ரசூல் (ஸல்) அவர்களை அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல்மாதத்தில் அவர்கள் பிறந்த நாளில் தூர இடத்தில் இருந்து ஸியாரத்செய்யும் விதம் பற்றி ஸாதுல் மஆத் எனும் நூலில் அல்லாமா மஜ்லிஸி(றஹ்) கூறும் போது செய்கு முபீத், ஷஹீத், செய்யித் பின் தாவூஸ் (ரஹ்)அவர்கள் அறிவிப்பதாக குறிப்பிடுகின்றனர்.
மதீனா தய்யிபாவுக்கு வெளியிலிருந்து நபி (ஸல்) அவர்களைஸியாரத் செய்ய விரும்பினால் முதலில் குளித்துக் கொள்ளவும். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் போன்ற ஒன்றை அமைத்து அதன்மேல் நபி (ஸல்) அவர்களின் முபாரக்கான பெயரை எழுதி எழுந்து நின்றுஅதனை முன்னோக்கியவனாக இதனை ஓதவும்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை என சாட்சி கூறுகின்றேன். அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை.
وأشهد أن محمدا عبده ورسوله
நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவனுடைய அடியானும் அவனுடைய தூதருமாயிருக்கும்.
وأنه سيد الأولين والآخرين
நிச்சயமாக அவர்கள் முன்னையோர் பின்னையோர்களின் தலைவர் ஆவார்கள்.
وَأَنَّه سيد الأنبياء والمرسلين
நிச்சயமாக அவர்கள் நபிமார்கள் ரஸூல்மார்களின் தலைவர் ஆவார்கள்.
اَللَّهُمَّ صَلِّ عَلَيْهِ وَعَلَى أَهْلِ بَيْتِهِ الْأئِمَّةِ الطَّـيِّـبِـيْنَ
இறைவா! அந்த நபி மீதும் அவர்களின் அஹ்லுல் பைத் பரிசுத்த இமாம்கள் மீதும் ஸலவாத் சொல்வாயாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يَا خَلِيْلَ اللهِ
அல்லாஹ்வின் நண்பரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يَا نَبِيَّ اللهِ
அல்லாஹ்வின் நபியே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக
اَلسّلاَمُ عَلَيْكَ يا صفي الله
அல்லாஹ்வால் தெழிவாக்கப்பட்டவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக
اَلسّلاَمُ عَلَيْكَ يا رحمة الله
அல்லாஹ்வின் அருளே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا خيرة الله
அல்லாஹ்வின் தெரிவே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا حبيب الله
அல்லாஹ்வின் நண்பரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا نجيب الله
அல்லாஹ்வின் தெரிவே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا خاتم النبيين
நபிமார்களில் இறுதியானவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا سيد المرسلين
ரசூல்மார்களின் தலைவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا قائما بالقسط
நீதமானவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا فاتح الخير
நலவின் திரவுகோலே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا معدن الوحي والتنزيل
குர்ஆன் இறங்கியதனுடையவும், வஹியினுடையதும் ஊற்றே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا مبلغا عن الله
அல்லாஹ்வைப்பற்றி பிரச்சாரம் பண்ணக்கூடியவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ أيها السراج المنير
ஒழிதரும் விளக்கே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا مبشر
நன்மாராயம் கூறக்கூடியவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا منذر
எச்சரிக்கை விடுக்கக் கூடியவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا نور الله الذي يستضاء به
ஒழிபெறக்கூடிய அல்லாஹ்வின் ஒழியே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ وعلى أهل بيتك الطيبين الطاهرين الهادين المهديين
நேர்வழி பெற்றவர்களும், நேர்வழி காட்டக்கூடியவர்களுமான சுத்தமான மணமான குடும்பத்தினர் மீதும், உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ وعلى جدك عبد المطلب وعلى أبيك عبد الله
உங்கள் தந்தை அப்துல்லாஹ் மீதும், உங்கள் பாட்டனார் அப்துல் முத்தலிப் மீதும், உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ وَعَلَى أُمِّكَ آمِنَةَ بِنْتِ وَهْبٍ
வாஹாபின் மகன் ஆமினாவான உங்கள் தாயின் மீதும் உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَي عَمِّكَ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ
அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸ் ஆகிய உங்கள் சிறிய தந்தை மீதும் சாந்தி உண்டாவதாக
اَلسّلاَمُ علي عمك وكفيلك أبي طالب
உங்களை வளர்த்த உங்கள் சிறிய தந்தை அபூதாலிப் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ علي عمك حمزة سيد الشهداء
'சையிதுஷ் சுஹாதா' உங்கள் சிறிய தந்தை ஹம்ஸா அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ علي ابن عمك جعفر الطيار في جنان الخلد
நிரந்தர சுவர்கங்களில் பறந்து திரியக் கூடிய உங்கள் சாச்சாவின் மகன் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا محمد
முஹம்மதே (ஸல்) உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا أحمد
அஹ்மதே! உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلسّلاَمُ عَلَيْكَ يا حجة الله على الأولين والآخرين
முன்னையோர் பின்னையோர் மீது அல்லாஹ்வின் அத்தாட்சியே உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
والسابق إلى طاعة رب العالمين
முன்னையோர் படைத்து பரிபாளிக்கக் கூடியவனை வழிபடுவதில் முந்திக் கொள்ளக் கூடியவரே!
