புதன், 9 டிசம்பர், 2009

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் ஹாமெனெயீ அவர்களின் செய்திகள்

01.தலைவரின் ஹஜ் செய்தி
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்...
ஹஜ் பருவ காலம் ஆன்மீகப் புத்துயிரிற்கும், உலகின் அடிவானத்தில் ஏகத்துவத்தின் பிரகாசம் ஒளிர்வதற்குமான நேரமாகும். அதன் கிரியைகள் ஒரு தூய்மையான நீரூற்றுப் போன்றதாகும். ஹஜ் செய்பவர் அதில் தமது பாவங்களினதும் அலட்சியத்தினதும் அசூசைகளைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்ளவும், இறைவன் வழங்கிய இயல்புகளின் ஜோதியை தன் இதயத்திலும் உள்ளுணர்விலும் மீளவைக்கவும் அது சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
ஹாஜிகள் தமது பெருமையினதும் வேறுபாட்டினதும் ஆடைகளைக் களைந்து விட்டு, அனைவருக்கும் பொதுவான வெள்ளை நிற இஹ்ராம் அணியும் செயல், உலக முஸ்லிம் உம்மாஹ்வின் வேறுபாடுகள் அற்ற சர்வதேச தனித்துவத்தை எடுத்தியம்புகின்றது. அத்துடன், உலகெங்கும் வாழுகின்ற முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் நிலவ விடுக்கும் அழைப்பையும் பிரதிபலிக்கின்றது.
'உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான். அவனிடமே சரணடையுங்கள். பணிவுடையோருக்கு நற்செய்தி சொல்லுங்கள்' (சூரா ஹஜ்:34) என ஒரு புறத்தில் ஹஜ் அழைப்பு விடுக்கின்றது. மறுபுறத்தில், 'புனித இறையில்லத்தை நாம் உள்ளூர்வாசிகளுக்கும் வெளியூர்வாசிகளுக்கும் சமமான நிலையில் முழு மனித சமுதாயத்துக்குமாக ஆக்கியிருக்கிறோம்' (சூரா ஹஜ்:25) என அழைக்கின்றது. இவ்வகையில், கஃபாவானது தவ்ஹீத் எனப்படும் ஏகத்துவத்தின் சின்னமாக இருப்பது போல், முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கியம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் என்பனவற்றுக்கான அழைப்பையும் பிரதிபலிக்கின்றது.
உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் இறையில்லத்தை வலம் வந்து இறைத்தூதரைத் தரிசித்துச் செல்ல வேண்டுமென்ற ஆவல் பொங்க வந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜில் ஒன்றுகூடி உள்ளனர். இவர்கள் தம் மத்தியிலான சகோதர இணைப்புக்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள ஏராளமான வலிகளுக்கு ஒத்தடமாக அமையும்.
முன்னெப்போதையும் விடப் பெருமளவு, இஸ்லாமிய உலகின் மீது ஆவேசம் கொண்டுள்ள பல்வேறு சக்திகள் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் வேகமாகச் செயலாற்றுவதை பகிரங்கமாகக் காண்கின்றோம். ஆகவே, முஸ்லிம் உம்மாஹ் ஐக்கியத்தோடும் ஒத்துழைப்போடும் வாழ வேண்டிய தேவை முன்னரை விட அதிகமாக உணரப்படுகின்றது.
துரதிஷ;டவசமாக, இன்று எதிரியின் இரத்தம் தோய்ந்த கைகள் முஸ்லிம் உலகை மிகக் கொடூரமாக இறுக்கிப் பிடித்துள்ளன. பலஸ்தீன மக்கள் சியோனிச ஆக்கிரமிப்பில் நாளுக்கு நாள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். மஸ்ஜிதுல் அக்ஸா பயங்கரமான ஓர் ஆபத்தில் தள்ளப்பட்டிருக்கின்றது. காஸாவில் நடைபெற்ற சோகமயமான இன ஒழிப்புக்குப் பிறகு மக்கள் தொடர்ந்தும் மிகக் கொடுமையான அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளரின் கால்களின் கீழ் சிக்குண்டுள்ள ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் புதியதொரு விபரீதம் நடக்கிறது. ஈராக்கில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் அம்மக்களது அமைதியான வாழ்வையும் நிம்மதியையும் பறித்துள்ளது. யெமனில் நடைபெறுகின்ற சொந்த சகோதரர்களையே அழித்தொழிக்கும் நிகழ்வு மேலதிகமாக இஸ்லாமிய உம்மாஹ்வின் இதயத்தில் புதியதொரு வலியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு வருகின்ற கலகங்கள், போர்கள், குண்டுவெடிப்புகள் பயங்கரவாத செயற்பாடுகள், குருட்டுத்தனமான மனிதப் படுகொலைகள் என்பன எங்கு எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் படைகள் அதிகார பூர்வமாக சொந்த வீட்டில் நுழைவது போல் இப்பிராந்தியத்தில் நுழைவதற்கு முன்னர் இத்தகைய துன்பங்கள் அங்கு இடம்பெறவில்லையே, அது ஏன்?
ஒரு புறத்தில் மக்கள் எழுச்சிகளையும் உரிமைப் போராட்டங்களையும் பலஸ்தீன், லெபனான் போன்ற நாடுகளில் பயங்கரவாதம் என வர்ணிக்கின்றன அதே ஆக்கிரமிப்பாளர்கள்தான், இப்பிராந்திய மக்கள் மத்தியில் இனவாத, பிரிவினைவாத பயங்கரவாதத்தையும் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றன.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்கப் பிராந்தியம் என்பன பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளின் ஏகாதிபத்தியத்தின் கீழும் பின்னர் அமெரிக்க ஆதிகத்தின் கீழும் அடிமைப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டன. அவற்றின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. அவர்களது சுதந்திர உணர்வுகள் துவம்சம் செய்யப்பட்டன. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் பேராசைகளுக்கு இந்த சமுதாயங்கள் பணயமாகின.
