أن يكون في المؤمن ثمان خصال: وقار عند الهزاهز , وصبر عند البلاء , وشكر عند الرخاء , وقنوع بما رزقه الله عز وجل , ولا يظلم الاعداء , ولا يتحامل علي الأصدقاء , بدنه منه في تعب , والناس منه في راحة
• 'அலீயே! ஒரு முஃமினில் எட்டு விடயங்கள் அமைந்திருக்க வேண்டும்: வாய்ப்புள்ள நேரத்தில் பேணுதல், சோதனைகளின் போது பொறுமை, செல்வத்தின் போது நன்றி தெரிவிப்பு, அல்லாஹ் வழங்கியவற்றைப் போதுமாக்கிக் கொள்ளல், பகைவர்களுக்கும் அநீதியிழைக்காதிருத்தல், நண்பர்களைச் சந்தேகிக்காதிருத்தல், தன்னை உழைப்பில் ஈடுபடுத்தல், மனிதர்களுக்கு ஆறுதலளித்தல்'


• ياعلى , تصدق عن موتاك , فإن الله جل ثناؤه قد وكل ملائكة يحملون صدقات الأحياء اليهم فيفرحون بها كأشد ما يكون من الفرح , ثم يحزنون أحزانا وندما علي ما خلفوا , ويقولون: اَللَّهُمَّ اغْفِرْ لِمَنْ نَوَّرَ قَبْرِي وَبَشِّرْهُ بِالْجَنَّةِ كَمَا بَشَّرْتَنِي بِهَا , فَوَا أسَفَاه عَلَي مَا خَلَّفْتُ
• 'அலீயே! உங்களது மரணித்தவர்களுக்காக தர்மம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மலக்குகளை நியமித்துள்ளான். அம்மலக்குகள் உயிருள்ளவர்களின் தர்மங்களை மரணித்தவர்களிடம் சுமந்து வருகின்றனர். அதன் மூலம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர். பின், தாம் செய்தவற்றுக்காக கைசேதப்பட்டுக் கவலையுறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுவார்கள்: 'யாஅல்லாஹ்! எனது கப்றை வெளிச்சமாக்கியவருக்கு அவரது பாவங்களை மன்னிப்பாயாக, எனக்கு சுவனத்தை நன்மாராயம் கூறியது போன்று அவருக்கும் நன்மாராயம் கூறுவாயாக. நான் செய்தவற்றுக்காக வருந்துகின்றேன்'


• ياعلى , لا تمزح فيذهب بهاؤك , ولا تكذب فيذهب نورك , وإياك وخصلتين : الضجر والكسل , فإنك إن ضجرت لم تصبر علي حق , وإن كسلت لم تؤد حقا
• 'அலீயே! நீங்கள் யாரையும் பரிகாசம் செய்ய வேண்டாம், ஏனெனில் உங்களது முக்கியத்துவம் இல்லாமலாகி விடும். நீங்கள் பொய்யுரைக்க வேண்டாம், ஏனெனில் உங்களது ஒளி அகன்றுவிடும். இரண்டு விடயங்களை உங்களுக்கு எச்சரிக்கின்றேன்: களைப்பும் சோம்பலும். நிச்சயமாக நீங்கள் களைப்புற்றால் உண்மைக்காக பொறுமை காக்க மாட்டீர்கள், சோம்பலுற்றால் உண்மையை நிறைவேற்ற மாட்டீர்கள்'


• ياعلى , أما ترضي أن أكون أخاك ؟ فقال على : بلي يا رسول الله , فقال رسول الله صلي الله عليه وآله وسلم : أنت أخي في الدنيا والآخرة
• 'அலீயே! நான் உங்கள் சகோதரனாக இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் வினவிய போது, 'ஆம் யாரசூலல்லாஹ்' என அலீ (அலை) அவர்கள் பதிலிறுத்தார்கள். நபியவர்கள் கூறினார்கள: 'நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் எனது சகோதரர்தான்'


• ياعلى , الصدقة ترد القضاء التي قد أبرم إبراما
• 'அலீயே! தர்மம், உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டு விட்ட கழாவையும் மாற்றிவிடக் கூடியது'


• ياعلى , صدقة السر تطقئ غضب الرب , وتجلب البركة والرزق الكثير , وصدقة العلانية حجاب عن النار
• 'அலீயே! இரகசிய தர்மம் அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்கும், பரகத்தையும் அதிக ரிஸ்க்கையும் கொணரும், பரகசிய தர்மம் நரகை விட்டும் திரையாகும்'


• ياعلى , ادع الله تعالي عند الهموم والأحزان والكرب والحاجات وقل: <يَا حَىُّ يَا قَيُّومُ يَا لاَ إلَهَ إلاَّ أنْتَ بِرَحْمَتِكَ أسْتَعِينُ فَاغْفِرْ لِي وَأصْلِحْ لِي شَأنِي وَفَرِّجْ هَمِّي> واذا نابتك نائبة فقل: <سُبْحَانَ رَبِّي لاَ إلَهَ إلاَّ أنْتَ عَلَيْكَ تَوَكَّلْتُ وَأنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ > وأكثر من دعائي الذي علمنيه جبرئيل (ع) <اَللَّهُمَّ إنِّي أسْألُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدِّينِ وَالدُّنْيَا وَاْلآخِرَةِ>
• 'அலீயே! கஷ்டங்கள், கவலைகள், நெருக்கடிகள், தேவைகள் என்பவற்றின் போது அல்லாஹ்வைப் பிரார்த்தியுங்கள். நீங்கள் கூறுங்கள்: 'ஜீவனுள்ளவனே! என்றும் நிலைத்திருப்பவனே! உன்னையன்றி வணக்கத்திற்குரிய நா உனது அருளைக் கொண்டு உதவி தேடுகின்றேன், எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது விடயங்களை சரிப்படுத்துவாயாக, எனது கவலையைப் போக்குவாயாக' ஒரு சோதனை உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் கூறுங்கள்: 'எனது இரட்சகன் தூய்மையானவன், உன்னையன்றி வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை, உன் மீதே தவக்குல் வைத்தேன், நீயே மகத்தான அர்ஷின் அதிபதி' எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கற்றுத் தந்த பின்வரும் துஆவையும் அதிகமாக ஓதிக் கொள்ளுங்கள்: 'யாஅல்லாஹ்! நான் உன்னிடத்தில் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் மார்க்கத்திலும் இம்மையிலும் மறுமையிலும் நன்மையையும் வேண்டுகின்றேன்'