والمهيمن على رسله
அவனுடைய தூதுவர்கள் மீது அதிகாரம் செலுத்தக் கூடிய
والخاتم على أنبيائه
அவனுடைய நபிமார்களுக்கெல்லாம் முத்திராங்கமான (இருதியான)
والشاهد على خلقه
அவனுடைய படைப்புக்கள் சாச்சியாக இருக்கக்கூடிய
والشفيع إليه
அவனிடத்தில் பரிந்துரைக்கக் கூடிய
والمكين لديه
அவனிடத்தில் உறுதியான
والمطاع في ملكوته
அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் வழிப்படக்கூடிய
الأحمد من الأوصاف
வர்னனையில் மிக புகழப்பட்ட
المحمد لسائر الأشراف
ஏனைய சிறப்புக்களில் புகழப்பட்ட
الكريم عند الرب
படைத்து பரிபாழிக்கக்கூடியவனிடத்தில்
المكلم من وراء الحجب
திரைகளுக்கு அப்பால் பேசப்பட்ட
الفائز بالسباق
முந்திக்கொள்வதில் வெற்றி பெற்ற
الفائت عن اللحاق
தப்பியதை அடைத்து கொள்ளக்கூடிய
تسليم عارف بحقك
உண்னுடைய கடமைகளை அறிந்து வழிபடக்கூடிய
معترف بالتقصير في قيامه بواجبك
உண்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் குறை ஏற்பட்டதாக ஏற்றுக்கொண்டு
غير منكر ما انتهى إليه من فضلك
உண்னுடைய வரிசையை சென்றடையக்கூடிய விடயத்தை நிராகரிக்காதவராக
موقن بالمزيدات من ربك
இறைவனிடமிருந்து அதிகரித்தலை உறுதி கொண்டவராக
مؤمن بالكتاب المنزل عليك
நீ அவரின் மீது இறக்கிய வேதத்தை விசுவாஷம் கொண்டவராக
محلل حلالك
உண்னுடைய ஹலாலை ஹலாலாக்கியவனாக
محرم حرامك
உண்னுடைய ஹராத்தை ஹராமாக்கியவனாக
أشهد يا رسول الله مع كل شاهد
ஒவ்வொரு சாட்சியாளருடனும் அல்லாஹ்வின் தூதரே நான் சாட்சி கூறுகிறேன்
وأتحملها عن كل جاحد
பெருமனம் கொண்டு பொறுத்தவராக (உன்னை) நிராகரித்த அனைவரையும்
أنك قد بلغت رسالات ربك
நிச்சயமாக நீங்கள் உம்முடைய இறைவனின் தூதை எத்திவைத்தீர்கள்
ونصحت لأمتك
உங்களின் சமூகத்திற்கு நீங்கள் உபதேசம் செய்தீர்கள்
وجاهدت في سبيل ربك
உங்களுடைய ரப்புடைய பாதையில் நீங்கள் தியாகம் செய்தீர்கள்
وصدعت بأمره
அவனுடைய விடயத்தை தெழிவாகச் சொன்னீர்கள்
واحتملت الأذى فى جنبه
அவனுடைய விடயத்தில் துன்பங்களை தாங்கிக் கொண்டீர்கள்
ودعوت إلى سبيله بالحكمة والموعظة الحسنة الجميلة
அவனுடைய பாதையில் ஞான அறிவைக் கொண்டும் அழகிய உபதேசங்கள் மூலமும் அழைத்தீர்கள்
وأديت الحق الذي كان عليك
உங்கள் மீதுள்ள கடமைகளை நீங்கள் நிறைவேற்றினீர்கள்
وأنك قد رؤفت بالمؤمنين
முஃமீன்கள் மீது நிச்சயமாக இரக்கம் உள்ளவராக ஆனீர்கள்
وغلظت على الكافرين
காபிர்களுடன் கடினமானவர்களாக இருந்தீர்கள்
وعبدت الله مخلصا حتى أتاك اليقين
இறுதிவரை இறைவனை தூய்மையான என்னத்துடன் வணங்கி வழிபட்டீர்கள்
فبلغ الله بك أشرف محل المكرمين
அதன் மூலம் கண்ணிய மாக்கப்பட்டவர்களின் மிகச் சிறந்த இடத்தை அடைந்தீர்கள்
وأعلى منازل المقربين
உனக்கு நெருக்கமானவர்களின் மிக உயர்ந்த இடத்தை அடைந்தீர்கள்
وأرفع درجات المرسلين حيث لا يلحقك لاحق
ரசூல் மார்களின் பதவிகளில் மிக உயர்வான மற்றயவர்கள் அடயமுடியாத தரத்தையும்
ولا يفوقك فائق
மற்றவர்கள் உயர முடியாத உயர்வையும்
ولا يسبقك سابق
உங்களை யாரும் முந்திக் கொள்ள முடியாது
ولا يطمع في إدراكك طامع
எந்த ஆசை உடையவர்களின் ஆசையும் உங்களை அடைய முடியாது
الحمد لله الذي إستنقذنا من الهلكة
அழிவை விட்டும் உங்கள் மூலமாக எம்மை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்
وهدانا من الضلالة
வழிகேட்டிpல் இருந்து எம்மை நேர்வழிப்படுத்தினான்
ونورنا بك من الظلمة
இருலில் இருந்து உங்கள் மூலம் எம்மை ஒழி மயமாக்கி வைத்தான்
فجزاك الله يا رسول الله من مبعوث أفضل ما جازى نبيا عن أمته
ஒரு சமூகத்திற்கு நபியாக அனுப்பியதன் மூலம் எந்த சிறந்த கூலியை கொடுத்தாயோ அதில் சிறந்ததை உங்களை நபியாக அனுப்பியதன் மூலம் அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குக் கொடுப்பானாக
கொடுப்பானாக!