ஆயினும், இந்த சமூகங்களிடையே உருவாகிய எதிர்ப்புப் போராட்டங்களும் இஸ்லாமிய எழுச்சியும் இந்நிலையைத் தொடர விடாமல் உலகளாவிய ஏகாதிபத்தியங்களைத் தடுத்து நிறுத்தின. உயிர்த்தியாகம், இறைவனை அடைவதற்கான போராட்டம் முதலிய பரிமாணங்கள் இஸ்லாமியப் போராட்ட வடிவங்களில் தோற்றம் பெற்றன. இவற்றை எதிர்கொள்ளும் சக்தியற்ற ஆக்கிரமிப்பாளர்கள் வேறுவிதமான ஏமாற்று வித்தைகளைக் கைக்கொண்டு பழைய ஏகாதிபத்தியத்துக்குப் பதிலாக புதியதொரு வடிவில் தம் ஆக்கிரமிப்பைத் தொடர முனைந்தனர்.
இஸ்லாம் தலைகுனிய வேண்டும் என்பதற்காக ஏகாதிபத்தியவாதம் தன் அத்தனை சக்திகளையும் களமிறக்கியுள்ளது. இராணுவப் பலம் முதற்கொண்டு, பகிரங்க ஆக்கிரமிப்பு, தீய பிரசார யுத்தம், பொய்களையும் வாந்திகளையும் பரப்புகின்ற ஊடக நிறுவனங்கள், ஆக்கிரமிப்புக்கு வழியமைக்கும் விதத்தில் குழுக்களை பலப்படுத்தி மோதவிடுவது, மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுவது, இளைஞர்களது மனவுறுதி, திடநம்பிக்கை, ஒழுக்கம் என்பனவற்றை அழித்தொழித்தல், ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் இயக்கங்களுக்கெதிரான அரசியல் ரீதியான நெருக்கடிகளைத் தோற்றுவித்தல், இனரீதியான முரண்பாடுகளையும் பகைமையாக மாற்றுவது என முடிந்த எல்லாவித உத்திகளையும் ஏகாதிபத்தியம் பிரயோகிக்கின்றது.
எதிரிகள் விரும்புகின்றவாறான தப்பெண்ணம், தீயநோக்கு என்பவற்றுக்குப் பகரமாக முஸ்லிம் சமுதாயங்கள், குழுக்கள், மற்றும் இனங்கள் மத்தியில் பரஸ்பர அன்பு, நல்லெண்ணம், ஒத்துழைப்பு என்பன இடம்பிடிக்குமெனில், துஷ;ட எண்ணம் கொண்டோரின் திட்டங்களிலும் சதிகளிலும் பெரும்பான்மையானவை தோல்வியடைந்து விடும். முஸ்லிம் உம்மாஹ்வைக் காவுகொள்ள நாளாந்தம் தீட்டுகின்ற திட்டங்கள் செயலிழந்து விடும். இந்த உயரிய நோக்கை அடைந்து கொள்வதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஹஜ் கிரியையாகும்.
முஸ்லிம்கள் பன்முகம் கொண்ட ஏகாதிபத்திய அரக்கனை வெல்வதற்கு, தமது பொதுவான அடிப்படைகளை வழங்கும் குர்ஆன் மற்றும் நபிவழியின் வழிநின்று பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லிணக்கமும் கொள்ள வேண்டும். பெருந்தலைவர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் அடியொற்றிப் போராடிய ஈரானிய சமுதாயம் இப்போராட்டத்தின் வெற்றிக்குச் சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. ஈரானில் அத்தகைய சக்திகள் தோல்வியையே கண்டன.
முப்பது ஆண்டுகளாகத் தீட்டிய சதித்திட்டங்கள் - இராணுவச் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, எட்டு ஆண்டுகால திணிக்கப்பட்ட யுத்தம், பொருளாதாரத்தடை, உடைமைகள் கபளீகரம், உளவியல் ரீதியான போர், ஊடகப் படையெடுப்பு முதற்கொண்டு அறிவு, விஞ்ஞானத் துறைகளில் அபிவிருத்திக்குத் தடையேற்படுத்தல், அணுசக்தி ஆய்வை ஈரானிய நிபுணர்கள் மேற்கொள்வதை எதிர்த்தல், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் போது அப்பட்டமாக அரங்கேற்றிய ஆத்திரமூட்டல்களும் தலையீடுகளும் என அத்தனை செயற்பாடுகளும் எதிரிகளுக்குத் தோல்வியையும் குழப்பத்தையும் தந்ததுடன், 'iஷத்தானின் சதிகள் எப்போதும் பலவீனமானவை' (சூரா நிஸா: 76) என்ற அல்குர்ஆன் வசனத்தை மீண்டும் ஒரு முறை ஈரானிய மக்களின் கண்முன் யதார்த்தபூர்வமாகக் காட்டியுள்ளது.
ஈமானிய உறுதியோடு பேராதிக்க சக்திகளுக்கெதிராக உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் மேற்கொண்ட எழுச்சிப் போராட்டங்களும் அம்மக்களுக்கு வெற்றியையும் எதிரிக்கு ஏமாற்றத்தையும் தோல்வியையுமே தந்தன. கடந்த மூன்று வருடங்களுக்குள் நடந்த லெபனான் மக்களது 33 நாள் வெற்றியும் காஸா மக்களின் பொறுமையான போராட்ட வெற்றியும் இந்த உண்மையை நிரூபிக்கும் உயிருள்ள சான்றுகளாகும்.
பொதுவாக, ஹஜ் பாக்கியத்தை அடைந்த எல்லா ஹாஜிகளுக்கும் குறிப்பாக இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் பிரசாரகர்கள், குத்பா நிகழ்த்துனர்கள் மற்றும் இரண்டு ஹரம்களினதும் குத்பா இமாம்கள் எல்லோருக்கும் நான் வழங்குகின்ற உறுதியான ஆலோசனை இதுதான். தயவு செய்து நீங்கள் உங்களது நிகழ்காலப் பணியைச் சரியாக இனங்காணுங்கள். உங்கள் மக்களுக்கு இஸ்லாத்தின் எதிரிகளின் சதித்திட்டங்களை விளக்கிக் காட்டுங்கள். முஸ்லிம்களை பரஸ்பர அன்பு மற்றும் ஒற்றுமையின் பால் அழையுங்கள். முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிக்கையை அதிருப்தியை ஏற்படுத்தும் எல்லா விடயங்களையும் தவிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவித எதிர்ப்பு அலைகளையும் உணர்வுகளையும் இஸ்லாமிய சமுதாயத்தின் எதிரிகளுக்கு எதிரானதாக, குறிப்பாக அமெரிக்காவுக்கும் சியோனிசத்துக்கும் எதிரானதாக நெறிப்படுத்துங்கள். இதன் மூலமாக, இணைவைப்பாளர்களிடமிருந்து விலகி நிற்கும் பிரகடனத்தை உண்மைப்படுத்த முனையுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது வழிகாட்டல், அங்கீகாரம், நுட்பம், அருள் என்பனவற்றை உங்களுக்கும் எனக்கும் தந்தருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
வஸ்ஸலாமு அலைக்கும்