• ياعلى , أربعة أسرع شيء عقوبة , رجل أحسنت إليه فكافأك بالإحسان إساءة , ورجل لا تبغي عليه وهو يبغي عليك , ورجل عاهدته علي أمر فوفيت له وغدر بك , ورجل وصلت قرابته فقطعه
• 'அலீயே! நான்கு நபர்களுக்கு மிக விரைவாகக் கூலி வழங்கப்படும்: நீங்கள் செய்த நன்மைக்குப் பதிலீடாக தீங்கை உங்களுக்கு விளைவிக்கக் கூடிய மனிதன், நீங்கள் அநீதியிழைக்காத போதும் உங்களுக்கு அநீதியிழைக்கும் மனிதன், ஒரு விடயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை நீங்கள் பேணி வரும் போதும் அதற்கு மாறு செய்யும் மனிதன், உறவைச் சேர்ந்து வாழ நீங்கள் முயற்சிக்கும் போதும் அதனை மறுத்துத் துண்டித்து நடக்கும் மனிதன்'


• ياعلى , إن الله تعالي قد زينك بزينة لم يزين العباد بزينة أحب الي الله تعالي منها , هي زينة الإبرار عند الله تعالي : الزهد في الدنيا , فجعلك لا تزرأ من الدنيا شيئا ولا تزرأ منك شيئا ووهب لك حب المساكين فجعلك ترضي بهم أتباعا ويرضون بك إماما
• 'அலீயே! வேறு எந்த அடியாருக்கும் வழங்காத ஒரு அலங்காரத்தின் மூலம் அல்லாஹ் உங்களை அழகுபடுத்தியுள்ளான். அது அல்லாஹ்விடத்திலுள்ள நன்மையெனும் அழகும், துன்யாவில் துறவறமுமாகும். துன்யாவில் எதனையும் ஆசை கொள்ளாதவராகவும் உங்களில் எதனையும் ஆசை கொள்ளாதவராகவும் அல்லாஹ் உங்களை ஆக்கியுள்ளான். ஏழைகளின் அன்பையும் உங்களுக்கு வழங்கியுள்ளான். அந்த ஏழைகளை உங்களைப் பின்பற்றுபவர்களாகவும், உங்களை அவர்களுக்கு இமாமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்'


• ياعلى , لاينبغي للعاقل أن يكون ظاعنا إلا في ثلاث: مرمّة لمعاش او تزود لمعاد أو لذة في غير محرم
• 'அலீயே! மூன்று விடயங்களை விட்டும் பிரியாதிருப்பது புத்தியுள்ளவனுக்கு அவசியமாகும்: வாழ்க்கையைப் புதுப்பித்தல், மறுமைக்கான கட்டுச்சாதம், ஹராம் அல்லாதவற்றில் சுவை'


• ياعلى , اذا عيّرك أخوك بما يعلمه منك فلا تعيّره بما تعلمه منه , يكن لك أجر وعليه إثم
• 'அலீயே! உங்களது சகோதரன் உங்களது குறைகளை அறிந்து அவற்றை வெளிப்படுத்தினாலும், அவனிலிருந்து நீங்கள் அறிந்துள்ளவற்றை வெளிப்படுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால், உங்களுக்கு நற்கூலியும் அவனுக்குப் பாவமும் உண்டு'


• ياعلى ,آفة الحسب الإفتخار
• 'அலீயே! எண்ணத்தின் ஆபத்து பெருமை கொள்வதாகும்'

• ياعلى , ثلاثة من أبواب البر : سخاء النفس وطيب الكلام والصبر علي الأذي
• 'அலீயே! மூன்று விடயங்கள் நன்மையின் வாயில்களில் உள்ளவையாகும். உயிர்த்தியாகம், நல்ல பேச்சு, துன்பங்களின் போது பொறுமை'


• ياعلى , ثلاثة من لقى الله عز وجل بهن فهو من أفضل الناس: من أوفي اللهَ بما افترض عليه فهو من أعبد الناس , ومن ور عن محارم الله فهو من أورع الناس , ومن قنع بما رزقه الله فهو من أغني الناس
• 'அலீயே! மூன்று விடயங்களுடன் அல்லாஹ்வை யார் சந்திக்கிறாரோ அவரே மனிதர்களில் மிகச் சிறந்தவர். அல்லாஹ் தன் மீது கடமையாக்கியவற்றை நிறைவேற்றியவர், அவர் மனிதர்களில் மிகச் சிறந்த வணக்கவாளி. அல்லாஹ் விலக்கியவற்றிலிருந்து பேணுதலாகத் தவிர்ந்து கொண்டவர், அவர் மனிதர்களில் மிகச் சிறந்த பேணுதலுள்ளவர். அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றைப் போதுமாக்கிக் கொண்டவர், அவர் மனிதர்களில் மிகச் சிறந்த செல்வந்தர்'


• ياعلى , سبع خصال لا يحاجك فيهن أحد يوم القيامة: أنت أول المؤمنين بالله إيمانا وأوفاهم بعهد الله وأقومهم بأمر الله وأرأفهم بالرعية وأقسمهم بالسوية وأعلمهم بالقضية وأعظمهم مزية يوم القيامة
• 'அலீயே! ஏழு விடயங்கள் தொடர்பில் மறுமையில் நீங்கள் தனித்துவமானவராக இருப்பீர்கள்: மறுமையில் நீங்கள்தான் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட முதலாவது முஃமின், அல்லாஹ்வின் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றியவர், அல்லாஹ்வின் கட்டளைகளை சிறப்பாகச் செயற்படுத்தியவர், பொறுப்பை பூரணமாக நிறைவேற்றியவர், சமத்துவத்தை நிலைநாட்டியவர், தீர்ப்பை மிகவும் அறிந்தவர், அந்தஸ்தில் மிகவும் மகத்தானவர்'


• ياعلى , سبعة من كن فيه فقد إستكمل حقيقة الإيمان وأبواب الجنة مفتحة له: من أسبغ وضوئه وأحسن صلوته وأدي زكاة ماله وكف غضبه وسجن لسانه واستغفر لذنبه وأدي النصيحة لأهل بيت نبيه
• 'அலீயே! எவரில் ஏழு விடயங்கள் உள்ளனவோ அவரது ஈமானின் உண்மை பூரணத்துவம் பெறும், சுவர்க்கத்தின் வாயில்கள் அவருக்காகத் திறக்கப்பட்டிருக்கும். வுழுவை சரியாக நிறைவேற்றி தொழுகையை அழகாக்கி, தனது செல்வத்தின் ஸக்காத்தை வழங்கி, கோபத்தை அடக்கி, நாவைக் கட்டுப்படுத்தி, தனது பாவத்திற்காக மன்னிப்புக் கோரி, நபியின் அஹ்லுல்பைத்தினரது உபதேசங்களை ஏற்று நடப்பவரே அவராவார்'