ورسولا عمن أرسل إليه
இது தூதுவரை அவர்களுக்கு தூதுவராக அனுப்பியதன் மூலம்
بأبي وأمي يا رسول الله
அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணம்
زرتك عارفا بحقك
உங்கள் கடமைகளை அறிந்தவனாக உங்களை நான் சந்திக்கிறேன்
مقرا بفضلك
உங்கள் வரிசையை ஏற்றுக்கொண்டவனாக!
مستبصرا بضلالة من خالفك وخالف أهل بيتك
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மாறு செய்தவர்கள் வழிகேட்டிpல் உள்ளவர்கள் என்பதை தெழிவு பெற்றவனாக
عارفا بالهدى الذي أنت عليه
நீங்கள் எந்த நேர்வழியில் உள்ளீர்களே அதை அறிந்தவர்களாக
بأبي أنت وأمي ونفسي وأهلي ومالي وولدي
எனது பிள்ளை, எனது பொருள், குடும்பம் எனது ஆத்மா தாய் தந்தை அனைத்தும் உங்களுக்கு அற்பனம்
أنا أصلى عَلَيْكَ كما صلى الله عليك
அல்லாஹ் உங்கள் மீது ஸலவாத் சொன்னது போன்று நான் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறேன்
وصلى عَلَيْكَ ملائكته وأنبيائه ورسله
மேலும் அவனுடைய அமரர்கள், நபிமார்கள், ரசூல் மார்கள் சொன்ன சலவாத்துப் போன்று
صلاة متتابعة وافرة متواصلة لانقطاع لها
தொடரான, நிறைவான, அதிக, துண்டிக்கப்படாத சலவாத்தாக
ولا أمد ولا أجل
முடிவு இல்லாத தொடரான ஸலவாத்தாக
صلى الله عليك وعلى أهل بيتك الطيبين الطاهرين كما أنتم أهله
உங்கள் மீதும், உங்களின் சுத்தமான பரிசுத்த குடும்பத்தினர் மீதும் அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு அல்லாஹ் ஸலவாத்துச் சொல்வானாக.
أَللَّهُمَّ اجْعَلْ جَوَامِعَ صَلَوَاتِكَ
உன்னுடைய ஸலவாத்தில் அனைத்தும் உள்ளடங்கியவையாகவும்
وَنَوَامِيَ بَرَكَاتِكَ
உன்னுடைய அருளில் வளர்ச்சியையும்
وَفَوَاضِلَ خَيْرَاتِكَ
உன்னுடைய நலவுகளில் அதிகமானவைகளையும்
وَشَرَائِفَ تَحِيَّاتِكَ
உன்னுடைய காணிக்கைகளில் சிறந்தவைகளையும்
وَتَسْلِيْمَاتِكَ وَكَرَامَاتِكَ وَرَحْمَاتِكَ وَصَلَوَاتِ مَلاَئِكَتِكَ الْمُقَرَّبِيْنَ وَأَنْبِيَائِكَ الْمُرْسَلِيْنَ وَأَئِمَّتِكَ الْمُنْتَجَبِيْنَ وَعِبَادِكَ الصَّالِحِيْنَ وَأَهْلِ السَّمَوَاتِ وَاْلأَرَضِيْنَ
உன்னுடைய சமாதானம் கராமாத் அருள் சாந்தி உன்னுடைய நெருக்கத்தைப் பெற்ற அமரர்களின் ஸலவாத் உன்னுடைய முர்ஸலான நபிமார்கள் தூய்மையான இமாம்கள் உன்னுடைய ஸாலிஹான அடியார்கள் வானம் பூமியில் வசிப்பவர்கள்
مَنْ سَبَّحَ لَكَ يَارَبَّ الْعَالَمِيْنَ مِنَ اْلأَوَّلِيْنَ وَاْلآخِرِيْنَ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ
உலகத்தாரைப் படைத்து பரிபாலிப்பவனே முன்னையோர்கள் பின்னையோர்கள் உன்னைத் துதித்த அளவு உன்னுடைய அடியானும் தூதருமாகிய
وَشَاهِدِكَ وَنَبِيِّكَ وَنَذِيْرِكَ وَأَمِيْنِكَ وَمَكِيْنِكَ
உன்னுடைய சாட்சியாகிய நபியாகிய எச்சரிக்கை செய்யக் கூடிய நம்பிக்கைக்குரிய உன்னால் நியமிக்கப்பட்ட
وَلَمْ أَحْضُرْ زَمَانَ رَسُوْلِكَ عَلَيْهِ وَآلِهِ السَّلاَمُ
உன்னுடைய தூதருடைய காலத்தில் நான் சமூகமளித்திருக்கவில்லை. அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَللَّهُمَّ وَقَدْ زُرْتُهُ رَاغِبًا تَائِبًا مِّنْ سَيِّئِ عَمَلِيْ
(எனவே) இறiவா அவர்களை விரும்பியவர்களாகவும் தீய செயல்களில் இருந்து மீண்டவனாகவும் நான் அவர்களை ஸியாரத்துச் செய்கிறேன்.