02.ஆயத்துல்லாஹ் முன்தசரி அவர்களின் மரணத்திற்கு ஆன்மீகத் தலைவர் அனுதாபம்


ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள், ஆயத்துல்லாஹ் ஹுஸைன் அலி முன்தசரி அவர்களின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியுள்ளார். அச்செய்தி பின்வருமாறு,
'இஸ்லாமிய சட்டமேதை ஆயத்துல்லாஹ் ஹுஸைன் அலி முன்தசரி அவர்கள் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்ட செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்துகின்றது. அவர் மிகச் சிறந்த மார்க்க நிபுணராகவும் மதிப்பு மிக்க மேதையாகவும் விளங்கியதனால், பெருந்தொகையான மாணவர்கள் ஆர்வத்துடன் அவரது வகுப்புகளில் கலந்து கொண்டனர். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை, ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இஸ்லாமியப் புரட்சியை முன்கொண்டு செல்வதிலும், அதன் வெற்றியைப் பாதுகாப்பதிலும், அந்தப் பாதையில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் வலிகளையும் தாங்கிக் கொள்வதிலுமே அர்ப்பணித்தார். இமாம் கொமெய்னி அவர்களின் இறுதி வருடங்களில், ஆயத்துல்லாஹ் முன்தசரி அவர்கள், சிரமமான ஒரு தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ், தனது பேரருளினால், முன்தசரி அவர்களை மன்னித்து, இஸ்லாமியப் பணிகளின் போது அவர் எதிர்கொண்ட சிரமங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன். அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ், அவருக்கு மன்னிப்பளித்து, கிருபையும் செய்வானாக!'
ஆயத்துல்லாஹ் முன்தசரி அவர்கள், கும் நகரிலுள்ள தமது வீட்டில், கடந்த சனிக்கிழமை மாலை, தனது 87ஆவது வயதில் இயற்கை மரணமெய்தி இறையடி சேர்ந்தார்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கதீர் நிகழ்வு பற்றிய விளக்கம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
கதீர் நிகழ்வு பற்றிய விளக்கம்
ஹிஜ்ரி 10 லே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய மாளிகையை சியாரத் செய்வதற்கு நிய்யத் வைக்கிறார்கள். நாயகத்தின் இந்த நிய்யத் பல்வகை பட்ட கபீலாக்கள்,மதீனாவை அன்டியிருந்த தாயிப்களுக்கு மத்தியிலும் சொல்லப்பட்டது, பெரும் தொகையான கூட்டம் இந்த இறை கட்டளையை (ஹஜ் கடமையை) நிறைவேற்றுவதற்றுவதற்கு மதீனாவை நோக்கி வந்தார்கள்.இது மாத்திரமே நபி (ஸல்) அவர்கள் தனது மதீனாவிற்கான முஹாஜிரத்தின் பின் நிறைவேற்றுகின்ற ஹஜ்ஜாஹும், இது வரலாற்றிலே பல்வேறு பெயர்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது, அவை பின்வருமாறு: ஹஜ்ஜதுல் விதா, ஹஜ்ஜதுல் இஸ்லாம், ஹஜ்ஜதுல் பலாக், ஹஜ்ஜதுல் கமால், ஹஜ்ஜதுல் தமாம்;.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பை நிறைவேற்றினார்கள். இரண்டு சாதாரன ஆடைகளை இஹ்ராம் ஆடையாக எடுத்துக் கொண்டார்கள். ஒன்றை தனது இடுப்பில் கட்டிக் கொண்டார்கள், மற்றயதை தனது அருமையான தோளில் போட்டுக் கொண்டார்கள், சனிக்கிழமை துல்கஹ்தா 24 அல்லது 25 ல் ஹஜ் செய்யக் கூடிய நோக்கில் கால்நடையாக மதீனாவை விட்டு வெளியேறினார்கள். பெண்கள் மற்றும் தங்களைச் சேர்ந்தவர்களையெல்லாம் ஒட்டகைச்சுமைகளில் ஏற்றிக் கொண்டார்கள். தனது குடும்பத்தினர், முஹாஜிர்கள், அன்ஷார்கள், அரபுக் கபீலாக்கள், மற்றும் மக்களின் பெரும் கூட்டம் பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். அதிகாமானோர் தொற்றுநோய் காரணமாக இந்த பிரயாணத்தை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் மாபெரும் கூட்டம் இந்தப் பிரயாணத்தில் கலந்து கொண்டது. இதில்கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 11400, 120-124 ஆயிரம் மற்றும் அதனைவிடவும் அதிகமானவர்கள் என்றும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஆனாலும் மக்காவில் இருந்தவர்கள் அலி(அலை) மற்றும் அபூ மூஸா அஸ்அரியுடன் யமனில் இருந்து வந்தவர்கள் மதீனாவில் இருந்து வந்த குழுவுடன் இணைந்து கொண்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கை வேறாகும்.
ஹஜ் கடமையை நிறைவேற்றியதற்கு பின்னர் நபிகளார் மாபெரும் கூட்டத்தினருடன் மதீனாவிற்கு திரும்பிச் செல்வதற்குரிய அழைப்பை விடுத்தார்கள். கதீர் கும் என்ற இடத்தை அடைந்தபின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானலோகத்திலிருந்து பூமியை நோக்கி வந்தார்கள் அவர்கள் இறைவனிடம் இருந்து இந்த குர்ஆன் வசனத்தை கொண்டு வந்தார்கள். :(யா அய்யுஹர் ரஸுல் பல்லிக் மா உன்ஸில இலைக மின் ரப்பிக் வ இன் லம் தப்அல் பமா பல்லக்த ரிஸாலதஹு வல்லாஹு யஹ்ஸிமுக மினன் னாஸ் இன்னல்லாஹா லாயஹ்தில் கௌமல் காபிரீன்) மாயிதா:67
தமிழ் கருத்து: 'நபியே! உம் இரட்சகனிடம் இருந்து உமக்கு இறக்கி வைக்கப்பட்டதை, எத்திவைப்பீராக நீர் அவ்வாறு செய்யாவிடில், அவனுடைய தூதை முற்றிலும் எற்றிவைக்கவில்லை. மனிதர்களின் கெடுதியில் இருந்து இறைவன் உங்களை பாதுகாப்பான் நிச்சயமாக இறைவன் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்'. ஜுஹ்பா (இவ்விடத்தில் இருந்தே அதிகமான இடங்களுக்கான பாதைகள் பிரிந்து செல்கின்றன). நபிகளார், மற்றும் அவர்களின் தோழர்கள் துல் ஹஜ்18 வியாழக்கிழமை இந்த இடத்தை வந்தடைந்தார்கள்.
ஜிப்ராயீல் (அலை) மூலம் இறைவனிடம் இருந்து நபியவர்களிற்கு, அலி (அலை) அவர்களை வலி, இமாமாக அறிமுகப்படுத்தி, அவர்களைப் பின்பற்றுவது வாஜிப் போன்றவற்றை தனது படைப்புக்கு சொல்லுமாறு கட்டளை வந்தது.
யாரெல்லாம் நபியவர்களின் குழுவை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களோ, மற்றும் நபியவர்களுக்கு முன்னால் சென்றார்களோ அவர்கள் அனைவரும் நபியவர்கள் நின்ற இடத்தை வந்தடைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்;: அங்குள்ள கரடு முரடுகளை சரிசெய்யும்படி கூறினார்கள். காலநிலை மிகவும் சூடாக இருந்தது. மக்கள் தங்களிடம் இருந்த சுமைகளில் சிலதை கால்களின் கீலும் தலைகளிற்கு மேலும் வைத்துக் கொண்டார்கள். நபிகளாரின் இருக்கைக்காக ஒரு கூடாரத்தை ஏற்பாடு செய்தார்கள்.
லுஹர் தொழுகைக்;கான அதான் கூறப்பட்டது. நபிகளார் தங்களோடிருந்தவர்களுடன் லுஹர் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்தபின் ஒட்டகங்களின் முதுகுகளில் பிரயாணத்திற்காக உபயோகிக்கப்படுகின்றவைகளைக் கொணடு ஒரு மேடை போன்ற இடம் உருவாக்கப்பட்டது.