• ياعلى , أربع من كن فيه بني الله تعالي له بيتا في الجنة: من آوي اليتيم ورحم الضعيف وأشفق علي والديه ورفق بمملوكه
• 'அலீயே! எவரிடம் நான்கு விடயங்கள் உள்ளனவோ அவருக்காக அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான்: அநாதைகளை ஆதரித்து, பலவீனமானவர்கள் மீது இரக்கம் காட்டி, தனது பெற்றோரின் கடமைகளை நிறைவேற்றி, தனது அடிமைகள் மீது அன்பு காட்டி வருபவரே அவராவார்'


• أما أنت يا على فخُتَني وابو ولدي وأنت مني وأنا منك
• 'அலீயே! நீங்கள்தான் எனது மருமகன், எனது பிள்ளைகளின் தந்தை, நீங்கள் என்னில் உள்ளவர், நான் உங்களில் உள்ளவர்'


• ياعلى , ثلاث من لم يكن فيه لم يتم عمله : ورع يحجزه عن معاصى الله عز وجل , وخلق يداري به الناس وحلم يرد به جهل الجاهل
• 'அலீயே! மூன்று விடயங்கள் எவரிடம் இல்லையோ அவரது அமல் முழுமை பெறாது: அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலிருந்து அவரைத் தடுக்கும் பேணுதல், மனிதர்களுடன் அன்பாக உறவாடும் நற்பண்பு, அறிவிலியின் அறியாமைக்குப் பதிலளிக்கும் ஞானம்'


• ياعلى , ما سألت شيئا في صلاتي إلا أعطانِى الله وما سألت لنفسي شيئا إلا وقد سألت لك
• 'அலீயே! நான் அல்லாஹ்விடம் கேட்ட அனைத்தையும் அவன் எனக்கு வழங்கியுள்ளான்> ஆயினும் நான் உங்களுக்காவே அன்றி எனக்காக எதையும் கேட்டதில்லை'


• ياعلى , ثلاث فرحات للمؤمن في الدنيا : لقاء الاخوان والإفطار من الصيام , والتهجد آخر الليل
• 'அலீயே! துன்யாவில் ஒரு முஃமினுக்கு மூன்று மகிழ்ச்சிகள் உள்ளன: சகோதரர்களைச் சந்தித்தல், நோன்பு திறத்தல், இரவின் கடைசியில் தஹஜ்ஜுத் தொழுதல்'


• ياعلى , أنهاك عن ثلاث خصال: الحسد والحرص والكبر
• 'அலீயே! மூன்று விடயங்களை நான் உங்களுக்கு விலக்குகின்றேன்: பொறாமை, பேராசை, பெருமை'


• ياعلى , إياك واليمين الفاجرة فإنها منفقة للسلعة وممحقة للرزق والعمر
• 'அலீயே! கெட்ட சத்தியத்தை நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன். அது நோயை ஏற்படுத்தக் கூடியது, ரிஸ்க்கையும் ஆயுளையும் அழிக்கக் கூடியது'


• ياعلى , أربع خصال من الشقاء: جمود العين وقسوه القلب وبعد الأمل وحب البقاء
• 'அலீயே! நான்கு விடயங்கள் மூதேவித்தனத்தில் உள்ளவையாகும்: கண்கள் வரண்டு விடுதல், உள்ளம் இறுக்கமடைதல், ஆசைகள் அதிகரித்தல், உலகை ஆசை கொள்ளல்'


• ياعلى , لا تدخل قريةً حتي تقول: اَللَّهُمَّ إنِّي أسْألُكَ خَيْرَهَا وَخَيْرَ مَنْ فِيهَا وَأعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَنْ فِيهَا
• 'அலீயே! ஒரு கிராமத்தில் நீங்கள் நுழைந்தால் இவ்வாறு கூறுங்கள்: 'யாஅல்லாஹ்! இவ்வூரின் நன்மையினையும் இதிலுள்ளவர்களின் நன்மையினையும் உன்னிடத்தில் வேண்டுகின்றேன். இவ்வூரின் தீமையையும் இதிலுள்ளவர்களின் தீமையையும் விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன்'


• ياعلى , اذا مات العبد قال الناس: مَا خَلَّفَ وقالت الملائكة مَا قَدَّمَ
• 'அலீயே! ஓர் அடியான் மரணித்து விட்டால்> 'அவன் சென்று விட்டான்' என மனிதர்கள் கூறுவார்கள்> 'அவன் வந்து விட்டான்' என மலக்குகள் கூறுவார்கள்”


• ياعلى , اذا قل رزقك فأكثر من الإستغفار وأكثر من قول لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ الْعَلِىِّ الْعَظِيمِ
• 'அலீயே! உங்களது ரிஸ்க் குறைந்து விட்டால் இஸ்திஃக்பாரை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும், லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம் (மகத்துவமும் உயர்வும் பொருந்திய அல்லாஹ்வைக் கொண்டேயன்றி எவ்வித சக்தியும் வலிமையும் இல்லை) என்று கூறுவதையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்'


• ياعلى , ثلاثة لا تؤخرها : الصلاة اذا أتت والجنازة اذا حضرت والأيم اذا وجدتَ لها كفؤا
• 'அலீயே! மூன்று விடயங்களை பிற்படுத்தாதீர்கள்: தொழுகையை, அதன் நேரம் வந்து விட்டால். ஜனாஸாவை, அது தயாராகி விட்டால். கன்னிப் பெண்ணை, அவளுக்குப் பொருத்தமானவனை நீங்கள் பெற்றுக் கொண்டால்'


• ياعلى , نوم العلم أفضل من عبادة العابد الجاهل
• 'அலீயே! ஓர் அறிஞரின் தூக்கம் அறிவிலியான வணக்கவாளியின் இபாதத்தை விட மிகச் சிறந்தது'


• ياعلى , عليك بصلاة الليل , عليك بصلاة الليل , عليك بصلاة الليل
• 'அலீயே! இரவுத் தொழுகையைப் பேணி வருவீராக, இரவுத் தொழுகையைப் பேணி வருவீராக, இரவுத் தொழுகையைப் பேணி வருவீராக'


• ياعلى , العقل ما اكتسب به الجنة وطُلب به رضي الرحمن
• 'அலீயே! புத்தியென்பது சுவர்க்கத்தை அதைக் கொண்டு உழைப்பதும், இரக்கமுள்ள அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அதைக் கொண்டு தேடுவதுமாகும்'