وَمُسْتَغْفِرًا لَكَ مِنْ ذُنُوْبِيْ وَمُقِرًّا لَكَ بِهَا
உன்னிடத்தில் எனது பாவத்தில் இருந்து பிழைபொருக்கத் தேடியவனாகவும் எனது பாவத்தை ஏற்றுக் கொண்டவனாகவும்
وَأَنْتَ أَعْلَمُ بِهَا مِنِّيْ
அவைகளை என்னைவிட நீ மிக அறிந்தவன்.
وَمُتَوَجِّهًا إِلَيْكَ بِنَِبيِّكَ نَبِيِّ الرَّحْمَةِ صَلَوَاتُكَ عَلَيْهِ وَآلِهِ
அருளுடைய நபியாகிள உன்னுடைய நபியின் மூலம் உன்பக்கம் திரும்பியவனாக நபி மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் உன்னுடைய ஸலவாத் உண்டாவதாக!
فَاجْعَلْنِيْ أَللَّهُمَّ بِمُحَمَّدٍ وَّأَهْلِ بَيْتِهِ عِنْدَكَ وَجِيْهًا فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ
இறiவா! முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும் அவர்களின் குடும்பத்தின் பொருட்டாலும் இம்மை மறுமையில் உயர்வடையச் செய்வாயாக!
وَمِنَ الْمُقَرَّبِيْنَ يَا مُحَمَّدُ يَا رَسُوْلَ اللهِ
அல்லாஹ்வின் தூதரே! முஹம்மத் (ஸல்) அவர்களே! உனக்கு நெருக்கமானவர்களில் நின்றும் ஆக்கிவைப்பாயாக!
بِأَبِيْ أَنْتَ وَأُمِّيْ يَا نَبِيَّ اللهِ
அல்லாஹ்வின் நபியே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்.
يَاسَيِّدَ خَلْقِ اللهِ
அல்லாஹ்வின் படைப்புகளின் தலைவரே!
إِنِّيْ أَتَوَجَّهُ بِكَ إِلَى اللهِ رَبِّكَ وَرَبِّيْ
என்னுடையவும் உங்களுடையவும் ரப்பாகிய அல்லாஹ்வின் பால் உங்களின் பக்கம் முன்னோக்குகின்றேன்.
لِيَغْفِرَ لِيْ ذُنُوْبِيْ
என்னுடைய பாவங்களை மண்ணிப்பதற்காகவும்;
وَيَتَقَبَّلَ مِنِّيْ عَمَلِيْ
எனது அமல்களை ஏற்றுக் கொள்வதற்காகவும்
وَيَقْضِيَ لِيْ حَوَائِجِيْ
எனது தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும்
فَكُنْ لِيْ شَفِيْعًا عِنْدَ رَبِّكَ وَرَبِّيْ
என்னுடையவும் உங்களுடையவும் ரப்பிடத்தில் எனக்காக பரிந்துரைக்கக் கூடியவராக இருங்கள்.
فَنِعْمَ الْمَسْؤُوْلُ الْمَوْلَى رَبِّيْ
கேட்கப்படக்கூடியவர்களில் சிறந்தவராக என்னுடைய ரப்பாகிய எஜமான் ஆகிவிட்டான்.
وَنِعْمَ الشَّفِيْعُ أَنْتَ يَا مُحَمَّدُ
முஹம்மத் (ஸல்) அவர்களே! நீங்கள் பரிந்துரைக்கக் கூடியவர்களில் (ஷபாஅத்துச் செய்யக் கூடியவர்களில்) சிறந்தவராகிவிட்டீர்.
عَلَيْكَ وَعَلَى أَهْلِ بَيْتِكَ السَّلاَمُ
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தி உண்டாவதாக!
اَلََّلهُمَّ وَأَوْجِبْ لِيْ مِنْكَ الْمَغْفِرَةَ وَالرَّحْمَةَ
இறiவா! உன்னிடத்தில் இருந்து எனக்கு அருளையும் பாவமன்னிப்பையும் கடமையாக்கி வைப்பாயாக!
وَالرِّزْقَ الْوَاسِعَ الطَّيِّبَ النَّافِعَ
பிரயோசனாமான மனமான விசாலமான உணவையும்
كَمَا أَوْجَبْتَ لِمَنْ أَتَى نَبِيَّكَ مُحَمَّدًا صَلَوَاتُكَ عَلَيْهِ وَآلِهِ
உன்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்கள் மீதும் ஸலவாத் உண்டாவதாக! அவர்களிடத்தில் வந்தவர்களுக்கு எவ்வாறு கடமையாக்கி வைத்தாயோ
وَهُوَ حَيٌّ فَأَقَرَّ لَهُ بِذُنُوْبِهِ
நபி உயிரோடு இருக்கின்ற போது எவ்வாறு அவர்களிடத்தில் வந்து பாவங்களை ஏற்றுக் கொண்டு
وَاسْتَغْفَرَ لَهُ رَسُوْلُكَ عَلَيْهِ وَآلِهِ السَّلاَمُ
அதற்காக உன்னுடைய ரஸூலும் பாவமன்னிப்புத் தேடியபோது அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!
