பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
கதீர் நிகழ்வு பற்றிய விளக்கம்
ஹிஜ்ரி 10 லே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய மாளிகையை சியாரத் செய்வதற்கு நிய்யத் வைக்கிறார்கள். நாயகத்தின் இந்த நிய்யத் பல்வகை பட்ட கபீலாக்கள்,மதீனாவை அன்டியிருந்த தாயிப்களுக்கு மத்தியிலும் சொல்லப்பட்டது, பெரும் தொகையான கூட்டம் இந்த இறை கட்டளையை (ஹஜ் கடமையை) நிறைவேற்றுவதற்றுவதற்கு மதீனாவை நோக்கி வந்தார்கள்.இது மாத்திரமே நபி (ஸல்) அவர்கள் தனது மதீனாவிற்கான முஹாஜிரத்தின் பின் நிறைவேற்றுகின்ற ஹஜ்ஜாஹும், இது வரலாற்றிலே பல்வேறு பெயர்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது, அவை பின்வருமாறு: ஹஜ்ஜதுல் விதா, ஹஜ்ஜதுல் இஸ்லாம், ஹஜ்ஜதுல் பலாக், ஹஜ்ஜதுல் கமால், ஹஜ்ஜதுல் தமாம்;.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பை நிறைவேற்றினார்கள். இரண்டு சாதாரன ஆடைகளை இஹ்ராம் ஆடையாக எடுத்துக் கொண்டார்கள். ஒன்றை தனது இடுப்பில் கட்டிக் கொண்டார்கள், மற்றயதை தனது அருமையான தோளில் போட்டுக் கொண்டார்கள், சனிக்கிழமை துல்கஹ்தா 24 அல்லது 25 ல் ஹஜ் செய்யக் கூடிய நோக்கில் கால்நடையாக மதீனாவை விட்டு வெளியேறினார்கள். பெண்கள் மற்றும் தங்களைச் சேர்ந்தவர்களையெல்லாம் ஒட்டகைச்சுமைகளில் ஏற்றிக் கொண்டார்கள். தனது குடும்பத்தினர், முஹாஜிர்கள், அன்ஷார்கள், அரபுக் கபீலாக்கள், மற்றும் மக்களின் பெரும் கூட்டம் பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். அதிகாமானோர் தொற்றுநோய் காரணமாக இந்த பிரயாணத்தை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் மாபெரும் கூட்டம் இந்தப் பிரயாணத்தில் கலந்து கொண்டது. இதில்கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 11400, 120-124 ஆயிரம் மற்றும் அதனைவிடவும் அதிகமானவர்கள் என்றும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஆனாலும் மக்காவில் இருந்தவர்கள் அலி(அலை) மற்றும் அபூ மூஸா அஸ்அரியுடன் யமனில் இருந்து வந்தவர்கள் மதீனாவில் இருந்து வந்த குழுவுடன் இணைந்து கொண்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கை வேறாகும்.
ஹஜ் கடமையை நிறைவேற்றியதற்கு பின்னர் நபிகளார் மாபெரும் கூட்டத்தினருடன் மதீனாவிற்கு திரும்பிச் செல்வதற்குரிய அழைப்பை விடுத்தார்கள். கதீர் கும் என்ற இடத்தை அடைந்தபின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானலோகத்திலிருந்து பூமியை நோக்கி வந்தார்கள் அவர்கள் இறைவனிடம் இருந்து இந்த குர்ஆன் வசனத்தை கொண்டு வந்தார்கள். :(யா அய்யுஹர் ரஸுல் பல்லிக் மா உன்ஸில இலைக மின் ரப்பிக் வ இன் லம் தப்அல் பமா பல்லக்த ரிஸாலதஹு வல்லாஹு யஹ்ஸிமுக மினன் னாஸ் இன்னல்லாஹா லாயஹ்தில் கௌமல் காபிரீன்) மாயிதா:67
தமிழ் கருத்து: 'நபியே! உம் இரட்சகனிடம் இருந்து உமக்கு இறக்கி வைக்கப்பட்டதை, எத்திவைப்பீராக நீர் அவ்வாறு செய்யாவிடில், அவனுடைய தூதை முற்றிலும் எற்றிவைக்கவில்லை. மனிதர்களின் கெடுதியில் இருந்து இறைவன் உங்களை பாதுகாப்பான் நிச்சயமாக இறைவன் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்'. ஜுஹ்பா (இவ்விடத்தில் இருந்தே அதிகமான இடங்களுக்கான பாதைகள் பிரிந்து செல்கின்றன). நபிகளார், மற்றும் அவர்களின் தோழர்கள் துல் ஹஜ்18 வியாழக்கிழமை இந்த இடத்தை வந்தடைந்தார்கள்.