• ياعلى , ألا أنبئك بشر الناس؟ قلت : بلي يارسول الله , قال: من لا يغفر الذنب ولا يقيل العثرة , ألا أنبئك بشر من ذلك ؟ قلت: بلي يارسول الله , قال: من لا يؤمن من شره ولا يرجي خيره
• 'அலீயே! கெட்ட மனிதன் யாரென்று நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?' என நபி (ஸல்) அவர்கள் வினவிய போது, 'ஆம் யாரசூலல்லாஹ்' என நான் கூறினேன். 'பாவங்களுக்காக மன்னிப்புத் தேடாதவனும், பிழைகளைத் திருத்திக் கொள்ளாதவனும்' என்றார்கள் நபியவர்கள். மீண்டும் கேட்டார்கள்: 'இவர்களை விடவும் மிகக் கெட்ட மனிதனைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்க வேண்டாமா?', 'ஆம் யாரசூலல்லாஹ்' என நான் கூறிய போது, நபியவர்கள் குறிப்பிட்டார்கள்: 'எவனது தீமையைக் கண்டு மக்கள் பயப்படுகின்றார்களோ, எவனிலிருந்து நன்மையை எதிர்பார்க்கவே முடியாதோ அவன்தான்'


• ياعلى , ألا أخبركم بأشبهكم بي خلقا؟ قال: بلي يارسول الله قال أحسنكم خلقا وأعظمكم حلما وأبركم لقرابته وأشدكم من نفسه انصافا
• 'அலீயே! உங்களில் தோற்றத்தில் எனக்கு மிகவும் ஒப்பானவர் யார் என்று நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?' என நபியவர்கள் கேட்ட போது, 'ஆம் யாரசூலல்லாஹ்' என்றார்கள் அலீ (அலை) அவர்கள். நபியவர்கள் கூறினார்கள்: 'உங்களில் மிக அழகான நற்குணமுடையவர், உங்களில் அதிக இரக்கமுள்ளவர், உங்களில் தனது குடும்பத்தாருக்கு அதிக உபகாரம் புரிபவர், நீதியை நிலைநாட்டுவதில் தன் ஆன்மாவுடன் மிகக் கண்டிப்பாக நடந்து கொள்பவர்'


• ياعلى , حق الولد علي والده أن يحسن اسمه وأدبه ويضعه موضعا صالحا , وحق الوالد علي ولده أن لا يسميه باسمه ولا يمشي بين يديه ولا يجلس أمامه
• 'அலீயே! பிள்ளைக்கு பெற்றோர் ஆற்ற வேண்டிய கடமை, அழகான பெயரிடுவது, ஒழுக்கமாக வளர்ப்பது, நல்ல இடத்தில் பிள்ளையை அமர்த்துவது என்பவையாகும். பெற்றோருக்கு பிள்ளை ஆற்ற வேண்டிய கடமை, அவர்களது பெயர் கூறி அழைக்காதிருப்பது, அவர்களுக்கு முந்திக் கொண்டு நடந்து செல்லாதிருப்பது, அவர்களுக்கு முன்னிலையில் அமராதிருப்பது என்பனவாகும்'


• ياعلى , لعن الله والدين حملا ولدهما علي ما يلزم الولد لهما من عقوقهما
• 'அலீயே! பெற்றோருக்கு கொடுமை புரியும் அளவுக்கு பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோரை அல்லாஹ் சபிப்பானாக'


• ياعلى , رحم الله والدين حملا ولدهما علي برهما
• 'அலீயே! பிள்ளைகளை நல்வழியில் வளர்க்கும் பெற்றோருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக”


• ياعلى , من كفي يتيما في نفقته بماله حتي يستغني وجبت له الجنة البتة
• 'அலீயே! தனது செல்வத்தின் மூலம் ஓர் அநாதையைப் போஷித்து வளர்ப்பவருக்கு உறுதியாகவே சுவர்க்கம் வாஜிபாகி விட்டது'



• ياعلى , إتق دعوة المظلوم فإنه يسأل الله تعالي حقه وان الله تعالي لن يضيع لذي حقٍّ حقَّه
• 'அலீயே! அநீதியிழைக்கப்பட்டவனின் துஆவைப் பயந்து கொள்ளுங்கள், அவன் தனது உரிமையைக் கேட்கின்றான்.
• நிச்சயமாக அல்லாஹ் உரிமையுடையவனுக்கு அவனது உரிமையைப் பாழாக்க மாட்டான்'


• ياعلى , لا فقر أشد من الجهل ولا مال أعود من العقل ولا وحدة أوحش من العجب ولا عقل كالتدبير ولا ورع كالكف عن محارم الله وعما لا يليق ولا حسب كحسن الخلق ولا عبادة مثل التفكر
• 'அலீயே! அறியாமையை விடக் கொடிய ஏழ்மை இல்லை, புத்தியை விடச் சிறந்த செல்வம் இல்லை, பெருமையை விடக் கடிய தனிமை இல்லை, சிந்திப்பதை விடச் சிறந்த புத்தியில்லை, அல்லாஹ் ஹராமாக்கியவற்றையும் பொருத்தமற்றவற்றையும் தவிர்ந்து கொள்வதை விடச் சிறந்த பேணுதல் இல்லை, நற்குணத்தை விடச் சிறந்த எண்ணம் இல்லை, முன்யோசனையை விடச் சிறந்த இபாதத் இல்லை'


• ياعلى , تعلم القرآن وعلمه الناس فإن مت حجت الملائكة الي قبرك كما يحج الناس إلي بيت العتيق
• 'அலீயே! அல்குர்ஆனைக் கற்றுக் கொண்டு அதனை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அவ்வாறாயின்> நீங்கள் மரணித்தால்> கஃபாவை மனிதர்கள் சுற்றி வருவது போன்று மலக்குகள் உங்களது கப்றைச் சுற்றி வருவார்கள்”


• ياعلى , سيد الأعمال ثلاث خصال: إنصافك الناس من نفسك ومواساتك الأخ في الله عز وجل وذكرك الله تبارك وتعالي علي كل حال
• 'அலீயே! அமல்களில் சிறந்தது மூன்று விடயங்களாகும்: மனிதர்களுடன் மிக நீதமாக நடந்து கொள்வது, அல்லாஹ்வின் விடயத்தில் உங்களது சகோதரரை உங்களுக்கு சமத்துவமாக நடத்துவது, எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுபடுத்திக் கொள்வது'


