புதன், 10 ஆகஸ்ட், 2011

ramazan

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
புனித ரமழான் வரட்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம் வந்து விட்டது அதை இப்போது எவ்வாறு உபயோகப் படுத்துவது என்று தெரியாது பலர் கிரேம் போட் விளையாடுவதும் ஏனைய பல நேரத்தை வீணடிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவதும் வழக்கம் ஆனால் இந்த மாதத்தில் செய்யக் கூடிய எவ்வளவு இபாதத்துக்களிருக்கின்ற அவற்றை ஏன் செய்ய முயற்சிப்பதில்லை அன்பான சகோதர சகோதரிகளே இந்த மாதத்தில் குர்ஆனை அதிகமாக ஒதுவது , அதிகமான சுன்னத்தான தொழுகைகளை தொழுவது , அதிகமாக சகாத் கொடுப்பது , ஏனையவர்களுக்கு துஆச் செய்வது , இந்த மாதத்திலாவது மற்றவர்களின் குறைகளைக் கதைக்காது ஏனையவர்களுடன் சந்தோசமாக நள்ள விடயங்களை கதைத்து , நபிகளார் நாயகம் (ஸல்) மற்றும் அவர்களின் தோழர்களின் அழகிய வார்த்தைகளை மற்றவர்களடம் சொல்லி அவற்றை வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற முயற்சித்தல் ஏனென்றால் இக்காலத்தில் நபிகளாரின் அழகிய வார்த்தைகள் சமூகத்தாரிற்கு மத்தியில் மறைக்கப் பற்று மாற்றங்களுக்கு உள்ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன எனவே இந்த கொடிய அகோரமான சௌலை தடுத்து நிறுத்த முயற்சிப்போம் மற்றும் யார் நபிகளாரின் வார்த்தைகளை எவ்வாறு சொல் வேண்டுமோ அவ்வாறு சொல்லாது தான் விரும்பியவாறு கறுத்துக் கூறுபவர்களின் கொடிய செயலில் இருந்து உம்மத்தை பாதுகாப்போம் இந்த மாதத்தை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு சிறப்பாக பயன்படுத்துவோம்
மற்றுமொரு முக்கியமாக சொல்லப்படவேண்டிய விடயம் இந்த மாதத்தை அதிகமான முஸ்லிம்கள் அல்லாத ஏனைய மதத்pனர் நினைக்கின்றார்கள் ஏனெனில் அதிகமான முஸ்லிம்கள் இந்த மாதத்தில் அதிகமாக ஏயைவர்களிடம் யாசகம் அதாவது பிச்சை கேட்டு திரிவது இவ்வாரானவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் மற்றும் அதே முந் நிளையில் அன்பின் செல்வந்தர்களே உங்களின் செல்வத்திலிருந்து இந்த மாதத்தில் அதிகமாக தானம் கொடுங்கள் அப்போதுதான் உங்கள் செல்வங்களின் பரகத்தும் அதிகமும் வரும் எனவே முயற்சியுங்கள் அதிகமானவர்கள் சொல்லுவார்கள் இறைக்க இறைக்கத்தான் கிணறு ஊற்றெடுக்கும் என்பார்கள் எனவே உங்களின் செலவக் கிணற்றை இறையுங்கள் புதிய செல்வங்கள் ஊற்றெடுக்கும் மற்றும் உங்கள் வீடுகளில் பரகத்தும் அல்லாஹ்வின் அருளும் ஏற்படும் இன்றிலிருந்து இவ்வாறு செய்வோமென முதலில் எனக்கும் அதன் பின் உங்ளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் .
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மத்
வ அஜ்ஜில் பரஜ இமாமினல் மஹ்தி ( அலை )