فَغَفَرْتَ لَهُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ
கிருபையாளர்களுக்கெல்லாம் மிகக் கிருihயாளனே அவர்களின் பாவத்தை உன்னுடைய கிருபையால் மன்னித்தாய்.
اَللَّهُمَّ وَقَدْ أمَّلْتُكَ وَرَجَوْتُكَ
இறiவா! உன்னை எதிர்பார்த்து உன்னை மேலெண்ணம் வைத்தேன்.
وَقَدْ قُمْتَ بَيْنَ يَدَيْكَ
உனக்கு மத்தியில் நான் எழுந்து நிற்கின்றேன்.
وَرَغِبْتَ إِلَيْكَ عَمَّنْ سِوَاكَ
உன்னைத் தவிர மற்றையவைகளை வெறுத்தவனாக
وَقَدْ أَمَّلْتُ جَزِيْلَ ثَوَابِكَ
உன்னுடைய உயர்வான கூலியை மேலெண்ணம் வைத்தவனாக
وَإِنِّيْ لَمُقِرٌّ غَيْرُ مُنْكِرٍ
உன்னை நிராகரிக்காது ஏற்றுக் கொண்டவனாக
وَتَائِبٌ إِلَيْكَ مِمَّا إقْتَرَفْتُ
நான் செய்த பாவங்களுக்காக உன்னளவில் மீண்டவனாக
وَعَائِذٌ بِكَ فِيْ هَذَا الْمَقَامِ
இந்த இடத்தில் இருந்து உன்பக்கம் மீண்டவனாக
مِمَّا قَدَّمْتُ مِنَ اْلأَعْمَالِ الَّتِيْ تَقَدَّمْتُ إِلَيَّ فِيْهَا
எவ்வாறான விடயங்களை என்பக்கம் முற்படுத்தினாயோ அவ்விடயங்களை நான் முற்படுத்தியவனாக
وَنَهَيْتَنِيْ عَنْهَا
எவைகளை விட்டும் நீ விலக்கினாயோ
وَأَوْعَدْتَ عَلَيْهَا الْعِقَابَ
எவைகளைச் செய்தால் அவைகளுக்கு உனது தண்டனையை எச்சரித்தாயோ
وَأَعُوْذُ بِكَرَمِ وَجْهِكَ أَنْ تُقِيْمَنِيْ مَقَامَ الْخِزْيِ وَالذُّلِّ يَوْمَ تَهْتِكُ فِيْهِ اْلأَسْتَارُ
திரைகிளிந்திடும் நாளில் இளிவு பின்னடைவுகள் ஏற்படாமல் உன்னுடைய சங்கையின் மூலம் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
وَتَبْدُوَ فِيْهِ اْلأَسْرَارُ وَالْفَضَائِحُ
அந்த நாளில் இரகசியங்கள் மானக்கேடான விடயங்கள் வெளியாகும்.
وَتَرْعَدُ فِيْهِ الْفَرَائِضُ
உள்ளங்கள் நடுங்கக் கூடிய அந்த நாளில்
يَوْمَ الْحَسْرَةِ وَالنَّدَامَةِ
கைசேதம் துன்பத்தை உடைய நாளில்
يَوْمَ اْلإِفْكَةِ يَوْمَ اْلآزِفَةِ
கற்பனை பொய்யாகும் நாள் சமீபத்தில் வரும் நாளில்
يَوْمَ التَّغَابُنِ يَوْمَ الْفَصْلِ يَوْمَ الْجَزَاء
அம்பலம் வரும் நாள் தீர்வு வழங்கும் நாள் கூலி வழங்கப்படும் நாள்
يَوْمًا كَانَ مِقْدَارُهُ خَمْسِيْنَ أَلْفِ سَنَةٍ
50,000 வருடம் அளவையுடைய நாள்
يَوْمَ النَّفْخَةِ يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
ஸூர் ஊதப்படும் நாள், பலமாக அதிர்ச்சியுறும் நாள்
تَتْبَعُهَا الرَّادِفَةُ
பூகம்ப அதிர்ச்சி அதனைத் தொடரும்.
يَوْمَ النَّشْرِ يَوْمَ الْعَرَضِ
பரத்தப்படும் நாள் நன்மை தீமைகளைக் காட்டப்படும் நாள்
يَوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِيْنَ
அகிலத்தாரைப் படைத்து பரிபாலிக்கக் கூடியவனுக்காக மனிதர்கள் எழுந்து நிற்கும் நாள்
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيْهِ وَأُمِّهِ وَأَبِيْهِ وَصَاحِبَتِهِ وَبَنِيْهِ
பிள்ளைகள் மனைவி தந்தை தாய் சகோதரனை விட்டும் மனிதன் விரண்டோடும் நாள்
يَوْمَ تَشَقَّقُ اْلأَرْضُ وَأَكْنَافُ السَّمَاءِ
வானம் பூமிகளைப் பிழக்கப்படும் நாள்
يَوْمَ تَأْتِيْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَفْسِهَا
ஒவ்வொரு ஆத்மாவும் தன்னைப்பற்றி பேசவரும் நாள்
يَوْمَ يَرُدُّوْنَ إِلَى اللهِ فَيُنَبِّئْهُمْ بِمَا عَمِلُوْا
அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்பட்டு அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்கப்படும் நாள்
يَوْمَ لاَ يُغْنِيْ مَوْلىً عَنْ مَولًى شَيْئًا وَّلاَ هُمْ يُنْصَرُوْنَ إِلاَّ مَنْ رَّحِمَ اللهُ إِنَّهُ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர ஒரு நண்பன் மற்றைய நண்பனுக்கு தேவைகளை நிறைவேற்றவோ உதவி செய்யவோ முடியாத நாள் நிச்சயமாக அவன் கண்ணியமானவனும் கிருபை உள்ளவனுமாக இருக்கின்றான்.