ஜிப்ராயீல் (அலை) மூலம் இறைவனிடம் இருந்து நபியவர்களிற்கு, அலி (அலை) அவர்களை வலி, இமாமாக அறிமுகப்படுத்தி, அவர்களைப் பின்பற்றுவது வாஜிப் போன்றவற்றை தனது படைப்புக்கு சொல்லுமாறு கட்டளை வந்தது.
யாரெல்லாம் நபியவர்களின் குழுவை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களோ, மற்றும் நபியவர்களுக்கு முன்னால் சென்றார்களோ அவர்கள் அனைவரும் நபியவர்கள் நின்ற இடத்தை வந்தடைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்;: அங்குள்ள கரடு முரடுகளை சரிசெய்யும்படி கூறினார்கள். காலநிலை மிகவும் சூடாக இருந்தது. மக்கள் தங்களிடம் இருந்த சுமைகளில் சிலதை கால்களின் கீலும் தலைகளிற்கு மேலும் வைத்துக் கொண்டார்கள். நபிகளாரின் இருக்கைக்காக ஒரு கூடாரத்தை ஏற்பாடு செய்தார்கள்.
லுஹர் தொழுகைக்;கான அதான் கூறப்பட்டது. நபிகளார் தங்களோடிருந்தவர்களுடன் லுஹர் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்தபின் ஒட்டகங்களின் முதுகுகளில் பிரயாணத்திற்காக உபயோகிக்கப்படுகின்றவைகளைக் கொணடு ஒரு மேடை போன்ற இடம் உருவாக்கப்பட்டது.
நபிகளார் உரத்த குரலில் தங்களோடு கூடியிருந்தவர்களின் கவனத்தை தன் பக்கத்திற்கு கொண்டுவந்தார்கள் அதன் பின் இவ்வாறு தனது உரையை ஆரம்பித்தார்கள்: ('எல்லாப் புகழும் இறைவனிற்கே உரியதாகும், அவனிடம் இருந்து உதவி தேடுகின்றோம், அவனை ஈமான் கொண்டவர்களாக இருக்கின்றோம், அவனின் மீது பொறுப்புச்சாட்டியவர்களாக இருக்கின்றோம். தீய செயல்களில் இருந்து அவனிடம் பாதுகாவல் தேடுகின்றோம். வழிதவறியோருக்கு அவனையன்றி வேறுபாதுகாவலர் இல்லை. அவன் யாரையெல்லாம் நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களை வழிகெடுப்போர் எவருமில்லை. வணக்கத்திற்குரியவன் அவனையன்றி வேறு எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்;கள் அவனின் தூதராவார்கள்';. இறைவனை போற்றிப் புகழ்ந்து, அவனுடைய ஒருமைத் தன்மைக்கு சாட்சி கூறியபின் இவ்வாறு கூறினார்கள்: 'மக்கள் கூட்டமே நிகரற்ற அன்பிற்குரிய இறைவன் எனக்கு அறிவித்துள்ளான் என்னுடைய வாழ்க்கையின் இறுதி நேரம் நெருங்கிவிட்டதாக. விரைவாக அவனுடைய அழைப்பை பூரணப்படுத்திவிட்டு எனது ஏனைய விடையங்களுக்கு விரைந்து செல்லவேண்டும். நானும், நீங்களும் ஒவ்வொருவரும் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு பொறுப்புடையவர்களாக இருக்கின்றோம். இப்பொழுது உங்களுடைய எண்ணம் , கருத்துக்கள் என்ன? என மக்களைப் பார்த்து வினவினார்கள்.