• ياعلى , ثلاث خصال من حقائق الإيمان: الإنفاق في الإقتار وإنصاف الناس من نفسك وبذل العلم للمتعلم
• 'அலீயே! மூன்று விடயங்கள் ஈமானின் யதார்த்தத்தில் உள்ளவையாகும். தேவையுள்ளோருக்கு செலவிடுவது, மனிதர்களுடன் மிக நீதமாக நடந்து கொள்வது, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு அறிவைக் கற்றுக் கொடுப்பது'


• ياعلى , ثلاث خصال من مكارم الأخلاق: تعطي من حرمك وتصل من قطعك وتعفو عمن ظلمك
• 'அலீயே! மூன்று விடயங்கள் நற்பண்பாடுகளில் உள்ளவையாகும்: உங்களுக்குத் தர மறுத்தவனுக்கும் வழங்குவது, உங்களது உறவைத் துண்டித்து நடப்பவனுடனும் சேர்ந்து நடப்பது, உங்களுக்கு அநீதியிழைத்தவனையும் மன்னித்து விடுவது'


• ياعلى , جزاك الله خيرا , فكَّ الله رهانك كما فككت رهان أخيك , أنه ليس من ميت يموت وعليه دَين وهو مرتهن بدينه فمن فكَّ رهان ميت فك الله رهانه يوم القيامة
• 'அலீயே! அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக. உங்களது சகோதரரது அடமானங்களை நீங்கள் விடுவித்தது போன்று உங்களது அடமானங்களை அல்லாஹ் விடுவிப்பானாக. தன் மீது கடன் உள்ள நிலையில் ஒருவர் மரணித்தால் அவர் அக்கடன் மீது அடமானம் வைக்கப்பட்டுள்ளார். மய்யித்தினுடைய அடமானத்தை யார் விடுவிக்கின்றாரோ அவரது அடமானத்தை அல்லாஹ் மறுமையில் விடுவிக்கின்றான்”


• ياعلى , حرم الله الجنة علي كل فاحشٍ بَذِىٍّ لا يبالي ما قال ولا ما قيل له
• 'அலீயே! தான் சொல்வதையோ தனக்குச் சொல்லப்படுவதையோ சற்றும் முக்கியத்துவப்படுத்தாது நடந்து கொள்ளும் மரியாதையற்ற கெட்ட மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி விட்டான்'


• ياعلى , الناس من شجر شتي وأنا وأنت من شجرة واحدة
• 'அலீயே! மனிதர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறு மரங்களிலிருந்து தோன்றியவர்கள்> நானும் நீங்களும் ஒரே மரத்திலிருந்து தோன்றியுள்ளோம்”


• ياعلى , طوبي لمن طال عمره وحسن عمله
• 'அலீயே! எவரது ஆயுள் அதிகமாகி அவரது அமல்களும் அழகாக இருக்கின்றனவோ அவருக்கு சுபசோபனம் உண்டாவதாக'


• ياعلى , سيقاتلك القئة الباغية وأنت علي الحق فمن لم ينصرك يومئذ فليس مني
• 'அலீயே! அழிச்சாட்டியம் புரியம் ஒரு கூட்டம் உங்களை பிற்காலத்தில் கொல்லும், அப்போது நீங்கள்தான் உண்மையின் பக்கம் இருப்பீர்கள், அச்சந்தர்ப்பத்தில் யார் உங்களுக்கு உதவவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவரில்லை'


• ياعلى , بادر بأربع قبل أربع : شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك
• 'அலீயே! நான்கு விடயங்கள் வருமுன் நான்கு விடயங்களை துரிதப்படுத்திக் கொள்ளுங்கள்: முதுமை வருமுன் இளமையையும், நோய் வருமுன் ஆரோக்கியத்தையும், ஏழ்மை வருமுன் செல்வத்தையும், மரணம் வருமுன் வாழ்வையும்'


• ياعلى , أقلل من الدَّين تعش حُرا , فإن الدَّين عبودية وهو الذي هدم الدِّين وهو ذل بالنهار وهم بالليل
• 'அலீயே! கடன் பெறுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்: சுதந்திரமுள்ளவராக நீங்கள் வாழ்வீர்கள். கடன் என்பது ஓர் அடிமைத்தளையாகும். அது மார்க்கத்தை தகர்த்து விடும், அது பகலில் இழிவையும் இரவில் கவலையையும் தரும்'


• ياعلى , إن الله تبارك وتعالي قد أذهب بالإسلام نخوة الجاهلية وتفاخرهم بآبائهم ألا وإن الناس من آدم وآدم من تراب وأكرمهم عند الله أتقاهم
• 'அலீயே! நிச்சயமாக அல்லாஹ் இஸ்லாத்தின் மூலமாக அறியாமையின் முரட்டுத்தனத்தையும், தமது மூதாதையரைக் கொண்டு பெருமையடிக்கும் வழக்கத்தையும் நீக்கிவிட்டான். மனிதர்கள் அனைவரும் ஆதமிலிருந்து வந்தவர்கள். ஆதம் மண்ணிலிருந்து தோன்றியவர். எனவே, அல்லாஹ்விடம் அதிக கண்ணியத்திற்குரிய மனிதர், அவர்களில் அதிக இறையச்சமுள்ளவர்தான்'


• ياعلى , واحذر ثوبك من النجاسة فمنها شدة سكرات الموت واحذر الحرام فمنه شدة عذاب القبر
• 'அலீயே! உங்களது ஆடைகளை நஜீஸிலிருந்து துப்புரவாக வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில், அதிலே கடுமையான மரணத்தின் மறதி இருக்கிறது. அவ்வாறே ஹராமையும் தவிர்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், அதிலே கடுமையான கப்றின் வேதனை இருக்கிறது'


• ياعلى , عليك بالصدق وإن ضرك في العاجل كان فرجا لك في الآجل
• 'அலீயே! இவ்வுலகில் உங்களுக்குப் பாதிப்பாய் இருந்தாலும் உண்மையே பேசுங்கள், அது மறுமையில் உங்களுக்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தரும்'


• ياعلى , الدنيا سجن المؤمن وجنة الكافر
• 'அலீயே! துன்யா என்பது முஃமினுக்கு சிறைக்கூடமும் காபிருக்கு சுவர்க்கமுமாகும்'


• ياعلى , إن الاسلام عريان ولباسه الحياء وزينته الوفاء ومروته العمل الصالح وعماده الورع ولكل شيء أساس وأساس الاسلام حبنا أهل البيت
• 'அலீயே! இஸ்லாம் நிர்வாணமாக உள்ளது. அதன் உடை நாணமாகும், அதன் அலங்காரம் அல்லாஹ்வுக்கு வழிப்படுதலாகும், அதன் தன்மை நல்லமல்களாகும், அதன் தூண் பேணுதலாகும்.
• எல்லா விடயங்களுக்கும் ஓர் அடித்தளமுள்ளது. இஸ்லாத்தின் அடித்தளம் அஹ்லுல்பைத்தை நேசம் கொள்வதாகும்'