நபிகளார் உரத்த குரலில் தங்களோடு கூடியிருந்தவர்களின் கவனத்தை தன் பக்கத்திற்கு கொண்டுவந்தார்கள் அதன் பின் இவ்வாறு தனது உரையை ஆரம்பித்தார்கள்: ('எல்லாப் புகழும் இறைவனிற்கே உரியதாகும், அவனிடம் இருந்து உதவி தேடுகின்றோம், அவனை ஈமான் கொண்டவர்களாக இருக்கின்றோம், அவனின் மீது பொறுப்புச்சாட்டியவர்களாக இருக்கின்றோம். தீய செயல்களில் இருந்து அவனிடம் பாதுகாவல் தேடுகின்றோம். வழிதவறியோருக்கு அவனையன்றி வேறுபாதுகாவலர் இல்லை. அவன் யாரையெல்லாம் நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களை வழிகெடுப்போர் எவருமில்லை. வணக்கத்திற்குரியவன் அவனையன்றி வேறு எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்;கள் அவனின் தூதராவார்கள்';. இறைவனை போற்றிப் புகழ்ந்து, அவனுடைய ஒருமைத் தன்மைக்கு சாட்சி கூறியபின் இவ்வாறு கூறினார்கள்: 'மக்கள் கூட்டமே நிகரற்ற அன்பிற்குரிய இறைவன் எனக்கு அறிவித்துள்ளான் என்னுடைய வாழ்க்கையின் இறுதி நேரம் நெருங்கிவிட்டதாக. விரைவாக அவனுடைய அழைப்பை பூரணப்படுத்திவிட்டு எனது ஏனைய விடையங்களுக்கு விரைந்து செல்லவேண்டும். நானும், நீங்களும் ஒவ்வொருவரும் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு பொறுப்புடையவர்களாக இருக்கின்றோம். இப்பொழுது உங்களுடைய எண்ணம் , கருத்துக்கள் என்ன? என மக்களைப் பார்த்து வினவினார்கள்.
மக்கள் கூறினார்கள்: ' நாங்கள் சாட்சி கூறுகின்றோம.; நீங்கள் உமக்கு சொல்லப்பட்டதை எங்களுக்கு எத்திவைத்தீர்கள், எங்களுக்கு உபதேசம் செய்வதற்கான முயற்சியில் எந்த விதமான குறைபாடும் வைக்கவில்லை. இறைவன் உமக்கு சிறந்த அருட்கொடையை வழங்கட்டும்!' அதன் பின் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மக்களே! இறைவன் ஒருவன் மற்றும் முஹம்மத்; இறைவனின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டுள்ளீர்களா? மற்றும் சுவனம், நரகம், மரணம், மறுமை இருக்கின்றன மற்றும் இறைவன் மரணித்தவர்களை மீழெழுப்புவான் இவை அனைத்தும் உண்மை இவை உங்களின் நம்பிக்கைக்கு உரியனவா?'
அனைவரும் கூறினார்கள்: ('ஆம் நாங்கள் இந்த உண்மைகளுக்கு நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்') .
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இறைவா! நீ சாட்சியாக இரு' . பின் உறுதியாக கூறினார்கள்: ('; நீங்கள் அனைவரும் ஹவ்லை அடைவதற்கு முன் நான் முந்திக் கொள்வேன் மற்றும் நீங்கள் அனைவரும் ஹவ்லிற்கு அருகாமையில் என்னை நோக்கி வருவீர்கள். அந்த ஹவ்லின் அளவு எந்தளவிற்கென்றால் சன்ஆவிற்கும் பஸ்ராவிற்கும் இடைப்பட்ட தூரமாகும். சிந்தியுங்கள் மற்றும் கவனமாக இருங்கள், நான் எனக்குப்பின்னால் இரண்டு பெறுமதிவாய்ந்த விடையங்களை விட்டுச் செல்லுகின்றேன் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?') இந்த நேரம் மக்கள் குரலெழுப்பினார்கள் : ' அந்த இரண்டு பெறுமதிவாய்ந்தவைகளும் என்ன?' நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ('அவற்றுள் உயர்தரமானது இறை வேதம் அல்-குர்ஆன் எனவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள.; அதை உங்கள் கரங்களிலுருந்து விட்டுவிடாதீர்கள் வழிகெடாதிருப்பதற்காக. இரண்டாவது எனது குடும்பமாகும். இறைவனுக்கு இது பற்றி இறைவன் அறிவித்திருப்பது போன்று இவை இரண்டும் கவ்லிற்கு அருகாமையில் என்னை அடையும் வரை ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது. நான் இந்த கட்டளையை இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அவை இரண்டையும் பின்பற்றுவதை விட்டும் தூரப்பட்டுவிடாதீர்கள், குறைபாடும் வைத்துவிடாதீர்கள் அழிந்து போய்விடுவீர்கள்.
இதன் பின் அலி (அலை) அவர்களின் கையைப் பிடித்து உயர்த்தினார்கள் எந்தளவிட்கென்றால் தங்களிருவருடைய அக்குளின் வெள்ளை தெரியுமளவிற்கு உயர்த்தினார்கள். மக்கள் அதை கண்ணுற்றார்கள். நபிகளார் பின் இவ்வாறு ஆரம்பித்தார்கள்: மக்களே! யார் ஈமான் கொண்டவர்களில் சிறந்தவர்கள் ? மக்கள் கூறினார்கள்: 'இறைவனும் அவனது தூதருமே அறிவார்கள்' பின் நபி(ஸல்)கூறினார்கள்: 'இறைவன் என்;னுடைய தலைவன், நான் மனிதர்களுடைய தலைவராக இருக்கின்றேன். நான் யாருக்கெல்லாம் தலைவராக இருக்கின்றேனோ அவர்களுக்கெல்லாம் அலி (அலை) தலைவராக இருப்பார்' அஹ்மத் இப்னு ஹன்பலுடைய அறிவிப்பின் படி (ஹன்பலிகளினுடைய தலைவர்) நபிகளார் இந்த வசனத்தை மீண்டும் மீண்டும நான்கு தடவைகள் கூறினார்கள். பின் தன் கையை துஆவிற்கேந்தினார்கள். இன்னும் பிரார்த்தனை புரிந்தார்கள் : 'இறiவா யாரெல்லாம் அலி மீது நேசம் கொள்கிறார்களோ அவர்கள் மீது நீயும் நேசமுடையவனாக இரு, யார் அலியை வெறுக்கிறார்களோ அவர்கள் மீது நீயும் வெறுப்புக்கொள். யாரெல்லாம் அலிக்கு உதவியாளர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கு நீயும் உதவியாளனாக இரு, யாரெல்லாம் அலியை இழிவு படுத்துகின்றனரோ அவர்களை நீயும் இழிவு படுத்து. அலியை உண்மையின் உறைவிடமாக்கு'.
அதன் பிறகு மக்களை பார்த்து ' யாரெல்லாம் இங்கு கூடியிருக்கின்றார்களோ அவர்கள் இங்கில்லாதவர்களுக்கு இதனை எத்திவையுங்கள்' என்றார்கள்.
எல்லோரும் பிரிந்து செல்வதற்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை கொண்டுவந்தார்கள்: 'அல் யவ்ம அக்மல்து லகும் தீனுகும் வ அத்மம்து அலைகும் நிஃமதீ வரலீது லகும் இஸ்லாம தீனா' மாயிதா:3
இதன் கருத்தாவது: 'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கிவைத்துவிட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கிவிட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டேன்'. இவ்வேளை நபி (ஸல்) அவர்கள் : ' அல்லாஹ் பெரியவன். மார்க்கத்தின் முடிவு அருட்கொடைகளின் பூரணம், இறைவனின் சந்தோஷம் என்னுடைய நபித்துவத்திற்கும், அலியுடைய தலைமைத்துவத்திற்குமாகும்'.
குழுமியிருந்த கூட்டம் குறிப்பாக அபூ பக்கர், உமர் போன்றோர் முஃமின்களின் தலைவர் அலி (அலை) அவர்களைப் பார்த்து இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்தார்கள்: ' நல் வாழ்த்துக்கள்! நல் வாழ்த்துக்கள்! நல் வாழ்த்துக்கள்! அபூ தாலிபுடைய மகனே எங்;களுக்கும் மற்றும் அனைத்து ஆண் பெண்ணான முஃமின்களுக்கும் தலைவராக ஆகிவிட்டீர்'.
இப்னு அப்பாஸ் கூறினார் : 'யா ரஸுலுல்லாஹ் அலியுடைய தலைமைத்துவம் அனைவர் மீதும் கடமையாகிவிட்டது'.
கஸ்ஸான் இப்னு தாபித் கூறினார்: 'யா ரஸுலுல்லாஹ் அனுமதியளியுங்கள் அலி (அலை) பற்றி கவிதை பாடுகின்றேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு : ' பாடு இறைவனின் அருள் உன்மீது பொழியட்டும்';.
அதன் பின் அவர் கவிதை பாடினார். இவ்வாறாக கதீருடைய இந்நிகழ்வு நடந்தேறியது.