மக்கள் கூறினார்கள்: ' நாங்கள் சாட்சி கூறுகின்றோம.; நீங்கள் உமக்கு சொல்லப்பட்டதை எங்களுக்கு எத்திவைத்தீர்கள், எங்களுக்கு உபதேசம் செய்வதற்கான முயற்சியில் எந்த விதமான குறைபாடும் வைக்கவில்லை. இறைவன் உமக்கு சிறந்த அருட்கொடையை வழங்கட்டும்!' அதன் பின் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மக்களே! இறைவன் ஒருவன் மற்றும் முஹம்மத்; இறைவனின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டுள்ளீர்களா? மற்றும் சுவனம், நரகம், மரணம், மறுமை இருக்கின்றன மற்றும் இறைவன் மரணித்தவர்களை மீழெழுப்புவான் இவை அனைத்தும் உண்மை இவை உங்களின் நம்பிக்கைக்கு உரியனவா?'
அனைவரும் கூறினார்கள்: ('ஆம் நாங்கள் இந்த உண்மைகளுக்கு நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்') .
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இறைவா! நீ சாட்சியாக இரு' . பின் உறுதியாக கூறினார்கள்: ('; நீங்கள் அனைவரும் ஹவ்லை அடைவதற்கு முன் நான் முந்திக் கொள்வேன் மற்றும் நீங்கள் அனைவரும் ஹவ்லிற்கு அருகாமையில் என்னை நோக்கி வருவீர்கள். அந்த ஹவ்லின் அளவு எந்தளவிற்கென்றால் சன்ஆவிற்கும் பஸ்ராவிற்கும் இடைப்பட்ட தூரமாகும். சிந்தியுங்கள் மற்றும் கவனமாக இருங்கள், நான் எனக்குப்பின்னால் இரண்டு பெறுமதிவாய்ந்த விடையங்களை விட்டுச் செல்லுகின்றேன் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?') இந்த நேரம் மக்கள் குரலெழுப்பினார்கள் : ' அந்த இரண்டு பெறுமதிவாய்ந்தவைகளும் என்ன?' நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ('அவற்றுள் உயர்தரமானது இறை வேதம் அல்-குர்ஆன் எனவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள.; அதை உங்கள் கரங்களிலுருந்து விட்டுவிடாதீர்கள் வழிகெடாதிருப்பதற்காக. இரண்டாவது எனது குடும்பமாகும். இறைவனுக்கு இது பற்றி இறைவன் அறிவித்திருப்பது போன்று இவை இரண்டும் கவ்லிற்கு அருகாமையில் என்னை அடையும் வரை ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது. நான் இந்த கட்டளையை இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அவை இரண்டையும் பின்பற்றுவதை விட்டும் தூரப்பட்டுவிடாதீர்கள், குறைபாடும் வைத்துவிடாதீர்கள் அழிந்து போய்விடுவீர்கள்.