• ياعلى , أنين المؤمن المريض تسبيح وصياحه تهليل ونومه علي الفراش عبادة وتقلبه من جنب الي جنب جهاد في سبيل الله , فإن عوفى يمشي في الناس وما عليه من ذنب
• 'அலீயே! நோயாளியான முஃமினின் முனகல் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) என்பதாக இருக்கும். அவனது ஓலம் தஹ்லீல் (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்பதாக இருக்கும். விரிப்பின் மீதான அவனது தூக்கம் இபாதத்தாக இருக்கும். அவன் அங்குமிங்குமாகப் புரள்வது அல்லாஹ்வுடைய பாதையிலான ஜிஹாதாக இருக்கும். அவன் நோயிலிருந்து சுகம் பெறும் போது, எவ்விதப் பாவமுமற்றவனாக மனிதர்களிடையே வெளிப்படுவான்'


• ياعلى , تعلم القرآن وعلمه الناس فلك بكل حرف عشر حسنات فإن مت مت شهيدا
• 'அலீயே! அல்குர்ஆனைக் கற்று அதனை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அதன் ஒவ்வோர் எழுத்துக்கும் உங்களுக்கு பத்து நன்மைகள் உள்ளன. இதேநிலையில் நீங்கள் மரணித்தால், ஷஹீதாக மரணிப்பீர்கள்'


• ياعلى الفقر الموت الأكبر , فقيل له : الفقر من الدينار والدرهم؟ فقال: الفقر من الدين
• 'அலீயே! வறுமை என்பது மிகப்பெரும் மரணமாகும்' என நபியவர்கள் கூறிய போது, 'தீனார், திர்ஹம் என்பவற்றிலான வறுமையா?' எனக் கேட்கப்பட்டது. 'இல்லை, மார்க்கத்தில் ஏற்படும் வறுமை' என நபியவர்கள் பதிலிறுத்தார்கள்.


• ياعلى , كل عين باكية يوم القيامة إلا ثلاثة أعين : عين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله وعين فاضت من خشية الله
• 'அலீயே! மூன்று கண்களைத் தவிர மற்றெல்லாக் கண்களும் மறுமை நாளில் அழுது கொண்டிருக்கும். அல்லாஹ்வுடைய பாதையில் விழித்திருந்த கண், அல்லாஹ் ஹராமாக்கியவற்றை விட்டும் பார்வையைத் தாழ்த்திக் கொண்ட கண், அல்லாஹ்வுடைய பயத்தினால் கண்ணீர் விட்டழுத கண்'


• ياعلى , طوبي لصورة نظر الله اليها تبكي علي ذنب لم يطلع علي ذلك الذنب أحد غير الله
• 'அலீயே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்திராதளவு இரகசியமாக தான் செய்த ஒரு பாவத்தை நினைத்து அழும உருவத்தை அல்லாஹ் பார்க்கின்றான். அந்த உருவத்திற்கு சுபசோபனம் உண்டாவதாக”


• ياعلى , أوصيك في نفسك بخصال فاحفظها عني ثم قال: اللهم أعنه . أما الأولي: فالصدق ولا تخرجن من فيك كذبة أبدا , والثانية: الورع ولا تجتري علي خيانة أبدا , والثالثة: الخوف من الله عز وجل كأنك تراه , والرابعة: كثرة البكاء من خشية الله يبني لك بكل دمعة ألف بيت في الجنة , والخامسة: بذل مالك ودمك دون دينك , والسادسة: الأخذ بسنتي في صلاتي وصومي وصدقتي , أما الصلاة فالخمسون ركعة وأما الصيام فثلاثة أيام في الشهر , الخميس في أوله والأربعاء في وسطه والخميس في آخره , وأما الصدقة فجهدك حتي يقال قد أسرفت ولم تسرف , وعليك بصلاة الليل وعليك بصلاة الزوال وعليك بصلاة الزوال وعليك بصلاة الزوال وعليك بتلاوة القرآن علي كل حال وعليك برفع يديك في صلاتك وتقليبهما وعليك بالسواك عند كل وضوء وعليك بمحاسن الاخلاق فاركبها ومساوي الأخلاق فاجتنبها فإن لم تفعل فلا تلومن إلا نفسك
• 'அலீயே! நான் உங்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக சில விடயங்களை உபதேசிக்கின்றேன். அவற்றைப் பேணி வாருங்கள்' என்று கூறிய பின், 'யாஅல்லாஹ்! இவ்வுபதேசங்களை அவர் பேணி வர அவருக்கு உதவுவாயாக' எனப் பிரார்த்தித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். பின்பு கூறினார்கள்: 'முதலாவது: உண்மை, உங்களது வாயிலிருந்து எப்போதும் பொய் வெளிப்படக் கூடாது. இரண்டாவது: பேணுதல், எப்போதும் யாருக்கும் மோசடி புரியாதீர்கள். மூன்றாவது: அல்லாஹ்வை நீங்கள் காண்பது போன்று அவனுக்குப் பயப்படுங்கள். நான்காவது: அல்லாஹ்வின் பயத்தினால் அதிகமாக அழுங்கள், உங்களது ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்கும் சுவர்க்கத்தில் ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. ஐந்தாவது: உங்களது மார்க்கத்துக்காக உங்களது செல்வத்தையும் உயிரையும் அர்ப்பணியுங்கள். ஆறாவது: எனது தொழுகை, எனது நோன்பு, எனது ஸதகா என்பவற்றிலான எனது வழிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடியுங்கள். அறிந்து கொள்ளுங்கள்: தொழுகை என்பது, ஐம்பது ரகஅத்துகளாகும். அறிந்து கொள்ளுங்கள்: நோன்பு என்பது, ஒரு மாதத்தின் மூன்று தினங்களாகும். அவை மாதத்தின் ஆரம்பத்திலுள்ள வியாழக்கிழமையில், அதன் நடுப்பகுதியிலுள்ள புதன்கிழமையில், அதன் இறுதிப்பகுதியிலுள்ள வியாழக்கிழமையில். அறிந்து கொள்ளுங்கள்: ஸதகா என்பது, நீங்கள் வீண்விரயம் செய்யாதிருக்கும் நிலையில், 'நீங்கள் வீண்விரயம் செய்கிறீர்கள்' என்று கூறப்படுமளவுக்கு நீங்கள் முயற்சிப்பதாகும். இரவு நேரத் தொழுகையைப் பேணி வாருங்கள். மேலும், ஸவால் நேரத் தொழுகையையும் பேணி வாருங்கள். ஸவால் நேரத் தொழுகையையும் பேணி வாருங்கள். ஸவால் நேரத் தொழுகையையும் பேணி வாருங்கள். எல்லா நிலைகளிலும் அல்குர்ஆன் ஓதுவதைக் கடைப்பிடித்து வாருங்கள். உங்களது தொழுகையில் உங்களிரு கரங்களை ஏந்திப் பிரார்த்திப்பதையும் தொடர்ந்து கடைப்பிடித்து வாருங்கள். ஒவ்வொரு முறை வுழுச் செய்யும் போதும் பற்துலக்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நற்பண்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்து தீயொழுக்கங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில் உங்களது ஆன்மா இழிவுக்குள்ளாக்கப்பட்டு விடும்