புதன், 2 டிசம்பர், 2009

வெள்ளிக்கிழமை இரவுகளில் செய்யக் கூடிய சிறந்த அமல்கள்

01நபிகளார் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் ஆயிரம் தடவைகள் ஸலவாத்துக் கூறுதல். இவ் அமல் வாழ்க்கையில் பரக்கத்தையும் , நிஃமத்தையும் ஏற்படுத்தும்.

02.இவ் இரவில் அலி (அலை) அவர்கள் குமைல் இப்னு ஸியாத் (ரஹ்) அவர்களிற்கு கற்றுக் கொடுத்த துஆ குமைல் ஓதுதல். இவ் அமல் மனிதனுடைய உள அழுக்குகளை நீக்கி வாழ்க்கையில் தூய்மையை ஏற்படுத்தும்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

பெருநாள் வாழ்த்து

புனித ஹஜ்ஜுக் பொருநாள் வாழ்த்துக்களை அனைத்துலக முஸ்லிம்களுக்கும் தெரிவிக்கின்றோம்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

இமாம்களின் ஷஹாதத்தின வெளியீடு

துல் ஹஜ் 07 இமாம் பாகிர் (அலை) அவர்களின் ஸஹாதத் தினமாகும். இந்த வருடம் அவர்களது ஷஹாதத் தினம் துஆ தவஸ்ஸுல் ஓதப்படுகின்ற செவ்வாய் பிற்பகல் புதன் இரவாக இருப்பது சிறப்பம்சமாகும். எனவே இத்தினத்தில் துஆ தவஸ்ஸுலை ஓதுவதுடன் அஹ்லுல் பைத்தினரின் ஸபாஅத் கிடைப்பதற்காக பிரார்த்திப்போமாக.

வியாழன், 19 நவம்பர், 2009

ஹஸ்ரத் அலி (அலை) அவர்கள் குமைல் இப்னு ஸியாத் (ரஹ்) அவர்களுக்கு கற்றுக் கொடுத்த துஆ குமைல்

ஹஸ்ரத் அலி (அலை) அவர்கள் குமைல் இப்னு ஸியாத் (ரஹ்) அவர்களுக்கு கற்றுக் கொடுத்த துஆ குமைல்


01. அல்லாஹ்வேஇ எல்லாப் பொருட்களையும் சூழ்ந்துள்ள உனது பேரருளினைக் கொண்டு நான் உன்னிடம் இறைஞ்சுகின்றேன்.


02. அனைத்தையும் அடக்கியாளும் உனது வல்லமையைக் கொண்டு அவை உனது வல்லமைக்குப் பணிந்துவிட்டன.
03. யாவற்றையும் மிகைத்துவிட்ட உனது அதிகாரத்தைக் கொண்டும் தன்னிகரற்ற உனது கண்ணியத்தைக் கொண்டும்இ

04. யாவற்றையும் நிறப்பமாக்கியிருக்கும் உனது மகாத்மியத்தைக் கொண்டும்இ

05. அனைத்தையும் மிகைத்துவிட்ட உனது அரசாட்சியைக் கொண்டும்இ எல்லாமே அழிந்தபின் எஞ்சியிருக்கும் உனது திருமுகத்தைக் கொண்டும்
06. எல்லாப் பொருட்களினதும் அடிப்படையில் நிரம்பிவிட்ட உனது அழகு திருநாமங்களைக் கொண்டும்இ அண்ட சராசரங்கள் அனைத்தையும் அவதானிக்கும் உனது பேரருளினைக் கொண்டும்இ