இதன் பின் அலி (அலை) அவர்களின் கையைப் பிடித்து உயர்த்தினார்கள் எந்தளவிட்கென்றால் தங்களிருவருடைய அக்குளின் வெள்ளை தெரியுமளவிற்கு உயர்த்தினார்கள். மக்கள் அதை கண்ணுற்றார்கள். நபிகளார் பின் இவ்வாறு ஆரம்பித்தார்கள்: மக்களே! யார் ஈமான் கொண்டவர்களில் சிறந்தவர்கள் ? மக்கள் கூறினார்கள்: 'இறைவனும் அவனது தூதருமே அறிவார்கள்' பின் நபி(ஸல்)கூறினார்கள்: 'இறைவன் என்;னுடைய தலைவன், நான் மனிதர்களுடைய தலைவராக இருக்கின்றேன். நான் யாருக்கெல்லாம் தலைவராக இருக்கின்றேனோ அவர்களுக்கெல்லாம் அலி (அலை) தலைவராக இருப்பார்' அஹ்மத் இப்னு ஹன்பலுடைய அறிவிப்பின் படி (ஹன்பலிகளினுடைய தலைவர்) நபிகளார் இந்த வசனத்தை மீண்டும் மீண்டும நான்கு தடவைகள் கூறினார்கள். பின் தன் கையை துஆவிற்கேந்தினார்கள். இன்னும் பிரார்த்தனை புரிந்தார்கள் : 'இறiவா யாரெல்லாம் அலி மீது நேசம் கொள்கிறார்களோ அவர்கள் மீது நீயும் நேசமுடையவனாக இரு, யார் அலியை வெறுக்கிறார்களோ அவர்கள் மீது நீயும் வெறுப்புக்கொள். யாரெல்லாம் அலிக்கு உதவியாளர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கு நீயும் உதவியாளனாக இரு, யாரெல்லாம் அலியை இழிவு படுத்துகின்றனரோ அவர்களை நீயும் இழிவு படுத்து. அலியை உண்மையின் உறைவிடமாக்கு'.
அதன் பிறகு மக்களை பார்த்து ' யாரெல்லாம் இங்கு கூடியிருக்கின்றார்களோ அவர்கள் இங்கில்லாதவர்களுக்கு இதனை எத்திவையுங்கள்' என்றார்கள்.
எல்லோரும் பிரிந்து செல்வதற்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை கொண்டுவந்தார்கள்: 'அல் யவ்ம அக்மல்து லகும் தீனுகும் வ அத்மம்து அலைகும் நிஃமதீ வரலீது லகும் இஸ்லாம தீனா' மாயிதா:3
இதன் கருத்தாவது: 'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கிவைத்துவிட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கிவிட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டேன்'. இவ்வேளை நபி (ஸல்) அவர்கள் : ' அல்லாஹ் பெரியவன். மார்க்கத்தின் முடிவு அருட்கொடைகளின் பூரணம், இறைவனின் சந்தோஷம் என்னுடைய நபித்துவத்திற்கும், அலியுடைய தலைமைத்துவத்திற்குமாகும்'.
குழுமியிருந்த கூட்டம் குறிப்பாக அபூ பக்கர், உமர் போன்றோர் முஃமின்களின் தலைவர் அலி (அலை) அவர்களைப் பார்த்து இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்தார்கள்: ' நல் வாழ்த்துக்கள்! நல் வாழ்த்துக்கள்! நல் வாழ்த்துக்கள்! அபூ தாலிபுடைய மகனே எங்;களுக்கும் மற்றும் அனைத்து ஆண் பெண்ணான முஃமின்களுக்கும் தலைவராக ஆகிவிட்டீர்'.
இப்னு அப்பாஸ் கூறினார் : 'யா ரஸுலுல்லாஹ் அலியுடைய தலைமைத்துவம் அனைவர் மீதும் கடமையாகிவிட்டது'.
கஸ்ஸான் இப்னு தாபித் கூறினார்: 'யா ரஸுலுல்லாஹ் அனுமதியளியுங்கள் அலி (அலை) பற்றி கவிதை பாடுகின்றேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு : ' பாடு இறைவனின் அருள் உன்மீது பொழியட்டும்';.
அதன் பின் அவர் கவிதை பாடினார். இவ்வாறாக கதீருடைய இந்நிகழ்வு நடந்தேறியது.