يَوْمَ يُرَدُّوْنَ إِلَى عَالَمِ الْغيْبِ وَالشَّهَادَةِ
மறைவானவைகள் நேர்முகமானவைகளை அறிந்தவனின் பக்கம் மீட்டப் படுகின்ற நாள்
يَوْمَ يُرَدُّوْنَ إِلَى اللهِ مَوْليَهُمُ الْحَقِّ
அவர்களின் உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்படும் நாள்
يَوْمَ يُخْرَجُوْنَ مِنَ اْلأَجْدَاثِ سِرَاعًا
மன்னறையிலிருந்து அவசரமாக அவர்கள் வெளியாகும் நாள்
كَأَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ
பரத்தப்பட்ட வெட்டுக்கிளிகளைப் போன்று
مُهْطِعِيْنَ الدَّاعِ إِلَى اللهِ
அல்லாஹ் அளவில் அழைக்கப்பட்டு விரைந்தவர்களாக
يَوْمَ الْوَاقِعَةِ
நிகழ்வுகள் நடக்கும் நாளில்
يَوْمَ تَرُجُّ اْلأَرْضُ رَجَّا
பூமி பிளந்து பூகம்பம் வரும் நாளில்
يَوْمَ تَكُوْنُ السَّمَاءُ كَالْمُهْلِ
பழுக்கக் காய்ச்சப்பட்டு உருக்கிய செம்பைப் போன்று வானம் ஆகிவிடும் நாளில்
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ
பரந்த பஞ்சைப் போன்று மலைகள் ஆகிவிடும் நாளில்
وَلاَ يُسْأَلُ حَمِيْمٌ حَمِيْمًا
ஒரு நண்பன் மற்றைய நண்பனைப் பற்றி வினவமாட்டான்.
يَوْمَ الشَّاهِدِ وَالْمَشْهُوْدِ
சாட்சி சொல்லக் கூடியதும், சாட்சி சொல்லப்படக் கூடிய நாளிலேயும்
يَوْمَ تَكُوْنُ الْمَلاَئِكَةُ صَفًّا صَفًّا
மலக்குகள் அணி அணியாக வரும் நாளில்
أَللَّهُمَّ ارْحَمْ مَوْقِفِيْ فِيْ ذَلِكَ الْيَوْمِ بِمَوْقِفِيْ فِيْ هَذَا الْيَوْمِ
இந்த நாளின் நிலைப்பாட்டின் மூலம் அந்த நாளின் நிலைப்பாட்டுக்கு நீ அருள் புரிவாயாக!
وَلاَ تُخْزِنِيْ فِيْ ذَلِكَ الْمَوْقِفِ بِمَا جَنَيْتُ عَلَى نَفْسِيْ
எனது ஆத்மாவுக்கு நான் இழைத்த குற்றத்திற்காக அந்த நாளின் நிலைப்பாட்டில் என்னை இழிவு படுத்திவிடாதே!
وَاجْعَلْ يَا رَبِّ فِيْ ذَلِكَ الْيَوْمِ مَعَ أَوْلِيَاءِكَ مُنْطَلَقِيْ
என்னை உன்னுடைய நேசர்களோடு அந்த நாளில் என் எஜமானனே நீ ஆக்கியருள்வாயாக!
وَفِيْ زُمْرَةِ مُحَمَّدٍ وَّأَهْلِ بَيْتِهِ عَلَيْهِمِ السَّلاَمُ مَحْشَرِيْ
என்னை எழுப்பும் போது முஹம்மது (ஸல்) அவர்களோடும் அவர்களுடைய குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்துக்களோடும் எழுப்புவாயாக!
وَاجْعَلْ حَوْضَهُ مَوْرِدِيْ
அவர்களின் நீர்த்தடாகத்திலிருந்து (ஹவ்லுல் கவ்ஸர்) என்னுடைய தாகத்தைத் தீர்த்து வைப்பாயாக!
وَفِيْ غُرِّ الْكِرَامِ مَصْدَرِيْ
என்னுடைய அடிப்படையை நன்மக்களோடு ஆக்கிவைப்பாயாக!
وَأَعْطِنِيْ كِتَابِيء بِيَمِيْنِيْ
என்னுடைய பட்டோலையை என்னுடைய வலது கையில் தந்து
حَتَّى أَفُوْزَ بِحَسَنَاتِيْ
என்னுடைய நன்மையின் மூலம் என்னை வெற்றிபெறச் செய்வாயாக!