07. சகலதையும் பிரகாசமடையச் செய்த உனது திருமுகப் பேரருளினைக் கொண்டும் உன்னிடம் கெஞ்சிக் கேட்கின்றேன்.
08. ஒளிமயமானவனேஇ தூய்மையானவனேஇ அனைத்திற்கும் ஆதியானவனேஇ அந்தமில்லாதவனேஇ
09. அல்லாஹ்வேஇ உனது பாதுகாவலை தகர்த்தெரியக்கூடிய எனது குற்றம் குறைகளை மன்னித்தருள்வாயாக.
10. வேதனைகளை இறக்கி வைக்கும் எனது பாவங்களை பொறுத்துக் கொள்வாயாக.
11. அருட்கொடைகளை அழித்துவிடும் எனது பிழைகளை பொறுத்தருள்வாயாக
12. பிரார்த்தனைகளை தடுத்துவிடும் எனது பாவங்களை பொறுத்தருள்வாயாக.
13. எதிர்பார்ப்பை துண்டித்துவிடும் எனது பாவங்களை பொறுத்தருள்வாயாக.
14. சோதனைகளை இறக்கிவிடும் எனது குற்றங்களை மன்னிப்பாயாக.
15. நான் செய்த ஒவ்வொரு பிழையையும் பொறுத்து எனது எல்லாப் பாவங்களையும் மன்னிப்பாயாக.
16. அல்லாஹ்வேஇ உன்னை தியானிப்பதன் மூலமே நான் உன்னை நெருங்குகின்றேன். உன்னைக்கொண்டே உன்னிடம் சிபார்சு தேடுகின்றேன்.
17. உனது தயாளத்தைக் கொண்டே உனது நெருக்கத்தையும்இ உனக்கு நன்றி செலுத்தும் நல்லெண்ணத்தையும்
18. உன்னைத் தியானிக்கும் உணர்வையும் வேண்டி நிற்கின்றேன்.
19.உன்னை அடிபணிந்து தொழுது உன்னிடம் கெஞ்சிக் கேட்கின்றேன்: என்னை மன்னித்து அருள்பரிவாயாக.
20.உனது பங்களிப்பை தன்னிறைவோடு பொருந்திக்கொண்டவனாக என்னை நீ ஆக்குவாயாக. எல்லாவற்றிலும் என்னை நீ பணிவடக்கம் உடையவனாக ஆக்குவாயாக.
21.நெருக்கடி வேளையில் உன்னிடம் அதிக தேவை உள்ளவனாக இரந்து கேட்கின்றேன்.
22.உன்னிடத்தில் உள்ளவற்றின் மீது தேவை வலுப்பமாகிவிட்டது.
23.அல்லாஹ்வேஇ உனது அரசாட்சி மகத்துவம் அடைந்துவிட்டது. உனது அந்தஸ்து உயர்ந்துவிட்டது. உனது திட்டம் மறைந்து உனது சட்டம் வெளியகியுள்ளது.
24.உனது அதிகாரம் மிகைத்து உனது சக்தி நிலைத்துவிட்டது. உனது அரசாங்கத்திலிருந்து விரண்டோட முடியாது.
25.அல்லாஹ்வேஇ உன்னைத் தவிர எனது பாவங்களை மன்னிக்கக்கூடிய வேறெவரையும் நான் காணவில்லை. எனது அலங்கோலங்களை மறைக்கக்கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை.
26.எனது அருவருப்பான செயல்களைஇ அழகிய செயல்களாக மாற்றக்கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை. வணங்கி வழிபடுவதற்குறிய நாயன் உன்னையன்றி யாருமில்லை.
27.உன் புகழைக் கொண்டே துதிக்கிறேன். எனது மடலை துணிச்சலடைந்து எனது ஆத்மா என்கு அநியாயம் செய்துவிட்டது.
28-29. எனது எஜமானாகிய அல்லாஹ்வேஇ எனது எத்தனை அலங்கோலங்களை மறைத்துள்ளாய். எவ்வளவு பெரிய சோதனைச்சுமைகளைக் குறைத்துள்ளாய்.
30.எத்தனை பெரிய கஷ்டங்களிலிருந்து பாதுகாவல் அளித்துள்ளாய். எவ்வளவு கெடுதிகளைத் தடுத்துவிட்டாய்.
31.நான் அருகதை பெறாத எவ்வளவோ பெரிய புகழுக்கு உரியவனாக என்னை நீ ஆக்கிவிட்டாய்.
32.அல்லாஹ்வேஇ எனது நெருக்கடிகள் வளர்ந்து எனது நிலைமை மிகச் சங்கடமாகியுள்ளது.
33.எனது நற்செயல்கள் சுரிங்கிவிட்டன.
34.எனது விலங்குகள் இறுக்கமடைந்து உயர்ந்து இலட்சியங்கள் பயனற்றுப் போய் கைதியாக்கிவிட்டன. இந்த உலகம் எனது மடைமையைக் கொண்டு எனக்கு சதி செய்துவிட்டது.
35.எனது ஆத்மா தனது குற்றங்களைக் கொண்டு எனக்கு மோசம் பண்ணிவிட்டது.
36.என் எஐமானேஇ உனது கண்ணியத்தை முன்வைத்து கெஞ்சிக் கேட்கின்றேன். எனது கெட்ட செயல்களும்இ கெட்ட பழக்கவழக்கங்களும் எனது பிரார்த்தனை உன்னை வந்தடைவதற்கு திரையாக ஆகிவிட்டதே.
37.நீ தெரிந்து வைத்திருக்கும் எனது இரகசிய வாழ்விலுள்ள அந்தரங்கங்களை அம்பலமாக்கிவிடதே.
38.நான் தனித்திருக்கும் வேளையில் எனது மடமையினாலும்இ
39-40.எனது இச்சை மேலிட்டாலும்இ மறதியினாலும்இ தீய செயல்களினாலும் நான் செய்த தவறுகளுக்கு தண்டனையைப் பரிகாரமாக்கிவிடாதே.
41.நாயனேஇ அல்லாஹ்வேஇ உனது கண்ணியத்தின் மூலம் எனது எல்லா நிலைகளிலும் என்மீது இரக்கமுடையவனாக நீ இருப்பாயாக. மேலும்இ எனது எல்லாக் கருமங்களிலும் என்மீது கருணை காட்டுவாயாக.
42.என் இரட்சகனேஇ நாயனேஇ எனது நெருக்கடிகளைப் போக்குமாறும்இ எனது விடயத்தில் கரிசனை காட்டுமாறும் உன்னையன்றி வேறு யாரிடமும் கேட்க மாட்டேன்.
43.என் எஐமானேஇ என் நாயNஇ
44.நீ என் மீது ஓர் அதிகாரத்தை அமுலாக்கினாய். நானோ எனது இச்சைக்குப் பணிந்து
45.எனது எதிரியான ஷைத்தானிலிருந்து பாதுகாப்பு பெறாமல் மயங்கிஇ
46.என்னை எனது ஆசைகள் மயக்கிவிட்டன. அதனால்இ
47.உனது சில எல்லைகளை அத்துமீறித் தாண்டிவிட்டேன்.
48.எனது சில எல்லைகளை அத்துமீறித் தாண்டிவிட்டேன்.
49.உனது 'கழா' நியதி அமுலாக்கப்படும்போதும்
50.உனது சோதனையும்இ அதிகாரமும் என்னைக் கட்டுப்படுத்தும் போதும்
51.என் நாயனேஇ என்மா வரம்பு கடந்து அமல்களில் குறைவு செய்துவிட்டு