• 'ياعلى , احفظ عني وصيتي كما حفظتها عن جبرئيل (ع) عن رب العالمين جل جلاله فقد حذرتك أصل كل بلية وأمرتك بأصل كل نعمة جليلة وأعطيتك في هذه الوصية علم الأولين والآخرين والحمد لله رب العالمين
• 'அலீயே! அகில உலக இரட்சகனான அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் கொண்டு வந்த உபதேசத்தை நான் பேணி வருவது போல், நான் உங்களுக்குக் கூறும் உபதேசத்தை நீங்கள் பேணி வாருங்கள்: எல்லா விதமான சோதனைகளின் அடிப்படையையும் நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன். தெளிவான எல்லாவித அருட்கொடைகளின் அடிப்படையையும் நான் உங்களுக்கு ஏவுகின்றேன். இந்த உபதேசத்தின் மூலமாக முன்னோரினதும் பின்னோரினதும் அறிவை உங்களுக்கு நான் வழங்கி விட்டேன். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)'

• ياعلى , من حفظ من أمتي أربعين حديثا يطلب بذلك وجه الله عز وجل والدار الآخرة حشره الله يوم القيامة مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا . فقال على (ع) يا رسول الله , أخبرني ما هذه الاحاديث , فقال: < أن تؤمن بالله وحده لا شريك له وتعبده ولا تعبد غيره , وتقيم الصلاة بوضوء سابغ في مواقيتها ولا تؤخرها فإن في تأخيرها من غير علة غضب الله عز وجل , وتؤدي الزكاة وتصوم شهر رمضان , وتحج البيت اذا كان لك مال وكنت مستطيعا , وأن لا تعق والديك , ولا تأكل مال اليتيم ظلما ولا تأكل الربا ولا تشرب الخمر ولا شيئا من الأشربة المسكرة , ولا تزني ولا تلوط , ولا تمشي بالنميمة ولا تحلف بالله كاذبا ولا تسرق ولا تشهد شهادة الزور لأحد قريبا كان أو بعيدا وأن تقبل الحق ممن جاء به صغيرا كان أو كبيرا وأن لا تركن إلي ظالم وإن كان حميما قريبا وأن لا تعمل بالهوي ولا تقذف المحصنة ولا ترائي فإن أيسر الرياء شرك بالله عز وجل , وأن لا تقول لقصير: يا قصير , ولا لطويل : يا طويل تريد بذلك عيبه , وأن لا تسخر من أحد من خلق الله وأن تصبر علي البلاء والمصيبة , وأن تشكر نعم الله التي أنعم بها عليك وأن لا تأمن عقاب الله علي ذنب تصيبه , وأن لا تقنط من رحمة الله وأن تتوب الي الله عز وجل من ذنوبك فإن التائب من ذنوبه كمن لا ذنب له , وأن لا تصر علي الذنوب مع الإستغفار فتكون كالمستهزئ بالله وآياته ورسله , وأن تعلم أن ما أصابك لم يكن ليخطئك وأن ما أخطأك لم يك ليصيبك , وأن لا تطلب سخط الخالق برضي المخلوق , وأن لا تؤثر الدنيا علي الآخرة لأن الدنيا فانية والآخرة باقية وأن لاتبخل علي أخوانك بما تقدر عليه , وأن تكون سريرتك كعلانيتك , وأن لا تكون علانيتك حسنة وسريرتك قبيحة , فإن فعلت ذلك كنت من المنافقين , وأن لا تكذب وأن لا تخالط الكذابين , وأن لا تغضب اذا سمعت حقا , وأن تؤدب نفسك وأهلك وولدك وجيرانك علي حسب الطاقة وأن تعمل بما علمت ولا تعاملن أحدا من خلق الله عز وجل إلا بالحق وأن تكون سهلا للقريب والبعيد وان لا تكون جبارا عنيدا وأن تكثر من التسبيح والتهليل والدعاء وذكر الموت وما بعده من القيامة والجنة والنار , وأن تكثر من قراءة القرآن وتعمل بما فيه , وأن تستغنم البر والكرامة بالمؤمنين والمؤمنات , وأن تنظر إلي كل ما لا ترضي فعله لنفسك فلا تفعله بأحد من المؤمنين ولا تمل من فعل الخير , وأن لا تثقل علي أحد , وأن لا تمن علي أحد اذا أنعمت عليه , وأن تكون الدنيا عندك سجنا حتي بجعل الله لك جنة > فهذه أربعون حديثا من استقام عليها وحفظها عني من أمتي دخل الجنة برحمة الله وكان من أفضل الناس وأحبهم إلي الله عز وجل بعد النبيين والوصيين وحشره الله يوم القيامة مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا .
• 'அலீயே! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மறுமையின் வீட்டையும் எதிர்பார்த்தவராக யார் எனது உம்மத்திற்காக என்னுடைய நாற்பது ஹதீஸ்களைப் பாதுகாத்துக் கொள்கின்றாரோ அவர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷுஹதாக்கள், நல்லடியார்கள் ஆகியோருடன் எழுப்பப்படுவார். இவர்கள் அனைவரும் அவருக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள்' அலீ (அலை) அவர்கள், 'அந்த ஹதீஸ்களை எனக்கு அறிவித்துத் தாருங்கள் யாரசூலல்லாஹ்!' எனக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒருவன், தனித்தவன், இணைதுணையற்றவன் என்பதை நம்பிக்கை கொள்ளல், அவனை வணங்குதல், அவனல்லாதவற்றை வணங்காதிருத்தல். முழுமையான வுழுவுடன் தொழுகைகளை அவற்றிற்குரிய நேரத்தில் நிறைவேற்றல், அவற்றைப் பிற்படுத்தாதிருத்தல், - நிச்சயமாக காரணமின்றித் தொழுகையைப் பிற்படுத்துவதில் அல்லாஹ்வின் கோபம் இருக்கின்றது. - ஸக்காத்தை நிறைவேற்றல், ரமழான் மாதத்தில் நோன்பிருத்தல், உங்களிடம் போதிய