وَتَبْيَضَّ بِهِ وَجْهِيْ
அதன் மூலம் என்னுடைய முகத்தை வெள்ளையாக்கி வைப்பாயாக!
وَتُيَسِّرَ بِهِ حِسَابِيْ
என்னுடைய கேள்வி கணக்கை இலேசாக்கி வைப்பாயாக!
وَتُرَجِّحَ بِهِ مِيْزَانِيْ
என்னுடைய நன்மைத் தராசை கனமாக்கி வைப்பாயாக
وَأَمْضِيَ مَعَ الْفَائِزِيْنَ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ إِلَى رِضْوَانِكَ وَجِنَانِكَ إِلَهَ الْعَالَمِيْنَ
உன்னுடைய ஸாலிஹான நல்லடியார்களில் நின்றும் வெற்றியாளர்களுடன் என்னைச் உலகத்தாரின் இறைவனே! உனது பொருத்தத்தின் பாலும் சொர்க்கத்தின் பாலும் செலுத்துவாயாக!
أَلَّلهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ تَفْضَحَنِيْ فِيْ ذَلِكَ الْيَوْمِ بَيْنَ يَدَيِ الْخَلاَئِقِ بِجَرِيْرَتِيْ
இறiவா! அந்த நாளில் எனது குற்றத்தால் உன்னுடைய படைப்புகளுக்கு மத்தியில் என்னை அவமானப்படுத்துவதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
أَوْ أَنْ أَلْقَى الْخِزْيَ وَالنَّدَامَةَ بِخَطِيْئَتِيْ
என்னுடைய குற்றத்தால் இழிவையும் கைசேதத்தையும் சந்திப்பதை விட்டும்
أَوْ أَنْ تَظْهَرَ فِيْهِ سَيِّئَاتِيْ عَلَى حَسَنَاتِيْ
எனது நன்மையை விட எனது பாவத்தை வெளிப்படுத்துவதை விட்டும்
أَوْ أَنْ تُنَوِّهَ بَيْنَ الْخَلاَئِقِ بِاسْمِيْ
என்னுடைய பெயர் படைப்புகளுக்கு மத்தியில் இழிவு படுத்தப்படுவதை விட்டும்
يَا كَرِيْمُ يَاكَرِيْمُ
சங்கைக்குரியவனே! சங்கைக்குரியவனே!
اَلْعَفْوَ اَلْعَفْوَ
மன்னிப்பைக் கோருகிறேன். மன்னிப்பைக் கோருகிறேன்.
اَلسَّتْرَ اَلسَّتْرَ
மறைத்தலைக் கோருகிறேன். மறைத்தலைக் கோருகிறேன்.
أَللَّهُمَّ وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ يَّكُوْنَ فِيْ ذَلِكَ الْيَوْمِ فِيْ مَوَاقِفِ اْلأَشْرَارِ مَوْقِفِيْ
இறiவா! அந்த நாளில் எனது நிலைப்பாடு தீயவர்களின் நிலைப்பாடாக மாறுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَوْ فِيْ مَقَامِ اْلأَشْقِيَاءِ مَقَامِيْ
அல்லது என்னுடைய இடம் கெட்டவர்களின் இடமாக இருப்பதை விட்டும்
وَإِذَا مَيَّزْتَ بَيْنَ خَلْقِكَ
உன்னுடைய படைப்புகளைப் பிரிக்கும் போதும்
فَسُقْتَ كُلاًّ بِأَعْمَالِهِمْ زُمَرًا إِلَى مَنَازِلِهِمْ
ஒவ்வொரு வகுப்பினரையும் அவர்களின் செயலால் அவர்களின் இடத்திற்கு இழுக்கும் போது
فَسُقْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
உனது அருளின் மூலம் எனது நல்லடியார்களின் பக்கம் என்னை இழுத்துச் செல்வாயாக!
وَفِيْ زُمْرَةِ أَوْلِيَاءِكَ الْمُتَّقِيْنَ إِلَى جَنَّاتِكَ يَا رَبَّ الْعَالَمِيْنَ
உலகத்தாரைப்படைத்து பரிபாலிக்கக் கூடியவனே உனது சுவனத்தின் பக்கம் இறைவனைப் பயந்த இறைநேசர்களுடன் என்னை இட்டுச் செல்வாயாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا الْبَشِيْرُ النَّذِيْرُ
அச்சம் ஊட்டி நண்மாராயம் கூறுபவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا السِّرَاجُ الْمُنِيْرُ
ஒழி விளக்கே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا السَّفِيْرُ بَيْنَ يَدَيِ اللهِ وَبَيْنَ خَلْقِكَ
அவனுடைய படைப்புக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தூதுவரே உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!
أَشْهَدُ يَا رَسُوْلَ اللهِ أَنَّكَ كُنْتَ نُوْرًا فِي اْلأَصْلاَبِ الشَّامِخَةِ وَاْلأَرْحَامِ الْمُطَهَّرَةِ
அல்லாஹ்வின் தூதரே கலக்கம் இல்லாத ஒழியாகவும் சுத்திகரிக்கப் பட்ட கற்பத்திலும் இருந்தீர்கள் என நான் சாட்சி சொல்கிறேன்.