52.வருந்தியவனாகஇ திருந்தியவனாக எனது குற்றம் குறைகளை ஏற்றுக் கொண்டநிலையில் உனது சந்நிதியில் இதோ நிற்கின்றேன்.
53.என்னில் நிகழ்ந்துவிட்டதை ஒளிவு மறைவு இன்றி உன்னிடம் சமர்ப்பித்துவிட்டேன்.
54.எனது பணிவான இந்த பாவமீட்சியை ஏற்று
55.உனது பரந்த அருட்கடாட்சத்தில் என்னை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லைநாயனே.
56.அல்லாஹ்வேஇ எனது மன்னிப்பை 'கபூல்' செய்வாயாக. எனது கஷ்ட நஷ்டங்களில் அன்பு காட்டுவாயாக. எனது நெருக்கடிகளை போக்கிவைப்பாயாக.
57.படைத்தாளும் இரட்சகாஇ எனது உடலின் பலவீனத்தின் மீதும்
58.எனது தோலின் மென்மையின் மீதும் அருள்புரிவாயாக.
59.என்னைத் தொடக்கத்தில் உருவாக்கிஇ பராமரித்துஇ உணவளித்துஇ சிந்தனா சக்தியைத் தந்து நன்மை பல புரிந்தவன் நீயே.
60.நீ ஆரம்பத்தில் எனக்குப் பொழிந்த அன்பையும்இ அருளையும் மீண்டும் எனக்கு வாரி வழங்குவாயாக.
61.என் எஐமானேஇ நாயனேஇ என்னை ஆளும் வல்லோனேஇ உன்னை மட்டும் நம்பி வழிபட்ட பின் உனது நரகத்தில் போட்டு என்னை நீ வேதனை செய்வாய் என்று நான் நினைக்கவில்லை.
62.அதுவும் உன்னை அறிவதால் என் உள்ளம் நிரம்பி
63.உனது திக்ரினால் எனது நா நனைந்து எனது அகம் உனது நேசத்தால் உருகி
64.எனது பிரார்த்தனையும்இ உள்ளுணர்வும் உனது தெய்வீகத் தன்மைக்கும் முற்றிலும் அடிபணிந்துவிட்ட பின்னர்
65.என்னை தண்டித்து வேதனை செய்யக்கூடியவனாக உன்னை நான் காணவில்லையே. நீ மகா கருணையாளன்இ நீ உருவாக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவனை பழுதாக்குவாயா?
66.நீ அபயமளித்து அரவணைத்துக் கொண்ட ஒருவனை அழித்து விரட்டுவாயா?
67.நீ அன்பு காட்டி ஆதரவு கொடுத்த ஒருவனை சோதனைக்குள்ளாக்குவாயா?
68.என் எஐமானனேஇ எனது பாதுகாவலனேஇ
69.உனது மகத்துவத்திற்காக உன்னைத் தொழுது பணிந்த சிரங்கள் மீதும்இ நன்றிக் கடனோடு உன்னைப் புகழ்ந்து
70.உனது தௌஹீதை உண்மையாகவே மொழிந்த நாவுகளின் மீதும்
71.உனது தன்னிகரற்ற தெய்வீகத்தன்மையை திட உறுதியோடு ஏற்றுக் கொண்ட இதயங்கள் மீதும்
72.உன்னைப் பற்றிய நாணத்தால் நிரம்பி
73.உன்னைப் பணிந்துவிட்ட உள்ளுறுப்புக்கள் மீதும் உனக்கு வழிபட்ட நிலையில் உன்னை வணங்கும் தேகங்களுக்கு
74.எல்லாம் விரைந்து சென்று தூய நல்லெண்ணத்தோடு பாவமன்னிப்புக் கோரிய உடல் அவயங்கள் மீதும்
75.நீ நரக நெருப்பை சாட்டித் தண்டிப்பாயா?
76.கருணையாளனேஇ சிருஷ்டிகர்த்தாவேஇசங்கையாளனேஇ நீ எனது பலவீனத்தை நன்கு அறிந்தவன்.
77.என் எஐமானனேஇ இந்த உலகின் சோதனைகளும்இ வேதனைகளும் இங்கு நிகழும் வெறுப்பான நெருக்கடிகளும் நிச்சயமாக அற்பமானவையேஇ வெகு சொற்பமான வேதனையே.
78-79. இவ்வுலகத்திலுள்ளவர்கள் மீது நடக்கும் வெறுப்பான விடயங்கள் மிகச் சிறிய காலத்தில் நீங்கிவிடக் கூடியவையே.அப்படியிருந்தும் கூட இவற்றையே தாங்கிக் கொள்ள சக்தி அற்ற நான்
80. மறுமையின் மிகக் கொடிய வேதனைகளையும்இ நீண்ட காலத் தண்டனைகளையும்
81. நிரந்தரமான சோதனைகளையும் நிரந்தரமான சோதனைகளையும்
82. எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
83. இறைவாஇ வானங்களும் பூமிகளும்கூட ஈடுகொடுக்க முடியாத உனது கோபத்தினதும்இ பழிவாங்களினதும் அடையாளங்கள் அல்லவா அவை.
84. எளியஇ மிக அற்பமானஇ பரம ஏழையாகிய நான் உனது பலவீனமான அடிமையாகிய என்னால் எப்படி இத்தனை எபரிய தண்டனைகளுக்குத் தாக்குபிடிக்க முடியும்?
85. எனது எஐமானே! எனது நாயனே!! என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே!!!
86. நான் எந்த விடயத்திற்காக உன்னிடம் முறையீடு செய்கின்றேன்இ எதற்காக உன்னிடம் அழுது பிரலாபிக்கின்றேன்?
87. கொடிய கடின வேதனைக்காகவா அல்லது நீண்ட நெடிய சோதனைக்காகவா?
88. நீ என்னை உனது எதிரிகளுடன் சேர்த்து தண்டிப்பாயேயானால்
89. உனது வேதனைக்குள்ளானவர்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்வாயேயானால்
90. உனது நேசர்களை (அவ்லியாக்களை) விட்டு என்னைப் பிரித்து விட்டாயேயானால் என்பதற்காகவே நான் உனது அருளை வேண்டி நிற்கின்றேன்.
91. என் எஐமானேஇ என் நாயனேஇ என்னைப் படைத்துப் பரிபாலிப்பவNஇ
92. நீ என்னை வேதனைக்குள்ளாக்கிய போது நான் பொறுத்துக் கொண்டேன். நீ என்னை விட்டுப் பிரிந்து இருப்பதை என்னால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?
93. உனது நரக நெருப்பின் சூட்டைத் தாங்கிக் கொண்டேன். உனது கண்ணியத்தைக் காணாமல் எப்படி இருப்பேன்.
94. அல்லது உனது பரந்த மன்னிப்பை இரந்து கேடகும் நான் நரக நெருப்பில் எவ்வாறு அமைதி அடைவேன்.
95. உண்மையாகவேஇ எனது எஐமானனேஇ உனது கண்ணியத்தி மீது சத்தியம் செய்து கொல்கின்றேன்.