செல்வமும் சக்தியும் இருந்தால் அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்தல், உங்களது பெற்றோரைத் துன்புறுத்தாதிருத்தல், அநாதைகளின் சொத்தை அநீதியாக உண்ணாதிருத்தல், வட்டி உண்ணாதிருத்தல், மதுபானத்தையும், போதை தரும் எந்தவொரு பானத்தையும் அருந்தாதிருத்தல், விபசாரத்திலோ தன்னினச் சேர்க்கையிலோ ஈடுபடாதிருத்தல், கோள் மூட்டாதிருத்தல், அல்லாஹ்வின் பெயரில் பொய்ச்சத்தியம் செய்யாதிருத்தல், திருடாதிருத்தல், தெரிந்தவர், தெரியாதவர் யாராயினும் ஒருவருக்கெதிராக பொய்ச்சாட்சி கூறாதிருத்தல், சிறியவரோ பெரியவரோ எவர் உண்மையைக் கொண்டு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளல், நெருங்கிய உறவினனாக இருந்தாலும் அநீதியாளனுக்கு ஆதரவு வழங்காதிருத்தல், மனோஇச்சைக்குக் கட்டுப்பட்டு நடவாதிருத்தல், பத்தினிப் பெண் மீது அவதூறு கூறாதிருத்தல், முகஸ்துதிக்காக எதையும் செய்யாதிருத்தல் - முகஸ்துதி என்பது சிறிய ஷிர்க்காகும். - உயரம் குறைந்தவனை கட்டயனே என்றோ, உயரம் கூடியவனை நெடியவனே என்றோ அவர்களைக் குறை கூறும் நோக்கில் அழைக்காதிருத்தல், அல்லாஹ்வுடைய படைப்புகளில் எதனையும் பரிகாசம் செய்யாதிருத்தல், சோதனைகள் மற்றும் கஷ்டங்களின் போது பொறுமையாயிருத்தல், உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி தெரிவித்தல், நீங்கள் செய்த பாவத்திற்காக அல்லாஹ் வழங்கவுள்ள தண்டனைகள் குறித்து அலட்சியம் காட்டாதிருத்தல், அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கையிழக்காதிருத்தல், உங்களது பாவங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுதல், - ஏனெனில், பாவமன்னிப்புத் தேடுபவன் பாவமே செய்யாதவனைப் போன்றாவான் - இஸ்திஃக்பார் தேடிக் கொண்டே பாவங்களில் ஈடுபடாதிருத்தல், - அவ்வாறு செய்தால் நீங்கள் அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதர்களையும் பரிகாசம் செய்பவர் போன்றாகி விடுவீர்கள். - உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களெல்லாம் உங்களைத் தவறு செய்யத் தூண்டுபவையல்ல என்பதை அறிந்து கொள்ளல், படைப்பினங்களின் திருப்திக்காக படைத்தவனின் கோபத்தைத் தேடிக் கொள்ளாதிருத்தல், மறுமையை விட இவ்வுலகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருத்தல், - ஏனெனில் இவ்வுலகம் அழிந்து விடக் கூடியது, மறுமையே நிரந்தரமானது – உங்களுக்கு சக்தியிருந்தும் உங்களது சகோதரர்களிடம் கஞ்சத்தனம் காட்டாதிருத்தல், உங்களது பகிரங்க நிலை போலவே உங்களது இரகசிய நிலையும் இருத்தல், உங்களது பகிரங்க நிலை அழகானதாகவும் இரகசிய நிலை இழிவானதாகவும் இல்லாதிருத்தல், - அவ்வாறு நீங்கள் செய்தால் நீங்கள் முனாபிக்காக ஆகிவிடுவீர்கள். - பொய்யுரைக்காதிருத்தல், பொய்யர்களுடன் கலக்காதிருத்தல், உண்மையைக் கேட்டு கோபப்படாதிருத்தல், இயலுமான வரையும் உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் உங்களது பிள்ளைகளையும் உங்களது அயலாரையும் ஒழுக்கமாகப் பயிற்றுவித்தல், நீங்கள் அறிந்துள்ளவற்றைக் கொண்டு அமல் செய்தல், முறையற்ற விதத்தில் அல்லாஹ்வின் படைப்புகளை வேலை வாங்காதிருத்தல், நெருங்கிய உறவினர்களுக்கும் தூரத்து உறவினர்களுக்கும் மென்மையானவராக இருத்தல், பிடிவாதமுள்ள அதிகாரியாக இல்லாதிருத்தல், தஸ்பீஹ், தஹ்லீல், துஆ, மரணத்தின் நினைவு, அதற்குப் பின்னுள்ள கியாமத், சுவர்க்கம், நரகம் முதலானi பற்றிய நினைவு என்பவற்றை அதிகப்படுத்திக் கொள்ளல், அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்தி அதிலுள்ளவாறு அமல் செய்தல், முஃமினான ஆண்கள் பெண்களுக்கு நன்மை செய்வதிலும் கொடை கொடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுதல், எதை உங்களுக்குச் செய்வதை விரும்பமாட்டீர்களோ அதை முஃமினான மற்றவர்களுக்கும் செய்யாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளல், நற்செயல்களை விட்டும் தூரமாகாதிருத்தல், எவர் மீதும் கடினமாக நடவாதிருத்தல், நீங்கள் ஒருவருக்கு வழங்கிய கொடை பற்றி சொல்லிக் காட்டாதிருத்தல், அல்லாஹ் உங்களுக்கு சுவர்க்கத்தைத் தயார்படுத்தும் வரை துன்யா உங்களிடத்தில் சிறைக்கூடமாக இருத்தல். இந்நாற்பது ஹதீஸ்கள் - யார் இவற்றைக் கடைப்பிடித்து எனது உம்மத்திற்காக பாதுகாத்து வருகின்றாரோ அவர் அல்லாஹ்வின் அருளால் சுவனம் நுழைவார். அவர், நபிமார்கள் இமாம்களை அடுத்து மனிதர்களில் மிகச் சிறந்தவராகவும், அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராகவும் இருப்பார். அல்லாஹ் அவரை மறுமை நாளில் நபிமார்கள், சித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் ஆகியோருடன் எழுப்புவான். இவர்கள் அனைவரும் அவருக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள்'