لَمْ تُنَجِّسْكَ الْجَاهِلِيَّةُ بِأَنْجَاسِهَا
அதன் (ஜாஹிலிய்யத்) அறியாமை அதன் அழுக்குகளால் உங்களை அழுக்காக்கிவிடவில்லை.
وَلَمْ تُلَبِّسْكَ مِنْ مُدْلَهِمَّاتِ ثِيَابِهَا
அதன் அசூசியான ஆடைகளை உங்களுக்கு அணிவிக்கவில்லை.
وَأَشْهَدُ يَا رَسُوْلَ اللهِ أَنِّيْ مُؤْمِنٌ بِكَ وَاْلأَئِمَّةِ مِنْ أَهْلِ بَيْتِكَ
அல்லாஹ்வின் தூதரே உங்களையும் உங்கள் குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினரையும் நான் விசுவாசித்தவன் என சாட்சி பகருகின்றேன்.
مُوْقِنٌ بِجَمِيْعِ مَا أَتَيْتَ بِهِ رَاضٍ مُؤْمِنٌ
நீங்கள் கொண்டு வந்த அனைத்தையும் பொருந்திக் கொண்டு விசுவாசித்தவன் என உறுதி பூண்டேன்.
وَأَشْهَدُ أَنَّ اْلاَئِمَّةَ مِنْ أَهْلِ بَيْتِكَ أَعْلاَمِ الْهُدَى
உங்கள் அஹ்லுல் பைத்துக்களில் வந்த இமாம்களை நேர்வழியின் அடையாளங்கள் என சாட்சி கூறுகின்றேன்.
وَالْعُرْوَةِ الْوُثْقَى
பலமான தொடர்பு
وَالْحُجَّةِ عَلَى أَهْلِ الدُّنْيَا
பூமியிலுள்ளவர்களுக்கு அத்தாட்சி
اَللَّهُمَّ وَلاَ تَجْعَلْهُ آخِرَ الْعَهْدِ مِنْ زِيَارَةِ نَبِيِّكَ عَلَيْهِ وَآلِهِ السَّلاَمُ
இறiவா! உன்னுடைய நபியை ஸியாரத்துச் செய்வதில் இறுதிச் சந்திப்பாக ஆக்கிவிடாதே!
وَاِنْ تَوَفَّيْتَنِيْ فَإِنِّيْ أَشْهَدُ فِيْ مَمَاتِيْ عَلَى مَا أَشْهَدُ عَلَيْهِ فِيْ حَيَاتِيْ
நான் இந்த உலகத்தில் வாழும் போது எதை சாட்சி பகர்ந்தேனோ அதையே எனது மரணத்தின் போதும் சாட்சி சொல்லியவனாக என்னை மரணிக்கச் செய்வாயாக!
إِنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيْكَ لَكَ
நிச்சயமாக நீயே அல்லாஹ் உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தனித்தவன் உனக்கு இணையில்லை என சாட்சி கூறியவனாக
وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ
நிச்சயம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியானும் தூதருமாயிருக்கும் என்றும்
وَأَنَّ اْلأَئِمَّةَ مِنْ أَهْلِ بَيْتِهِ أَوْلِيَاءِكَ وَأَنْصَارِكَ
அவர்களின் அஹ்லுல் பைத்தில் வந்த இமாம்கள் அவனுடைய நேசர்களும் அவனுடைய உதவியாளருமாயிருக்கும் என்றும்
وَحُجَجُكَ عَلَى خَلْقِكَ
உன்னுடைய படைப்புகளின் அத்தாட்சியாக இருக்கும் என்றும்
وَخُلَفَاؤُكَ فِيْ عِبَادِكَ
உன்னுடைய அடியார்களின் உனது பிரதிநிதியாக இருக்கும் என்றும்
وَخُزَّانُ عِلْمِكَ
உன்னுடைய அறிவுப் பொக்கிஷமாயிருக்கும் என்றும்
وَحَفَظَةُ سِرِّكَ
உன்னுடைய இரகசியத்தின் பாதுகாவலர் என்றும்
وَتَرَاجُمَةُ وَحْيِكَ
உன்னுடைய வஹியின் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் என்றும் சான்று பகருகின்றேன்.
أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِ مُحَمَّدٍ
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவரகள் குடும்பத்தவர்கள் மீதும் ஸலவாத்துச் சொல்வாயாக!
وَبَلِّغْ رُوْحَ نَبِيِّكَ مُحَمَّدٍ وَّآلِهِ فِيْ سَاعَتِيْ هَذِهِ وَفِيْ كُلِّ سَاعَةٍ تَحِيَّةً مِّنِّيْ وَسَلاَمًا
உன்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடையவும் அவர்களுடைய குடும்பத்துடையவும் ரூஹின் மீது எந்த நேரத்திலும் ஏனைய அனைத்து நேரங்களிலும் என்னுடைய ஸலாத்தையும் காணிக்கையையும் எத்திவைப்பாயாக!
وَالسَّلاَمً عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاَتُهُ
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சாந்தியும் அவனுடைய அருளும் அவனுடைய பரகத்தும் உண்டாவதாக!
وَلاَ جَعَلَهُ اللهُ آخِرَ تَسْلِيْمِيْ عَلَيْكَ
உங்கள் மீது சொல்லக் கூடிய இறுதி ஸலாமாக அல்லாஹ் ஆக்காமல் இருப்பானாக!
!