96. அவலக் குரல் எழுப்புபவர்களின் அபயக் குரலாக நான் உன்னை அழைக்கின்றேன்.
97. சகலதையும் இழந்துவிட்டவர்களின் அழுகைக் குரலாக நான் உன்னை அழைக்கின்றேன்.
98. விசுவாசிகளின் பாதுகாவலனேஇ மெஞ்ஞானிகளின் இலக்கானவனேஇ
99. உதவி கோருவருக்கு உதவி செய்பவனேஇ உண்மையாளர்களின் உளப்பூர்வமான நண்பனேஇ
100. அனைத்து உலகங்களினதும் ஆண்டவனேஇ எனது நாயனேஇ உனது புகழைக் கொண்டே உன்னைத் துதிக்கின்றேன்.
101. தனது முரண்பட்ட செயலுக்காக சிறையிடப்பட்ட ஒரு முஸ்லிமான அடிமையின் அவலக் குரலை நீ கேட்கிறாய்.
102. அவன் தனது குற்றச் செயல்களுக்காக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றான்.
103. அவன் உன்னிடம் அபயம் தேடியவனாக அவலக் குரல் எழுப்புகிறான்.
104. உன்னை தௌஹீதுப்படுத்தியவர்களின் நாவினால் உன்னை அழைக்கின்றான். உனது பராமரித்தல்இ பாதுகாக்கும் உயர்ந்த தன்மையின் மீத நம்பிக்கை வைத்து உன்னிடம் உதவி தேடுகின்றான்.
105 . எனது எஐமானனேஇ உனது கடந்த கால அரவணைப்பை வேண்டி நிற்கும் அவன் எப்படி வேதனையில் நிலைத்திருக் முடியும்? உனது அருளையும் கொடையையும் கேட்டுத் துடிக்கும் அவனை நரக நெருப்பு எவ்வாறு நோவிக்க முடியும்?
106 . அவன் இருக்கும் இடத்தை நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய். அவனது ஈனக்குரலை நீ கேட்டுக் கொண்டிருக்கின்றாய்.
107. இந்த நிலையில் தீப்பிழம்பு எப்படி அவனை எரிக்க முடியும்? அவனுடைய பலவீனத்தை நீயோ அறிந்தவன்.
108. நரகின் கொடிய சத்தத்தை அவன் எப்படிச் சகிப்பான்? அவனது உள்ளமே நீ அறிந்திருக்க அதன் படிகளில் அவன் எப்படிப் புரள முடியும்?
109. அவன் 'என் எஐமானே' என்று உன்னைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும்போது நரகின் பாதுகாவலர்களான 'ஸபானியாக்கள்' அவனை எப்படி அடித்து விரட்ட முடியும்?
110. தன் விடுதலைக்காக உன் கருணைணை வேண்டி நிற்கும் ஒருவனை சிறைக்கைதியாக நீ எப்படி விட்டுவைப்பாய். ஒருபோதும் இது நடவாது.
111. உன் கொடையை மிஞ்ஞிய கொடையில்லை. உன்னை ஏகத்துவப் படுத்தியோருக்கு ஒப்பமில்லை.
112. திட்ட வட்டமாக உன்னை நிராகரிப்பவனை தண்டித்து உன்னோடு பிணங்கி நிற்பவனை வேதனையில் நிலைப்படுத்துவது என்று நீ சட்டமியற்றி தீர்ப்புச் செய்யாமல் இருந்திருந்தால்.
113. முழு நரகையும் குளமையாகவும் செழுமையாகவும் ஆக்கியிருப்பாய்.
114. அங்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ எவரும் தங்கியிருக்க மாட்டார்கள். நிச்சயமாக உனது பெயர்கள் பரிசுத்தம் வாய்ந்தவை. மனிதர்களிலும் ஐpன்களிலுமுள்ள நிராகரிப்பவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்பி அடங்காப் பிடாரிகளை அதில் நிலைப்படுத்துவேன் என்று முன்னரே நீ சத்தியம் செய்துவிட்டாய்.
115. சங்கை மிக்க உனது அருள் ஓங்கி உனது புகழ் மகத்துவம் அடைந்துவிட்டது.
116. கெட்டவர்கள் விசுவாசிகளைப் போலிருப்பார்களா? அவர்கள் ஒருபோதும் சமமாக மாட்டார்கள் என்ற உனது வார்த்தை முந்திவிட்டது.
117. எனது எஐமானனே! என் நாயனே!! வியாபித்து உனது வல்லயையைக் கொண்டும்,
118. நீ முடிவு செய்துவிட்ட உனது தீர்ப்பைக் கொண்டும் உன்னிடம் கெஞ்ஞிக் கேட்கின்றேன்.
119. இந்த இரவிலே இந்த வேளையில் நான் செய்த குற்றங்களுக்காக உன் அருள் வேண்டி நிற்கின்றேன்.
120. நான் புரிந்த ஒவ்வோரு குற்றங்களையும் எல்லாப் பாவங்களையும்.
121. நான் மறைத்து எல்லா அருவருப்புக்களையும் நான் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ செய்த எல்லா மடமை வேலைகளையும்
122. எனது உடல் உறுப்புக்களுடன் சேர்த்து எனது குற்றச் செயல்களை பக்குவமாக பதிவு செய்யுமாறு நீ பணிந்துள்ள 'கிறாமன் காத்திபீன்'கள் சங்கைக்குரிய பதிவாளர்கள் சாட்சியாக
123. அனைத்திற்கும் மிக மேலாக நீ என் இயக்கங்களின் மீது மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றாய்.
124. என் குற்றங்கள் உன் அருளினால் மறைத்து
125. உன் கொடையால் ஒழித்துவிட்டாய்.
126. நீ இறக்கிவைத்துள்ள எல்லா நலவுகளிலிருந்தும் என் சௌபாக்கியங்களையும் அதிகப்படுத்துவாயாக. நீ வழங்கியுள்ள பேருகாரங்களிலும் நீ மறைத்துள்ள நன்மைகளிலும் நீ விசாலப்படுத்தியுள்ள கொடைகளிலும் மிகைப்படுத்தித் தந்தருள்வாயாக. நீ மன்னிக்கக்கூடிய

புதன், 18 நவம்பர், 2009

துல் ஹஜ் 01 ஹஸ்ரத் அலீ இப்னு அபீதாலிப் (அலை) அவர்களின் செல்வப் புதல்வன் இமாம் அலி (அலை) அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஈரக் கொழுந்து ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்களும் திருமணம் முடித்த தினமாகும். இத்தினத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.